18

siruppiddy

பிப்ரவரி 28, 2015

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்???


 யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களை மறைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று குறித்த இருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவரின் படுகொலை தொடர்பிலான தகவல்களை இந்த அதிகாரிகள் இருவரும் மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்ன வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, எல்பிட்டி பிராந்திய பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருண ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூகொட நீதவான் இந்திகா காலிங்கவங்ச இன்று உத்தரவிட்டுள்ளார்.
பியமக விலேஜ் உரிமையாளர் கொல வழக்கு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனக் காட்டுவதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கிளைமோர் குண்டு மற்றும் கைக்குண்டு என்பன மட்டக்களப்பு அதிரடிப்படை முகாமுக்குரியது எனவும் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, அந்த முகாமில் அத்தியட்சகராக பணியாற்றியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை மறைத்து பொய் சாட்சியங்களை உருவாக்குவதற்காக வேறு ஒரு இளைஞரின் வீட்டுக்கு அருகில் இந்த வெடிப் பொருட்கள் 
புதைக்கப்பட்டுள்ளன.
அந்த இளைஞரை குற்றவாளியாக கட்டுவதற்காக பொலிஸ் அத்தியட்சகர், பியகம விலேஜ் உரிமையாளரின் மகனுக்கு பொலிஸ் அத்தியட்சகர் இந்த வெடிப்பொருட்களை கொடுத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்??? யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப்
 பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல்களை மறைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று குறித்த
 இருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சில காலங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவரின் படுகொலை தொடர்பிலான தகவல்களை இந்த அதிகாரிகள் இருவரும் மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்ன வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன
 எல்பிட்டி பிராந்திய பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருண ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூகொட நீதவான் இந்திகா காலிங்கவங்ச இன்று உத்தரவிட்டுள்ளார். பியமக விலேஜ் உரிமையாளர் கொலை வழக்கு தொடர்பில்
 இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனக் காட்டுவதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 
கிளைமோர் குண்டு மற்றும் கைக்குண்டு என்பன மட்டக்களப்பு அதிரடிப்படை முகாமுக்குரியது எனவும் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, அந்த
 முகாமில் அத்தியட்சகராக பணியாற்றியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை மறைத்து பொய் சாட்சியங்களை உருவாக்குவதற்காக வேறு ஒரு இளைஞரின் வீட்டுக்கு அருகில் இந்த வெடிப் பொருட்கள் 
புதைக்கப்பட்டுள்ளன. 
அந்த இளைஞரை குற்றவாளியாக கட்டுவதற்காக
 பொலிஸ் அத்தியட்சகர், பியகம விலேஜ் உரிமையாளரின் மகனுக்கு பொலிஸ் அத்தியட்சகர் இந்த வெடிப்பொருட்களை கொடுத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

  
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 25, 2015

கையெழுத்துப் போராட்டத்த ஆரம்பித்து ஆயர்!

தமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்! 
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதைக் கண்டித்து, தமிழ் சிவில் சமூக அமையம் நேற்று கையெழுத்துப் பெறும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.முதலாவது கையெழுத்தை இட்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையகத்தி
ன் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும் கவலையும்
தெரிவித்தும்,  ஐ.நாவின்விசாரணைக் குழு இலங்
கைக்கு நேரடியாக வந்து விசாரணைகளை நடத்த அரசாங்கத்தை அனுமதிக்குமாறு ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விட வேண்டும் எனக் கோரியும், எந்த விதத்திலுமான உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்தியும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைக் கோரியும் தமிழ் சிவில் சமூக அமையம் இந்தக் கையெழுத்துப் பிரச்சாரத்தை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.
இதன் பொருட்டு இலங்கைத் தீவு வாழ் தமிழர்களின் கையெழுத்துகள் பெருமளவில் திரட்டப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 18, 2015

போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது!!¨¨

ஐ.நா. அறிக்கை தாக்கல் ஆவது தாமதம்: போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வேண்டுகோள்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை மீதான அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 6 மாதங்கள் தள்ளி வைத்துள்ளது.
இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் (ஆம்னெஸ்டி இன்டர்நேசனல்) இந்திய திட்ட இயக்குனர் ஷெமீர்பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அறிக்கையால் தங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என பல காலமாக காத்திருந்து வந்துள்ளனர்.
கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்வதால்
 மேலும் பலமான அறிக்கை கிடைத்து, அதன்மூலம் தகுந்த நடவடிக்கையை எடுக்க புதிய இலங்கை அரசாங்கம் உறுதி மேற்கொண்டால் மட்டுமே 
தாமதிப்பது நியாயமானதாகும். அதோடு போர்க்காலங்களில் நடைபெற்ற அத்துமீறல்களை இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஐ.நா.வுடன் இணைந்து ஆய்வுசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதியை
 நிலைநாட்ட வேண்டும்.
மேலும் நீதி கிடைப்பதைத் தடுக்க நினைப்பவர்களால், சாட்சி கூற முன்வருபவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பளிக்கவும் அவ்வாறு செய்பவர்களை கண்டறியவும் மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிப்ரவரி 17, 2015

மோடியுடன் ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து மைத்திரிபால பேச்சு!!!

 புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக நடத்தவுள்ள 45 நிமிடப் பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் அறிக்கையை இந்தியாவும் கூட அதிகமாக கவனித்து வருகிறது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்புடன் இந்தியா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக – 45 நிமிடங்கள் பேச்சு நடத்தவுள்ளார்.
இதில் இருநாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்படும்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், மற்றும் சிறிலங்காவுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை, குறித்தும் இதன் போது ஆராயப்படும்.
அத்துடன், தமிழர் பிரச்சினைக்கு 
விரைவான தீர்வு காண கொழும்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 
சிறிலங்கா அதிபரிடம், இந்தியப் பிரதமர் வலியுறுத்துவார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கவுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் நடந்த உயர்மட்டக் கூட்டங்களில், கலந்துரையாட அட்டவணைப்படுத்தப்பட்ட விடயங்களில் சிறிலங்கா விவகாரமே முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> .

பிப்ரவரி 16, 2015

ஆணைக்குழுவின் நிபுணர்களுக்கு 400 மில்லியன் செலவு!!!

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு மகிந்தவினால் நியமிக்கப்பட்ட நான்கு நிபுணர்களுக்காக, 400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் சிறிலங்காவில் எந்த பணிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் என்று சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காக, மகிந்தராஜபக்ஷவினால் அதற்கு நான்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டார்கள். 
அவர்களுக்கு வேதனம் மற்றும் உள்நாட்டில் சுற்றுலா செல்வதற்கான செலவினங்களுக்காக 400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனால் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 13, 2015

விசாரணை சர்வதேச தரத்தைக் கொண்டிருக்க வேண்டும்!

சிறிலங்காவின் உள்ளக விசாரணைகள் சர்வதேசத் தரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயகம், அமைதி மற்றும் பொறுப்புக் கூறுதல் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைக்கும்.
இந்த விடயத்தின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
இதற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்று முன்தாகவே ஐக்கிய நாடுகளின் பொது செயலளர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் சிறிலங்கா உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது சர்வதேச தரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் உறுதியாக இருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 11, 2015

மத்திய அரசு இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது !???

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே என அவர் கூறுகிறார். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை
 என்று சொல்ல முடியாது 
என அவர் கூறுகிறார். இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன,
 கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான்,
 இறுதிகட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம். போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை. இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீர்மானத்தை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளாது எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார் அமைச்சர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 09, 2015

அறிவிப்பு! வலி.வடக்கினில் சில பகுதிகள் விடுவிப்பு!!??

 வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் எந்தப் பகுதிகளை நூறுநாள் திட்டத்தினுள் விடுவிக்க முடியும் என்பது தொடர்பில், இராணுவத்தினர் எதிர்வரும் பத்து நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.
வலி.வடக்கின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு முதல் உத்தியோக பூர்வ பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக விடுவிக்கப்படும் கானிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் எந்தப் பகுதிகளை முதலில் விடுவிப்பது என்ற விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றினில் சமிக்ஞை காட்டப்படாவிட்டால் ஜ.தே.க வட-கிழக்கில் பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்குமென புலனாய்வு கட்டமைப்புக்கள் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக தெரியவருகின்றது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 06, 2015

தேடப்படும் விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை?

  விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவால் தேடப்படும் விடுதலை புலிகள் இயக்க  குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜீவ் கொலையில்
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பை குமரன் பத்மநாபன் ஏற்றுக் கொண்டார்.
இவர் அந்த இயக்கத்திற்காக வெளிநாடுகளில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளை கவனித்து வந்தவர். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அவர் இந்தியாவால் தேடப்பட்டு வந்தார். இதற்காக அவர் சர்வதேச போலீசாரின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்று இருந்தார்.
மலேசியாவில் கைது
இந்த நிலையில் மலேசியாவில் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டார். அவரை அப்போதைய ராஜபக்சே அரசு இலங்கைக்கு கொண்டு வந்தது. அவர் கைது செய்யப்பட்டது முதல் ராஜபக்சே அரசின் பாதுகாப்பிலேயே இருந்து வந்தார். அதோடு போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போர் அகதிகள் ஆகியோரை கவனித்துவரும் அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
குமரன் பத்மநாபனை மன்னித்து குறைந்த அளவே தண்டனை வழங்கிய ராஜபக்சே அரசுக்கு இலங்கையில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடு செல்ல தடை
இந்தநிலையில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக இலங்கையை ஆண்டு வந்த ராஜபக்சே அரசை மக்கள் தூக்கி எறிந்தார்கள். சிறிபாலா தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் இலங்கையின் மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பிரமுணா இலங்கை கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான குமரன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த இலங்கை கோர்ட்டு, நேற்று குமரன் பத்மநாபன் இலங்கையை விட்டு வெளிநாடு செல்லக்கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 05, 2015

இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் !

ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்  மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் இந்த விவாதம் நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 04, 2015

சிறிய குற்றங்களை செய்த சிறைக் கைதிகள் விடுதலை..

சுதந்திர தினத்தையொட்டி மட்டு.சிறைச்சாலையிலிருந்து 14 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 11 ஆண்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
சிறிய அளவான குற்றங்களை செய்தவர்கள் தண்டப்பணம் செலுத்தாதவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள்
 போன்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.பிரியங்கர தலைமையில இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றிருந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 01, 2015

வருகிறார் மீண்டும் ராஜபக்ஸ..!! லெட்டர் ஹெட் கட்சிகளோடு இணைந்து போட்டி

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றின் கீழ் சில அரசியல் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ.குணசேகர ஆகிய கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக மஹிந்தவை களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் எதனையும் 
உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
இதேவேளை, மற்றுமொரு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரை இணைத்து சுதந்திரக் கட்சி பிளவடைவதனை தடுக்க கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>