18

siruppiddy

மார்ச் 19, 2016

பொட்டு அம்மான் இராணுவத்திடம் பிடியில் இருந்து தலைவருக்கு எழுதிய கடிதம்?

விடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு…………….
விடுதலையின் வழிகாட்டி
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் வலுவால் தலைவரைப்பற்றிய பெருமித உணர்வுடன் எழுதுகின்றேன்.

தலைவரைப்பற்றிய பெருமைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திற் பார்ப்பர். எந்தவொரு பின்புலமுமில்லாத சாதாரண குடும்பத்திற்பிறந்து, சுயமான அரசியல் தெளிவுடன் விடுதலைக்கான அத்திவாரத்தை அமைத்து, களத்தில் முன்னின்ற போராளியாயும் தளபதியாயும் சமகாலத்திற் செயற்பட்டு, அணிதிரட்டல் செய்து, விடுதலை இயக்கத்தை உருவாக்கிக்கொண்டது வரையான அவரது செயற்பாடுகள் அவரது வரலாற்றின் ஆரம்பச்சாதனைகள்.

விடுதலைப் போராட்டத்தின் பின்னே முழு மக்களையும் அணிதிரளக்கூடியபடி களச்செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தியமை அவரது அடுத்த சாதனைக்கான வளர்ச்சிக்கட்டம். சந்தித்த ஒவ்வொரு நெருக்கடிகளிலும் விடுதலைப் போராட்டம் ஓய்ந்து விடாதபடி முன்னெடுப்பதன் பின்னே உள்ளமை அவரது ஆற்றலின் வெளிப்பாடு. உலகினது வல்லாதிக்கங்களின் அபிலாசைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் எமது விடுதலைப்போர் விலையாகிப்போய்விடாதபடியான வழிகாட்டுதலே எமது விடுதலைக்கான அவரது தலைமைத்துவத்தின் மகுடம்.

ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான வழி ‘சுயமாகப் போராடி, சுயமாக வலுவாகிக்கொள்ளுதல்’ என்ற தத்துவத்தை உலகின் முன் நிறுவிக்காட்டிய பெருமையினாலேயே எங்கள் தலைவர் உச்சமான பெருமையைப் பெறுகின்றாரென நான் கருதுகின்றேன். எம் தலைவரது குணாம்சங்களே அவரது உயர் நிலைக்குக் காரணம் என்பது வெளிப்படை. அவரிடம் இயல்பாக அமைந்திருந்த நற்பண்புகளும் அவர் தனக்குத்தானே உருவகித்து வளர்த்துக்கொண்ட தலைமைத்துவப் பண்புகளும் இணைந்தே மிகச் சிறந்த அரசியல், இராணுவ ஆற்றலைக்கொண்ட தேசிய நிர்மாணியாக உலகின் முன் அவரை வெளிப்படுத்தியுள்ளது.

தன்னை ஒரு தலைவனாக உருவகித்துக்கொள்ளாமல் ஒரு போராளியாகவே அவர் தனது பொதுவாழ்வை ஆரம்பித்தார். இன்னும் சொல்வதானால் தனது செயலார்வத்திற்கு ஒரு வழிகாட்டியைத் தேடி அலையும் இளம் போராளியாக அவர் நீண்டகாலத்தைச் செலவு செய்தார். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற பக்குவமும் பட்டறிவுமே அவரை இன்றைய உயர்ந்த தலைமை நிலைக்கு உயர்த்தியுள்ளது எனலாம். அக்காலத்தைய தலைமை நிலையில் உள்ளவர்களிடம் முறையான செயற்திட்டம் இல்லாமையை அவதானித்தார். அத்துடன் அவர்களிடம் அர்ப்பணிப்புணர்வு இல்லாதிருப்பதையும் அடையாளம் கண்டுகொண்டார். அவை அவருக்குப் பல பாடங்களைக் கற்பித்தன. அந்தப் பாடங்களினாலேயே அவரது தலைமை உருவானது. தலைமை உருவானது என்பதைவிட வரலாற்றின் வாசலின் ஊடாகத் தலைமை நிலைக்கு அவர் அழைத்துவரப்பட்டார்.

ஆம். தனக்குத் தலைவர்களாகக் கருதிச்செயற்பட்ட அக்காலத்தைய மாணவர்பேரவை, இளைஞர்பேரவைத் தலைவர்கள் பேச்சளவிலேயே தலைவர்களாக இருந்தமையைக் கண்டுகொண்டார். எதிரியின் முறியடிப்பு முயற்சிக்கு நெஞ்சுரத்துடன் முகம்கொடுக்கத்தவறிய அவர்களது பொறுப்பின்மை அவரை வருத்தியது. அக்காலத்தைய போராட்ட அமைப்பையே சிதறடிக்கும் வகையாக சின்னத்தனத்துடன் அவர்கள் நடந்துகொண்டபோது தனியானதொரு அமைப்பை உருவாக்கும் நிலைக்கு உள்ளானார்.

விடுதலை அமைப்பொன்றை உருவாக்கிச் செயற்படுத்தியபோதும் தான் தலைவராகும் எண்ணமின்றி இன்னொருவரைத் தலைவராக்கி தன்னைச் செயற்பாட்டாளராக வைத்துக்கொண்டார். ஒரு விடுதலைப்போராட்டத் தலைமை இயற்கையாக உருவாகவேண்டும் என்பதை அந்தச் செயற்கைத் தலைமை நிரூபித்தது. அவர்களது தனிப் பலவீனங்களுக்காக ஒரு விடுதலை இயக்க மாண்பு குலைக்கப்பட்டு, நெறிமுறைகள் சிதறடிக்கப்பட்டபோது செயற்கைத் தலைமைகள் அடையாளம் காணப்பட்டமையும் அகற்றப்பட்டமையும் நடந்தேறின. அந்த வேளையில் அவர் விடுதலைக்கு வழிகாட்ட முன்வந்தார்.

அதனால் அவர் தலைமை நிலைக்கு அழைத்துவரப்பட்டார். தலைமைக்குத் தேவையான தீர்க்கதரிசனப் பார்வைக்கு உதாரணமாக கொள்ளத்தக்கவர் எமது தலைவர் என்பதை நாம் பெருமையுடன் இங்கு கூறிக்கொள்ளலாம். இந்திய அரச பிரதிநிதிகளால் எமது தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட நேரம் அது. 1983ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் வடமாநில மலைகளாற்
 சூழப்பட்ட பிரதேசத்தில் நாம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அங்கு பயிற்சி ஆசிரியராக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் எமது பயிற்சி விடயங்களிலும் எமக்குப் பழக்கப்படாத உறைபனி நிலையை எதிர்கொள்வதற்கான தனிப்பட்ட கவனிப்பிலும் அதீத அக்கறை எடுத்துச் செயற்பட்டிருந்தார். பயிற்சி பெறும் அனைவருக்கும் பொறுப்பாக இருந்த பொன்னம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த கிட்டண்ணை உட்பட எம்மிற் பலருடன் நெருக்கமான உணர்வு உறவினை குறித்த அதிகாரி ஏற்படுத்தி விட்டிருந்தார்.

