18

siruppiddy

ஏப்ரல் 30, 2013

சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு தடை!

ஐரோப்பிய நாடுகளுக்கு சிறிலங்கா மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   சிறிலங்கா மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
சிறிலங்கா மீனவர்கள், சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் சிறிலங்கா மீன்வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
   சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் சிறிலங்கா ஈடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தது.
  ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடாந்தம் 2.2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

ஏப்ரல் 27, 2013

சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் !


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்திருந்தவர்களே இவ்வாறு அமெரிக்காவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக குறித்த இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 44 பேர் குறித்த படகில் பயணம் செய்ததாகவும், நடுக் கடலில் தத்தளித்தவர்களை சிங்கப்பூர் கப்பலொன்று மீட்டு டுபாய் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு சென்றுள்ளனர். இதேவேளை, இன்னமும் 19 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ளனர். நாடு திரும்பினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தமிழர்களோடு கனடா வெளிவிகராக அமைச்சர்


லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல தமிழர்கள் கலந்துகொண்டார்கள். லண்டனில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. வரும் காமன்வெலத் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது. இக் கூட்டம் லண்டனில் நடைபெற்றவேளை இலங்கையில் இம் மாநாட்டை நடத்தக்கூடாது என்று, சில நாடுகள் கூறியிருந்தது. இதில் கனடாவும் அடங்கும். இக் கூட்டம் நடைபெற்றவேளை இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே நடத்தினார்கள். இக் கூட்டமானது பிரித்தானிய தமிழர் பேரவையினரால்( BTF) ஒழுங்குசெய்யப்பட்டது.
கூட்டம் நடைபெற்று முடிந்தவேளை திடீரென வெளியே வந்த கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஈழத் தமிழர்களோடு கை குலுக்கினார். அவர் சிலர் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். இப் போராட்டத்தில் சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே மற்றும் எழுத்தாளர் பிரான்சிஸ் கரிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கனடா வெளிவிகார அமைச்சர் அவர்களுடனும் கலந்துரையாடினார். தமிழர்களை தாம் பெரிதும் மதிப்பதாகவும், இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுவதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் நேரடியாகவே தமிழர்களிடம் தெரிவித்திருந்தார்

ஏப்ரல் 26, 2013

இளவரசி அரை நிர்வாண போட்டோ சர்ச்சை



இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ பத்திரிகைகளில் வெளியான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரான்சில் மூவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர், அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட பத்திரிகையின் தலைமை பப்ளிஷர் ! பெயர் அறிவிக்கப்படாத போட்டோகிராபரால், டெலாஸ்கோபிக் கேமரா கொண்டு இளவரசியின் அரை நிர்வாணப் படங்கள் எடுக்கப்பட்டன என்ற பரபரப்பு குறிப்புடன் வெளியான போட்டோக்கள் அவை. இந்த போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர், இவற்றை விற்க முயன்றபோது, பிரிட்டிஷ் பத்திரிகைகள் வாங்க மறுத்திருந்தன.
 பிரெஞ்ச் செலிபிரிட்டி சஞ்சிகை Closer, இந்த போட்டோக்களுக்கு பெரிய விலை கொடுத்து வாங்கி பிரசுரித்து, ஒரே நாளில் பிரபலத்தின் உச்சிக்கு சென்றது. அதையடுத்து, அரச குடும்பத்தினர், அந்த பத்திரிகை குரூப் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்தப் போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் யார் என்பதை வெளியிட முடியாது என மறுத்து வந்தது, பத்திரிகை. ஆனால், பிரெஞ்ச் கோர்ட் உத்தரவுப்படி போட்டோகிராபர்களை பிரெஞ்ச் விசாரணை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது, Closer சஞ்சிகையின் தலைமை பப்ளிஷர் Ernesto Mauri, மற்றும் குறிப்பிட்ட போட்டோவை எடுத்த ஒரு போட்டோகிராபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை பிரெஞ்ச் டி.வி. சேனல் TF1 இன்று வெளியிட்டுள்ளது.போட்டோகிராபரின் பெயர், வெளியிடப்படவில்லை. ஆனால், மற்றொரு பெண் போட்டோகிராபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Valérie Suau என்ற பெயருடைய இவர், இளவரசி கேத்ரினை பீச்சில் நீச்சலுடையில் போட்டோ எடுத்தவர். இவரது பெயர், வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் விசாரணைகள், தண்டனையில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. கோர்ட், வெறும் எச்சரிக்கையுடன்கூட விட்டு விடலாம்.

வாரணி ராணுவ முகாமில் கோட்டபாய??

இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தில் விரைவில் வரவுள்ள மாகாணசபை தேர்தலில் ஜனாதிபதி ராஜபஷேவின் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக, விடுதலைப் புலிகளின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரியவருகிறது.
 இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். வாரணி ராணுவ முகாமில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரியவருகிறது.இதற்கிடையில் அரசுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்குகொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் கட்சியின் சார்பிலும் முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, அல்லது தயா மாஸ்டர் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று தெளிவாக தெரியவில்லை.
 எப்படி இருந்தாலும், தயா மாஸ்டர் இந்த முறை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என்பது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25, 2013

இழுத்தடிக்கப்பட்டுவந்த மன்னார் தமிழ்ச்சங்க??



பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது அரக்கப் பரக்க கூடி ஆலோசித்து முடிவெடுத்து ஆடம்பரமாக ஏற்படுத்திய மன்னார் தமிழ்ச்சங்கம் தனது நீண்ட இடைவெளியின் பின்னரான 2வது பொதுக்கூட்டத்தை இன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் பொங்கிப் பொருமியே சபையினுள் நுழைந்திருந்தனர். முறையே சம்பிராய பூர்வமான ஆரம்பமும், உரைகளும் நடந்தேறின... தனக்கு வரவிருப்பதை அறிந்த சில பதவிநிலை உறுப்பினர்கள் தமது இறுதியுரையை அதில் நிகழ்தியமை மிக ஆக்குரோசமாக அமைந்திருந்தது.

பார்த்துப் பார்த்து செதுக்குவதென்பார்களே... அதுபோல பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்ச்சங்க யாப்பு அதை காழ்ப்புடன் உருவாக்கியவர்களுக்கே ஆப்படித்ததாகக் கருதப்படுகின்றது. யாப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் பல பெரியமனுசர்கள் பெருந்தன்மையுடன் அதை அடக்கினார்கள். ( Lolz)

பின்னர் முரண்பாடுகளுடன் தொடர்ந்த கூட்டம் தனது நிர்வாக சபை உறுப்பினர்களை திட்டமிட்டபடியே தெரிவு செய்து கொண்டது.

”பழைய கிழவி கதவத் திறடி”... பிசாச விட பேய் பறுவால எண்ட மாதிரி எல்லோரும் ஏகமனதாய் ஏற்றுக் கொண்டனர்... அப்ப பாருங்களன்...

காகமிருக்கப் பனம்பழம் விழுந்தாற்போல தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய செம்மொழிவிழாப் பெருமை அப்போது பதவி வகித்தவர்களையே சாரும். ஆனால் இன்று உள்ள புதிய பதவி நிலை உறுப்பினர்களுக்கு முன்னால் ஒரு சவால் முன்வைக்கப்படுகின்றது...

அது அவர்கள் செயலாற்றலிலேயே தங்கியுள்ளது...

சிறிது காலத்தில் பலப்பரீட்சையின் ரிசாள்ட்டு வந்து விடும்... செயல் வீரர்கள் தம்மை தமிழ்சங்கத்தால் அடையாளம் காட்டுவார்களா இல்லை தமிழ்ச்சங்கம் அவர்களால் அடையாளப்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏப்ரல் 13, 2013

கார் - லாரி மோதியதில் ஐந்து?


பிரிட்டனில் லேஸ்பியில் உள்ள A18 நெடுஞ்சாலையில் நிசான் பிரிமேரா(Nissan Primera) என்ற கார் எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது.
இதில் அந்த காரில் வந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக ஹம்பர்சைட்(Humberside) பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவ்விபத்து குறித்த அதிகாரி ட்ரேசி பிராட்லீ(Tracy Bradley) கூறுகையில், டர்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் வந்ததாகவும், இவர்களின் மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், மற்ற இருவர் கிரிம்ஸ்பியில்(Grimsby) உள்ள இளவரசி டயானா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாகவே அந்த இடம் விபத்து மிகுந்த இடமாக இருக்கிறது என்று விபத்து நடந்த இடத்திற்கு அருகில் குடியிருக்கும் ஸ்டூவர்ட் க்ரீஸ்(Stuart Creese) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹம்பர்சைட் நகர் காவல்துறையினர், விபத்து நடந்தபொழுது அந்த இடத்தில் இருந்தவர்களை சாட்சி சொல்ல வரும்படி அழைப்பு விடுவித்துள்ளனர்.
 

ஏப்ரல் 12, 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


ஏப்ரல் 02, 2013

கண்ணெதிரே இளம்பெண் கற்பழிப்பு: பிரேசிலில் நடந்த

?

பிரேசிலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த 21 வயது இளம்பெண்ணொருவர் தனது காதலர் கண்ணெதிரிலே பாலியல் வன்முறைக்குட்படுத்தபட்டுள்ளார்.
அந்நாட்டில் ரியோ டீ ஜெனிரோவில் என்ற இடத்தில் இந்த காதலர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று அப்பேருந்தில் ஏறிய இருவர் மற்றைய பயணிகளை கீழே இறங்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் கீழே இறங்கியதும் பேருந்தை வேறொரு இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் காதலனை மோசமாகத் தாக்கி அவருக்கு விலங்கிட்டுள்ளனர்.
பேருந்தை ஒருவர் செலுத்த மற்றையவர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இவ்வாறு மாறி மாறி இருவரும் அப்பெண்ணை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதுமட்டுமன்றி அவர்களது பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர்.
இத்தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் 20 மற்றும் 22 வயதானவர்கள் என்று கருதப்படுகிறது.