18

siruppiddy

ஜூலை 27, 2014

கட்டிலில் 23 வருடங்களாக கழுத்தின் கீழ் இயங்காமல் !!!

 23 வருடங்களாக கழுத்தின் கீழ் இயங்காமல் கட்டிலில் கிடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்.
தமிழ் மக்களின் அவலம் ஓடும் நதியா! அவலத்தை நாம் அருந்தலாமா? தலையங்கத்தை பார்த்தவுடன் பீமனுக்கு விசர் என்று சொல்லியிருப்பீர்கள் அல்லது சொல்லத்தோன்றும். உங்கள் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ள என்னாலும் முடியும். ஆனாலும் தமிழ் மக்களின் அவலம் இன்றும் நதியாக ஓடுகின்றபோது அதில் தோய்ந்து , குடித்து , அதிலேயே கழித்து, கழுவி வாழும் ஈனப்பிறவிகளுக்கு இங்குள்ள காணொளி சமர்ப்பணம்.
முள்ளிவாய்க்காலிலே புலிகள் மண்டியிட்டதன் பின்னரான 5 வருடகாலங்களில் நாசாவில் புதிய காண்டுபிடிப்புக்கள் வெளிவந்ததோ இல்லையோ வடகிழக்கில் அவலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
இவர் 1972 ம் ஆண்டு பிறந்து 1988 இல் 16 வயதிலே புலிகள் அமைப்பில் இணைந்து 1991 ம் ஆண்டு பலாலியில் காயமடைந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் கிடத்தப்பட்டார். அவயங்கள் அத்தனையும் இயங்காத நிலையிலும் புலிப்பாசிசத்திற்கு முள்ளிவாய்க்கால் வரை முண்டு கொடுத்திருக்கின்றார் அல்லது புலிகள் புளிந்து குடித்திருக்கின்றனர். புலிகளின் வைத்தியசாலை ஒன்றில் நிர்வாக வேலைகளில் உதவியாளாக இருந்திருக்கின்றார். மேலும் இரு சகோதரர்கள் புலிகளமைப்பிலிருந்து இறந்திருக்கின்றார்கள். சகோதரி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி சில வாரங்களே.
மே 17 2009 ன் பின்னர் புலிகளால் நடுத்தெருவில் விடப்பட்ட இவரை கொட்டும் மழையிலும் , கொழுத்தும் வெயிலிலும் , குத்தும் பூச்சி பூண்டுகளிடமிருந்தும் இக்குடிசை காக்கின்றது.