தலைவர் அவர்கள் எமது பயிற்சி முகாமிற்கு வருகைதந்து பயிற்சிகளைப் பார்வையிட்டார். அவ்வேளையில் எம்மிற் பலர், குறித்த அதிகாரி பற்றியும் அவர் எம்மீது கொண்ட கரிசனை பற்றியும் சொன்னதை தலைவர் அமைதியாக கேட்டபடி இருந்தார். அன்றிரவு தெரிவு செய்யப்பட்ட பொறுப்பாளர்களுடன் தலைவரின் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போது அவர் கூறிய கருத்துக்கள் இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் உள்ளது. அதாவது ‘இந்தியா தனது சுயநல நோக்கிலேயே செயற்படுகின்றது – உண்மையில் எமது விடுதலைக்காக நாமே சொந்தமாகப் போரிட வேண்டும்.

போராளிகளாகிய நாம் எமது விடுதலையை இந்தியா பெற்றுத்தரும் என்ற எண்ணத்துடன் இருப்பது எமது விடுதலைப்போரைப் பலவீனப்படுத்திவிடும். எனவே இந்தியாவை நம்பியிருக்காது எமது விடுதலைக்காகப் போராடும் மனஉறுதியைப் போராளிகளிடையே ஏற்படுத்துங்கள்’ என்பதாகத் தலைவரின் கருத்து அமைந்திருந்தது. இந்தியா எமது விடுதலையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எமது விடுதலைக்காக நாமே போரிட வேண்டியிருக்கும் என்று அன்றே கூறிய அவரது தீர்க்கதரிசனமான சிந்தனையே எமது விடுதலைப் போராட்டம் சொந்தக்காலில் நிற்பதற்கும் நெருக்கடியின்போது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்பதற்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்ததெனலாம்.

எமது விடுதலைப் போராட்டம் சார்ந்த இந்தியாவின் நிலை சார்ந்து மட்டுமல்லாமல் எமது விடுதலைப் போராட்டத்தின் போக்கு, எமது விடுதலைப் போராட்டத்தின் மீதான சிங்கள அரசியல்வாதிகளின் அணுகுமுறை மற்றும் எமது விடுதலைப் போராட்டத்திற்காக மக்களை எவ்வாறு அணிதிரட்டுவது என அனைத்து நிலைகள் பற்றியும் தெளிவாகச் சிந்தித்து வடிவம் ஒன்றை வகுத்திருந்தார். எதிர்காலக் கட்டமைப்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் கற்பனையாகத் தன்மனதில் உருப்போட்டு வைத்திருந்தார்.

எம் தலைவர் அவர்கள் அரசியல் ஞானம்மிக்க இராசதந்திரி என்பதில் சந்தேகமே இல்லை. தலைவர் இராணுவ விடயங்களில் விற்பன்னராக உள்ளதைச் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளும் சிலர், அரசியல் விடயத்தில் தலைவர் அவர்கள் தேர்ச்சி பெறாதவர் என்ற வகையில் கருதுவதுண்டு. அக்கருத்து மிகவும் தவறு. இன்று வன்னியில் ஒரு அரசுக்குரிய கம்பீரத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது விடுதலை இயக்க நிர்வாக அலகுகளுடனும் ஆட்களுடனும் தொடர்புபட உலகின் பிரதிநிதிகள் வந்து போகும் சூழல் ஏற்பட்டது – ஏற்படுத்தப்பட்டது.

இது ஒரு அரசியல் வெற்றி. யாழ்ப்பாணத்தில் இருந்து எமது இயக்கம் பின்வாங்கவேண்டி ஏற்பட்ட அந்த இராணுவ நெருக்கடியின் சூடு தணிவதற்கிடையில் நீண்டநெடிய ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புப்போரை எதிரி தொடர்ந்தான். கடந்த 90களின் பிற்பகுதியில் எமது இயக்கம் சந்தித்த இராணுவப் பின்னடைவு நிலைமையை மாற்றி வெற்றி கொள்ள வைத்தது தலைவர் அவர்களது இராணுவ வெற்றி.

அந்த இராணுவ வெற்றியை மேற்சொன்ன அரசியல் வெற்றியாக ஆக்கி எமது விடுதலைப்போரின் மீதான பார்வையைச் சர்வதேச நிலைக்கு நகர்த்தி எடுத்துள்ளமை எமது தலைவரது இராசதந்திர நகர்வின் பெறுபேறே. எம்மினத்தின் நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றைத் தெளிவுறப்புரிந்து வைத்திருப்பதிலும் உலகில் நடந்த, நடைபெறுகின்ற விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினது வரலாறுகளையும் அறிந்து வைத்திருப்பதிலும் நாடுகள், இயக்கங்கள் என்பவற்றின் வாழ்வையும் வளர்ச்சிப்போக்கையும் தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதிலும் கூர்ந்து அவதானித்து வருவதிலும் தலைவர் அவர்களது அறிவு மிகமிக அதிகம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களது காலத்தில் எமது விடுதலைப்போரைத் தமக்குச் சாதகமாகக் கையாண்டு கொள்வதில் இந்தியா கொடுத்த அரசியல் நெருக்குவாரங்கள் மிக அதிகம். இன்றும் இந்தியாவின் அதிகார நாற்காலிகளை அலங்கரித்து வீற்றிருக்கும் மூத்த அரசியல் தலைவர்களும் ராஜீவ்காந்தி அவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தையும் தலைமையையும் ‘சின்னப்பெடியளின் குழப்படியாக’ சித்திரித்து கையாள முற்பட்டனர்.

அந்த அரசியல் நெருக்கு வாரங்களில் எமது விடுதலைப் போராட்டம் மூழ்குண்டு போகாதவாறு எதிர்நீச்சலிட்டுத் தக்கவைத்த அரசியல் மேதமையுடன் விடுதலைப்போரை வழிநடத்தினார். விடுதலைப் போராட்டம் அரசியல் நெருக்குவாரங்களையும் இராணுவ நெருக்கடிகளையும் சந்திக்கும் வேளைகளிற்கூட விட்டுக்கொடுக்க முன்வராத தலைவரின் பண்பையே சிலர் அரசியல் ஞானமின்மையாகச் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். மறுவளமாகக் கூறுவதானால் தலைவர் அவர்கள் கொண்டுள்ள தேர்ந்த அரசியல் ஞானத்தெளிவின் அடிப்படையிலேயே குறித்த விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வருவதில்லை.

இராசதந்திரம், கொள்கைப்பற்றுறுதி, சரணாகதி போன்ற பதங்களை அதனதன் சரியான அர்த்தப் பரிமாணங்களுடன் புரிந்து கொள்வார் எமது தலைவர். கொள்கைப்பற்றுறுதி இல்லாது எதிரியிடம் மண்டியிடுபவர்கள் அல்லது இனத்தினது உரிமைகளை விலைபேசிச் சலுகைகளைப் பெற முனையும் கயவர்கள் தம்செயலை நியாயப்படுத்த இராசதந்திரம் என்ற பதத்தின் பின்னே மறைந்து கொள்வதைக் கோபமாகவும் கேலியாகவும் சுட்டிக்காட்டுவார்.

