18

siruppiddy

செப்டம்பர் 21, 2013

போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி!!!


இரு தரப்புமே வெற்றி பெற வாய்ப்பில்லை : போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி
சிரிய மோதல் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிரியாவின் பல நகரங்களில் அரச படைகளுக்கும் - கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையில் மோதல் இன்னமும் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில், அரச படைகளோ, கிளர்ச்சிப் படைகளோ இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கு போதுமான பலத்தில் இல்லை என சிரிய துணைப் பிரதமர் கத்ரி ஜமில் அறிவித்துள்ளார்.
 
இதையடுத்து ஆயுததாரிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மேற்குலக நாடுகள் யோசித்து வருகின்றன. இதற்கு சிரிய அரசும் இணங்கும் நிலை தோன்றியிருப்பதாக துணைப் பிரதமரின் பேச்சுக்களிலிருந்து அறிமுய முடிகிறது.
  
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து சிரியாவின் பொருளாதாரம் மிகப் பாரதூரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு தரப்புமே வெற்றி வரவாய்ப்பில்லை. மேற்குலகம் இச்சிக்கலில் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர முன்வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை துணைப் பிரதமரின் இக்கோரிக்கையை சிரிய கிளர்ச்சிக் குழு நிராகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக