18

siruppiddy

அக்டோபர் 27, 2013

ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள் வடமாகாணத்தில்



வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள்

அமைக்கப்படவுள்ளன.
இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பணிகளை 2015 இல் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

அக்டோபர் 26, 2013

புலிகள் ஒன்றுகூடுகிறார்கள் :கனடாவில்


கனடா பிரதமர் கொழும்பில் நடக்கும் உச்சி மாநாட்டிற்குச் செல்லமாட்டார் என்று அறிவித்ததை தொடர்ந்து இலங்கை அன் நாடு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் சிங்களவரான றோகான் குணரட்ண என்பவர்,

புலிகள் தற்போது கனடாவில் ஒன்றுசேர ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா சென்றடைந்த படகில் சில தமிழ் இளைஞர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கனேடிய அரசை

குறைசொல்ல, புலிகள் அங்கே மீண்டும் இணைய ஆரம்பித்துள்ளார்கள் என்று இவர் குற்றஞ்சாட்டி வருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை அரசின் கொள்கை வகுப்பு செயலாளர்களுள் ஒருவரான றொகான் குணரட்ண இது குறித்து தாம் கனேடிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அக்டோபர் 21, 2013

கட்டுநாயக்க அதிவேக பாதையில் பயணிப்பதற்கான கட்டண ?


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் குறித்த சுற்று நிருபம் பெருந்தெருக்கள் அமைச்சினால் வெளியிட்டுள்ளது.

இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார், ஜீப் மற்றும் சிறியரக வேன் ஆகியவற்றுக்கு 300 ரூபாவும் லொறி, பஸ் ஆகியவற்றுக்கு 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இக் கட்டணம் பேலியாகொடையில் இருந்து கட்டுநாயக்க வரையிலான தூரத்திற்கே அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, இப் பாதையினூடாக பயணிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் அமைச்சினால் அறிவூட்டப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

அக்டோபர் 19, 2013

புலி ஆதரவாளரிடம் இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள்


இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பிலான இந்த மீளாய்வு அறிக்கையும் பரிந்துரைகளும் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனினும், இந்த ஆவணம் புலி ஆதரவாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் லீ என்பவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரக் காரியாலயம் உறுதி செய்துள்ளது.

உள்ளக இரகசிய அறிக்கையொன்று அம்பலமானமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவரையில் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 17, 2013

விபச்சாரிகளை அதிகம் நாடும் ஆண்கள்!


 சிறிலங்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள்தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

 சிறிலங்காவில் 35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர்.

 பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

அக்டோபர் 16, 2013

அபாயம் மீண்டும் தாக்குதலுக்கு தயராக இருங்கள் தளபதி


அண்மையில் தமிழர் தாயகப் பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் மஹிந்த அரசாங்கம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

 இந்த படுதோல்வியானது சிறிலங்கா இராணுவத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கான தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தலின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 சிறிலங்காவை பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் தமிழர் தாயகப் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி, யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். 

 வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,  

 "சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.  அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர்  மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர்.  

 அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர்.  

 இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.  

 ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம்.  

 தேர்தலின் பின்னர் இராணவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்.  

 இராணுவத்தினருக்கு உள்ளே இருக்கும் சிலரும் சூழ்ச்சிகள் மூலம் குழுப்பங்களை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே படையினர் அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டும்" என சிறிலங்கா இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.  

 

அக்டோபர் 15, 2013

முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்



வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்
கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என தகவல்கள் வெளிவந்தன.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகளில் உள்ள உறுதியையும் முதல்வரிடம் அவர் வெளிப்படுத்தினார்.