எமது இனத்தினுடைய நலன்களை விட்டுக்கொடுக்க மறுக்கும் தலைவர் அவர்களது கொள்கைப்பற்றுறுதியானது அவரது அரசியல் தெளிவினால் விளைந்த பயனே. காலத்திற்குக்காலம் எம்மினத்தினிடையே தோன்றிய தலைமைகள் இன விடுதலை சார்ந்த தீர்க்கமான பார்வையைத் தம்மிடையே கொண்டிருக்கவில்லை. அவ்வக்காலத்தைய மக்களினது மன உணர்வுகளைப் பிரதிபலித்தும் மக்களது மன எழுச்சியை ஒருமுகப்படுத்தியும் அத்தலைவர்கள் விளங்கினர் என்பது ஓரளவு உண்மைதான். ஆனாலுங்கூட உண்மையான விடுதலை நோக்கிய பயணத்திற்காக மக்களைத் தயார்படுத்தும் தீர்க்க தரிசனமோ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அர்ப்பணிப்புணர்வோ இல்லாதிருந்தனர்.

மாறாக எம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளவர்களுடன் ஒத்துப்போவதாகவே இருந்தது அவர்களது அரசியல். எமது இனத்தினது விடுதலை உணர்வுகள் பொங்கிப் பிரவாகிக்கும் வேளைகளில் தலைவர்களாக இருந்த மனிதர்களுடன் தனிப்பட்ட முறையிற் சமரசம் செய்து கொள்வதையே ஆக்கிரமிப்பாளர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆக்கிரமிப்பாளர்களது தந்திரோபாயத்திற்குப் பலியாகி இன விடுதலையைக் காவு கொடுக்கும் கயமைக்குப் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரம் எமது தலைவருக்குத் தெரியாதுதான்.

குமுறிக் கொண்டிருக்கும் எமது மக்களது விடுதலை உணர்வுகளை மழுங்கடிக்க ஏதாவது ஒரு பெயரிலான அற்ப தீர்வுக்கான பேச்சுவார்த்தையிலோ தேர்தலிலோ பங்குகொண்டு எதிரிக்குத் துணைபோதலுக்குப் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரம் எமது தலைவருக்குத் தெரியாதுதான். விடுதலைக்கான கொள்கைப்பற்றுறுதியை முதன்மைச் சிந்தனையாக்கி, அந்த இலட்சியத்திற்குப் பங்கமின்றிச் செயற்பட நண்பர்களை நாடுவதன் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரத்தில் எமது தலைவர் வல்லவர்.

விடுதலைப் போரியலுக்கும் அதனிடையேயான போரோய்ந்த அரசியல் நகர்வுகளுக்கும் கருத்துலகு பற்றிய பார்வையுடன், காலச் சூழல் பற்றிய கணிப்பீடும் அவசியம். இவ்வுணர்வலை வரிசைகளை உய்த்தறிவதும் கணிப்பிட்டுக் கையாள்வதும் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரத்தில் எமது தலைவர் ஒருவித்தகர். இந்தியாவில் அமைந்த எமதியக்க ஆரம்பகாலப் பயிற்சித் தளங்கள், தமிழ் நாட்டு முதலமைச்சர் எம.ஜி.ஆர் அவர்களுடனான நட்புறவு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்திற் சிறீலங்கா ஜனாதிபதி பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தை என்பன தலைவரது இராசதந்திர நகர்வின் சில வெளிப்பாடுகள்.

அந்த இராசதந்திர நகர்வில் விளைந்த நட்புறவுகள் எமது இனத்தின் உரிமைகளை விலையாகக் கேட்க அனுமதிக்காத அவரது ஆளுமையே இங்கு முதன்மையானது. கொள்கைப்பற்றுறுதிக்கும் இராசதந்திர நகர்விற்கும் இடையே தலைவர் அவர்கள் சுயமாக வகுத்து வைத்திருந்த எல்லைக்கோட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தனக்குத் தனிப்பட்ட முறையில் ஒவ்வாத தன்மைகொண்ட பலருடனுங்கூட அவர் நட்புறவுடன் பழகுவதைக் கண்டிருக்கின்றேன். தனிப்பட்ட நலன் சார்ந்து அமைவதாக அவர்கள் எண்ணிவிட இடம் கொடாமல் நிகழும் மேற்கண்ட பழக்கங்கள்கூட அவரது இராசதந்திர ஆளுமையின் இன்னுமொரு பக்கம்.

இனத்தின் விடுதலை மீது அவர் கொண்ட கொள்கைப்பற்றுறுதியே அவரது அந்த ஆளுமையின் இரகசியம். போராட்டப்போக்குகளிற் கடும் நெருக்கடிகள் காலத்திற்குக்காலம் ஏற்படுவதுண்டு. அப்படியான நெருக்கடிகளிலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவேனும் செய்யப்படும் எந்தப் பணியிலும் நேர்மை தவறுவதை அல்லது வஞ்சகமான செயற்பாடுகளை தலைவர் அவர்கள் அனுமதிப்பதில்லை. மில்லர் கரும்புலியாகக் களம் செல்வதற்கு முந்திய நிலைமை அது.

சிறிய முகாமினைக்கூட இயக்கம் தாக்கியழிக்க ஆரம்பிக்காத 1985 ஆண்டு முற்பகுதியாக இருக்க வேண்டும். அவ்வேளையில் இராணுவ முகாம் ஒன்றைத் தாக்குவதென்பது எமதியக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். களத்தில் நின்ற பொறுப்பாளர்களால் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. அதாவது, தனியார் வாகனங்கள் சிறு பரிசோதனையுடன் செல்லும் வீதியின் ஓரமாக அமைந்திருந்தது அந்த இராணுவ முகாம். அவ்விராணுவ முகாம் ஊடாக வழமையாகச் சென்றுவரும் பொது ஆள் ஒருவருடைய வாகனமும் பொதுநபரான சாரதியும் வழமையாகச் சோதனை செய்யும் இராணுவத்திற்குப் பழக்கமாய் போய்விட்டதால் சோதனை இல்லாமலே போய்வரக்கூடியதாக அமைந்திருந்தது.

அதனை அவதானித்த எம்மவர்கள் வாகனச் சாரதிக்குத் தெரியாமல் வாகனத்தில் வெடிகுண்டை பொருத்திவிட்டு, ‘வாகனம் இராணுவ முகாமின் மத்தியிற் செல்லும்போது, தூரக்கட்டுப்பாட்டுக்கருவி மூலமாக’ (றிமோட்) குண்டை வெடிக்க வைத்து, முகாமிற்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு, மேலதிக அணியை உள்ளனுப்பி, முகாமைக் கைப்பற்றுவதாகத் திட்டம் அமைந்திருந்தது. திட்டம்பற்றி அறிந்தவுடன் தலைவர் அவர்கள் கடும் சினமுற்று திட்டத்தை நிறுத்திவிட்டார்.

சாரதிக்கே தெரியாமற் குண்டைப் பொருத்தும் யோசனையைக் கடுமையாகக் கண்டித்ததுடன், ‘உங்களுக்குள் ஒரு துணிவுள்ளவன் இருந்தால் தன்னை அழிக்கும் மனநிலையுடன் வெடிகுண்டை எடுத்துச் சென்று வெடிக்க வைக்கலாமே தவிர, இவ்வாறு வஞ்சகம் புரிவது கடும் தவறென்று’ கண்டித்தார். அதன் பின்னர் கொஞ்சக் காலமாக இத்திட்டத்தின் தவறுபற்றி அடிக்கடி பொறுப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லி சுலபமாக வெற்றிகள் பெறுவதற்காக நியாயமில்லாத திட்டங்கள் வகுக்கக்கூடாதென கருத்தேற்றம் செய்தவண்ணமே இருந்தார்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போதான நெருக்கடியான காலமது. அர்த்தமற்ற அரைகுறைத் தீர்வுகளைக் கடைபரப்பிய இந்திய வஞ்சகத்தை நன்கு தெரிந்தும் தெரியாததுபோல் துணை நின்றனர் துரோகிகள். ‘ஆண்டவன்தான் இனித்தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்றுரைத்த தந்தை செல்வாவின் வழிவந்தவர்களாகத் தம்மைக் கூறிக்கொண்டவர்கள் அவர்கள். தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்திப் போராடும் இளைய சந்ததிக்குப் பக்கத்துணையாக இருக்கவும் துணியவில்லை.

ஆண்டவன் காப்பாற்றட்டும் என்று ஒதுங்கியிருக்கவும் விரும்பவில்லை. மாறாக ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணையிருக்கத் துணிந்தனர். பதவி மோகத்தில் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த துரோகிகளை அகற்றுவது தவிர்க்கமுடியாததானது. துரோகிகளை அழித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சிந்தனையில் இருத்திய நடவடிக்கையாளர்கள் நெறிதவறிவிட்டனர். நடவடிக்கைக்கு பொருத்தமான வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்து அங்கேயே தாக்குதலைச் செய்துவிட்டனர்.

தாக்குதல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட தலைவர் அவர்கள் பேரதிர்ச்சியும் துயருமுற்றார். நேர்மையான வீரத்துடன் நடவடிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாகக் கலந்துரையாடலுக்கான சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதும் அந்தச் சந்திப்பு தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டதும் மிகவும் தவறான அணுகுமுறை. இந்த அணுகுமுறை எமது இயக்கத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. ‘எமது போராளிகள் பின்பற்ற வேண்டிய வீரமான அணுகுமுறையாக இது அமையவில்லை.

இந்த அணுகுமுறை அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. எமது விடுதலை இயக்க அறநெறிக்கு மாறாக இவை நடந்துவிட்டன’ என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் குமுறித் தீர்த்தார். வீரம், சுத்தமான வீரம் என்பனபற்றிக் கனல்தெறிக்கும் வார்த்தைகளாலும் உணர்வுகளாலும் அவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட எந்த ஒரு போராளியும் இதுமாதிரியான ஓர் திட்டத்தை தம்மனதால் கூட நினைக்கத்துணியமாட்டார். நிகழ்வுகள் நடந்துமுடிந்து பல்லாண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் வேறேதாவது புதிய தாக்குதல்கள் பற்றியதான உரையாடல்களில் மேற்படி தவறான அணுகுமுறை பற்றிய விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்.

நெறிமுறை மீறிய அந்த அணுகுமுறைக்கான அவரது வேதனையுடன் எமது இயக்கம் எப்படியிருக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பும் அவ்வேளையில் வெளிப்படும். தலைவர் அவர்களது இந்த நேர்மைப் பண்பே எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆத்ம பலத்தைக் கொடுத்து நிற்கின்றது எனலாம். வேறொரு விதத்திற் சொல்வதானால், தனது மனச்சாட்சியை சிறிதளவேனும் களங்கப்படுத்திக்கொள்ள அனுமதிக்காத அவரது நேர்மையே எமதினத்தின் தலைமைத்துவத்திற்கான ஆளுமையாக வடிவம் பெறுகிறது எனலாம்.

காலத்திற்குகாலம் விடுதலைப் போராட்டத்தின் தேவைகருதி அறிமுகம் செய்யப்படும் கட்டுப்பாடுகளைத் தானே கடைப்பிடிப்பதில் தலைவர் முன்னிற்பவர். குறிப்பாகத் தன்னைச்சொல்லி எவரும் சலுகைகளைப் பெற்றுவிடாதபடி அவர் எடுக்கும் கவனமானது, குறித்த கட்டுப்பாடுகளை செயற்படுத்துவோரிற்கு மனவுந்துதலைப் பெரிதும் தரும். தலைவர் அவர்கள் மனம் கலங்கியதை நான் பார்த்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் ஒன்று நினைவிற்கு வருகின்றது. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னைய சந்தர்ப்பம். எமது இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியே பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதில் தோல்வியடைந்த ஒருவர், தலைவர் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் மூலமாக குறுக்குவழி முயற்சி ஒன்றினைச் செய்திருந்தார்.

ஒரு சலுகைமுறைச் சிபாரிசிற்காகக் குறித்த விண்ணப்பம் மிக நெருக்கமான ஆடாகத் தன் கவனத்திற்கு தரப்பட்டபோதும், தலைவர் அதற்காக சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார். அந்த மறுப்பை பெற்றுக்கொண்டவரது கோபம் அல்லது மனக்கவலையானது தலைவர் அவர்களிற்குங்கூட தனிப்பட்ட முறையில் மனக்கலக்கம் தருவதாய் அமைந்தபோதிலும் அந்த விண்ணப்பத்திற்காகச் சிபாரிசு ஒன்றைச் செய்வதற்கு அவர் சம்மதிக்கவேயில்லை.

பயண அனுமதிக்காகத் தன்னை அணுகுபவர்களின் போராட்டப் பங்களிப்பின் காரணமாகவோ தனது பொதுவான சமுதாயப்பார்வை காரணமாகவோ ஏராளமான சிபாரிசுகளையும் சிலவேளைகளில் அவசரமான கட்டளைகளையும் தலைவர் எமக்குத் தருவதுண்டு. ஆனாலும் மேற்குறிப்பிட்ட விடயத்திற் பயண அனுமதிக்கான வேண்டுகோளுக்குரியவர் அதற்குப் பொருத்தமான தன்மையைக் கொண்டிராத காரணத்தால் அந்த விண்ணப்பத்திற்கு தனது சிபாரிசைச் செய்யத் தலைவர் உறுதியாகவே மறுத்துவிட்டார்.

இதுபோன்ற இறுக்கமான தன்மையைப் பலவேளைகளிலும் கடைப்பிடிப்பதால் தனிப்பட்ட நண்பர்கள் பலருடனும் உறவுகள் இல்லாதுபோகும் சூழலும் தலைவர் அவர்களுக்கு ஏற்பட்டே வந்துள்ளது. இலட்சியத் தெளிவு மற்றும் தனிப்பட்ட நேர்மையால் விளைந்த பக்கம்சாராத்தன்மை என்பவற்றையே தனது பலமாகக் கருதுபவர். அதனால் இந்த நட்பிழப்புகளுக்காக வருந்தாமல் தனது நேர்மைக்காகவே பெருமைப்பட்டுக் கொள்வார். தாயக விடுதலைக்காகப் போராட அல்லது போராட்டத்திற்கு பங்களிக்க முன்வரும் ஒவ்வொருவரையும் தனது உறவுகளாக ஏற்றுப்போற்றும் பண்பினைத் தனதியல்பாகவே வளர்த்துக்கொண்டுள்ளார்.

இன்னும் சொல்வதானால் தனிப்பட்ட நட்பு, உறவு எனும் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாத தன்மையே, ஒரு இனத்தையே, அவர் பின்னால் அணிதிரள வைத்துள்ளது எனலாம். பூமி எங்கும் சூரியனின் ஒளியிற் குளிக்கும். அதே சூரியனை நெருங்கிச் செல்லும்போது ஒளியை மட்டுமின்றி வெம்மையாலும் சுடும். அதேபோல் எங்கள் தலைவரை நெருங்கியிருப்போரும் அவரது குளிர்மையான ஒளியை பெறுவதுடன் மட்டுமல்லாது, வெம்மையான கண்டனத்தை அல்லது கோபத்தைப் பெறவும் தவறுவதில்லை.

குறிப்பாக அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்து அதனை நியாயமின்றிப் பிரயோகிப்போர்மீது அவருக்கு வரும் கோபத்தை மாற்றவோ, மறக்கவோ முடியாது. அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருப்போர் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதே அநேக பிரச்சனைகளுக்குக் காரணமென்பதும் அணுகுமுறைகளைச் சீராக்கினால் அவற்றுக்குரிய தீர்வுகள் கிடைக்குமென்பதும் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தும் விடயம். பொதுமக்களை அதிகாரத் தொனியுடன் அணுகும் புலனாய்வுத்துறையினர் பற்றிய முறைப்பாடுகளைப் பெறும்வேளையில் தலைவர் அவர்களது கோபத்தைப் பலதடவைகளில் சந்தித்துள்ளேன்.

அப்படியான உணர்வு வெளிப்பாட்டுச் சந்தர்ப்பத்தில்தான், அதிகாரத்தாலும் பணபலத்தாலும் உருவாக்கப்படும் புலனாய்வுக் கட்டமைப்பு காலத்தால் அழிந்துவிடும். அன்பான அணுகுமுறையாலும் விடுதலை உணர்வை தட்டி எழுப்புவதாலும் உருவாக்கப்படும் கட்டமைப்பே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் எனும் வழிகாட்டும் கருத்து வடிவத்தை முன்வைத்தார். எமது தலைவர் அவர்களது அவ்வாறான கோபத்தின் வெளிப்பாடுகளை நாம் விடுதலைக்கான அவரது கோட்பாடுகளின் வெளிப்பாடுகளாக பார்க்கலாம்.

எமது இனத்தின் விடுதலை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் அல்லது எமதினத்தின் விடுதலைக்கான பணிதவிர வேறொன்றையும் சிந்திக்க மறுக்கும் அவரது எண்ண வெளிப்பாடுகளே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படும். வார்த்தைகளினால் மட்டுமல்லாது வாழ்க்கையினால் வழிகாட்டியாக செயற்படும் எமது தலைவரின் காலத்தில் அவரின் பின்னே அணிதிரள்வோம். எம்தலைவரது வழிகாட்டுகையில் விடுதலை மீதான உறுதிப்பாட்டின் வழித்தடத்தில் அணிதிரள்வதே தமிழ்த்தேசிய உணர்வுடையோரின் கடமையாகும்.

அவரது வழிநடத்தலின்கீழ் இணைந்துள்ள ஒவ்வொருவரும் அவரது எண்ணங்களையும் கருத்துக்களையும் சரிவரப்புரிந்து விடுதலையை விரைவுபடுத்த உழைப்பது பொறுப்பாகும். விடுதலையின் வழிகாட்டியாகத் தன்வாழ்வை அமைத்துக்கொண்ட எங்கள் தலைவரினது ஐம்பதாவது அகவையின் நாளில் பெருமிதத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்த்துக்கூறும் தமிழ்த் தேசியத்தின் குரலுடன் நானும் இணைவதிற் பெருமை கொள்கின்றேன்.
ச.பொட்டு அம்மான்
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மார்ச் 11, 2016

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை பொன்சேகாகூற்று!!!

பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா
கரும்புலிகளுக்கு படகுவாங்க காசு கொடுத்தார் பசில் மலையகத் தலைவர்களிடம் ஒப்படைத்தார் பிரபாகரன் பாகிஸ்தானிடம் இருந்தே ரவைகள் பெற்றோம் நானிருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்டோம் என் ஜாதகத்தை திருடிப் பார்த்தனர் படைவிட்டோடி இன்று புத்தகம் எழுதுகிறார் வெள்ளைக் கொடியைக் கிளறுங்கள் பதவி கிடைத்தால், பீல்ட் மார்ஷலைப் பறிப்பர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று மரணிக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சரான ‡பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தம் முழுமையாக முடிவதற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷ மண்ணை முத்தமிட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.

‘பயங்கரவாதிகளுக்குப் பணம் கொடுத்தனர். அதனைக் கூறுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன். இவ்வாறு தேசத்துரோகம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதியுச்ச தண்டனை, தூக்குத் தண்டனையாகும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவை கைதுசெய்து தூக்கிலிட வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ‡பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘வெளிநாட்டிலிருந்து மே மாதம் 16ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ, மண்ணுக்கு முத்தமிட்டார். அன்றும் யுத்தம் முடியவில்லை. அலரிமாளிகைக்கு என்னை அழைத்து, 18ஆம் திகதியன்று பதவியுயர்வு வழங்கினர். அன்றும் யுத்தம் முடியவில்லை. 19ஆம் திகதியன்று நாடாளுமன்றத்திலிருந்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக நாட்டுக்கும் மக்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். அன்றைய தினமும் யுத்தம், முழுமையாக நிறைவடையவில்லை.

அவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட 19ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்திலிருந்து இரவு வேளையில், காரில் நான் சென்று கொண்டிருந்தபோதே,வேலுப்பிள்ளை பிரபாகரனின்… சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு அறிவித்தனர். யுத்தத்தின் கௌரவத்தைத் தான் பெற்றுக்கொள்ள பதாதைகளை அமைத்தனர் எனினும், நான் அமைதியாகவே இருந்தேன். „விளையாட்டுப் போட்டியில் அணி தோற்றுவிட்டால் அதன் சுமையை அணிமீதும், வென்றுவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சருக்குமா கொடுப்போம்… என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும், யுத்த வெற்றிக்குப் பின்னர் அவ்வாறு இடம்பெறவில்லை. பெயருக்கும் புகழுக்காகவும் என்னை ஒதுக்கிவிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிப் படைப்பிரிவுக்குப் படகுகளை வாங்குவதற்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இரண்டு மில்லியன் டொலர்களை வழங்கினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது „தெற்கில், தெற்கு தமிழர்களின் வாக்கை தடுக்க வேண்டும்… என்று மலையகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் தலைவர்களிடம் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

பணத்தைக் கையளிப்பதற்காக, பசில் ராஜபக்ஷவுடன் சென்றிருந்த இரண்டு தலைவர்களிடமே பிரபாகரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்’என்றும் அமைச்சர் சரத்பொன்சேகா மேலும் கூறினார்.

‘யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தின் போது ரவைகள்; இருக்கவில்லை. நான் பாகிஸ்தானுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைப் பெற்றுக்கொண்டேன். அதன் பெறுமதி, 60 மில்லியன் டொலர்களாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானும் உதவியது’ என்றார்.

