18

siruppiddy

அக்டோபர் 22, 2020

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு 21-10-20.புதன்கிழமை
 அன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடுகடந்த
 தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.இந்த வழக்கானதுதிறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணை போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை
 எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த 
தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.இதனை 
பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை 
முன்னெடுத்திருந்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 21, 2020

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு 
வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என ஈழத்தமிழரசு சார்பில் 
வாதிடப்பட்டது.
அந்தவகையில், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தவறானது என இன்று(21) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>










செப்டம்பர் 22, 2020

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் ஒளி பிரிவு

 

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் ஒளி கதிர் பிரிவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (ஆர்பாட்ட ம் ) போராட்டத்தால் ஒளி கதிர் சிகிச்சை பெறமுடியாத அபயா  நிலை உள்ளதாக 
புற்றுநோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கும்   நிலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒளி கதிர் பிரிவு  சிறந்தது   இயங்க  உதவி அரசாங்கசபைபனிமனை  (பிரதச சபை)  கிராமசேவகர் பிரிவும்
 இணைத்து இதற்க்கு ஓர் 
நடவடிக்கைஎடுக்குமாறு மிகத்தாழ்மையுடன்
 வேண்டிநிற்கின்றோம்  நன்றி 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


செப்டம்பர் 20, 2020

நார்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெம் .ராஜீவ் கொலை வழக்குபற்றி கூறியுள்ளார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும்
 அவர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ 
அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்கள் என்று எரிக் சொல்ஹெம் கூறியிருந்தார்.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஜூலை 29, 2020

எழுவர் விடுதலை,! ஒரு வாரத்தில் பதில் தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு


எழுவர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.
அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளனுக்கும் கொரோனா
தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர  முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்
வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் ? எனவே இது குறித்தும், பேரறிவாளன் பரோல் தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
தெரிவித்தனர்.



ஜூலை 11, 2020

இராணுவத்தின் அலுவலகம் வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட 
உள்ளனர்.
பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.
இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினர், கிராம சேவகர் அலுவலகத்துடன் இணைந்து கடமையாற்றுவார்கள்.
அதேவேளை காங்கேசன்துறை கடற்படை 
முகாமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி இசுரு தேவப்பிரிய, கடற்படையினருக்கு கொரோனா வைரசுடன்
 மாத்திரமல்லாது போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 350 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றியதாகவும் 
அவர் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


ஜூலை 09, 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கம்பஹாவில்
 கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது  
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


யாழ் நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு 
அஞ்சலி செலுத்தினர்
>>>>>>>>>>>>>>>
யாழ் நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று
>>>>>
யாழ் நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை 
படுகொலை செய்தது.
இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>



கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப் சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதவிகளை வழங்கி வருகின்றனர் .


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்த தொழில் செய்பவர்களில் தொழில் பாதிப்புக்குள்ளானவர்களில் தெரிவு

 செய்யப்பட்டவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தொழில் பாதிப்புக்குள்ளான விசேட தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் உதவியின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவிகளை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ் பாபு, உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உளவள துறை பிரிவு

உத்தியோகத்தர் விக்னேஸ்வரி பிரதீபன், விவசாய பிரிவு உத்தியோகத்தர்கள், கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் மாவட்ட பொருளாளர் எம்.ஷிராணி, சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜெகதேவன் ஜெரோன் ஆகியோர்
கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>

ஜூன் 28, 2020

கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப் படையால் அழிப்பு

மொனராகலை – கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்று
 இன்று (28-06-29) அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த கஞ்சா செடிகள் அதிரடிப் படையால் அழிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூன் 01, 2020

யாழ் நூல் நிலையம் 31.05.1981 அன்று நள்ளிரவு எரிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையான
 பொதுநூலகமாக விளங்கியதும் உலகில் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காத அன்றைய தமிழ்ப் புலமையாளர்கள் சேர்த்து
 உருவாக்கிய தமிழ் மரபையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணம் நூலகம்.

 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளைஅழி என்பார்கள்.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின்
 புலமைச் சொத்தாகக் கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாக்கப்பட்ட சம்பவம்
 வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகக் கருதப்படுகிறது.