2ம் இணைப்பு
வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் கொழும்பில் இரண்டாவது சத்தியப்பிரமாணம்
வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்

கடந்த வாரம் நிகழ்ந்த சத்திய பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை இருவரும் தம்மிடம் தெரியப்படுத்தியதுடன் இனி வரும் தமது செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் இருப்பதுடன் வடமாகாணத்தில் தமது முழுமை ஒத்துளைப்பை வழங்குவதாக தம்மிடம் உறுதி மொழி தந்ததாகவும் எமது செய்திச் சேவைக்கு கருத்துரைத்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

முறையே இருவரும் ரொலோ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

(மேலதிக தகவல்கள்)
மன்னார் ரொலோ மாகாண சபை உறுப்பினர் கலந்து கொள்ளாமைக்கு காரணம் “விபத்து”: அரசியல் சாயல் இல்லை

அக்டோபர் 11, 2013

மாலதியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்


2ம் லெப்டினண்ட் தாய் மண்ணுக்காக சமராடி வீரப் பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் வீராங்கனையான 2ம் லெப். மாலதியின் 26ம் ஆண்டு நினைவு நாள் யேர்மனி பேர்லின் நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

ஈகைச் சுடரேற்றப்பட்டு தொடர்ந்து சுடர்வணக்கவேளையில் மக்களால் அக வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மாலதியின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழீழப் பெண்களின் தலை நிமிர்வையும் நெஞ்சில் தாங்கியபடி  மக்கள் மற்றும் மேஜர் பாரதி கலைக் கல்விக்கூட மாணவர்கள்  தமது அஞ்சலியை செலுத்தினர்.

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 26 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.
நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.
புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்,விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.

ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள், என பெண் போராளிகள் பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் பலதடவை குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.

தமிழ் ஈழம் மன்னாரை சேர்ந்த,சகாயதேவி பேதிருப்பிள்ளை,(1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 ) என்ற இரண்டாம் லெப்டினண்ட் மாலதி,ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டு,மாலதி படையணியும் உருவாக்கப்பட்டது. எத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும்,அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழ் ஈழம் விரைவில் உருவாகும் என்ற

நம்பிக்கையுடன்,ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.

மாவிரர்களின் நினைவிடங்கள்,கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது, நாடு வேறுபாடுகள் இல்லாமல்,அனைத்து தமிழர்களின் கடமையுமாகும்.

மாவீரர்களை நினைவு கூர்ந்து  எமது லெட்சியம்  நிறைவேற பலம் சேர்ப்போம் .


 

அக்டோபர் 08, 2013

வெற்றியுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடாது -


இந்தியாவுக்கு விளக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று எண்ணிவிடக் கூடாது என இந்தியாவுக்கு எடுத்து விளக்கியுள்ளது கூட்டமைப்பு.இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போதே இதுகுறித்து விளக்கப்பட்டது. இரு நாள் பயணமாக நேற்று நண்பகல்

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பலதரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று இரவு 7 மணிக்கு விடுதியயான்றில் சந்தித்தார்.

 இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடம் வரை நீடித்த இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்.
   
தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும் தெரிவித்தோம்.தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்,

எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வருகின்ற நில அபகரிப்பு நடவடிக்கைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடும், இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னமும் நீக்கப்பட வேண்டும்

என்பதையும் வலியுறுத்தினோம்'' என்றார். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது என்று யாரும் நினைக்கக் கூடாது என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம்.

இதற்குப் பதிலளித்த குர்ஷித், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நிர்ப்பந்திக்கும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தையும் தாண்டி அதிகாரத்தைப் பகிர்வதற்கு இந்தியா வலியுறுத்தும். இலங்கை அரசு, இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து

தப்பிப்பதற்கு ஒரு போதும் விடமாட் டோம் என்று தெரிவித்தார் என்றார் சம்பந்தன். இதேவேளை புதிய பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராட்டுவதுடன் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றி

பெற்றமைக்கு இந்திய அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் குர்ஷித். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் கூட்டமைப்பு புதியதொரு பாதையில் பயணம் செய்வதாகவும் வடமாகாண
 

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சல்மான் குர்ஷித்திற்குமிடையே ??

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
 


 

அக்டோபர் 07, 2013

அதிரடியான பாணியல் அல் கொய்தா தலைவர் கைது

 
இஸ்லாமிய ஆயுததாரிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேட அதிரடிப் படை ஆபிரிக்காவில் இரு வேறு இரா ணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதில் 1998 ஆம் ஆண்டு கென்யா மற்றும் தன்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் அல் கொய்தா தலைவரை அமெரிக்க அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். அனஸ் அல் லிபி என்ற அல் கொய்தா தலைவர் லிபிய தலைநகர் திரிபோலியில் வைத்து சிக்கியுள்ளார்.

