18

siruppiddy

ஜூன் 25, 2015

இறுதி யுத்தம் இரவு நேரம்: வெளியானது பிரபாகரன் கடைசி சந்திப்பு..!!

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது. விடுதலைப்புலிகளிற்கும் இலங்கைக்குமிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
 இணக்கப்பாட்டின் படி அரசியல் மற்றும் மருத்துவப்போராளிகள் சரணடைவார்கள் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் புதிய தகவலொன்றும் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை பொறுப்பாளரான பாலதாசிற்கு இறுதி நேரத்தில் 
பிரபாகரன் சொன்ன அந்த அதிர்ச்சியான தகவல் என்ன என்பதே இப்பொழுது எழுந்துள்ள பரபரப்பான கேள்வியாகும். 2009 மே மாதம் 16ம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது உண்மையான
 அர்த்தத்தில் யுத்தம் முடிவதற்கு முதல்நாள். அதுவரை வெள்ளமுள்ளிவாய்க்காலின் கிழக்கு புறமாக பொக்கணை யிலிருந்து முல்லைத்தீவு செய்லும் வீதியின் இடதுபுறமாக உள்ள வீடொன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் வலைஞர்மடக்கடற்கரை பகுதியினூடாக முன்னேறி வந்த இராணுவம் வெள்ளமுள்ளிவாய்க்கால் கடற்கரையையும் நெருக்கியிருந்தது. இதனால் கடற்கரையை அண்டிய அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம்
 பிரபாகரனிற்கு ஏற்பட்டிருந்தது. இதுதவிர, மறுநாள் 17ம் திகதி விடுதலைப்புலிகள் பெருமெடுப்பிலான ஊடறுப்புசமர் ஒன்றை நந்திக்கடல் அரண்களின் மேல் நடத்தி வற்றாப்பளை பகுதிக்கு நகரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காகவும் வெள்ளாமுள்ளிவாய்க்காலின் மேற்குப்பக்கமாக பிரபாகரன் நகர வேண்டியிருந்தது. மிகஇறுக்கமாக அந்த களத்தில் மனிதர்கள் நிமிர்ந்து நடக்கவே முடியாத நேரம். அவ்வளவு அகோர செல் மற்றும் துப்பாக்கிச்சூடு. இவை சற்று தணிந்த சமயத்தில் மாலை மங்கும்
 சமயத்தில் பிரபாகரன் பிரதான வீதியை கடந்து மேற்குப்பக்கமாக நகர்ந்துள்ளார். வெள்ளமுள்ளிவாய்க்காலின் உண்டியல்பிள்ளையார் ஆலயம் உள்ள பகுதியால் பிரபாகரன் வீதியை குறுக்கறுக்க 
திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு அருகில் உள்ள பதுங்குகுழி ஒன்றில்த்தான் நிதித்துறை பொறுப்பாளர் பாலதாஸ் இருந்தார். அவர் காலில் காயமடைந்திருந்தார். நடமாட முடியத நிலை. அந்த பகுதியை குறுக்கறுக்கும் போது காயமடைந்திருந்த பாலதாசை ஒருமறை சந்திக்க விரும்பிய பிரபாகரன், அந்த பகுதிக்கு வந்து, பதுங்குகுழிக்குள் இறங்கியுள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர்களையும் உள்ளே அவர் 
வரவிடவில்லை. மிக இறுக்கமான அந்த சமயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நடந்தது. சில நிமிடங்களின் பின்னர் முகத்தில் எந்த மாற்றம் இல்லாமல் பிரபாகரன் 
பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்துள்ளார். அவர் சிறிதுதூரம் நடப்பதற்குள், பாலதாஸ் பெருங்குரலில் சத்தமிட்டு அழ ஆரம்பித்துள்ளார். பிரபாகரன் சொல்லிவிட்டு சென்ற தகவல் ஒன்றே அவரை நிலைகுலைய வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. விடுதலைப்புலி 
போராளிகள் தமது மரணத்திற்காக அழுபவர்கள் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால் தனது முடிவு நினைத்து பாலதாஸ் அழுதிருப்பார் என நம்ப இடமில்லை. அனேகமாக தனது உறுதியான நிலைப்பாட்டையே பிரபாகரன் கூறியிருக்கலாமென்றே ஊகிக்க முடிகிறது. -

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 20, 2015

புதிய பிரதமராக சமல் ராஜபக்சவா???

சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்
 தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க
 மீதான குற்றங்கள் அதிகரிப்பதால் அவரை பதவிவிலக்கி சபாநாயகர் சமல் ராஜபக்சவை நியமிக்கவேண்டும். பதில் சபாநாயகார் சந்திம வீராகொடியை சபாநாயகராக அடுத்த தேர்தல் 
நடக்கும்வரை பதவியில் இருத்தலாம் என மைத்திபால சிறிசேனவிடம் இடதுசாரிகள் சில ஒன்றிணைந்து கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 16, 2015

சொல்ஹெய்முக்கு இலங்கை விவகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை!???

