18

siruppiddy

அக்டோபர் 22, 2015

. போர்க்குற்றத்தில் இலங்கை ராணுவம்ஈடுபட்டது உண்மை தான்?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்பது இலங்கை நடத்திய உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கையில் 
தெரியவந்துள்ளது.
இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளும் உண்மைதான் என்றும் இது தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட
 ஜனாதிபதி ஆணைக்
 குழுவான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தற்போதைய அதிபர் சிறிசேனவிடம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களும் பரிந்துரைகளும்: இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி 37 ஆண்டுகால போரின் போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். - இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். - மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும். - போர்க் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை. அதில் தமிழர்கள் படுகொலை
 செய்யப்படும் காட்சிகள் உண்மையானவை. இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்க வேண்டும். வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைந்த போது அவர்களை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்து நீதி 
விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்தின் விசாரணைகள் நம்பகமானதாக இருக்காது. சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரிக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு காணமல் போனோர் குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும்.
  இறுதிப் போரின் போது கடைசி 12 மணிநேரத்தில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்ததற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக
 வைத்திருந்தனர்.
இவர்கள் இலங்கை ராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களில் பலியாகினர்.  ஐ.நா. அறிக்கை கூறுவதைப் போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை. இனப்படுகொலை செய்யும் நோக்கத்தில் இலங்கை ராணுவம் திட்டமிட்டு தாக்குதல்
 நடத்தவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக