18

siruppiddy

பிப்ரவரி 27, 2019

நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடைபெறும் சாத்தியம்

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன.
இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் என பலரும் தேர்தலை நடாத்த வேண்டுமென கோரி வருகின்ற போதும், தேர்தல் நடாத்தப்படாமல் இழுபட்டுக் 
கொண்டே செல்கின்றது.
இவ்வாறானதொரு நிலைமையிலையே அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாண சனபை முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்தாவிட்டால்  மாகாண சபை முறைமை எதற்காக என்றும் அதற்கான தேர்தலை தொடர்ந்தும் நடாத்தாவிட்டால் அந்த முறைமையையே நீக்கலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு மாகாண சபைக்கான தோர்தல் நடாத்தப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்த ஆண்டுக்குள் மாகாண சனபைக்கான தேர்தல் நடாத்தப்படாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும், இந்தப் பதவியில் இருந்தே தான் விலத்தப் போவதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளரான மகிந்த தேசப்பிரிய அண்மையில்
 தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிய வருகின்றது. ஆனால், அவ்வாறு உடனடியாக தேர்தலை நடாத்துவதற்குரிய சாத்தியங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில், தேர்தலை நடாத்துவதாயின் ஆகக் குறைந்தது 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 
தேவையாக உள்ளது.
ஆதனால், இத் தேர்தல் மே 31 ஆம் திகதியளவனில் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை. இவ்வாறானதொரு நிலையிலையே மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியளவில் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், மாகாணங்களுக்கான இத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியமானது. ஆனால், தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
இதே வேளை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றும் தேர்தலை நடாத்த தயார் என்றும், தேர்தலை சந்திக்க தயார் என்றும் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தாலும், தேர்தல் என்பது நடக்காமலே உள்ளது. ஆகவே, இத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் உறங்குபவர்களை எழுப்ப முடியும், ஆனால், உறங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதென்பது போலவே கருதுவதாக தெரியவருகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிப்ரவரி 26, 2019

படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ட

வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை
 முன்னெடுத்தன.
கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மனு மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீராவிடம்
 கையளிக்கப்பட்டது.
கையெழுத்து போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமாகி பரந்தன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பூநகரி, மன்னார், வவுனியா, நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் சென்று கொழும்புடன் நிறைவடையும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










பிப்ரவரி 24, 2019

யாழில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் தமிழ் இதழியல் மாநாடு

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு இடம்பெறவுள்ளது.இதன்படி, நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக இடம்பெற உள்ளது.பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறையும் உதயன் பத்திரிகையோடு இணைந்து இந்த மாநாட்டை
 ஒழுங்கு செய்துள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர் கோ.இரவீந்திரன் தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இடம்பெற்று வந்த இந்த மாநாடு முதற்தடவையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் தே.
தேவானந்த் தெரிவித்தார்.
இதழியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்வுகளை உள்ளடக்கியதாக மாநாடு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ் இதழியல்துறை சார்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளிலும் இயங்கக்கூடிய ஆய்வாளர்கள், புலமையாளர்கள், இதழியல்துறை மாணவர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஆய்வுகள், அவதானிப்புக்களை முன்வைக்கவுள்ளனர்.
மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் journalismmovement@gmail.com என்கிற மின்னஞ்சல் ஊடாகத் தமது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கம் 
அறிவித்துள்ளது.
பன்னாட்டு இதழியல், அபிவிருத்திக்கான இதழியல், தமிழ் வானொலி, சமூக ஊடகங்கள், தமிழ்த் தொலைக்காட்சி, இதழியல் கல்வி, தொடரறா ஊடகங்கள், தமிழ் வழிக்கல்வி, ஊடகமும் சுற்றுலாத்துறை, தமிழ் இதழியல் வரலாறு ஆகிய விடயப் பரப்புக்களில் கட்டுரைகள்
 முன்வைக்கப்படலாம்.
ஆய்வுச் சுருங்கங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்படும் ஆய்வுகள் மட்டுமே மாநாட்டில் அனுமதிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் தே.தேவானந்த் தெரிவித்தார்.மாநாடு தொடர்பில் மேலதிக விவரங்களை 0773112692 இலக்கத் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 18, 2019

அநு­ரா­த­பு­ரடத்தில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி


அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம பகு­தி­யில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி ரவை­கள் போன்­றன மீட்­கப்­பட்­டுள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம, ஜெய­சிங்க பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை 4மணி­ய­ள­வில் மாந­க­ர­ச­பை­யி­ன­ரால் வீதி­யோ­ரங்­களை
 துப்­ப­ரவு செய்­த­போது, வீதி­யோ­ரத்­தி­லுள்ள வடி­கா­னில் பை ஒன்­றில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் 46 துப்­பாக்கி ரவை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
துப்­ப­ரவு செய்த மாந­க­ர­ச­பை­யி­னர் இது குறித்து பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­ய­தை­ய­டுத்து அநு­ரா­த­பு­ரம் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று உட­மை­களை மீட்­ட­னர்.
இவ்­வாறு மீட்­கப்­பட்ட துப்­பாக்கி ரவை­கள் எம்.பி.எம்.ஜி துப்­பாக்­கி­யி­னு­டை­ய­தெ­ன­வும், விடு­த­லைப் புலி­க­ளின் சின்­ன­து­ட­னான தொப்பி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­த­னர். மீட்­கப்­பட்ட ரவை­க­ளும், தொப்­பி­யும் புதி­தாக இருப்­ப­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.