ஆனால் புலம்பெயர் தேசத்திலோ கொடைவள்ளல்களின் புழுகோசையால் செவிப்பறைகள் வெடிக்கும் தருணத்தில் உள்ளது. எங்கு கேட்டாலும் தாயகத்து உறவுகளுக்கு உதவுவதாக புழுகு. அனேகமான ஆலயங்கள் , தமிழர் சங்கங்கள் , முன்னாள் போராட்ட அமைப்புக்கள் , கலை நிகழ்சிக்காரர் , களியாட்ட விழாக்காரர் , வர்த்தகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நானாவித வடிவில் மக்களிடம் வசூலித்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்களின் வசூலிப்பு வெளிப்படையான பகல்கொள்ளை என்பதை எவராவது உணர்ந்து „கணக்கு-வழக்கு' என்று வாயை திறந்தால் „ மிகுதிப்பணத்தில் தாயகத்தில் உறவுகளுக்கு உதவுகின்றோம்' என கேட்டவனின் வாய்க்கு பூட்டிடுவர். இவர்களின் வசூலிப்பின் 5 விழுக்காடேனும் குறித்த மக்களை அடைந்திருந்தால் அவலங்கள் முற்றாக நீங்கியிருக்கும்.
இங்கு மிக இழிவான விடயம் யாதெனில் மக்களின் பல்லாயிரக்கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் புலிகளின் புலம்பெயர் புலித்தலைவர்களிடமும் பினாமிகளிடமும் முடங்கியுள்ளது. இப்பணத்தினை பதுக்கிவைத்துள்ளோர் முன்னாள் புலிகளுக்கு உதவுவதாகவே தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் இங்கு அவயங்களனைத்தையும் இழந்து தவிக்கும் நபரை தவிர உதவிக்கு தகுதியுடைய புலிகள் யார்? புலிகளின் பெரும்பகுதியினர் இவ்வாறான துயர்களைச்சுமக்க, பிரித்தானியாவிலே புலிகளின் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதியாக உள்ள ரிஆர்ஓ ரெஜி இடைத்தங்கல் முகாமொன்றிலிருந்த மனைவியை மாற்றியக்க இரட்டை முகவர்களுடாக கோடிக்கணக்கில் பணம்கொடுத்து வெளியே எடுத்து தென்னாபிரிக்காவுக்கு அழைப்பித்து அங்கு ஆடம்பர மாளிகையில் தங்கவைத்துள்ளார். மேலும் புலம்பெயர் புலிகளின் உறவுக்காரர்கள் வெளியே எடுக்கப்பட்டு இந்தியாவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் பராமரிக்கப்படுகின்றனர்.
அத்துடன் சுவிட்சர்லாந்தில் கொத்துரொட்டிக்கு ஏகபிரதிநிதியான புலிகளின் தலைவர் அப்துல்லா தனது கொத்துரொட்டி வியாபாரத்தை வன்னியில் துயருறும் புலிகளின் பெயராலேயே முன்னெடுக்கின்றார். இவர் இங்கு கொத்துரொட்டி கடையில் வேலைசெய்யும் பலருக்கு ஊதியம் வழங்குவதும் இல்லை. காரணம் அப்பணத்தை வன்னியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றாராம். அவ்வாறு இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறார்களாயின் இவ்வீடியோவில் உள்ளவர் கடந்த 5 வருடங்களாக இவர்களது கண்ணில் படாததன் மர்மம்தான் என்ன?
தமிழ் மக்களின் அவலங்களால் புலிகள், மாற்று இயக்கங்கள், அரசியல்வாதிகள் அவர்களின் பினாமிகள் என்று ஒரு குழாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களின் அவலங்கள் கண்டு துவழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவர்களுக்கு உதவுவதற்கென மேற்படி பெருச்சாளிகளிடம் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவலங்களின் பெயரால் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் பெருச்சாளிகள் இத்துயரங்களை முடிவுக்கு கொண்டுவருவார்களா என்பதை மக்கள் சில நிமிடங்கள் சுயமாகச் சிந்திக்கவேண்டும்.
மக்களுக்கு உதவ விரும்புகின்ற மக்கள் அவ்வுதவிகளை சுயமாகச் செய்யவேண்டிய கட்டாயத்தையும் தேவையையும் உணரவேண்டும். உதவிகளை செய்கின்றவர்கள் தமது சொந்தங்கள் , நண்பர்கள் என இணைந்து தரகர்கள் இன்றிச்செய்யவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது நீங்கள் செலுத்துகின்ற முழுவதும் வேண்டப்பட்டவரின் கரத்தினை முழுமையாக அடைகின்றது.
மேலும் இவ்விடயங்ளில் ஊடகங்களும் சிலவேளைகளில் உங்களை தவறாக வழிநடாத்தலாம், அன்றில் ஊடகங்களுக்கு தவறான தரவுகள் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உதவி பெறவிரும்புகின்றவர்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளவது அவசியமானதாகும்.
உதவிகள் என்பது குறித்த வீடியோவில் உள்ள நபர்போன்று முழுமையாக செயலிழந்தவர்கள் அல்லாதவர்களாயின் அவர்களுக்;கு சுயமாக உழைத்து வாழ்வதற்கான முழுமையான உதவியினை செய்வதுடன் அவர்கள் முழு உழைப்பினை பெறும்வரை அவர்களை பராமரித்து கைவிட வேண்டும். மாறாக அவர்களுக்;கு மாதாந்தம் சலுகைப்பணம் கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்கி வலுவற்ற மனிதர்களாக்குவது தவிர்க்கப்படவேண்டும்.
மேற்படி வீடியோவிலுள்ள யூட்ஜெயசீலனுக்கு உதவ விரும்புவோர் ஒரு குழுவாக இணைந்து அவர் வாழ்வதற்கு ஏதுவான சிறயதோர் வீட்டினை அமைத்து வழங்குவதுடன் தொடர்சியாக அவரது பாராமரிப்புக்கு பொருத்தமானதோர் செயற்திட்டத்தை வகுத்துக்கொள்வது ஏற்புடையதாகும். ஓர் அங்கவீனன் மீது முன்னாள் புலி என்ற பாரபட்சம் மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பதை கருத்திற்கொள்ளவேண்டும்.
உதவிபுரிய விரும்புவோர் குறித்த நபரை கீழுள்ள இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரமறிந்து உதவி செய்யலாம்
 தொலைபேசி இலக்கம்; 0770059430
வங்கி கணக்கு இலக்கம்; அரியதாஸ் அகலியா
75209453
இலங்கை வங்கி
 குழுக்களாக இணைந்து மக்கள் சுயாதீனமாக இயங்குகின்றபோது பெருச்சாளிடமிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். அரசியல்வாதிகள் அவலங்களை வைத்து வாக்கு பிச்சை கேட்பதை விடுத்து மக்களுக்கு தாம் என்ன செய்திருக்கின்றோம் என்பதை முன்நிறுத்தி வாக்கு கேட்க நிர்ப்பந்திக்கப்படுவர்.
 
