18

siruppiddy

செப்டம்பர் 30, 2015

வித்தியா கொலை சந்தேகநபர்கள் தங்களைப் பற்றி தவறாக எழுதும் இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் –

இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த வழக்கு விசாரணையின் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என வினாவிய போது 
சந்தேக நபர்களில் ஒருவர் இணையத்தளங்கள் எங்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடுகின்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதவான் வழக்கின் போக்கினை திசை திருப்பும் விதமான செய்திகள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் அவதூறு செய்திகள் தொடர்பில் பொலிசாரிடம் முறையிடுங்கள் என பதிலளித்தார்.
இதே வேளை வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தப்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள வேளையில் எவ்வாறு இணையத்தளச் செய்திகளைப் பார்வையிடுகின்றார்கள்? அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? அவர்கள் சிறைக்குள் கைத்தொலைபேசிகள் பாவிக்கின்றார்களா? என கடும் சந்தேகம் எழுந்துள்ளதாக 
சட்டத்துறையைச் சேர்ந்த சிலர் சந்தேம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இணையத்தளங்களில் வரும் செய்திகள் தொடர்பாக இவர்கள் தகவல்களைப் பெற்றுள்ளது பெரும் சந்தேகமாக இருப்பதாக அவர்கள்
 தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இன்று நடைபெற்ற வித்தியாவின் வழக்கு விசாரணையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மூக்குகண்ணாடியையும் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவு பிறப்பித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செப்டம்பர் 24, 2015

இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சுமந்திரன்! அவசர பேச்சு?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் 
இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின் 
அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் அரசாங்கத்தரப்பினர் உள்ளுர் விசாரணை உட்பட பல்வேறு கருத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் உத்தேச முதல் வரைபினையும் பகிரங்கமாகவே நிராகரித்ததுடன் ஐ.நா அறிக்கை சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணயாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் என்ற சிபார்சு உள்ளிட்ட பல சொற்றொடர்களை மாற்றியமைக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். ந்நிலையிலேயே மேற்குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்குச் சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் இக்கலந்துரையாடலுக்காக அங்கிருந்து நியூயோர்க்கிற்குச் விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செப்டம்பர் 20, 2015

இராணுவம் பெண் போராளியை சிதைத்து கிடந்த துயரத்தை பார்த்தேன்! ஐ.நாவில் சாட்சி

வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன. அவற்றில் தான் பார்த்தவற்றை கலக்கத்துடன் ஐ.நா மன்றில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்வேறு
 மனித உரிமைகள் 
மீறல்கள் இடம்பெற்றன.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றன.குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என்று கூறும் தமிழ் வாணி, அவை எவையென விளக்குகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செப்டம்பர் 19, 2015

போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிபதிகள் மூலமே விசாரிக்கப்பட வேண்டும்!

எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள 
அவர்-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன. உண்மையை மட்டுமே நான் கூறி வருகிறேன். இலங்கை அரசாங்கம் எமது கருத்துக்களை நிராகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலுவான ஆதாரங்களுடன் அதனை நிரூபித்து வருகிறோம். ஆதாரங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
கடந்த அரசாங்கத்தை விடவும் பல விடயங்களில் புதிய அரசாங்கம் மாறுபட்டுள்ள போதிலும், தமிழர் நிலைமைகள் விவகாரத்தில் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் கிடையாது. மைத்திரி – ரணில் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவும்,
 ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும் தமிழர்களை பொறுத்தமட்டில் மாற்றங்கள் நிகழவில்லை.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள், வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் போன்ற விடயங்களில் மாற்றத்தை காண முடியவில்லை. தமிழ் மக்கள் மீது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சில அதிகாரிகளுக்கு மைத்திரி அரசாங்கம் பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது. அரசாங்கம் உலகிற்கு ஒன்றையும் தமிழ் சமூகத்திற்கு மற்றொன்றையும் கூறி வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதியளித்திருந்தார். மறுபுறத்தில் படையினர் இரத்தம் சிந்தி வென்றெடுத்த நாட்டை பிளவடையச் செய்ய அனுமதியோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென
 தெரிவித்திருந்தார்.
ஹைபிரைட் நீதிமன்றில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு நீதவான்களாகவே இருக்க வேண்டும். முழு அளவில் சுயாதீனமாக விசாரணைக்குழு செயற்பட வேண்டியது அவசியமானது.சர்வதேச அரசியல் நடத்தும் நோக்கில் ஆவணப்படங்களை வெளியிடவில்லை.ஊடகவியலாளர்க என்ற ரீதியில் சரியான நேரத்தில் சரியான விடயங்களை வெளிக்கொணர முயற்சிக்கிறேன்.
எனது ஆவணப்படங்கள் மேற்குலக நாடுகளின் அரசியல் அல்லது பொருளாதார நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானதல்ல.இலங்கை மீது மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆவணப்படங்களை தயாரிக்கவில்லை. நம்பகமான
 பக்கச்சார்பற்ற சர்வதேச நீதவான்களைக் கொண்டு யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 11, 2015

புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு இன்று அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

அவர்களைக் கேட்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார்.

அவர், அமெரிக்கா சென்று, நியூயோர்க் மற்றும் வொசிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார்.

