18

siruppiddy

மே 25, 2013

இளைஞர்களால் நடாத்தப்படும் அழகுராணி போட்டி-

 
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி சம்பந்தமான இலங்கை அரசாங்கம் பிண்ணனியென இணையத்தளங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் இவ் நிகழ்வு நாளை பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெறுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குழப்புவதற்காகவே இவ்வாறான பொய் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பட்டுள்ளனர்.




 

கைது செய்ய வேண்டியது மன்மோகன் சிங்கையே ஒழிய?!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவரான ஜாசின் மாலிக் ஐ தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து பேச வைத்த ஒரே காரணத்தால் சீமானைக் கைது செய்ய வேணும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன.
ஆனால் இந்தியத் திருநாட்டின் பிரதமரே ஜாசின் மாலிக்கை சந்தித்து கை கொடுத்து கலகலப்பாக பேசுகிறார்.

கிரகங்களைக் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கையருக்கு!

மூன்று கிரகங்களை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தற்போது இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.
வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வடமேல் திசையாக வானத்தில் தென்படும் என கொழும்பு பெளதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த மூன்று கிரகங்களும் நாளை 26 ஆம் திகதியும், நாளை மறுதினமான 27 ஆம் திகதியும் விண்ணில் தென்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் இவ்வாறானதொரு காட்சி, 2021 ஆம் ஆண்டிலேயே தென்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்றைய தினம் சந்திர கிரகணம் ஒன்றும் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், ஆசிய நாடுகளில் அது தென்படும் என்றும் அவர் கூறினார்.

மே 24, 2013

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் ?


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இண்டிகோ ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானமொன்று, 179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது.
விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.
விரிசலோடு பயணத்தைத் தொடர்ந்தால் விபத்து ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானிகள், கண்ணாடி உடைவதைத் தவிர்ப்பதற்காகவும், உயரத்தினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் உடனடியாக கொல்கத்தா திரும்ப தீர்மானித்தனர்.
விமானத்தின் திடீர் ஆட்டம், பயணிகளிடம் அச்சத்தை உண்டாக்கியது.
இதனால் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாகவே விமானம் கொல்கத்தா திருப்பப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1.59 நிமிடத்திற்கு பிறகு, விமானம் பத்திரமாக கொல்கத்தாவில் தரை இறங்கியது.
பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் மாலை 3.32 மணி அளவில் திப்ரூகர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
 

மே 21, 2013

ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா யூன் மாத இறுதியில் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவலை வெளியிட்டுள்ளது.
ஒபாமா அவரது மனைவி மிசெல்லுடன் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல், டான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுகிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதும், அமைதியை நிலைநாட்டுவதுமே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்த பயணத்தின் போது தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு ஏதிராக போராடிய 94 வயதான நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி ஒபாமா சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 

மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து


சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து படகின் சொந்தக்காரரான யூ சியுஜீன் கூறுகையில், எங்களை விடுவிக்க 98,000 டொலர் பணயத் தொகை கேட்டதாகவும், அவர்கள் அனைவரும் வடகொரிய அரசின் ராணுவத்தினராக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அண்டை நாடுகளுக்கு இடையே புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மீனவர்களின் கைது சீன மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
வடகொரியாவில் வணிகம் மற்றும் உதவித் தொடர்புகளில் சீனா முக்கியப் பங்கு வகித்தபோதிலும், அந்த நாடு கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய அணு ஆயுத சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பணத்திற்காக வடகொரியா உள்ளூர் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 16 சீன நாட்டு மீனவர்களை அவர்களின் படகுடன், வடகொரியா விடுதலை செய்துள்ளதாக இன்று சீனா நாட்டின் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
 

மே 20, 2013

கூட்டமைப்பு பற்றி மாவை விளக்கம்,.,


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திபாரமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி ஒன்றிணைத்து தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.
   யாழ். வளைவு திறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தமிழர் விடுதலைக் கூட்டணியின்மாநாடு மல்லாகத்தில் நடைபெற்றபோது, தமிழரசுக் கட்சி கூட்டணியில் பிரதான பங்கேற்று செயற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று இப்போது கூட்டமைப்பிலும் அத்திபாரமாக உள்ள தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளுக்கு சமநிலை வழங்கி அவற்றை அரவணைத்துச் சென்று தமிழர் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
   தமிழரசுக் கட்சி எப்போதும் கூட்டமைப்பிலேயே இருக்கும். 1970 இல் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாகராசா என்பவர் யாழ். நகர முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட யாழ்.