மற்றைய செய்திகள்

ஜூலை 15, 2014

சம்பந்தன் கடும் சீற்றம் ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது என்று !

வடக்கு முதலமைச்சரிடம் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுனராக நியமித்துள்ள ஜனாதிபதியின் செயல், தான்தோன்றித்தனமான - கேவலமான- அசிங்கமான நடவடிக்கை என்று சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். " இது தொடர்பில் அவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
  
வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறியின் மீள் நியமனம், வடக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் எதிர்வரும் 19ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்த பின்னர் மறுநாள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் 34ஆவது மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளேன்.
"முன்னாள் இராணுவத் தளபதியான சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள் சரித்திர வெற்றியடைய வைத்தனர்.
"இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாண சபை வந்த பின்னர் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் முடிவடைந்ததும், அவருக்கு எதுவித பதவி நீடிப்பும் வழங்கப்படாது என்றும், சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியிருந்தார். "ஆனால், வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜக்‌ஷ நியமித்துள்ளார்.
"ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் ஜனாதிபதி அசிங்கப்படுத்தியுள்ளார். இவ்வாறான ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது? "ஜனாதிபதியின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது. இதனைவிட வேறு எதனையும் நாம் கூற விரும்பவில்லை. அவ்வாறு கூறுவது எமக்கே வெட்கக்கேடானது'' என்று கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

மற்றைய செய்திகள்

ஆரூடம் கூறுகிறதாம் பதவி துறக்கப் போகிறாராம் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியை துறக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வடக்கிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்ற போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.
வடக்கு அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், ஈழ ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக குறித்த சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. தாம்

மற்றைய செய்திகள்

ஜூலை 10, 2014

தொடர்ந்து உரிமைக்காகத் போராடுவது தவிர்க்க முடியாது:!!

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.
சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .
2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 லெட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைத்து , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள் தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?
இன்று ஐந்து ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இன அழிப்புக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த இன அழிப்பு ஆவணங்கள் வெளிவரும் தருணத்திலும் ஐநா வின் மனிதவுரிமை ஆணையகத்தின் விசாரணைக்குழு (ஒரு பலமான முழுமையான அனைத்துலக விசாரணைக் குழுவாக இல்லாத போதிலும்) உருவாக்கம் பெற்றிருக்கும் இத் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தையும் அரசியல் ரீதியான வேலைத் திட்டங்களையும் மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .
நிலத்தில் உறவுகள் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிப்படைகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட போராடுவது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .
பூமிப்பந்தில் எங்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றது . அந்த வகையில் கடந்த காலங்களில் பிரித்தானியாவில் தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மக்கள் போராட்டங்கள் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே .
அந்த வகையில் எதிர்வரும் 23.யூலை ,தமிழின அழிப்பின் ஓரங்கமான வரலாற்று பதிவாகிய ,தமிழர்களால் மறக்க முடியாத கறுப்பு யூலை நினைவு நாளான அன்று ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோ நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவராக மகிந்த ராஜபக்ச வருவதன் ஊடாக இன அழிப்புக்கு எதிராக நாங்கள் மேற்கொள்ளுகின்ற நீதிக்கான போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கின்றது.
தமிழர் தேசத்தின் விடிவுக்காகவும் நீதிக்கான எமது போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கும் ராஜபச்சவுக்கு எதிராக நாம் போர்க்கொடி தூக்குவோம். பிரித்தானியாவாழ் உறவுகள் மீண்டும் வரலாற்றுப் போராட்டத்தை செய்வார்கள் என்பது நிச்சயம். இப் பாரிய போராட்டத்தை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் பிரித்தானியா தாய் அமைப்புக்கு அனைத்து மக்களும் ஆதரவு கொடுத்து இப் போராட்டத்துக்கு ஓரணியாக பேரணியாக அணி திரண்டு வெற்றிபெற செய்வது தேசக்கடமை .
இப் போராட்டத்துக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து மக்கள் அணிதிரள விமான பயண சீட்டை பதிவுசெய்கின்றனர் .
எத்தனை தடைகள் வந்தாலும் நாங்கள் போராடுவோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம் .நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.
எம்மை பலப்படுத்தி , ஒரு வலுவான பலமான இனமாக எமது விடுதலையை வென்றெடுப்போம் . தமிழீழம் மலர்வது உறுதி .
நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET)

மற்றைய செய்திகள்

ஜூலை 04, 2014

சிரேஸ்ட புலிகளின் தலைவர்கள் நால்வர் கைது என்கிறது மலேசியா

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினர், முன்னாள்  இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை  செய்ய முயற்சித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாம் சந்தேக நபர் அண்மையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.

