18

siruppiddy

செவ்வாய், 4 ஜூன், 2019

எப்போதும் ஆண் என்பவன் வாழ்க்கையில்…

என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.உடல் ரீதியாக
 இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக 
கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும் 
மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை 
மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம். ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல தான் பெண்ணின்றி ஆணும் முழுமை
 பெறுவதில்லை
. பெண்களின் கனவுகளை வளர்க்க ஆண் வியர்வை சிந்துகிறான், தகப்பனாக தொடங்கி கணவனாக முடிவு வரை.
தோள் கொடுக்கும் தோழன்: பெண்கள் துவண்டு போகும் ஒவ்வொரு தருணத்திலும் அவளை மீட்டெடுப்பவன் ஆண் தான். தகப்பனாக, சகோதரனாக, தோழனாக, காதலனாக ஓர் ஆண்
 பெண்ணுக்கு எப்போதுமே உறுதுணையாக தான் இருக்கிறான்.எத்தனை பணம் கொடுத்தாலும் பெண்ணுக்கு ஓர் நல்ல தோழன் கிடைப்பது என்பது வரம் போன்றது. எந்த ஒரு பெண்ணும் தனக்கு
 அமைந்த அந்த தோழமையை இழக்க விரும்புவதில்லை. அந்த சூழலை எந்த உண்மையான தோழனும் ஏற்படுத்துவதில்லை.ஒரு பெண் வலுவிழந்து காணப்படும் போது, அவளை பற்றி அவளுக்கே
 எடுத்துக் காட்டி, அவளை நல்வழி படுத்தும் ஓர் நல்ல வழிகாட்டியாக இருப்பது பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தான். அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு உறவின் பரிமாணத்தில் 
ஆண் துணையாக வந்து செல்கிறான்.பெருமிதம் கொள்வோம்… ஆண் மகனாக பிறந்தமைக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை. 
வாழ்வோம் நட்பூக்களே.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 18 மே, 2019

ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக 762 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 
வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில்
 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் 
சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைகைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 13 மே, 2019

ஊரடங்குச் சட்டம் வடமேல் மாகாணம் முழுவதும் அமுலில்

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 
குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
 பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 30 ஏப்ரல், 2019

யாழில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு

யாழ்.சாவகச்சோிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்கள் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போ் காயமடைந்துள்ளனா்.
சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (29.04.19) உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்
. குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 27வயதுடைய கனகரத்தினம் கௌதமன் மற்றும் 28 வயதுடை
ய பரராசசிங்கம் கோபிநாத் ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர். அதில், கௌதமன் வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும், யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


விடத்தல்தீவில் பாரிய தேடுதல்…!! வீடு வீடாகச் சோதனை

அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை 
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.விடத்தல் தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை டெட்டனேட்டர்களுடன் 4பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையிலேயே முப்படையினர் இணைந்து குறித்த 
சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக 
சோதனையிட்டதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்
டனர். மன்னார் பிரதான பாலத்தினூடாக உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, 
மக்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர் இராணுவத்தினரினால், அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 8 ஏப்ரல், 2019

பயங்கர மோதல் ஓமந்தையில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓமந்தை, சின்னப்புதுக்குள வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் 
ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  
இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு, முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டோர் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் 
கைப்பற்றியுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 23 மார்ச், 2019

நள்ளிரவில் நடந்த தேடுதலில் வடக்கின் முக்கிய பிரதேசத்தில் பெரும் புதையல்

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் 
கைதாகியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேகநபர்களே நேற்று இரவு புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சந்தேகநபர்கள் நால்வரும்
 காஞ்சிராமோட்டை காட்டு பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் 
தோண்டியுள்ளனர்.அவற்றை சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி செல்ல முற்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் 
இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குளம் பொலிஸார் 
அவர்களை கைது செய்து, புதையல் பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் 35, 35, 40, 42 வயதுகளை உடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி போன்ற இடங்களை சேர்ந்த 
நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது புராதன கால புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும்
 மலையாள மாந்திரிக புத்தகங்கள் என்பன கிடைத்துள்ளன.  சந்தேகநபர்கள் விசாரணைகளின்
 பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  அத்துடன் புதையல் பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>