1933 இல் அறிவால் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை யாழ் நூலகம் உருவாகக் காரணமாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த யாழ்ப்பாண நீதிமன்றக் காரியதரிசியாக இருந்த k.m செல்லப்பா அவர்கள்.

வணக்கத்திற்குரிய வணபிதா லோக் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டினார்.
கலாநிதி எஸ்.ஆர் ரங்கநாதன், சென்னை
 அரசின் கட்டடக் கலை நிபுணர் கே.எஸ் நரசிம்மன் கட்டக்கலைக்கான வரைபடங்களை வழங்கியிருந்தார்.
1959 இல் யாழ்முதல்வராக இருந்த
 துரையப்பா அவர்களால் யாழ் நூலகம்
 திறந்து வைக்கப்பட்டது.

31.05.1981 அன்று நள்ளிரவு யாழ் நூல் நிலையம் எரிந்து கொண்டிருந்ததை யாழ் புனித சம்பத்தரியார் கல்லூரி மேல்மாடிக்
 கட்டடத்தில் வசித்த வேளை இதனைப்
 பார்த்த பாதிரியார் தாவீது அடிகளார்
 இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில்
 மாரடைப்பால் உயிரிழந்தார்.

9700 நூல்களும்,
ஓலைச்சுவடிகளும் தடுமாறி நிறம் மாறி உருச்சிதைந்தன.
1660 இல் Robert கினொக்ஸ் எழுதிய
History of ceylon,
யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம்,
தமிழில் முதன்முதலில் வந்த இலக்கியக்
 கலைக் களஞ்சியமான அபிதானகோசம்.
 ,சித்த வைத்தியம் பற்றிய ஓலைச்சுவடிகள்
 அனைத்தும் அன்று கருகிச் சாம்பலாகின.

1994 இல் மீளக்கட்டியெழுப்பும் திட்டம் மங்கள சமரவின் வெள்ளைத்தாமரை
 அமைப்பால் Book & Brick
என்ற தலைப்போடு அதே இடத்தில் கட்டப்பட்டது.

தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிய நாள்.மறக்க முடியாத வடு. எத்தனையோ பேரின்
 சிந்தனைக்கு அறிவூட்டிய அறிவுச்சிகரம்
 சிதைந்து போனதே யாழ்ப்பாண நூலகத்தின் கதையாகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



 

மே 30, 2020

குழந்தையை எட்டு மாதக் கருவில் சுமக்கும் கணவன்..வயிற்றை முத்தமிடும் மனைவி

குழந்தையை கருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வயிற்றை முத்தமிடும் .இந்த வித்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்.
இருந்தாலும், இவர்கள் இன்றளவும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க
 உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.எட்டு மாத கர்ப்பமாக 
இருக்கும் Esteban-க்கு ஒரு நாள் திடீரென இடுப்பு வலி வர, உடனே தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக எண்ணி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு
 ஓடியிருக்கிறார்.
ஆனால், எட்டு மாத கர்ப்பகாலத்தில் இதெல்லாம் சகஜம், இது போலி இடுப்பு வலி என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் மருத்துவர்கள்.தங்களுக்கு குழந்தை பிறந்தால் Ariel என்று பெயர் வைக்கப்போவதாக சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார்கள் இந்த வித்தியாசமான தம்பதியர்கள். .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் 
பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு 
அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்
 ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய சிலர் அந்த பகுதியில் இலங்கை படையினர் நடத்திய தேடுதலில் இருந்து தப்பித்து யாழ்ப்பாணத்தை ஒட்டிய பிரதேசத்தில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பிற்கு சந்தேகம் உள்ளதாக தெரியவருகிறது.
அதையொட்டி யாழ்ப்பாணத்தில் சில சமயத்தில் எந்நேரத்திலும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை 
இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் .
இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 25, 2020

மருதனார்மடத்தில் விடுதியில் இராணுவ சுற்றி வளைப்பில் 41 இளைஞர்கள் கைது

.02.2029
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் இன்று (24) இரவு சற்றுமுன் சுற்றி வளைக்கப்பட்டு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் இராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 23, 2020

சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை 4 பேரும்(22.02.20= அன்றறைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிப்ரவரி 22, 2020