நான்காம் சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தகவல்களை திரட்டியவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 14 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் ஏழு பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தின் அடையாள அட்டைகள் இருப்பதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றைய செய்திகள்

விரிசலை ஏற்படுத்தியது:மொழிப்பிரச்சினையே

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே குடும்பமாக இருந்த எம்மத்தியில் 1956 ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினையே விரிசலை ஏற்படுத்தியது என்று விவசாய பிரதி அமைச்சர் வை.ஜி. பத்மசிறி கவலை தெரிவித்தார்.

முன்னாள் ஐ.நா. நிபுணர் துரைசுவாமி குமரன் தங்கராஜாவின் கருத்துரைத் தொனிப்பொருளான ‘வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரம்பரிய சிற்றளவு விவசாய அறிவுசார் தொழில் முயற்சி’ மீதான பயிற்சிப்பட்டறை ஹெக்டர் கொப்பேகடுவ வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் ஆரம்ப வைபவம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கஷ்னிக்கா ஹிரிம்பூரிகம தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவினால் வடமாகாண விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யாழ்.விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கடந்த காலத்தில் தங்களுடைய உறவுகளை, வீடு வாசல்களை மற்றும் உற்பத்தித்துறையை இழந்தார்கள்.

இன்று யுத்தம் ஓய்ந்துவிட்டது. நாம் எங்களுடைய பிரதேசங்களை எங்களுடைய மக்களை மீண்டும் கட்டியெழுப்பவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்றைய யுகத்தின் தேவை அடிமட்டத்திலுள்ள மக்கள் அறிவுபெறவேண்டும். தங்களுடைய உற்பத்தி சாதனைகளில் முன்னேறவேண்டும்.
எனக்கு ஒரு முக்கியமான சம்பவம்; ஞாபகத்திற்கு வருகிறது. என்.எம்.பெரெரா 1936 ஆம் ஆண்டு அன்றைய சபாநாயகராக திரு. வைத்திலிங்கம் துறைசுவாமியை பிரேரித்தார். பிலிப் குணவர்த்தன அதனை வழிமொழிந்தார். ஒரு சிங்கள நண்பரினால் அப்பெயர் முன்மொழியப்பட்டது. அன்றைய சபாநாயகராக வைத்திலிங்கம் துரைசுவாமி தான் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு கொடூரமான யுத்தம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கில் வாழக்கூடிய மக்கள் கூடுதலான வேதனைகளை அனுபவித்தார்கள். பல எண்ணிக்கையானவர்கள்; விதவைகளாக இருக்கின்றார்கள். வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்கள் இருக்கின்றார்கள். ஏதோ ஒருவகையில் எங்களுடைய வாழ்க்கையை நாங்களே முன்னெடுத்துச்செல்லவேண்டியவர்களாக இருக்கி;றோம். ஓர் இயல்புநிலை வாழ்க்கையை புதிதாக உருவாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.; வறுமையை ஒழிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வடமாகாண விவசாயிகள் நடைமுறை விவசாயத்தில் ; ஏற்பட்டிருக்கும் வறுமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. விவசாயத்துறையில்; முன்னேற விவசாயிகள் விஞ்ஞான ரீதியிலான அறிவை கட்டாயம் பெறவேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கல்விமான்கள் மத்தியில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழர் என்ற பேதம் இருக்கவில்லை. எல்லோரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம்.

ஆனால், 1956 ஆம் ஆண்டில் மொழிப் பிரச்சினை காரணமாக எங்கள் மத்தியில் விரிசல் ஏற்பட்டது. இன்று அந்த நிலைமையில் ஒரு மாற்றம் கண்டிருக்கின்றோம்.

1936 ஆம் ஆண்டு முதல் அரச சட்ட சபையிலிருந்து சிங்களம், தமிழ் இந்த நாட்டின் அரச கருமமொழியாக இருக்கவேண்டும் என்ற குரல் ஒலித்தது.

ஆனால், துரதிஷ்டவசமாக 1956 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியானது. இந்த நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இப்போது சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் அரச கரும மொழியாக இருக்கின்றன.

ஆகவே இந்த வரலாற்றை பின்னோக்கி பார்க்கின்றபோது இன்றைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும். பொருளாதார ரீதியான கஷ்டங்களை பொருத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ்பேசும் மக்களுக்கு மாத்திரம் தான் பொருளாதார கஷ்டங்கள் உண்டு என்று சொல்ல முடியாது.

இலங்கையில், ஏனைய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுக்கும் இந்த கஷ்டங்கள் இருக்கின்றன. ஆகவே இந்த கஷ்டங்களிலிருந்து; மீளவேண்டுமாயின் எங்களுடைய விவசாய அறிவை, விஞ்ஞான அறிவை நாம் முன்னேற்றவேண்டும் என்றார்.
மற்றைய செய்திகள்