‘யுத்தத்தின் பின்னரான விசாரணைகளின்போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும். இராணுவத்தினர் மீது முழுமையாக குற்றம் சாட்டக்கூடாது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தத்தின் இறுதிக் காலத்தின்போது, சாதாரண படையினர் களத்தில் இருந்தனர். எனினும், முன்னோக்கிய நகர்வுகளில், முக்கியஸ்தர்களும் படைத்தரப்பில் உயர்பதவி நிலைகளில் இருந்தவர்களுமே விடுதலைப் புலிகளுடன் போரிட்டனர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுறுத்த விரும்புகின்றேன்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது, என்னை அனுப்பிவிட்டு எல்லாவற்றையும் குழப்பி விட்டு விட்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஜனநாயக அம்சங்களின் அடிப்படையிலேயே யுத்தத்தை நான் முன்னெடுத்தேன். எனினும், குழப்பிவிட்டமையால் விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியதாய் உள்ளது.

‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் எனக்கு சிறை வாசம் விதித்தனர். வெள்ளைக்கொடி விவகாரத்தை மீண்டும் கிளறி எடுக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்திடம் கோருகின்றேன். குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். முப்படைகளின் மீதும் குற்றஞ்சாட்டக்கூடாது.

குண்டு வெடிப்புக்களும் தற்கொலைத் தாக்குதல்களும் தீவிரமடைந்திருந்த போது தேசப்பற்றாளர்கள் வாய்திறக்கவில்லை. அன்று வாய்திறந்திருந்தால், பிரபாகரன் பாடம் கற்பித்துக் கொடுத்திருப்பார். அநுராதபுரம், பொலன்னறுவைக்கு அப்பால் தேசப்பற்றாளர்கள் செல்லவே இல்லை.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பின்னால், நான் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் என்மீது குற்றம் சாட்டுகின்றார். அது தொடர்;பில் விசாரிக்கவும்.

குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உடுவே தம்மாலோக்க தேரரைக் கைது செய்ததைப் போல, கோட்டாவையும் கைது செய்ய வேண்டும். ராஜபக்ஷ குடும்பங்களுக்காக இரண்டுமுறை சிந்திக்க கூடாது. படையை விட்டோடிய கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தம் தொடர்பில் புத்தகம் எழுதுகின்றார். என்னை மட்டுமே ராஜபக்ஷ குடும்பம் பழிவாங்கியதாக, பசில் ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார். எப்படித்தான் மறைத்து வைத்திருக்க முயன்றாலும் நாக்கு, பொய் சொல்லாது. யுத்தம் நிறைவடைந்து, பொறுப்பற்ற பதவிகளை கொடுத்ததன் பின்னர், தேர்தலில், அதுவும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிந்து கொண்டதன் பின்னர் எனது ஜாதகத்தையே திருடியெடுத்துப் பார்த்தனர். „அன்று முறையாக தேர்தல் நடந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன்…

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இருந்தமையால் தான், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி, ஜனாதிபதியாக ஆகியுள்ளார். அவர் மட்டும் அன்று தோற்றிருந்தால் நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பெருந்தொகையானோர் சிறைச்சாலைக்குச் சென்றிருப்போம்.

மஹிந்த ராஜபக்ஷ குடும்பங்களின் செயற்பாடுகள் காரணமாகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பதவிகளும் கிடைத்தன அமைச்சராகவும் இருக்கின்றோம். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாட்சி கிடைத்தது. இவ்வாட்சியை முன்னகர்த்தி செல்வது எமது கையிலேயே இருக்கின்றது.

நான் பதவியில் இருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. எனினும், 110 கிலோகிராம் தங்கமே மீட்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துவிட்டார். அதற்குப் பின்னர் 400 அல்லது 500 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கலாம்.

எனது உரையை, மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. எங்காவது இருந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். ‡பீல்ட் மார்ஷல் பட்டமும் அமைச்சர் பதவியும் அவரின் செயற்பாட்டினாலே எனக்குக் கிடைத்தது. மஹிந்தவுக்கு பதவி மீண்டும் கிடைக்குமாயின் என் பதவியைப் பறித்தெடுப்பார்’ என்றார்.

நற்பெயரை பாதுகாத்தேன்

‘நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். எனது பெற்றோர் ஆசிரியர்களாக சேவையாற்றினர். இராணுவத்தில் நான், இணைந்ததன் பின்னர் பதவி நிலைகளை ஆணவத்தில் பெறுவதற்கு முயற்சித்திருக்கவில்லை. படிப்படியாக உயர்வு பெற்று சென்றதுடன், இராணுத்தின் நற்பெயரையும் பாதுகாக்க செயற்பட்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் இராணுவத்தில், கஷ்ட காலமிருந்தது. அந்த காலத்தில் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்று அமெரிக்காவில் சுகபோகமாக வாழ்ந்து, சம்பாதித்துவிட்டு. யுத்தம் முடிந்ததும் ஆசையில் அந்த கௌரவத்தை பறித்துக் கொள்வதற்காக அலைந்து திரியவுமில்லை.

இராணுவத்தின் கௌவரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட்டிருந்தோம். அதன் விளைவாக எமக்கு பதவியுர்வுகள் கிடைத்தன. அந்த பதவியுயர்வுகளின் அடிப்படிடையில் நிலையொன்று கிடைத்தது.
எனது இராணுவத் தளபதி பதவி மற்றும் அந்தப் பதவிக்கு நான் வந்த முறைமை தொடர்பாக முன்னைய ஆட்சியாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியமல்ல

நேர்மையான வழியிலேயே அந்த பதவிக்கு நான் வந்திருந்தேன். அதைவிடுத்து ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியத்திலோ அல்லது அவர்களது தேவைகளுக்காவோ அந்த பதவிக்கு வந்திருக்கவில்லை.

இதேநேரம், நான் ஓய்வுபெற இருந்த அதிகாரி என்றபோதிலும் இராணுவ தளபதி பதவியை எனக்கு வழங்கியிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார். அது முழுமையான பொய்.

ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகிறேன். இராணுவத்தில் நான் தலைமை அதிகாரியாக இருந்தபோது, ஓய்வபெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் என்னை அழைத்து பேசிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும் ஓய்வுபெறும் வயது 58 ஆக அதிகரிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆகவே, எனக்கு முன்பிருந்த இராணுவ தளபதி ஓய்வுபெறும் போது எனக்கு ஐம்பத்து ஆறாரை வயதாக இருந்தது. இராணுவ தளபதி பதவியில் எனக்கு 3 வருடங்கள் இருக்க முடியும் என்று சந்திரிகா குமாரதுங்க என்னிடம் கூறியிருந்தார்.

எனக்கு 60 வயதாவதற்கு முன்னதாக என்னால் இராணுவத்தில் 3 வருடங்கள் இருக்கக்கூடிய சூழலிலேயே நானிருந்தேன்.
இராணுவ தளபதி பதவிக்கு நான், 2005 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது, ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் எனக்கு இருந்தன. அவ்வாறான நிலையில்தான் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டேன்.

