18

siruppiddy

ஜூன் 27, 2017

வடமாகாண சபையில்மீண்டும் சர்ச்சை? இரு அமைச்சர்கள் முரண்படும்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஏற்படுத்தப்படும் புதிய ஆணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என வடமாகாண சபை அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர். Asian Tribune ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடமாகாண முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக 
கூறப்படுகிறது.
ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் உள்ளடங்கிய இந்த குழு ஒருமாதக் காலத்தில் தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறான குழு ஒன்றின் நியமனம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என குறித்த இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறான குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழும் இல்லை.
மாகாணசபையின் செயற்குழுவுக்கே இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, சட்டவிரோதமான எந்த விசாரணைக் குழுவிலும் முன்னிலையாகப்போவதில்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>