இலங்கை விடயத்தில் நோர்வேயின், முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித பங்கும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அண்மையில் லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போது அவர் தமது கருத்துக்களை மாத்திரே பகிர்ந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அவை பயனுள்ளவையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் என்ற தலைப்பில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டமை தொடர்பிலேயே
 அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.லண்டன் நிகழ்வின்போது எரிக் சொல்ஹெய்ம் மிகக்குறுகிய நேரமே கலந்துரையாடலில் பங்கேற்றார். இதன்போது அவர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 12, 2015

போராளிகளுக்கு சுயதொழில் கடன்!!அமைச்சரவை அனுமதி!! !

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5,754 பேருக்கு சுயதொழில் நிவாரணக் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பின்னர் சுயதொழில் புரிவதற்காக நிவாரணக் கடன் வழங்கும் திட்டம் 2012 முதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் 2014 டிசம்பர் வரை 302 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டது.
இந்த கடனை பெற மேலும் 5,754 பேர் விண்ணப்பித்துள்ளதால் அவர்களுக்கும் அரச வங்கிகளினூடாக நிவாரண கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையிலேயே புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் நிவாரணக் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 10, 2015

ஐம்பத்தி ஒன்பது இராணுவ முகாம்கள் யாழில் நீக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள் தற்போது வரையில் நீக்கப்பட்டுள்ளது என
 யாழ். பாதுகாப்பு படைகள் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கமைவாக யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவத்திற்கு கீழ் இருந்த 12 ஆயிரத்து 901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஜூன் 07, 2015

தமிழர் பேரவைக்கு(GTF) தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை யார் கொடுத்தது?

இலங்கையில் போர் உச்சத்தை எட்டியவேளை , வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக போராட்டங்களை நடத்த ஏதுவாக பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பேச்சாளராக இருந்த சுரேன் சுரேந்திரன், பல சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை 
நிலவரம் தொடர்பாக நேர்காணல்களை வழங்கி , அதன்மூலம் பிரபல்யமானார். பின்னர் அவருக்கும் BTF க்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து ,
அவர் உலகத் தமிழர் பேரவை(GTF) என்ற அமைப்பை உருவாக்கி , பிரிந்து சென்றார். பிரித்தானியாவில் இயங்கும் நாடு கடந்த அரசுக்கு(TGTE) மக்கள் வாக்குகளை போட்டு அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) அடிமட்டத்தில்
 இருந்து தமிழர்களோடு நெருங்கி பல செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அவர்கள் ஆண்டுதோறும் மாவீரர் தினத்தை நடத்துகிறார்கள்.
அதுபோக பல உலக நாடுகளில் உள்ள மக்கள் பேரவை , அந்த நாடுகளில் உள்ள பல நூறு தமிழர்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பு. இதே வரிசையில் கனடாவில் உள்ள கனேடிய தமிழ் காங்கிரசும்(CTC) பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாகும். ஆனால்
 எந்த ஒரு தமிழர் நிகழ்வுகளையும் நடத்தாமல். தமிழர்களின் ஆதரவினை சிறிதளவும் உள்வாங்காத இந்த உலகத் தமிழர் பேரவை(GTF) தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்து இயங்கி வருவது கண்டிக்கத்தக்க விடையம் ஆகும்.
தென்னாபிரிக்க அரசில் முன்னர் அமைச்சராக இருந்த றோயல் படையாச்சி என்னும் இந்திய வம்சாவளி நபரை வைத்து ,
காய் நகர்த்தியது GTF. அவர் இறந்த பின்னர் அவரின் உறவினர் ஊடாகவே தற்போதும் தென்னாபிரிக்க அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது உலகத் தமிழர் பேரவை.
இதன் ஒரு அங்கமாகவே நேற்றைய தினம்(சனிக்கிழமை) மற்றும் இன்றைய தினம் என சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது. ஆனால் இதில் வேறு எந்த தமிழ் அமைபுகளும் கலந்துகொள்ளவில்லை.
பல அமைப்புகளை புறம் தள்ளி ,
 தாமே தமிழர்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உண்மைக்கு புறம்பான வகையில் இவர்கள் செயல்படுவது ஜனநாயக மரபுகளை மீறும் அப்பட்டமான செயலாக உள்ளது. ஒரு நாட்டில் உள்ள தனியொரு அமைப்பு , பேச்சுவார்த்தையை நடத்தி அதனூடாக தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமா. அதுபோக உலகத் தமிழர் பேரவையிடம் 4 தூண்கள் என்று சொல்லப்படும்(4 piller) என்கிற அவர்களது கொள்கை தான் கைகளில் இருக்கிறதே தவிர road map என்று சொல்லப்படக் கூடிய , ஒரு தீர்வுத் திட்டப் பொதி ,கைகளில் இல்லை.
தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று இவர்கள் கூறினால், அது எதுமாதிரியான சுயாட்சி என்று கூற இவர்கள் கைகளில் என்ன சட்ட வரைபு இருக்கிறது என்று கேட்டால் , எதுவுமே கைகளில் இல்லை. இவர்கள் ஒரு முறை மக்கள் வாழ்வாதாரம் பற்றி பேசுகிறார்கள். மறு முனையில் விதவைகள் வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இன்னொரு கோணத்தில் தொழில் நுட்ப்ப வளர்சி பற்றி பேசுகிறார்கள். அதுபோக , அரசியல் தீர்வு குறித்தும் பேசுகிறார்கள்.
உலகத் தமிழர் பேரவையைப் பொறுத்தவரை இதுவரை அவர்களிடத்தில் சரியான ஒரு சட்ட வரைபு இல்லை என்பதே அவர்கள் செய்துள்ள முதல் பிழையாக பார்கப்படுகிறது. அதுபோக அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கி , அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
 எனவே தன்னிச்சையாக மற்றும் , ரகசிய பேச்சுவார்த்தைகளில் GTF ஈடுபடுவதை உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் (GTAJ) வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை உடனே நிவர்த்திசெய்ய அனைத்து தமிழர் தரப்புகளும் அரசியல் ஆலோசகர்களும் மற்றும் செயல்பாட்டாளர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று நாம் வேஎண்டி நிற்கிறோம்.
நன்றி
உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் (GTAJ)
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 04, 2015

