18

siruppiddy

ஜனவரி 29, 2016

விடுதலைப் புலிகள் யுத்த சூனிய வலயமொன்றை உருவாக்க விரும்பவில்லை!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் விடயம் கட்டுக்கதையென காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களி்ன் எண்ணிக்கை தொடர்பிலான சர்ச்சையை அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் மீண்டும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, அததுவொரு கட்டுக்கதை எனவும் கூறியுள்ளார்.
யுத்த சூனிய வலயமொன்று காணப்படவில்லை எனவும், அவ்வாறான வலயமொன்றை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இணங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், யுத்த சூனிய வலயத்தில் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
விசேட விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்கள் அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
படையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் மெக்ஸ்வெல் பரணகம மேலும் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>ஜனவரி 27, 2016

வெளிநாட்டு தலையீடு யுத்தக் குற்ற விசாரணையில்நிராகரிக்கப்படவில்லை !

ஸ்ரீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளில் வெளிநாட்டின் தலையீட்டை இதுவரை நிராகரிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் பொறுப்புக்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா செயற்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டின் தலையீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் 
கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 22, 2016

நாடு திரும்­பிய ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி கைது

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி சசி­கரன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
நேற்று முன்­தினம் மாலை குறித்த ஊட­க­வி­ய­லாளர் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து அவரை கைது செய்­த­தா­கவும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறி­யமை தொடர்­பி­லேயே 
அவரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஹிக்­க­டுவை பகு­தி­யி­லி­ருந்து சட்ட விரோ­த­மாக படகு மூலம் இவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்­றுள்ளார். இந் நிலை­யி­லேயே அவர் நேற்று முன் தினம் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ளார்.
இதன் போது விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­­ரிகள் புண்­ணி­ய­மூர்த்தி சசி­க­ரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.
சட்ட விரோ­த­மாக சட்ட ரீதி­யி­லான துறை முகம் அல்­லாத ஒரு இடத்­தி­லி­ருந்து வெளி நாடொன்­றுக்கு பய­ணித்­தமை தொடர்பில் 
குடி­வ­ரவு – குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறினார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்யப்பட்ட சசிகரன், நேற்று மாலை நீர்கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 08, 2016

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நோர்வே முழு ஆதரவு!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புடன் செயற்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். மீள்குடியேற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, இதனை நாங்கள் அவதானித்து வருகின்றோம் இவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்தார்.
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட பல்லின கலாசாரமே நாட்டை பலப்படுத்துகின்றது. வடக்கில் அமைதி பேணப்படுவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களது மீள்குடியேற்றம் என்பது இலங்கை அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாகும். இது தொடர்பில் புதிய அரசும் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடலின்போது
 பேசப்பட்டது.
இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க நடவடிக்கைகள் செயற்பாடுகளுக்கு நோர்வே பெரிதும் ஆதரவளிக்கும், வரவேற்கும். இலங்கை தற்போது மிக முக்கியமான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச்
 செல்வதில்
 சர்வதேச சமூகம் உங்களது அரசுடன் வலுவான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது. இலங்கையுடனான நோர்வேயின் ஒத்துழைப்பைப் பொறுத்த வரையில், மீன்பிடித்துறையில் மீட்சிப் பெறுவதையும் அதன் பின்னர் நீரியல் வளங்கள் அபிவிருத்தியையுமே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது பற்றி எங்களது சந்திப்பில் பேசப்பட்டது. இதற்கான ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். அதேபோல், சூரியசக்தி உற்பத்திக்கு இலங்கையில் அதிக சாத்தியங்கள் இருப்பது தொடர்பிலும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
வடக்கில் நிலவும் அமைதி மற்றும் வீடுகள் மீள்நிர்மாணம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இந்தச் சந்திப்பின்போது எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதை நான் பாராட்டுகின்றேன். இந்த விடயங்கள் ஒரு 
வழியில் முன்னோக்கி நகர்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த உத்வேகம் பேணப்பட வேண்டும். இது மிகவும் 
முக்கியத்துவம் கொண்டதாகும். இதேநேரம், இலங்கையில் நேர்வே முதலீடுகளுக்கு அதிக சாத்திப்பாடுகள் இருப்பதையும் நாம் காண்கின்றோம் என்றார்.   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>