அதேபோன்று அல் ஷபாப் ஆயுதக் குழுவை இலக்குவைத்து தெற்கு சோமாலி யாவிலும் அமெரிக்கப் படை இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகச் செயலாளர் ஜோர்ஜ் லிடில் நேற்று முன்தினம் சனிக்கிழமை உறுதி செய்தார். முன்னணி அல் ஷபாப் தீவிரவாத தலைவர்களை பிடிக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா முழுமையான அவதானம் செலுத்துகிறது. இந்த தாக்குதலின்போது அல் ஷபாப் ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அதுபற்றி எமக்கு உறுதி செய்ய முடியாமல் உள்ளது' என்றும் லிடில் குறிப்பிட்டார்.

இதில் அல் ஷபாப் தலைவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதனை உறுதி செய்யும் முன்னரே அமெரிக்க அதிரடிப் படையினர் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பராவ் பகுதியில் இராணுவ நடவடிக்கைக்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் டைம்ஸக்கு குறிப்பிட்டார்.

வெஸ்ட்கேட் தாக்குதலுக்கு பின்னரே இது திட்டமிடப்பட்டது என அந்த அதிகாரி குறிப்பிட்டார். கென்ய தலைநகர் நைரோபி வணிக வளாகத்தில் அல் ஷபாப் ஆயுததாரிகள் தொடர்ந்த நான்கு நாள் முற்றுகை நடவடிக்கையில் 67 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சோமாலிய அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தகவலில், அமெரிக்கப் படையால் இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், சோமாலிய அரசுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப் பட்டதாகவும் கூறினார்.

அதேபோன்று சிரேஷ்ட அல் கொய்தா தலைவர் அனஸ் அல் லிபியை இலக்கவைத்து அமெரிக்க அதிரடிப் படையினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை லிபிய தலைநகர் திரிபோலியில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதன் போது குறித்த அல் கொய்தா தலைவர் தனது வீட்டுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கியபோது அவரை மூன்று வாகனங்களில் சுற்றி வளைத்து அவரது ஆயுதத்தை பறிமுதல் செய்து கைதுசெய்யப்பட்டதாக அவரது சகோதரர் நபிஹ் ஏ. பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார்.

வெளிநாட்டினர் போன்று தோற்றமளித்த அதிரடிப் படையினர் கடத்திச் சென்றதாக அவரது மனைவி குறிப் பிட்டுள்ளார். எனினும் இந்த இராணுவ நடவடிக்கை லிபிய அரசுக்கு தெரிந்தே நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சி. என். என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

49 வயதான லிபி 1998 ஆம் ஆண்டு 220 பேரை பலிகொண்ட அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்கு மூளையாக செயற்பட்டவர் என நம்பப்படுகிறது. இவரது உண்மையான பெயர் தாஸிஹ் அப்துல் அஹமதி அல் ருகை ஆகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எப். பி. ஐ. இன் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருக்கும் இவரது தலைக்கு 5 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட த்தக்கது.

இதில் சோமாலியாவின் தெற்கு கடற்கரை நகரான பராவ்வில் அமெரிக்க அதிரடிப்படையின் நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் குறித்த பகுதி தொடர்ந்தும் அல் ஷபாப் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் மேற்படி ஆயுததாரிகள் அறிவித்துள்ளனர். எனினும் அமெரிக்கப் படையுடன் இந்த தாக்குதலில் பங்கேற்ற பிரிட்டன் மற்றும் துருக்கி அல் ஷபாபின் அறிவிப்பை மறுத்துள்ளன

அக்டோபர் 06, 2013

முதலமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

                          
 
 வடமேல் மாகாண, மத்திய மாகாண முதலமைச்சர்கள் சென்ற 03.10.2013 பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
மத்திய மாகாண சபை முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிரி ஜயசேக்கரவும் பதவிப் பிரமாணம் அன்றைய தினம் சுபவேளையில் செய்துகொண்டனர்.
அவ்வவ் மாகாணங்களுக்கான அமைச்சரவை உறுப்பினர்களும் அன்றைய தினம் நியமிக்கப்பட்டனர்(படங்கள்}





 

அக்டோபர் 05, 2013

இறுதி முடிவு விக்னேஸ்வரனின் கையில்..!