நாடாளுமன்றின் கட்சிகள்சம்பந்தனை நியமிப்பதற்கு இணக்கம்

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
அரசியல் அமைப்பு பேரவையின் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியாக சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு கட்சிகளும் சம்பந்தனை நியமிப்பதற்கு இணங்கியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிää ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளன.
சம்பந்தனை நியமிப்பது குறித்து இந்த கட்சிகளின் கருத்து கேட்டறியப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளிடமமோ அல்லது நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய கட்சிகளிடமோ அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
கட்சிகளின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தை நிராகரிக்கின்றோம் என லக்ஸ்மன் கிரியல்ல சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அரசியல் அமைப்பு பேரவை தற்போதைக்கு நிறுவப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகின்றது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 02, 2015

ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015

கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்)
அண்ணாவின் 
நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் 
நடைபெற்றது.
இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியாக பங்கேற்றனர் . குறிப்பாக நெதர்லாந்தில் முதல்முறையாக சிறுவர்களுக்கன தேசிய நாள் உதைபந்தாட்டம் ஈழத்தம்ழர் விளையாட்டு ஒனறியத்தால் நடாத்தபட்டமையால் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன 
காணப்பட்டனர். பின்னர் வெற்றியீட்டிய கழகங்களுக்கு 
பரிசில்கள் வழங்கப்பட்டு மாலை 8.00 மணியளவில் தேசியக்கொடியிறக்கப்பட்டு எங்கள் தமிழ் உறவுகளின் கை தட்டலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தியது.
வெற்றியீட்டிய கழகங்கள்
15வயதிகுட்பட்டோர்.
1ம் இடம் YMTA OUDENBOSCH
2ம் இடம் T.F.C SCHAGEN
3ம் இடம் இளம்பூக்கள் DENBOSCH
வளர்ந்தோர்களுக்கன உதைபந்தட்டம் 1ம் இடம் DENHELDER
2ம் இடம் YMTA OUDENBOSCH
3ம இடம் T.F.C SCHAGEN
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





ஜூன் 01, 2015

தலைவர் கருணாநிதி அவரகளின் 92வது பிறந்த நாள்:

 திமுக தலைவர் கருணாநிதி வருகிற 3ம் தேதி தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் தொண்டர்களிடம் அவர்  வாழ்த்துக்களையும்  பெறுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக தலைவர் ஜெ.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர்  கருணாநிதியின் 92வது பிறந்த

 நாள் விழா வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி  பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்துகிறார். அதைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு தந்தைபெரியார்  நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் அவர் வாழ்த்துக்களை பெறுகிறார். அதன் பின்னர் சென்னை  ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஓ. மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ெபாதுக்கூட்டங்கள் மற்றும் ஏழை, எளிய  மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,  ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்ேவறு நல உதவிகளை வழங்க உள்ளனர். மேலும், ரத்ததானம் முகாம் நடத்தி அரசு  ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த தானம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

       

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>