18

siruppiddy

டிசம்பர் 26, 2014

இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம்!!

மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் 20 வருட தண்டனை விதிக்கலாம்
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவிநீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துதெரிவித்துள்ள சரத்என் சில்வா,ஜனாதிபதி இவ்வாறான போலியான ஆவணமொன்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது 20 வருட கால சிறைத்தண்டனை விதிக்ககூடிய குற்றச்செயல் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கைச்சாத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம் செய்துவரும் ஆவணம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டங்களின் கீழும் இது ஒரு குற்றமாகும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான போலியான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் மூலமாக அவர் மீது இதற்காக குற்றம்சாட்டலாம்.என அவர் குறிப்பிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக