18

siruppiddy

டிசம்பர் 27, 2018

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட உடன்படிக்கை ஊடானது’ என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை 
குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுக்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.அந்த வரிசையில் இறுதியாக உயிரிழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம்
. அதற்கு முன்னர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை.
அதற்கு முன்னர் யாழ்.மாநகர சபை முதல்வர் சிவபாலன். அதற்கு முன்னர் சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள்.அதனால், தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க வேண்டும் எனில் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கைக்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்நிலையில், எல்லா கட்சிகளையும் சேர்த்து ஜனநாயக குரலாக இருப்போம் எனும் உத்தரவாதம் அளிக்க வேண்டி இருந்தது. அதேபோன்
று புலிகளுக்கும் ஒரு தேவை இருந்தது.தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இருந்தார்கள். அதனை சர்வதேசம் ஏற்க தயாராக இருக்கவில்லை. அதனால் புலிகளுக்கு மக்களிடம் ஒரு ஆணை பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க வேண்டும் என கோரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.அதன் பின்னரே விடுதலைப்புலிகளை சர்வதேச 
சமூகம் அங்கீகரித்தது.
கட்சிகளுக்குள் தாங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும், எவ்வாறு இயங்க வேண்டும், அதன் இயங்கு தளம் என்ன? அதன் செல்நெறி பற்றிய எந்த உடன்பாடும் அங்கு இருக்கவில்லை’ எனவும் 
அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


டிசம்பர் 22, 2018

தடம் பதிக்கும் தமிழர் தலைநகரில் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாமினை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.திருகோணமலையில்
 நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முகாமினை, அமெரிக்க இராணுவ முகாமில் கடற்படை தளவாட மத்திய நிலையமாக பயன்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் தகவல் தொடர்பு அதிகாரி கிராண்ட் கிரேஸ் என்பவரை அடிப்படையாக கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முகாமினை 
அமைக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த ஒகஸ்ட் மாதம் என்கரோஜ் என்ற அமெரிக்க கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையத்தின் ஊடாக இந்திய கடல் எல்லையில் நிறுத்தப்படும் அமெரிக்க கப்பல்களுக்கு தேவையான சேவை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.எனினும், இவ்வாறான
 நிலையம் ஒன்று ஒரு போதும் இந்திய எல்லையில் இதற்கு முன்னர் நிர்மாணிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


டிசம்பர் 03, 2018

களுவாஞ்சிக்குடியில் யுவதியை கடத்திய இளைஞர் குழு

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு
 முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல 
முயன்றுள்ளனர்.
எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மைத்திரி நாட்டிலுள்ள பரபரப்பின் மத்தியில் பசிலைச் சந்தித்தார்

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்‌ஷவும் நேற்றிரவு சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
நாட்டில் தொடரும் அரசியல் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது
பசில் ராஜபக்‌ஷ, நல்லாட்சி அரசாங்க காலத்துக்கு
 முந்திய அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் விசாரணைகள் பலவற்றுக்கு சென்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பொலிஸ் அதிகாரி அதிரடஎன் தந்தை தமிழன் என்பதில் எனக்குப் பெருமை

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன
 பெர­முன கட்­சியின் உறுப்­பினரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
நிஷாந்த டி சில்வா தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் மனிதத் தன்­மையை மதிக்­கி­ன்றேன் ஒரு­வரின் இனத்தை அல்ல எனத் தெரிவித்ததோடு, எனது கட­மையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனைவரும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்றேன்.
அத்துடன் “எனது தந்தை, எனது தாத்தா என
 எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவரையும் நினைத்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எனது கடமை தொடர்பில் பலர் கோப­ம­டை­கின்­றார்கள். அது குறித்து நான் எதுவிதமான் ஐயமும் கொள்ளவில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனது பிறப்பு சான்­றி­தழில் எனக்கு சிங்­க­ளவர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நான் மனித இனத்­திற்கே உரி­மை­யா­கின்றேன். சிங்­களம், தமிழ், முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்னர்
 அனை­வரும் மனி­த­னாக 
இருப்போம். அத்­துடன் நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மன­ச்சாட்­சிக்கு
 உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்­திற்­க­மை­யவும் செயற்­ப­டு­கிறேன். இனி­மேலும் அப்­படித் தான் செயற்­ப­டுவேன். எனத் தெரிவித்துள்ளார்.