18

siruppiddy

ஜூலை 13, 2018

ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராடும் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வாசலில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆசிரியராகக் கடமையாற்றிய குறித்த பெண், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை பெற்றுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஜூலை 11, 2018

மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்களினூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இணைந்ததாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின்...

பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை  பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் 4மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர்...