18

siruppiddy

ஜூன் 30, 2013

அதிபர்களுக்கான படைபயிற்சியை நிறுத்தவும்!


 சிறீலங்காவில் பள்ளிக்கூட அதிபர்களுக்கு படை பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கூட அதிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட படைபயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற நியதிக்கமைய இன்றுகாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.உயிரிழந்த 52 வயதான டபிள்யு.ஏ.எஸ். விக்கிரமசிங்க ரத்தெலுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர்.
அதிபர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.பாடசாலை அதிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் படைபயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த சம்பவத்துடனாவது இந்தப் பயிற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயற்சி என்ற பெயரில் அரசு படைதர பயற்சி வழங்கிவருகிறது. இதே மாதிரியான திட்டத்தின்கீழ் பாடசாலை அதிபர்களுக்கும் படைபயிற்சி வழங்கி கப்டன் லெப்டினன் லெப்டினன் கர்ணல் என்ற தரத்திலான படிநிலைகளையும் அரசு வழங்கிவருவதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது

மக்களுக்கான நலன்கள் குறித்து கிழக்கு மாகாண சபை கவனம்


போர்ச் சூழல் நில­விய காலத்தில் பல்­வே­று­பட்ட இழப்­புக்­களை சந்­தித்தும் அடிக்­கடி உள்­ளக இடம்­பெ­யர்­வு­க­ளுக்கு ஆளா­கியும் வாழ்ந்த அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள காஞ்­சி­ரங்­குடா, தங்­க­வே­லா­யு­த­புரம் கிராம மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­துள்ள போதிலும் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­படும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கைகள் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.
இத­னை­யிட்டு கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என மாகாண சபை உறுப்­பினர் எம். இரா­ஜேஸ்­வரன் தெரி­வித்தார்.
கிழக்கு மாகா­ண­சபை அமர்வின் போது 02.07.2009ஆம் ஆண்டு மீள்­கு­டி­யமர்த்­தப்­பட்ட காஞ்­சி­ரங்­குடா, தங்­க­வே­லா­யு­த­புர கிராம மக்­களின் தேவைகள் குறித்தும் இம் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீதி குறித்தும் அவர் தனி­நபர் பிரே­ரணை சமர்ப்­பித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அம்­பாறை மாவட்­டத்தின் திருக்­கோவில் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட காஞ்­சி­ரங்­குடா கிராம சேவை­யாளர் பிரிவில் 68 குடும்­பங்­களும் சாகாமம் பிர­தேச செய­லாளர் பிரிவில் 126 குடும்­பங்­களும் 02.07.2009ஆம் திகதி மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டார்கள்.
இவர்­க­ளுக்கு தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்கள் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்துக் கொடுத்­தன. ஆனால் அர­சாங்கம் இம் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார உத­வி­களை அளிக்­க­வில்லை. வீட­மைப்பு வச­தி­களை செய்து கொடுப்­பதில் அக்­கறை காட்­டாமல் இருந்து வரு­கின்­றது.
அதே போன்று தங்க வேலா­யு­த­புரம் கிராம சேவை­யாளர் பிரி­வி­லுள்ள 424 குடும்­பங்­களும் கஞ்­சிக்­கு­டிச்­சாறு கிராம சேவை­யாளர் பிரி­வி­லுள்ள 406 குடும்­பங்­களும் 2009ஆம் ஆண்டு நடந்த வன்­செ­யலில் இடம்­பெ­யர்ந்­தார்கள். ஆனால் இம்­மக்­களை அர­சாங்கம் மீளக்­கு­டி­ய­மர்த்­த­வில்லை.
ஆனால் கஞ்­சி­கு­டி­யாற்றில் 224 குடும்­பங்­களும் தங்­க­வே­லா­யு­த­பு­ரத்தில் 270 குடும்­பங்­களும் தமது நிலங்­களில் சுய­மாக குடி­யேறி விவ­சாய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வதை காணலாம். இது ஒரு புற­மி­ருக்க கிழக்கு மாகாண சபை­யினால் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் இம் மக்­க­ளுக்கு கிண­று­களை அமைப்­ப­தற்­காக வெட்­டப்­பட்ட குழிகள் உண்டு. ஆனால் கிண­றுகள் கட்­டப்­ப­ட­வில்லை.
கிண­றுகள் அமைக்க ஒதுக்­கப்­பட்ட நிதிக்கு என்ன நடந்­தது? போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­க­வென நல்­லின கறவை பசுக்கள் தங்­க­வே­லா­யு­த­பு­ரத்­திற்கு கொண்டு வரப்­பட்­டன. ஒரு சில தினங்­களில் அவற்றை கொண்டு வந்­த­வர்­களே அதனை கொண்டு சென்று விட்­டனர்.என்றார்

தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு?


  யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி போன்றவை காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப் பதிவேடு தெரிவித்துள்ளது.
தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் அண்மைக்காலமாக தற்கொலை என்ற பெயரில் இடம்பெறும் மர்மக்கொலைகளும் இதில் அடங்கும் என்று எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான மர்ம மரணங்களுக்கு சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரே காரணம் என யாழில் இருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்க தாமதம்


இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்துவருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால், அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின்படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாக கர்ணல் ஹரிகரன் தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் அப்படியான முயற்சிகளில் இலங்கை ஈடுபடும்போது மீண்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக அப்படியான திருத்தங்களை கொண்டுவர இலங்கை முயற்சிக்காது என்றும் அப்படி கொண்டுவந்தால் இந்தியா மாநாட்டுக்கு செல்வது கேள்விக்குறியாகலாம் என்றும் அவர் கூறினார்.
அதனால் இந்தியா தன்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையை ராஜபக்ச அரசாங்கம் ஏற்படுத்தாது என்றும் கூறிய கர்ணல் ஹரிகரன், அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அழுத்தங்களை காங்கிரஸ் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!


 சிறீலங்காவில் வெளிநாட்டுப் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அண்மைய பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களாக சிறீலங்காவில் வெளிநாட்டு பிரஜைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கைப் பொதுப் பயணிகள் பஸ்களில் அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பெண்கள் தனியான பயணங்களை மேற்கொள்வது உசிதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பொது இடங்களில் வெளிநாட்டுப் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஜூன் 29, 2013

சிரியாவில் இருவர் தலை துண்டித்து படுகொலை


சிரியாவில் ஜனாதிபதி பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆயுதமேந்தியும் போராடி வருகின்றனர். ஆயுதப் போராளிகளை நசுக்கி வீழ்த்த பஷீர் அல் ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதல்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அதிபருக்கு எதிராக போராடி வரும் குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ. ஆயுத உதவி செய்து வருவதாக சிரியா அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதனை ஒப்புக் கொண்டுள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது. இந்த ஆயுதங்கள் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் சிரியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிரியாவுக்குள் அமெரிக்க ஆயுதங்களை கொண்டு வர உதவிய கிருஸ்துவ பாதிரியார் மற்றும் ஒரு கிருஸ்துவரின் தலைகளை துண்டித்த காட்சி தற்போது இண்டர்நெட்டில் உலா வரத்தொடங்கியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் இட்லிப் என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்களின் முன்னிலையில் ஆசாத்தின் ஆதரவாளர்கள் இவர்களின் தலைகளை துண்டிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. துண்டித்த தலைகளை உடலில் இருந்து எடுத்தும், பின்னர் உடலுடன் பொருத்தியும் அவர்கள் செய்யும் வேடிக்கைகளை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ரசித்து உற்சாக கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது,(காணொளி, இணைப்பு)

ஜூன் 28, 2013

களுத்துறையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட !


 உக்ரென் பிரஜைகள் கைது சிறீலங்காவின் தென்பகுதியான களுத்துறை கட்டுக்கொரந்த பகுதியில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று உக்ரென் நாட்டுப்பிரஜைகள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த மூவரும் கட்டுக்கொரந்த பகுதியில் உள்ள வங்கியில் இருந்து கடனட்டைமூலம் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளார்கள் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட வங்கியின் காவலாளி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களிடம் இருந்து 8இலட்சம் பணமும் 14 கடனட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதசாரிக் கடவையில் பதிக்கப்படும் கல்லை எடுத்து ?

  
 பாதசாரிக் கடவையில் பதிக்கப்பட்டுள்ள கல்லை எடுத்துக் காட்டி கொழும்பு மாநகர சபையில் சர்ச்சையை கிளப்பிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரோய் நிஷாந்த போகாவத்த, வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது அது தொடர்பில் மாநகரசபை மீள் பரீசிலனை செய்ய வேண்டுமென்றும் சபையில் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபைக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கூடியபோதே உறுப்பினர் ரோய் போகாவத்த இப்பிரச்சினையை கிளப்பினார்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் ரோய் போகாவத்த,

கொழும்பு கோட்டை மின்சார சபைக்கு முன்பாக பாதசாரிக் கடவையில் சிகப்பு நிறக்கற்களை பதிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த வழியாக வரும் போது பதியப்பட்ட கற்கள் தரமில்லாமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

சிகப்பு நிறக்கற்கள் அதற்கான மூலப்பொருட்களை கலந்து தயாரிக்கப்படவேண்டும். ஆனால், இப்பாதசாரிக் கடவையில் பதியப்பட்டுள்ள கற்கள் சிகப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டவை. மக்கள் பாதையைக் கடக்கும் போதும் மழை வெயிலால் காலப்போக்கில் சிகப்பு வர்ணம் மறைந்து வெள்ளை நிறமாக மாறிவிடும். எனவே, ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதிகாரிகள் நிபந்தனைகளை விதிக்க வேண்டும். நகர சபை பொறியியலாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

பலகோடி ரூபா இதற்காக செலவு செய்யப்படுகின்றது. எனவே, கொழும்பு மாநகரசபையின் பணம் வீணாவதைத் தடுக்க வேண்டும். வேலைத்திட்ட ஒப்பந்தங்களை வழங்கிய பின்னர் அவ்வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றதென்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் இந்த வேலைத்திட்டம் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படவில்லை. உலக வங்கியின் நிதியுதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுக்கின்றது. எனவே, இது தொடர்பில் கண்காணிக்கும் அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கே உள்ளது என மேயர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரோய் போகாவத்த,

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமெனக்கூறி இதனை வெறுமனே கைவிட்டுவிட முடியாது. இப்பிரச்சினையை பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் வேலைத்திட்டம் சரியான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வாரென்றும் உறுப்பினர் ரோய் போகாவத்த தெரிவித்தார்.

ஜூன் 27, 2013

மஹிந்தருக்கு எதிரான சதி முயற்சியின் பின்னணியில் சந்திரிக்கா!


தமிழர்களுக்கு அரசியல் பலம் சேர்க்கும் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
 இந்நிலையில் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆளும்கட்சி உறுப்பினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்த விவகாரம், மஹிந்த அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 குறித்த சட்டமூலத்தை பலவீனப்படும் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் பின்னணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செயற்படுவதாக, இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச கண்டுபிடித்துள்ளார்.
 இது தொடர்பாக விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
"தனது மகன் விமுக்தியை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்து சந்திரிக்கா குமாரத்துங்க செயபடுகிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணியில் அவரே இருக்கிறார்.
 சிறிலங்கா அரசாங்கம் தொடங்கியுள்ள 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடித்து- அதனைப் பாதுகாக்கும் திட்டத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளது.
 ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, றெஜினோல்ட் குரே, மற்றும் சிறிலங்கா மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த எதிர்ப்பு அணியில் உள்ளனர்.
 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரை தன்வசம் எடுத்துக் கொள்ள சந்திரிகா முயற்சிக்கிறார்.
 சமஸ்டிவாதிகள், பிரிவினைவாதிகள், ஐதேக, லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாசக் கட்சி, போன்றவற்றை சேர்ந்தவர்களும், விஜய குமாரணதுங்கவின் மக்கள் கட்சியில் எஞ்சியுள்ளவர்களும் இணைந்து. 13வது திருத்தச்சட்ட விவகாரத்தை வைத்து ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஐதேகவை அரியணை ஏற்ற முனைகின்றனர்.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிளவை ஏற்படுதலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இது வெறும் பகல் கனவு" என வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

ஜூன் 26, 2013

கிளைஸ் நட்சத்திரத்தினை சுற்றி வரும் மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு


சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் கிளைஸ் 667சி நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் இந்த மூன்று பூமிகளும் சுற்றி வருகின்றன. சூரியனைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுடைய இந்த நட்சத்திரத்தை இந்த பூமிகள் சுற்றிவருகிறபோது நிலவும் வெப்பநிலை காரணமாக அங்கு தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோள்கள் நமது பூமியில் உள்ள பாறையை போன்று நிலப்பரப்புடனும், ஆனால், பூமியை விட பெரியதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இதனை ‘சூப்பர் எர்த்ஸ்’ என்றும் அழைக்கின்றனர்
 

ஜூன் 25, 2013

பட்டினி போட்டு 2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாய்


சீனாவில் போதை மருந்துக்கு அடிமையான தாய் ஒருவர், பட்டினி போட்டு 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங் புறநகரைச் சேர்ந்த பெண் லீ. இவருக்கு 1 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இவரது கணவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லீ-யும் போதை மருந்து அடிமையானதால், குழந்தைகளை சரிவர கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தார்.
அவர்களுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் இருந்ததால், குழந்தைகள் பட்டினியால் வாடினர்.
இந்நிலையில் 2 குழந்தைகளும் தங்களது வீட்டில் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

பாலியல் தொந்தரவால் மூன்றில் ஒரு பெண் உயிரிழப்பு: அதிர்ச்சி ?

.
 
உலகம் முழுவதும் 3ல் ஒரு பெண் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆய்வும், கருத்துக் கணிப்பும் நடைபெற்றது
கடந்த 1983ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை குடும்பங்களில் வன்முறை என்ற தலைப்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 86 நாடுகளில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பெண்கள், 56 நாடுகளை சேர்ந்த பெண்களிடம் குடும்ப உறவில் செக்ஸ் கொடுமை குறித்து சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் கூறியதாவது, உலகம் முழுவதும் உள்ள 40 சதவிகித பெண்கள் பல்வேறு கொடுமைகள், சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர்.
பெண்களை அடிப்பது, கன்னத்தில் அறைவது, ஆயுதங்களால் தாக்குவது, விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் வைத்து கொள்ள கட்டாயப்படுத்துவது உள்பட பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர்.
மிகவும் நம்பகமாக உள்ள அவர்களது கணவன், காதலன் அல்லது கூட்டாளிகளே அவர்களை பல்வேறு காரணங்களுக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இத்தகைய கொடுமைகள் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவிகிதம் நடைபெறுகிறது.
லத்தீன் மற்றும் தென் அமெரிக்காவில் 30 சதவிகிதமும், வட அமெரிக்காவில் 23 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 25 சதவிகிதம் பெண்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். 85 சதவிகித பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை பல்வேறு விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
 

தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில்


நடைபெறும் சாத்தியம் வட மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் முதல் இருவாரத்திற்குள் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், போதிய கால அவகாசம் இல்லை. ஆனால், செப்டெம்பர் 21அல்லது 28ஆம் திகதியே சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு அறிவிப்பின் பின்னரே ஏனைய விடயங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 24, 2013

வெலிங்டன் முகாமிலிருந்து இலங்கை அதிகாரிகள் வெளியேற்றமா?


 தொடர் போராட்டம் காரணமாக குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ மையத்தில் இலங்கை இராணுவ அதிகரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்த 2 இலங்கை இராணுவ அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இவர்கள் பெங்களூரூ அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர்கள் போதிய அளவு பயிற்சியை முடித்துவிட்டு தான் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
 

அமைதிக்கு பங்கம் அலறுகிறார் ஆரியசிங்க !


புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
 வெளிநாடுகள், இலங்கையை பகைக்கும் வகையிலான பிரச்சாரங்களின் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
 2013ஆம் ஆண்டிற்கான சர்வதேச அபிவிருத்தி கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 சர்வதேச நாடுகள் பலவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தொடர்பில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
 இதன் மூலமாக இலங்கை தொடர்பாக தவறான அபிப்பிராயம் ஒன்றை சர்வதேச ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்

ஜூன் 22, 2013

ராஜினாமாவை வாபஸ் பெற்ற பாலஸ்தீன பிரதமர்


 கடந்த 20-ம்திகதி திடீரென ராஜினாமா பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, முன்னாள் பிரதமர் சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, இரு வாரங்களுக்கு முன்னர் ரமி ஹம்தல்லாவை புதிய பிரதமராக அதிபர் நியமித்தார். அவருக்கு துணையாக மேலும் 2 துணை பிரதமர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தனது பதவியை ரமி ஹம்தல்லா ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று ஹம்தல்லா, அதிபர் மஹ்மூத் அப்பாஸை  சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் முடிவில் அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாலஸ்தீன அரசியலமைப்பு சட்டத்தின் படி, அதிபர் தான் அதிக அதிகாரங்களை கொண்டவர்.
அத்துடன் துணை பிரதமர்களின் அனுமதி இல்லாமல் பிரதமர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால் ரமி ஹம்தல்லாவால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.
ஹம்தல்லா தனக்கும், துணை பிரதமர்கள் இருவருக்கும் சட்டபடி சரியாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை பெறவே இது போன்ற ராஜினாமா நாடகத்தை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
 

ஜூன் 21, 2013

குடும்பநல வரிச்சலுகை திட்டம் அறிமுகம்


ஜெர்மன் நாட்டின் புதுமனத்தம்பதிகளுக்காக வழங்கப்படும் வரிச்சலுகை குடும்பமாக வாழ்பவர்களுக்கு கிடைக்குமாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வியாழக்கிழமையன்று குடும்ப நலத்துறை அமைச்சர் கிறிஸ்டினா ஷ்ரோடர் (Christina roder) தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சட்டம் குறித்து அவர் கூறுகையில், தற்போதைய நடை முறையின் கீழ் ஒரு குடும்பத்தில் இருவரும் சம்பாதிக்கின்றனர். எனவே அவர்களுடைய வருமானமானது இரண்டாக பிரிக்கப்பட்டு இருவரும் தனித்தனியே வரி செலுத்தவேண்டும்.
அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் யாருடைய வருமானம் அதிகமாக உள்ளதோ அவர்கள் குறித்த வரி தொகையினை கட்டினால் போதுமானது. இதனைத் தொடர்ந்து இச்சட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை, ஏனெனில் இது மாற்றப்படாத ஒன்றாகும்.
இதன் மூலம் திருமண ஜோடிகளும் அவர்களின் குழந்தைகளும் அதிக பயனடைவார்கள். மேலும் இதனடிப்படையாக குழந்தைகளின் எதிர்கால திட்டத்தினை வகுத்து கொடுக்கும் ஒன்றாகும்.
ஆனால் இச்சட்டம் குறித்து சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பீர் கூறுகையில்,இச்சட்டமானது மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் இது மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் இதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் மட்டுமே பயனடைய முடியும். குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு இதனால் எவ்வித பயனும் இல்லை.
இருப்பினும் ஜெர்மனி குடும்ப நட்புறவு கொள்கைகளுக்கு அதிகமாக முதலீடு செய்கின்றன. 1975-ம் ஆண்டுகளில் ஒரு பெண்னானவள் 1.25 மற்றும் 1.45 விகிதங்களில் குழந்தைகளை பெற்றெடுத்தாள், தற்போது பிறப்பவர்கள் விகிதமானது ஒரு மனிதனின் வயது போல் குறைந்துள்ளது

 

பயணத்தை தவிர்க்க ஆஸ்திரேலியா வலியுறுத்தல்


இந்தியாவில் தற்பொழுது மோசமான வானிலை நிலவுவதால் இந்திய பயணத்தை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலியா அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
"இந்தியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அக்டோபர் மாதம் வரை யாரும் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
ஏற்கனவே, அங்கு சென்றுள்ள ஆஸ்திரேலியர்கள் தங்கள் வழிகாட்டிகளின் உதவியோடு பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன் சுகாதாரமான உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் கூடிய விரைவில் உடனடியாக நாடு திரும்புவது நலம்.
இந்தியாவில், அக்டோபர் வரை மழைக் காலம் என்பதால், அதுவரை யாரும், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

சின்னங்கள் அழியும் அபாயம்: யுனெஸ்கோ எச்சரிக்கை


சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக  நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்கள், மக்களின் வாழ்க்கையை பாதித்தது மட்டுமின்றி, அங்குள்ள புராதனமான பாரம்பரியம் மிக்க கலை சின்னங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இடையூறாது ஒலிக்கும் துப்பாக்கி, குண்டு முழக்கங்களும், போர் நடவடிக்கைகளும், பலவீனமான பாதுகாவல்களும் இந்த புராதன கலைச்சின்னங்களின் உலக மதிப்பைக் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ மேற்கொள்ளவிடாமல் செய்கின்றன என்று யுனெஸ்கோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புராதன நகரங்களான டமாஸ்கஸ், போஸ்ரா, அலெப்போ, பால்மிராவின் ஒயாசிஸ் சோலைவனங்கள், கிரேக் டி செவாலியே, காலட் சலா எல்-டின் அரண்மனைகள் மற்றும் சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கிராமங்கள் ஆகிய ஆறும் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இவை அனைத்துமே அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று நாம் பென்னில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலை அமைப்புக் குழுவின் வருடாந்திர கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கத் தேவையான ஆதரவு பெறவேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று யுனெஸ்கோவின் தகவல் அதிகாரி ரோனி அமெலன் குறிப்பிட்டார்.
சிரியாவின் அண்டை நாடுகளையும் சர்வதேச வர்த்தக சமூகத்தையும், சிரியாவிலிருந்து கொண்டுவரப்படும் கலைப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று யுனெஸ்கோ கேட்டுகொண்டுள்ளது. மேலும், கலவரங்கள் ஆரம்பித்த நாள் முதலாக பாரம்பரிய சின்னங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதனையும் அனைத்து கட்சித் தரப்பினரிடையேயும் யுனெஸ்கோ எடுத்துக் கூறி வருகின்றது

ஜூன் 20, 2013

தனித்துவத்தை சிதைக்கும் முயற்சியில் கோத்தபாய!



  தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்ட பகுதியை உருவாக்கும் முயற்சியில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இறங்கியுள்ளதாக தெரிகிறது.
 
 கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியின் மூலம் இந்த திட்டம் அம்பலமாகியுள்ளது.

 அந்த ஊடகத்திற்கு அவர் தெரிவித்ததாவது,

 "யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
 
 யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது.
 
 தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
 யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது.
 
 பெரும் எண்ணிக்கையிலான வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருகின்றனர். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
 
 நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக
 

கற்பழித்த கொடூரனுக்கு குவைத்தில் தூக்கு தண்டனை


எகிப்தை சேர்ந்த 33 வயதான ஹஜாத்காடி என்பவன் குவைத் நகரில் தங்கியிருந்த போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான்.
இந்த காம கொடூரனை பிடிக்க பொலிசார் தேடி வந்ததை அறிந்த அவன் குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்ற போது அவனை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதனால் சம்பவம் நடந்த 6 ஆண்டுகளுக்கு பின்பு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று அவன் தூக்கிலிடப்பட்டான்.
இதனைப் போன்றே மற்றொரு எகிப்தியரான அகமது அப்துல்கலாம் அல்-பைலி என்பவன், ஒரு வீட்டுக்குள் புகுந்து கணவன்-மனைவியை உயிருடன் எரித்து கொன்றதோடு மற்றொரு தம்பதியை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றதனால் அவனுக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் குவைத்தில் கொலைக் குற்றவாளிகள் 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
 

ஜூன் 19, 2013

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும்


 திட்டத்தை இந்தியா விரும்பவில்லை – TNA
 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்தை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கும் முரணானது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

ஜூன் 18, 2013

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் - சம்பிக்க ரணவக்க !!

 
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 வடக்கில் தேர்தலை நடாத்தி பிரபாகரனுக்கு ஆதரவானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், அதன் பிரதிபலன்களை அனைவரும் எதிர்நோக்க நேரிடும்.
 சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு போதியளவு பாதுகாப்பு காணப்படுகின்றது. பெரும்பான்மையான தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
 அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டியதில்லை.
 வடக்கிலிருந்து சிங்கள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 அமைச்சரவைக்கு தேவையான வகையில் அனைத்தையும் செய்ய முடியாது என சம்பிக்க தெரிவித்துள்ளார்
 
 
.
 
 
 
 

ஜூன் 17, 2013

11 வயது மாணவன் பெண்ணை கர்ப்பமாக்கிய, பரபரப்பு


நியூசிலாந்தில் 36 வயது பெண்ணை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவை தான் கர்ப்பமாக்கி உள்ளான்.
இதனையடுத்து அப்பெண் மீது கற்பழிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் நியூசிலாந்தில் ஆண்களுக்கு உள்ள சட்டம் போன்று, பெண்களை தண்டிப்பது இல்லை.
சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன்.
அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.
அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தமணி ,,



மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.
இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.
2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.
புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.
அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.
புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.
ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்..