மனித உரிமைக்கு இடமில்லை**


 இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி கியுமன் றைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோஇ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும்இ தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

'துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும்இ காணாமல்போனவர்கள் பற்றிய தகவலை எதிர்பார்த்தும்இ தமது அடிப்படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள்இ ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது' என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் "பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட
 

மே 18, 2013

இன்னொரு முள்ளிவாய்கால் ஏற்படும்

 
மிரட்டுகிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை,தமிழீழத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தமான போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், இறுதிக்கட்ட போரின் போது உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.மக்களுக்கு அஞ்சலி செலுத்த இராணுவத்தினர் எந்த தடையும் விதிக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று தீர்த்தது.

இதில் பலியான தமது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் கடும் அச்சுறுத்தலின் மத்தியில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தாயகத்து தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

மே 15, 2013

நவீன கள்ளுத் தவறணைகள்!


 
யாழ். வடமராட்சியில் அச்சுவேலியில் நெருப்புமூட்டி பகுதியில் அமையப் பெற்று உள்ள கள்ளுத் தவறணை இது.
 நவீனமயப்படுத்தப்பட்ட தவறணைகளில் இதுவும் ஒன்று.
 கொட்டிலுக்கு பதிலாக வீடு ஒன்றில் நடத்தப்படுகின்றது.
 மேசைகள், கதிரைகள் உள்ளே ஒழுங்காக போடப்பட்டு இருந்தன.
 பிளாவுக்கு பதிலாக கண்ணாடி குவளைகள்.
 வாடிக்கையாளர்களின் நலனை கண்காணிக்க சிப்பந்திகள்.
 இருப்பினும் காற்று வாங்குகின்றமைக்காக சில நுகர்வோர்கள் வாசலை அண்டிய இடத்தில் சீமெந்து தரையில் அமர்ந்து இருந்தனர்.
 பாரம்பரியமாக இருந்து வருகின்ற தவறணைகளை பார்க்கின்றபோதுதான் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கின்ற தவறணை என்கிற அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்,

 

மே 09, 2013

முன்னாள் பிரதமர் கிலானி மகன் தீவிரவாதிகளால்,,,


பாகிஸ்தானில் நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம் தேர்தலுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள தீவிரவாதிகள், ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி இன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் முல்தான் நகரில், அலி ஹைதர் பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஹைதரை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அலி ஹைதரின் பாதுகாப்புச் செயலாளர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடந்ததும் தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள், அலி ஹைதரை கடத்திச் சென்றனர். ஜனநாயக அரசு அமைவதை கடுமையாக எதிர்த்து வரும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அலி ஹைதரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக முல்தான் நகரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தீவிரவாத இயக்கங்கள், அலி ஹைதரை ஏற்கனவே எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மே 08, 2013

சிகை அலங்கரிப்பாளர்களை சினங்கொள்ள வைத்த அமைச்சர் டக்ளஸ்!-



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகைக்காக 800ற்கும் மேற்பட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் சுமார் 3மணி நேரம் தமது தொழில்களையும் கைவிட்டு வந்து காத்திருந்தனர். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் காத்திருந்த அவர்கள் அமைச்சர் வராமையால் சினமடைந்து அங்கிருந்து வெளியேறினர்.
 இது குறித்து தெரியவருவதாவது:
 யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு 7 கிளைச் சங்கங்களையும் சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் காலை 9 மணிக்கு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய விருந்தினர்களாக அழைக்கப்பட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் நண்பகல் 12 மணிக்குப் பின்னரே நிகழ்வுக்கு வருகை தந்தனர்.
சிகை ஒப்பனையாளர்கள் அனைவருக்கும் நேற்றைய தினம் விடுமுறையாகக் கருதி கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் 800ற்கும் மேற்பட்டோர் தமது சிகை ஒப்பனை நிலையங்களை மூடிவிட்டு நிகழ்வுக்காக வருகை தந்திருந்தனர்.
காலை 8 மணிக்கே நிகழ்வுக்கு வருகை தந்த சிகை ஒப்பனையாளர்கள் பலர் சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்தும் அமைச்சர் வருகை தராததால் பொறுமை இழந்தவர்களாக சுமார் 11.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்கள்.

டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி

 வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
 இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார்.
 ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான் நெருக்குவேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் தான் எடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
 இதேவேளை இப்பொழுதே வடக்கு தேர்தலில் அரசாங்க தரப்புக்கள் தமக்குள்ளே உள்ள போட்டி காரணமாக ஒருவரை ஒருவரை விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்
 

மே 07, 2013

கழுத்தை நெரிக்கவும் முடியும்! எதிராக நடவடிக்கை


  என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர்.
வடமாகாண தேர்தல் மற்றும் வலி.வடக்கு மீள்குயமர்வு என்பன குறித்துத் தனது வழமையான கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், தனது பேச்சை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்துமாறு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த பின்னர் மிரட்டல் பாணியில் கருத்துத் தெரிவித்தார்.
என்னுடன் கதைத்து விட்டு வேறு ஏதாவது எழுதினால் என்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலும், கழுத்தையும் நெரிக்க இயலும் என்றார் அமைச்சர்.
அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் அமைச்சரின் மிரட்டல் பாணியிலான கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொது இடத்தில் வைத்து பகிரங்கமாகத் தாம் மிரட்டப்பட்டமை ஊடக சுதந்திரத்திற்கு அமைச்சரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று ஊடகவியலாளர்கள் கூறினர்.

கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி


 பாகிஸ்தானில் வரும் 11ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு ஜனநாயக அரசு அமைவதை கடுமையாக எதிர்த்து வரும் தீவிரவாதிகள், தேர்தலை சீர்குலைக்க தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மிக கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மத்திய குர்ரம் பழங்குடி பகுதியில் உள்ள மதரசாவில், வலதுசாரி ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-பாசில் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் திடீரென குண்டுவெடித்தது.
இதனால் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். சுமார் 70 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடித்தபோது பழங்குடியின பகுதி முன்னாள் எம்.பி. முனிர் கான் ஒரக்சாய், அங்கு இருந்தார். முனிரின் சசோதரர் காதீர் ஓரக்சாய் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கட்சியின் வேட்பாளர் ஐனுதீன் ஷாகிரும் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மதரசா அமைந்துள்ள பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது
 

மே 06, 2013

பாக்-ஆப்கான் இடையே எல்லை பிரச்சினை: ?

 
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடையே 'துராந்து லைன்' என்ற எல்லை கோட்டை ஆங்கிலேயர்கள் வகுத்து கொடுத்து இருக்கின்றனர். இருந்தும் அவர்களிடையே எல்லை மீறுவதாக பிரச்சினை இருந்து வருகிறது.
 இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தானின் தற்போதைய எல்லைகளை ஆப்கான் அரசு அங்கீகரிக்காது என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து பாக்-ஆப்கான் எல்லை பாதுகாப்பு படை போலீசார் மோதிக்கொண்டனர். இந்த வாரம் இரண்டாவது முறையாக நடந்த சண்டையில் பெரிய அளவில் உயிர் சேதம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதில் ஒரு ஆப்கான் எல்லைப்படை போலீசார் கொல்லப்பட்டார். இரு பாகிஸ்தான் போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கான் எல்லையில் பிரச்சினையை தூண்டுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கான் எல்லையில் உள்ள மக்கள், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மே 04, 2013

ஏற்றுமதியில் வீழ்ச்சி! பொருளாதாரமும்=

 
 இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
 சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
 கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்பெற வேண்டிய நிலைலேயே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 இந்த நிலையில், பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது பெரும் சுமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், பெருமளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் உற்பத்தி, சேவைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால், மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
9

 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
 சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
 கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்பெற வேண்டிய நிலைலேயே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 இந்த நிலையில், பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது பெரும் சுமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், பெருமளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் உற்பத்தி, சேவைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால், மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்


இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.