ஜாதகங்ளை திருடிச்செல்வர்

இராணுவ தளபதியானதும் மிகவும் சாதாரணமாக எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதன் நிமித்தம் சூழ்ச்சி செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை. எனினும், அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அவர்களது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் எமது ஜாதகங்ளை திருடிச் சென்று ஜோதிடம் பார்ப்பார்கள்.

அந்த ஜாதகம் சிறப்பானதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் குரோதங்ளை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்றும் நினைத்துக் கொள்வார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலிவாங்க செயற்படுவார்கள்.

எனக்கு எதிர்பார்ப்பொன்று தான் இருந்தது. பொதுவாக எந்தவொரு இராணுவ தளபதியிடமும் அந்த அப்பாவியான எதிர்பார்ப்பு இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இராணுவ தளபதியொருவருக்கு இந்த நாட்டின் சார்பான தூதுவராக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.

எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது

சில இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவ்வாறான எதிர்பார்ப்பு தான் எனக்கும் இருந்தது. அதற்கு அப்பால் செல்ல எதிர்ப்பார்திருக்கவில்லை.

2009ஆம் ஆண்டில் நாம் யுத்தத்தை நிறைவு செய்தோம். நாம் யுத்தத்தை செய்யும் காலத்தில் யுத்தத்துக்கு மேலதிக பணம் செலவாகவில்லை.

இராணுவத்தை 2005 ஆம் ஆண்டில் நான் பொறுப்பேற்கும் போது இராணுவத்தின் செலவினங்களுக்காக வருடமொன்றுக்கு 82 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

3 வருடங்களும் 7 மாதங்களும் இராணுவ தளபதியாக நான் செயற்பட்டிருந்தேன். ஒரு இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரித்தேன். அப்போதும் எனக்கு 82 மில்லியன் ரூபாய் தான் கிடைத்தது. எனினும், இராணுவத்தை பராமரிப்பதற்காக மேலதிகமாக நான் பணம் கேட்டிருக்கவில்லை.

2012 இல் இருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டது

இதேநேரம், அதற்கு முன்னரும் நான் யுத்தத்துக்கு கட்டளையிட்ட சந்தர்ப்பத்திலும் யுத்தத்துக்கான ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகள் இந்த 82 பில்லியனுக்கு வெளியிலேயே நடைபெற்றன. அது சீனாவில் இருந்த நடைபெற்றிருந்தது. நான் யுத்தம் செய்தபோது வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான கட்டணங்கள் 2012 ஆம் ஆண்டிலேயே செலுத்த ஆரம்பிக்கப்பட்டன. அவை 2020 வரை செலுத்தப்படும்.

யுத்தத்துக்கான செலவுகள் 2012 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றி யுத்தத்துக்கென கூறி அந்த பணத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்திருந்தனர்.
உதாரணமாக 130 மில்லிமீற்றர் தோட்டாக்களை குறிப்பிட முடியும். அவற்றை நாம் கப்பல் கணக்கிலேயே கொண்டு வருவோம். யுத்தம் ஆரம்பிக்கும் போது அந்த தோட்டவொன்றின் விலை 250 டொலராக காணப்பட்டது. 15 வருடங்களில் அதன் விலை 50 டொலரினால் மட்டுமே அதிகரித்திருந்தது. யுத்தம் நடபெற்ற காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அந்தத் தோட்டவொன்றுக்கு 650 டொலர் கணக்கில் செலுத்த ஆரம்பித்திருந்தார். இது 400 டொலர் அதிகமாகும்.

யுத்தம் செய்யமுடியவில்லை
இவ்வாறு செலவிட்டு இறுதியில் எனக்கு தோட்டா வாங்குவதற்கு நிதி இல்லாமல் போய்விட்டது. தோட்டகள் இல்லாம் என்னால் 4 மாதங்கள் யுத்தம் செய்ய முடியாமல் போய்விட்டது. 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எம்மிடம் போதிய தோட்டக்கள் இல்லாமையினால் நாளொன்றுக்கு ஒரு மல்டி பரல் தாக்குதலை தான் மேற்கொண்டிருந்தோம்.
அதன் பின்னர், பாகிஸ்தான் இராணுவ தளபதியிடம் நான் தனிப்பட்ட ரீதியில் பேசி 60 மில்லியன் டொலர் பெறுமதியான தோட்டக்களை பெற்றுக்கொண்டோம்.

ஆயுதங்கள் இல்லாத யுத்தம்
பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் ஒன்றும் செய்யாமல் மேலே பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பசில் ராஜபக்ஷவுடனும் பேசி 60 மில்லியன் டொலரை பெற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் எனக்கிருந்த நட்பை பயன்படுத்திதான் தோட்டாக்களை வரவழைத்து போதிய ஆயுதங்கள் இல்லாத ஆறு மாதகால யுத்தத்தை நாம் நடத்தியிருந்தோம்.

அந்தவகையில் தற்போது யுத்தவெற்றிக்கான கௌரவத்தை உரிமைக் கோருபவர்களுக்கு இந்த விடயங்களெல்லாம் மறந்து போய்விட்டன.

2005ஆம் ஆண்டு மற்றும் 2010, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களைப் பொருத்தவரையில், 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களானது மிகவும் மோசடிமிக்கதாகவே நடைபெற்றிருந்தன.

பிரபாகரனுக்கு கப்பம்
தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவினால் பிரபாகரனுக்கு 2 மில்லியன் டொலர் கப்பம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு இருந்த அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இது பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்.

அத்துடன் கடற்புலிகளுக்குத் தேவையான படகுகளை மலேசியாவிலிருந்து வாங்குவதற்கு 2 மில்லியன் டொலர்களை தருவதாக பிரபாரகனுக்கு கூறியிருந்ததாகவும் அதன் பசில் ராஜபக்ஷவே மலேசியாசென்று வழங்கிருந்தார் என்றும் அமைச்சர் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, அச் சந்தர்ப்பத்தில் மலையக அரசியல்வாதிகள் இருவர் அங்கிருந்ததாகவும், மலையக மக்களை வாக்களிப்பதற்கு இடமளிக்கவேண்டாமென, பிரபாகரன் அவ்விருவரிடமும் கேட்டுக்கொண்டதாக பசில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார்.

ஆகவே, கூறுபவற்றை பார்த்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்க செயற்பட்டிருந்தால் அது மரணதண்டனைக்குரிய குற்றமாகும். அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளிலேயே அப்போதிருந்த பிரபல அரசியல் வாதிகள் ஈடுபட்டிருந்தனர். அது பற்றி தேடிப்பார்ப்பதற்கு காலங்கள் கடந்துவிடவில்லை.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலும் மிகவும் மோசடிமிக்கதாகும். வாக்கெண்ணும் ஆறு நிலையங்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தேர்தல் பெறுபேறுகள் திருத்தி எழுதப்பட்டு வெளியிடுமாறு கூறப்பட்டது. இதனால் அப்போதிருந்து தேர்தல் ஆணையாளருக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது.

கடைக்கு கூட வருவதில்லை
அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, 2005 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இரு தேர்தல்களிலும் தோல்விகண்டிருப்பார்.
இறுதியில் 2015 ஆம் ஆண்டிலும் ஆசையில் போட்டியிட்டார். எனினும், அதில் மோசடிகளை மேற்கொள்ள முடியாமல்போய்விட்டது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இருந்தபடியால் வாக்கெண்ணும் நிலையங்கள்மீது தாக்குதல்களை நடத்த முடியாமல்போனது.

இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் போரை நான் வழிநடத்தியிருந்தேன். யுத்தம் நிறைவடைய இரண்டு மாதங்கள் இருக்கையில் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீண்டகாலமாக 24 மணிநேரம் யுத்தம்செய்து நீங்கள் களைப்படைந்து இருப்பீர்கள்.

ஆகையால், அடுத்தநிலையிலுள்ள இராணுவ அதிகாரிக்கு எஞ்சியிருக்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு கூறினார். அந்த இராணுவ அதிகாரி அப்போது வவுனியாவில் பதுங்கு குழிகளின் நிலைகளுக்கு பொறுப்பாக இருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில், உண்மையில் யுத்தத்தை கொண்டுநடத்துவதற்கு பெரிதாக ஒன்றும் எஞ்ஞியிருக்கவில்லை. என்னை அகற்றிவிட்டு யுத்தத்தை கொண்டுநடத்தி, தான்தான் யுத்தத்தை வெற்றிக்கொண்டேன் என்ற கௌரவத்தை சம்பாதித்துக்கொள்வதற்காக இதை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.

பிரபாகரன் உயிருடன் இருந்தார்

மே 19 ஆம் திகதி யுத்தம் முடிந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தனர். அப்போதும்கூட யுத்தம் முடிவடைந்திருக்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனினும், நாடாளுமன்ற நிகழ்வு முடிவடைந்து நான் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. யுத்த வெற்றக்கான கௌரவத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் இவர்கள் யுத்தம் முடிவடைந்த திகதியைகூட அறிந்துவைத்திருக்கவில்லை.
வெளிநாடு செல்வதற்கான பயணத்தை ஐந்துதடவைகள் பிற்போட்டு, ஆறாவது தடவையாகவே சென்றிருந்தேன். இவ்வாறான நிலையில், கடைசிவாரத்தில் இராணுவத்தளபதி நாட்டில் இருக்கவில்லை என்றும், தாங்கள் யுத்தத்தை வழிநடத்தினர் என்றும் கூச்சலிடுகின்றனர்.

கீழ்த்தரமான நடவடிக்கை

கடைசி ஒருவார காலப்பகுதியினுள் இவர்கள் செய்த கீழ்தரமான நடவடிக்கைகளினால்தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வளவுகாலமும் மிகவும் தூய்மையாக மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த நடவடிக்கைகள் இவர்களது ஒருவார கால நடத்தைகளினால் பாலில் ஒருதுளி விஷம் விழுந்ததுபோல் இருந்து. இறுதி காலத்தில் நற்பெயரை களங்கம் ஏற்படுத்திவிட்டனர்.

ஆகவே, இவ்வாறு யுத்தநிறைவின் இறுதிநாட்கள்கூட தெரியாமல் புத்தம் எழுதினர். எவ்வாறிருப்பினும் யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கூடியவிரைவில் நாம் மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.
சிலர் நல்லாட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் விசாரணை நடந்தால் அது நாட்டின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு என்றும் பிரச்சினை கிளப்பிவருகின்றனர். எனினும், யுத்தத்தை வழிநடத்தியவன் என்ற வகையில் கட்டாயம் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதற்கும், அதை எமக்கும் பலமாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், யுத்தத்தை வழிநடத்தியன் என்ற வகையில் ஜெனிவா சாசனங்களையும், மனித உரிமைகளையும் மதித்தே யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவற்றை யாரும் ஒருசிலர் மீறியிருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும். இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதேநேரம், வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் எனக்கும்கூட மூன்றுவருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த விடயம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், இது பற்றி உண்மை. மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

இதேநேரம், கடந்த காலங்களில் பேசப்பட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களும் இருக்கின்றன. தாஜுடீன், ரவிராஜ், எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க போன்றை கொலைகள் தொடர்பில் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்த அனைத்து கொலைகளையும் செய்தது ஒரு நபர், ஒரு குழு தான். அவ்வற்றின் பின்னணியில் இருந்ததும் ஒரு அணியினர் தான். அந்த காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த தரப்பினர் தான் அவற்றின் பின்னணியில் இருந்தனர். தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </


மார்ச் 09, 2016

முக்கிய அமைச்சர் தமிழ்வாணி விடுதலையின் பின்னணியில்!

பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சாட்சிமளித்தவர்களில் முக்கியமானவர் என 
சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினர், தமிழ் வாணியை கைது செய்திருந்தனர்.
தமிழ்வாணியை விடுதலை செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்ததன் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் 
செயற்பட்டுள்ளார்.
அப்போதைய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய தமிழ்வாணி விடுதலை 
செய்யப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழ்வாணி, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு அபராதப் பணத் தொகையை செலுத்தி நாட்டை விட்டு வெளியேற இந்த அமைச்சர் 
உதவியுள்ளார்.
தமிழ் வாணியை விடுதலை செய்வது குறித்து இராணுவத்தின் கருத்து கோரப்படவில்லை.
இறுதிக்கட்ட போரின் போது தமிழ்வாணி புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும், சிவிலியன்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் போது அவரை இராணுவத்தினர் கைது செய்தனர் எனவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ்வாணியை விடுதலை செய்ய உதவிய மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரின் பெயரை ஊடகம் குறிப்பிடவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 07, 2016

உறுமி மேளம்கொட்டு ஐநா நோக்கிய பயணத்திற்காண காணொளி!

எமது நெஞ்சத்துடிப்பு தாய்மண்,அதன் மூச்சாக மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்கா,
ஐனா நேக்கிய பயணம் முடிவில்லா, பயணமாகிறது, காலத்தின் தேவை கடைசித் தமிழ் மகனும் போராட வேண்டியுள்ளது, ஆண்டு நிற்கும் அரசில் வாதிகளில் அரசியல் அட்டகாசம் எம்மை ஆளாத்துயரத்தில் ஆழ்தி ஐனா வாசலை தேடவைக்கிறது,
நிண்டு தொடருமா..? எம் இனத்தக்கு நின்மதிகிடைக்குமா…? மாண்ட எம்மின தாகம் தீருமா…?மீண்டும் ஒர்முறை எம் உரிமைக்கு நீதி தேடி ஐநா நோக்கிய பயணத்திற்காக எழுச்சிப்பாடல் இணைக்கிறது சேகர் இசையில் ஈழப்பிரியனின் வரிகளில், சந்திரமோகன் ,கரோலினின் குரலில் தாஜியின் காட்சியமைப்பில் ,இணுவையூர் மயூரனின் காட்சி ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட ...
ஐநாவின் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைப்வோம் 
அணிதிரண்டு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 02, 2016

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் செல் குண்டுகள் மீட்பு

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றிலிருந்து, 60 மில்லிமீற்றர் ரக இரண்டு மோட்டார் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர், செவ்வாய்க்கிழமையன்று (01) அக்காணியைத் துப்பரவு செய்யும் போதே, மண்ணில் புதையுண்டிருந்த மேற்படி குண்டுகளை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டடை அடுத்து, பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்ற நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசோட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இந்த குண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>