விபத்தில் 5 வயது மகளுடன் பலியான தந்தை

 
3 வயது மகள் உயிருக்கு போராட்டம் கனடாவின் பிரம்டன் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.
காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதுடன், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பையன்களும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்த குடும்பத்தின் மூத்த மகனான 17 வயதுடைய கீர்த்திக் கோபிநாத் இந்த விபத்து குறித்து கூறுகையில், நான் எனது மற்றைய சகோதரிகள் மற்றும் எனது குடும்பத்தின் வாழ்க்கையை இனி எடுத்துச் செல்வதற்காக உறுதியான மனப்பாண்மையுடன் இருக்க வேண்டியதை உணர்ந்து அதற்கான திடத்துடன் இருக்கிறேன் என்றார்.
தனது தந்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் “தந்தையர் தினத்தை” கொண்டாடுவதற்கு முதல்நாள் அவர் இறந்தது மிகவும் வருத்தமானது என்றும் இறந்த தனது சகோதரி தன்னோடு எப்போதும் விளையாடுபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

ஜூன் 14, 2013

பிறந்த குழந்தைக்கு கிடைத்த பரிசு


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரிச்மான்ட் நகரத்தின் ஷாப்பிங் மால் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த கர்ப்பிணிப் பெண் அங்கு ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
கடைத்தொகுதி பாதுகாப்பு அதிகாரி 911 ஐ அழைத்ததாகவும் தீயணைப்பு பிரிவினர் வரும்முன் அப்பெண் பிரசவித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
துணை மருத்துவ பிரிவினர் வரும் முன்னர் குழந்தை பிறந்ததால் தீயணைப்பு படையினர் சிசுவின் தொப்புள் கொடியை வெட்ட வேண்டியிருந்தது.
வியாபாரிகள் ஏராளமான பரிசுப்பொருட்களை குழந்தைக்கு கொடுத்ததோடு, குடும்பத்தினருக்கு இரவு விருந்தும் அளித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது பேக்கரி சொந்தக்காரர் ஒருவர் குழந்தைக்கு 18 வயதுவரையும் பிறந்தநாள் கேக் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது
 

ஜூன் 12, 2013

வெளிவந்த ஸ்ரீசாந்த்: கண்ணீர் மல்க பேட்டி



ஐ.பி.எல் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் 16 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பினை வழங்கியுள்ளது.

27 நாட்கள் சிறைக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து ஸ்ரீசாந்த் நேற்று விடுதலையானார். அவர் தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள கொச்சிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் ரசிகர்களும், உறவினர்களும் அவரை வரவேற்றனர்.
கொச்சி விமான நிலையத்தில் ஸ்ரீசாந்த் நிருபர்களுக்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் நான் சுத்தமானவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.
எனது எதிரிக்கு கூட இது மாதிரியான நிலைமை வரக்கூடாது. நான் எந்தவித தவறும் செய்யவில்லை. என்னை நம்புங்கள் எனது பயிற்சி தொடரும். கேரளா திரும்பியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மறக்க நினைக்கிறேன். பெற்றோர், நண்பர்கள் ரசிகர்களுடன் இனி எனது பொழுதை கழிப்பேன் என கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் ‘‘தான் எப்போதுமே டவலை அணிந்து கொண்டுதான் பந்து வீசுவேன்’’ என்று கூறியுள்ளார்,( காணொளி  இணைப்பு)
 

குறி வைத்து காத்திருக்கும் அமெரிக்கா! "


சிறிலங்காவின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
   சிறிலங்காவில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.
  நேற்று நியுயோர்க்கில் ஐ.நா செயலகத்தில், இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  சிறிலங்காவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ், ஸ்டீபன் ராப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
  அதற்குப் பதிலளித்த ஸ்டீபன் ராப்,
  “சிறிலங்காவில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை சிறிலங்காவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
  சிறிலங்கா அரசாங்கத்துடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை ராஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படும் படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது.

 தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிகக்கவனமாக அவதானித்து வருகிறது.

 இறுதிக்கட்ட போரின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமை வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

ஜூன் 11, 2013

வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர்


வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
"திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக் கூறியவர்கள் வரவே இல்லை. மதியத்தின் பின்னர் அவர்கள் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டார்கள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்திய மதவாச்சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதிலும் சரியான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை" என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
ஜயசிங்க என்பவர் தான் விமானப் படையில் பணியாற்றுவதாகவும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாகவும் ஆனஆல் அவர் சொன்னபடி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் புலம்புகின்றனர்.
"இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் ஈரப்பெரியகுளத்திற்கு வாருங்கள். விசா தருவோம் என்றார்கள். அங்கு போய் காத்திருந்ததுதான் மிச்சம். ஒருவருமே வரவில்லை. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போனால், அவர்கள் மதவாச்சியில் பணம் கட்டியபடியால், அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடு வீதியில் நிற்கிறோம்" என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர் முடிந்த பிறகும் வடக்குப் பகுதிகளில் வேலை வாயப்புகள் பெரிதாக உருவாகவில்லை. மேலும் அங்கேயிருக்கும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் பலர் இங்கையில் இருந்து வெளியேற முற்படுகின்றனர்

தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா

 
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது.
தொடர்புடைய விடயங்கள்பாஜக, அத்வானி
அவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது.
கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலேயே அத்வானியின் ராஜினாமாவை நிராகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் என்கிற முறையில் இந்த ராஜினாவை எந்த சந்தர்பத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனது முடிவை மாற்றி கொள்ள அத்வானி மறுத்துவிட்டார் என்று டில்லியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானியின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியாகியது.
கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார்.
பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர், தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார்
நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானியின் ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது

ஜூன் 09, 2013

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் விபத்து:


 70 பேர் மாயம் இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக குடியேற 70 பேர்கள் படகு மூலம் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளியன்று கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65-வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது.
அங்கு இறந்து மிதந்த உடல்களை மறு நாள் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது.
இதையடுத்து 9 பேரின் உடல்கள் மட்டும் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
மேலும் 60க்கு மேற்பட்டோர் இதில் மூழ்கி இறந்து இருக்க அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மற்றும் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு அங்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
 

ஜூன் 07, 2013

அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம்


                                                                                                           அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம்
தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் நிறைவான அரசியல் தீர்வொன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அது ராஜபக்ச - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரை இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்த கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது.
அரசியல் தீர்வு ராஜபக்ச - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் அவசரமாக


கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த பகுதியில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் ஹென்ரி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“பெல் 412 ரக ஹெலிகொப்டர்” என்ற ஹெலிக்கொப்டரே கட்டுபொத்த மைதானத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையினை கானல் நீராக மாற்ற விளையும்


முன்னாள் யுத்த வளையங்களில் முதல் முறையாக நடைப்பெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களில் சபைகளிற்கான அதிகாரங்களை குறைப்பதற்கு அதாவது பெரும்பான்மையான தமிழர்களின் சுயாட்சி அதிகார கோரிக்கையினை நிராகரிக்கும் வகையில் இலங்கைய் அரசாங்கம் எத்தனிப்பதான உள்நாட்டு அரசியல் தலைவரொருவர் வியாழனன்று தெரிவித்தார் என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீல விடுதலைப்புலிகளை உள்நாட்டில் தோற்கடித்து இராணுவ வெற்றியினை கொண்டாடிய இலங்கை அரசாங்கமானது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை தமிழர்களுடன் பகிர்வதற்கு இணக்கம் தெரிவித்த நிலையில் வடமாகாண சபை தேர்தலை நடாத்த முன்வந்தது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கமானது இன்று வரை தமிழர்களின் தாயக பூமியில் ஒரு தேர்தலையேனும் நடாத்தவில்லை.
இந்திய மற்றும் மேலைத்தேய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக இவ்வருட புரட்டாதி மாதத்தில் வட மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் குறைந்தளவு அதிகாரங்களை வழங்குவதற்கே இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த செவ்வாய்யன்று இடம்பெற்ற ஆளும்கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் பொழுது கட்சி உறுப்பினர்கள் 13ம் திருத்தச்சட்டத்தை உள்நாட்டில் அமுல்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
13ம் திருத்தச்சட்டமானது வரையறுக்கப்பட்ட சுயாட்சி அதிகாரங்களையே மாகாண சபைகளிற்கு முன்மொழிகின்றது.
1987ம் ஆண்டு இலங்கை கூட்டாட்சி முறையினை உள்வாங்கியது எனினும் வட மாகாணத்தில் ஒரு தேர்தலையேனும் நடாத்தவில்லை. ஜனாதிபதி ராஜபக்சவின் நேரடி ஆட்சியின் கீழும் இந்நிலையே தொடர்ந்தது. எது எவ்வாறாயினும் சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற பகுதிகளில் மாகாண சபை நடைமுறையிலுள்ளது.
ஜனாதிபதியின் மைத்துனரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நாட்டிற்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலின் நிமித்தம் வடமாகாண சபையிற்கு குறைந்தளவு அதிகாரங்களே வழங்கப்பட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பொழுது தெரிவித்தார்.
இம்மாகாண சபை முறையானது அந்நிய தேசமான இந்தியாவுடனான ஒப்பந்தம் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அதாவது தமிழீல விடுதலைப்புலிகளிற்கு தங்களுடைய தாயகத்தை ஆள்வதற்கான சுயாட்சி அரசியல் அதிகாரத்தை கொழும்பு சிறுபான்மை தமிழர்களுடன் பகிர தயாரென குறிப்பிடப்பட்டிருந்தது.
கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் மாற்றுக் கொள்கைகளிற்கான அமையமானது இலங்கை தற்பொழுது முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒரு பொழுதும் கடைநிலையிலுள்ள இனமுரண்பாட்டிற்கு தீர்வினை வழங்காது என தெரிவித்துள்ளது.
ஒரு தலைப்பட்சமான இவ் அதிகார பகிர்வானது மேலுமொரு வரலாற்று தவறிற்கு வழிகோலுமென அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி போரில் இடம்பெற்ற யுத்த குற்றச்செயல்கள் மட்டிலான விசாரணை மற்றும் நல்லிணக்க செயன் முறையிலுள்ள பின்னடைவு தொடர்பாக தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களை இலங்கை முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
இலங்கை யுத்தக் குற்றச்செயல் தொடர்பான அழுத்தங்களை நிராகரித்துள்ளதுடன் 40 000 சிவிலியன்கள் மாத்திரமே கொள்ளப்பட்டு உள்ளனரென அறிவித்துள்ளது.
 

கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ :

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் ௲ (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார்.
இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது.
இறுதியாகக் கிடைத்த நமபகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.
சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றைய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.
கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 06, 2013

பணக்கார சுவிஸ் குடிமகன் Ikeaலிருந்து விலகல்


சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர்.
லாசேனுக்கு அருகில் உள்ள எப்லிங்ஸ் வசித்து வரும் இவர் இளைய தலைமுறைக்கு வழி விடும் வகையில் தனது இளைய மகனான மேத்யாஸ் கம்பிராட்டிடம் (43) தலைவர் பொறுப்பை கொடுத்துள்ளார்.
இது விலக வேண்டிய சரியான தருணம் என்று கூறியுள்ளார் 87 வயதான இங்க்வார்.
இவருடைய சொத்து மதிப்பு கடந்த வருடம் கணக்கீட்டீன் படி 39 பில்லியன் பிராங்க் (42 பில்லியன் டொலர்) ஆகும்
 

இராணுவ முகாமில் தமிழ் இளம் பெண் சடலம் -

 கிளிநொச்சி இராணுவ முகாமில் தமிழ் இளம் பெண் சடலம் -
இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது,  கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.

கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி – சரோஜா என்ற இவர் சீ.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பனிக்கன்குளம் பகுதியில் ஆளில்லாத வீடு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் இருந்த குறித்த சடலத்தை தனது மகளது சடலம்  என தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.

காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர்

ஜூன் 04, 2013

உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உறவுகள்

 
 சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும்  மின்வசதிக்கொடுத்து அம்மாணவர்கள் படிப்பற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளனஇவர்களுக்கு 2,722,41/=ரூபாய் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பணியில் கடமை  புரிந்த அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்கிறோம்

ஜூன் 03, 2013

மூன்றாவது உலகப் போருக்கான களமாக???

மும்பாயில் நவம்பர் 2008 நடந்த தாக்குதலின் முக்கிய அல் கய்தா சூத்திரதாரி சிறீலங்காவிலிருந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. அண்மைக் காலமாக சீனாவினதும் ஈரானினதும் நீர்மூழ்கி கப்பல்களும் ஆயுதக் கப்பல்களும் சிறீலங்கா துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறது.
 அதேவேளை, சீனாவின் புலனாய்வுப் பிரிவின் மூத்த தளபதி அண்மையில் சிறீலங்காவுக்கு திடீர் விஜயம் செய்ததோடு யாழ் கோட்டை பகுதிக்கும் அதிரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதற்கான உரிய காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க இந்தியாவின் புலனாய்வுப்பிரிவுப் தளபதி கடந்த வாரம் திடீர் விஜயமாக தமிழீழப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
 இத்தருணத்தில் அமெரிக்காவின் பிரதான இரு எதிரி நாடுகளான சீனாவும் ரசியாவும் சிறீலங்காவோடு ஆழமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனை பின்வரும் அதிரவைக்கும் செய்திகள் ஊடாக அறியலாம்.  தற்போது அதிதீவிர சர்ச்சைக்குள் சிக்கியுள்ள கச்சதீவுப் பிரதேசத்தில் சுமார் 10 படகுகளில் சிறீலங்கா கடற்படையோடிணைந்து சீனா கடற்படையும் கூட்டுரோந்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, சிறீலங்காவில் போர் முடிந்ததாக மகிந்தர் அறிவித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசியா அதிநவீன இரட்சத உலங்குவானுர்திகள் 14ஐ சிறிலங்காவுக்கு வழங்குகிறது. இதில் 6 உலங்குவானுர்திகள் கொழும்பை வந்தடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 அமெரிக்க மற்றும் இந்தியாவுக்கு எதிரான சீனா ரசியா மற்றும் ஈரான் சிறீலங்காவில் நிலைகொள்வது உள்நாட்டு போரொன்றுக்கான சாத்தியம் என்பதற்கு அப்பால் மூன்றாம் உலகப் போருக்கான களம் திறக்கப்பட்டுள்ளது போன்றே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானப்படை முகாமில் வெடி விபத்து

அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
  இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

ஜூன் 02, 2013

தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வர ++


 ஜாதிக ஹெல உறுமய சார்பில் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு நீண்ட காலமெடுக்கும் என்று நாடாளுமன்ற பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இந்த தனிநபர் பிரேரணை இப்போது தான் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டு அதன் பின்னர் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறவேண்டும். தனிநபர் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கமுடியாது ஜாதிக ஹெல உறுமயவின் இந்த தனிநபர் பிரேரணை நிறைவேறினாலும் அது பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது ஒரு நீண்ட கால நடைமுறையாகும்,

அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட**


 ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்படும் புதிய அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியா தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சந்தனலால் கருணாரட்னவின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்த யாப்பில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளும் அவர்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்படவில்லை. அந்த அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது மலையக இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை அற்றவர்களாக இருந்ததாலேயே அவர்களின் ஆலோசனைகளும் அபிலாஷைகளும் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை.
ஆனால் இன்று மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையை வாக்குரிமையையும் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொடுத்துள்ளது.எனவே இந்த மக்களுக்கு இந் நாட்டில் வாழ்வதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.
ஆகையால் ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளையும் அபிலாஷைகளையும் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது. மலையக மக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இந்நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற தீர்ப்பு இல்லை. சுயாதீனமாக பொலிஸ் சுயாதீனமாக அரச அதிகாரிகள் செயல்பட முடியவில்லை. தற்பொழுது இந்நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ஆட்சியை கொண்டுவருவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறினார்.
 இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.