அதன் பின்னர், ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கல்லம் மக்ரே திட்டமிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திடீர் நாடக மன்றத்தின் மாமா மாப்பிளே காணெளி இணைப்பு

நோர்வே கலைஞர்ககள் நோர்வே super ஸ்டார் இணைந்து வழங்கிய நகைச்சுவை நிகழ்வு இதில் ஸ்ரீகாந்த் நல்லையா ,அருள் சதீசன் ,ஆறுமுகம் பிரபா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள் எமது கலைஞர்கள் கலையுலகில் தங்கள் திறமைகளை 
சொந்தப்படைப்புகளிலும், திரைபடங்களில் வெளிவந்த ஆங்கங்களிலும் 
தங்களை இணைத்து கலைவளத்துவருகின்றனர் அந்தவகையில் இந்த திடீர் நாடக மன்றத்தின் மாமா மாப்பிளே உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்வு இவர்கள் பணி சொந்தப்படைப்பாக திகழ வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 09, 2015

போர்க் குற்றவாளியாக ராஜ பக்ஸசவை நிறுத்த கோரி தீக்குளிப்பு!

ராஜ பக்ஸசவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு!
மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை.முடிந்தால் நீங்களும் போராட்டத்தில் 
கலந்து கொள்ளுங்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 05, 2015

அமர்வுகளுக்கு வராத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை???

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபையில் பிரசன்னமாகாத 
உறுப்பினர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும். அவ்வாறு பிரசன்னமாகாத உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கும், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரிடமும் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். எதிர்க்கட்சியின்
 உறுப்பினர்களும் 
பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் மிகவும் பொருத்தமானது. நாட்டை முன்னோக்கி நகர்த்த, நாடாளுமன்றை வலுவானதாக
 மாற்ற வேண்டும். அதற்கு உறுப்பினர்கள் அமர்வுகளில் பிரசன்னமாவது மிகவும் அவசியமானது என பிரதமர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 04, 2015

கன்னி நாடாளுமன்ற உரையை சிங்களத்தில் ஆற்றிய தமிழ் எம்.பி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தனது கன்னி நாடாளுமன்ற உரையை தனிச் 
சிங்களத்தில் நேற்று 
நிகழ்த்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்கு வேலு குமார் எம்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போதே தனது கன்னி உரையை அவர் சிங்கள மொழியில் நிகழ்த்தியுள்ளார். 20 வருடங்களுக்குப் பின்னர் கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 03, 2015

கேபி தலைவர் பிரபாகரன் பற்றி தனக்க்கு தெரியாது என்று கூறியவர் ???

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய செய்திகளுக்கு குறைவில்லை காட்டிக் கொடுத்தவர்களும் இனத்தை அழித்தவர்களும் தற்போது தலைவரின் நாமத்தை தூக்கி பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழின தூரோகிகளில் முன்னிலை வகிக்கும் கருணாவை அடுத்து கேபி எனப்படுபவர் தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். தலைவரின் இருப்பை உறுதிப்படுத்திய அவர் பின் அப்படியே கதையை மாற்றிப்போட்டு தான்தான் தலைவர் என அறிவித்து சில நாட்களிலேயே ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்தார் தற்போது திடீரென  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது என தனது கூற்றையே மறுத்துள்ளார் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி .
பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதனை விடவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமென அவர்
 வலியுறுத்தியுள்ளார்.
குமரன் பத்மநாதன் பிரபாகரனுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் தொடர்பு பேணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரனின் இறப்பு பற்றி துல்லியமாக கூற எவராலும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பிரபாகரனுடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலருடன் தாம் தொடர்பு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொண்டிருந்தபோதிலும் நந்திகடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எவரும் உயிருடன் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என தற்போது கூறுவது சாத்தியப்படாத விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தம் காரணமாக இலங்கையர்கள் பாரியளவில் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தாமே அதிகளவு தொடர்புகளைப் பேணி வந்ததாகவும், தம்மாலேயே பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் இல்லமொன்றை தன்னார்வ அடிப்படையில் 
நடத்திச் செல்வதாகவும் அதற்காக நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக அரசியல் தேவைகளுக்காக தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது என 
அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 02, 2015

சிங்களவர்களுக்கு வடக்கில் வழங்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி நியமனங்கள் ரத்து!

வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் வெற்றிடத்திற்கு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 34வது அமர்வு நேற்று இடம்பெற்ற போதே இது தொடர்பாக அவர் அறிவித்தார்.
கடந்த மாதம் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்குமான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களே அதிகளவில் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக
 361 நியமனத்தில் 332 நியமனங்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக நாம் தேர்தல் ஆணையாளருக்கு விடயத்தை தெரியப்படுத்தி, அப்போது தேர்தல் காலம் என்பதால் தடை செய்திருந்தோம்.
அதற்குப் பின்னர் கடந்த மாதம் 19ம் திகதி 192 பேருக்கு
 மீண்டும் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாம் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கும், அவைத் தலைவர் ஊடாக ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தோம். இதன் பலனாக குறித்த நியமனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்
 ஆகிய மாவட்டங்களில், எந்தவொரு சிங்கள ஊழியர்களும் இல்லாத நிலையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 9 ஊழியர்கள் உள்ளனர். அவர்களும் அந்தப் பகுதியில் உள்ள மக்களை மையப்படுத்தியே உள்ளதுடன், தமிழர் பகுதியில் உள்ளவர்கள் இடமாற்றம்
 பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் இது விவசாயிகளுக்கும், எமக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும் என சபையில் சுட்டிக்காட்டினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>