பிப்ரவரி 15, 2019

யாழில் நுண்கடனால் அவதியுறும் .பெண்களுக்கு தீர்வு:

நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காகவே இப்புதிய நுண்கடன் சட்டத்தனை அறிமுகம் செய்யவுள்ளோம்.
மேலும், நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் மக்கள் இணைந்துக் 
கொள்வது சிறந்ததாகும்.
இந்த திட்டத்தில் மக்களுக்கென விசேட சலுகைகள் காணப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளோம்.
இதனால் எந்ததொரு வங்கியாவது சலுகையை வழங்க மறுத்தால், 1925 என்னும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமக்கு தெரிவிக்க முடியும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு நோக்கி திருப்பிய பார்வை

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் . வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது . இதன் போதே ஜனாதிபதி 
இவற்றை கூறினார் , “
விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட வடக்கு மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படின் வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் .
சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள் “ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார் .
வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிதண்ணீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது . முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய கால்வாய்த்திட்டம் , நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள . ‚ யாழ்ப்பாணத்திற்கு நீர் ‚ செயற்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
அத்தோடு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் ‚ எல்லங்கா ‚ குளக் கட்டமைப்பு அபிவிருத்தி – செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் “ இதன்போது கலந்துரையாடப்பட்டது .
மேலும் இந்த கலந்துரையாடலில் மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும் மற்றும் அவ் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க , வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிப்ரவரி 11, 2019

பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக வடக்கில் நடத்த ஏற்பாடுகள்

வடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள சிறி போதிதக்‌ஷணாராமய விகாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன
வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், விகாராதிபதியுமான சியம்பலாகஸ்வௌ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என்று வட மாகாண
 ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.வட மாகாணத்திலும் பார்வை பட தொடங்குகிறது. நம் உரிமைகளை பற்றிப்பிடிப்போம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மானிப்பாயில் கூடடத்தில் விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம்

மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன. எனினும் யுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது.
இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டது
இதனால் வன்முறை கலாசாரம் கட்டவிழுத்துவிடப்பட்டது. தமிழ் இளைஞர், யுவதிகளின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய வன்முறைக் கலாசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்கும் வகையிலேயே அன்றைய நிர்வாகம் குறித்து நான் பேசியிருந்தேன். யுத்தத்தில் பேரிழப்புக்களைச் சந்தித்த மக்கள் இனியும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது
நான் ஒரு தாயாக, இந்த நாட்டின் பிரஜையாக, பாராளுமன்ற உறுப்பினராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குற்றங்களற்ற சூழலையும், சமாதானத்தையும், இன ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு உறுதியுடன் செயற்படகிறேன்.
வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேணடும்.இதுதொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருப்பது பற்றி நான் மிகவும்
 கவலையடைகிறேன்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்களே அன்று 02.07.2018 நான் அவ்வாறு உரையாற்ற மூலகாரணமாகியது. றெஜினா என்ற 
ஆறு வயது சிறுமியை கடத்திச்சென்று, சித்திரவதைப்படுத்தி, வன்புணர்வுக்கு ஆளாக்கினர். எனது உரைநிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இரண்டு பேர் வீட்டின் கூரைவழியே உட்சென்று பெண்ஒருவரை அவரது கணவன் முன்னிலையில் வன்புணர்வு செய்தனர்.
மானிப்பாய் எனுமிடத்தில் வயோதிபப்பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியில் வாழ்ந்த பெண்ணின் வீட்டினுள் பலர் உட்புகுந்து கொள்ளையடித்தனர். இவ்வாறான சம்பவங்களால் நான் உணர்ச்சி 
வசப்பட்டிருந்தேன்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் எனது மன அமைதியை இல்லாமற் செய்துவிட்டன. எனவே, அதிகரித்துவரும் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க பயனுறுதிமிக்க கடும் நடவடி
க்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றம் புரிந்தோருக்கு எதிராக புலிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதுபற்றியே அன்று எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும், நான் எப்போதும் சமூகங்களுக்கிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஆதரித்துவருகிறேன்.எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை க்கும், புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென ஆதரித்து பேசியதாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டமைக்கும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.” என்றும் அவர்
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிப்ரவரி 09, 2019

இந்தியாவும் துணை நின்றது! விடுதலைப் புலிகளை அழிக்க மஹிந்த பரிந்துரை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் 
அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
“இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.
ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை 
பயன்படுத்துவதும் அவசியம்.
தங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது.
1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை
 கொலை சய்தனர்.
அது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி
 முன்னேறவேண்டும்.
1980 மற்றும் 2014 இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.
உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.
2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன. அரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம். இந்திய இலங்கை உறவுகளிற்கான எனது
 பரிந்துரை இதுதான்.
ஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்.” என்றார் மஹிந்த.

இதேவேளை பெங்களூரு சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை கு
றிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>