ஊழியர்கள் மீது அச்சுறுத்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த குழு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற
 நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக தெரியவருவதாவது, அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்தியவர் 
படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தபோதும் நேற்று இரவு சிகிச்சை பயனின்றி
 உயிரிழந்தார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் 
ஒருவர் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு 
வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், 
தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவரை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.சம்பவம்
 தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதும் பொலிஸார் அங்கு செல்லும்போது அடாவடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரை கைது
 செய்துள்ளனர்.இது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கைதானவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜனவரி 13, 2020

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய தைப்பொங்கல் தின விழா இரத்து

நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து மாவட்­டங்­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசிய பொங்கல் தின விழா இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. தேவை­யற்ற
 செல­வு­களை 
குறைக்கும் பட்­சத்தில் மூன்று மாவட்­டங்­களில் உள்ள தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­ள­டக்­கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்­வினை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் 
குறிப்­பிடும் போது;
தேசிய நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டு கடந்த அர­சாங்கம் மூன்று இனத்­த­வர்­களின் பிர­தான பண்­டி­கை­க­ளுக்கு 25 மாவட்­டங்­க­ளிலும் உள்ள இளைஞர், யுவ­தி­களை ஒன்­றி­ணைத்து தேசிய நிகழ்­வாக அந்த பண்­டி­கை­யினை கொண்­டா­டி­யது. இதனால் எவ்­வித 
பயனும், மாற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை மாறாக
 வீண் செல­வுகள் மாத்­தி­ரமே மிகு­தி­யா­கின. உல­கவாழ் இந்­துக்கள் நாளை மறு­தினம் தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டா­ட­வுள்­ளார்கள். இதனை தேசிய நிகழ்­வாக கடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட விதத்தில் கொண்­டாட அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதா
 என்ற கேள்வி எழு­கின்­றது.
25 மாவட்ட இளை­ஞர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டாட தீர்­மா­னிக்­க­வில்லை. இதனால் பாரிய செல­வுகள் ஏற்­ப­டு­கின்­றன. அதனால், வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் உள்ள 
இளை­ஞர்­களை
 ஒன்­று­ப­டுத்தி பொங்கல் தின நிகழ்­வினை கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­கழ்­விற்கு செல­வாகும் நிதியினை ஒவ்­வொரு இளைஞர் கழக அபிவிருத்திக்கும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனி 
இடம்பெறவுள்ள அனைத்து பண்டிகைகளிலும் இம்முறைமையினைக் கையாள்வோம் எனவும் இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க மேலும் தெரிவித்துள்ளார் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெடிகுண்டால் ஜேர்மனியில் 14,000 பொதுமக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளினால் பாவிக்கபட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்கப்பட்டன.
ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்றபட்டனர்
 .இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது 
.குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல் இழக்க செய்தனர்.75 ஆண்டுகளின் பின் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளனவாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஜனவரி 08, 2020

சேனரத்புரத்தில் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்ற மாணவிகளுடன் பாலியல் சில்மிஷம் செய்த மருத்துவர்

அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த
 குற்றச்சாட்டில் உஹன பொலிசாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்து
கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் சக மாணவர்களிடம் தெரிவித்த பின்னர் வகுப்பாசிரியரின் கவனத்திற்கு 
கொண்டு சென்றனர். இதனை அடுத்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவது எனும் போர்வையில், துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்ட வைத்தியர் கைது செய்யப்பட்டதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 18, 17, 14 வயதுடைய 04 சிறுமிகள் முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிசார் உடனடியாக மருத்துவரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்த 
நிலையில், குறித்த மருத்துவரை அம்பாறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கைது
 செய்யப்பட்ட மருத்துவரை எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் ஒன்று கூடியமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வைத்திய பரிசோதனைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 05, 2020

மர்ம நபர் பாரிஸ் மாநகரில் மேற்கொண்ட வெறியாட்டம் இருவர் ஆபத்தான நிலையில்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேர் இரையாகியுள்ளனர்.குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
 இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய பகுதியிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள Villejuif புறநகரில் இந்த இரத்த வெறியாட்டம் நடந்துள்ளது.
குறித்த பூங்காவில் கத்திக் குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு
 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>