 
வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பான, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தமாதம், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில்,

வெற்றிபெற்று இரண்டு வாரங்களாகியும், மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிநிலை இருந்து வருகிறது. மாகாண அமைச்சர்களாக நான்கு பேரையே நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதால், மாவட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அமைச்சுப்

பதவிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. கல்வி அமைச்சர் பதவிக்கு கிளிநொச்சியில் இருந்து தெரிவான குருகுலராஜாவையும், சுகாதார அமைச்சர் பதவிக்கு வவுனியாவில் இருந்து தெரிவான மருத்துவர் சத்தியலிங்கத்தையும், நியமிக்க தமிழரசுக் கட்சி முயற்சிக்கிறது.
   
ரெலோ, சார்பில் ஒருவருக்கு அளிக்கப்படும், அமைச்சுப் பதவிக்கு மன்னாரில் இருந்து தெரிவான குணசீலன், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான, சிவாஜிலிங்கம், ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, ஈபிஆர்எல்எவ், எவரையும் முன்மொழியாவிட்டாலும், அமைச்சு ஒதுக்கீட்டைப் பொறுத்து யாரை நியமிப்பது என்று தீர்மானிக்கலாம் என்று கூறியுள்ளது. இந்தநிலையில், நான்கு அமைச்சுப் பதவிகளை, மாவட்ட மற்றும், கட்சி அடிப்படையில் பங்கிட்டுக் கொள்வதில், முடிவு எடுக்கமுடியாத நிலை தொடர்கிறது.

கொழும்பில் நேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இது குறித்து ஆராய்ந்த போதிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்தக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்றைய கூட்டத்தை அடுத்தே, மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்யும் முடிவு, முதல்வர்

சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமைச்சர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை முதல்வரே தீர்மானிப்பார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

அக்டோபர் 04, 2013

இனவாதத்தை தூண்டுகின்றது மஹிந்த அரசாங்கம் -



இலங்கை வரலாற்றில் இதுவரைக்கும் ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்று படுமோசமாக இனவாதத்தை தூண்டவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை

உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். மேலும், மஹிந்த அரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று

பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார்.

அக்டோபர் 02, 2013

தரம் குறைந்த எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை?


 மீண்டும் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. 15000 டொன் பெற்றோல் அடங்கிய எரிபொருள் கப்பலொன்று இவ்வாறு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 90 ஒக்ரேன் ரக பெற்றோல் இவ்வாறு இறக்குமதி

செய்யப்பட்டுள்ளது. சய்னா ஒயில் என்ற நிறுவனம் குறித்த பெற்றோலை இறக்குமதி செய்துள்ளது. எனினும், இந்த பெற்றோல் உரிய தரத்தை கொண்டமையவில்லை என முத்துராஜவல எரிபொருள் ஆய்வு கூடத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதே கப்பலில் 95 ஒக்ரேன்

ரகத்தைச் சேர்ந்த 5000 தொன் பெற்றோல் தருவிக்கப்பட்டதாகவும் அதன் தரத்தில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தரம் குறைந்த

எரிபொருட்களை கொள்வனவு செய்த காரணத்தினால் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தனி பொலிஸ் அணியை கொண்டிருப்பேன்


இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற

கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் தனது கட்டுப்பாட்டில் பொலிஸ் அணியை வைத்திருக்கும் ஆற்றலை ஆணையாளர் வெளிப்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதியான சுனில் வட்டகல இந்த சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்.
   
எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தனியான பொறிமுறையை ஏற்படுத்த போவதாகவும் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார். சில அரச நிறுவன அதிகாரிகள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தமக்கு

விருப்பமான வேட்பாளர்களின் பயன்பாட்டுக்காக வழங்கியதாகவும் இக் கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.