18

siruppiddy

நவம்பர் 24, 2014

ஒத்தி வைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகள் மீதான தடையின் தீர்ப்பு

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது இந்திய இறையாண்மைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் யோகேஷ் கன்னா தன்னுடைய வாதத்தில்
”விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் அவர்களின் தனி ஈழம் குறித்த கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இத்தகைய பிரச்சாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி தடையை நீட்டிக்க வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.
இறுதிகட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஜி.பி.மிட்டல் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஊசலாடிய 5 தமிழக மீனவ சகோதரர்களின் உயிர் எப்படியோ

காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்! ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ! என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,,,, இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இராஜபக்சே அரசு, தனது சொந்த நாட்டின் குடிமக்கள், சிங்கள இனம் உருவாகுமுன்பே இலங்கையை ஆண்ட வரலாற்றுப் பெருமைக்குரிய மக்கள் தமிழர்கள் என்பதையெல்லாம் “வசதியாக” மறந்தும் மறைத்தும், எம் இனத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, அங்குள்ள தமிழர்களை குண்டு வீசியும் மற்றும் பல்வேறு ஜனநாயக விரோதச் செயல்களினாலும் அழித்தொழித்து, நிரந்தர அவலத்திற்குரிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை தொடர் கதையாக ஆகி வருகிறது.
2009இல் தீவிரவாதத்தை அறவே ஒழித்து, விடுதலைப்புலிகளையே அழித்து விட்டோம் என்று கூறி, அங்குள்ள நம் தாய்மார்களில் 90 ஆயிரம் விதவைகள், பல்லாயிரவர் வீடற்றவர், பல ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையில் அழிக்கப்பட்டவர்கள், எஞ்சியவர்கள் சிங்கள இராணுவத்தின் கொடுங்கோன்மை ஆளுமையின் கீழ் உள்ள முள் வேலிக்குள் அடைக்கப்பட்டவர்கள் என்ற நிலைதான் இருந்தது!
இந்த 5 ஆண்டுகளில் எம் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கு பெரிதாக விடியல் ஏதும் ஏற்படவில்லை. ரூ.1300 கோடி நிதியை இந்திய அரசிடமிருந்து மறுவாழ்வுக்கான பணி - வீடு கட்டித் தருவது - போன்ற சாக்குகளில் பெற்றும்கூட, அதனால் தமிழர்களுக்குப் பயன் கிட்டாது, சிங்களவருக்கே நன்மை ஏற்படும் நிலைதான் உள்ளது என்பது உலக நோக்கர்கள் கருத்து.
சிங்களப் பெயர் மாற்றத்திலிருந்து - தமிழர் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றம் வரை நீடிக்கும் என்ற நிலைதான்! 13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை அதிபர் இராஜபக்சே அளித்த வாக்குறுதிப்படி ஏற்படவே அரசியல் தீர்வு ஏதும் இல்லை. 13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முந்தைய அரசும் தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் அதனை இலங்கைக்கு வற்புறுத்த வேண்டிய கடமையைச் செய்யாது, “பாம்புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல்” என்பது போன்ற ஒரு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்! அண்மையில் சென்னைக்கு வந்து பேட்டி அளித்த வடகிழக்கு மாகாண தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திரு. விக்னேஷ்வரன் அவர்கள், எவ்வித அதிகாரமும் தரப்படாத “பொம்மை முதல்வனாகவே” தான் இருப்பதாக வேதனையோடு கூறியிருக்கிறார்.
கலைஞர் தலைமையில் ‘டெசோ’ அமைப்பும் தமிழ் உணர்வுள்ள கட்சிகள் வலியுறுத்தியும்கூட தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் இயங்கும் ‘டெசோ’ அமைப்பு தொடங்கி, பல்வேறு தமிழ் உணர்வுள்ள கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தியும்கூட மத்திய அரசு ‘கேளாக் காதுடன்’ தான் நடந்து கொள்கிறது.
நமது மத்திய அரசினையே மிரட்டுவது போல, சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை தனக்குள்ள உறவுகள், உதவிகளைக் காட்டி, ‘நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு அவர்கள் இருக்கிறார்கள்‘ என்ற போக்கை இலங்கை காட்டி வருகிறது! நமது நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுவதுபோல, சில நாட்களுக்குமுன்பு வரை, சீனாவின் சப்மெரினை இலங்கைக் கடற்கரையில் நிறுத்தி வைக்க அனுமதியளித்துள்ளது.
இதுபற்றி தமிழர் தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. சம்பந்தம் அவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர்தம் வெளிஉறவுக் கொள்கையின் இரட்டைப் போக்கினை நன்கு படம் பிடித்துக் காட்டிப் பேசியுள்ளார்.
இன்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் இது தலைப்புடன் வெளியாகியுள்ளது.
என்பதில் “நமக்கு உதவும் அண்டை நாடான இந்தியாவின் உணர்வுகளைப் புறந்தள்ளி, திட்டமிட்டு வேண்டுமென்றே முடிவு செய்து இந்தியாவைத் தனிமைப்படுத்தும் ஒரு நிலையை இலங்கை அரசு கடைப்பிடிக்கத் துணிந்துள்ளது. சீன அரசின் உதவிகள் 98 விழுக்காடு கடன்களாகத்தான் தரப்படுகின்றன.
ஆனால், இந்திய அரசு 1300 கோடி ரூபாய் நமக்கு மான்யமாக உதவியுள்ளது. நாம் அதற்குக் காட்டும் கைம்மாறா?” என்பது போன்று கேட்டுள்ளார்!
இந்திய அரசுக்கும் இது வெளிச்சம் ஆகட்டும்!
மற்றொரு பகுதி தமிழக மீனவர்களை அன்றாடம் கைது செய்து, சித்ரவதை செய்வது, படகுகளைப் பறிப்பது, பறித்த படகுகளை - விடுதலை செய்த பிறகும் திருப்பித் தராதது. உச்ச கட்டமாக 5 மீனவர்கள்மீது பொய் வழக்கு - போதைப் பொருள் கடத்தல் குற்றம் சுமத்தி - தூக்குத் தண்டனை தந்து, மற்றவர்களை மிரட்ட இதனையே ஓர் ஆயுதமாக்கி - பிறகு பொது மன்னிப்பு என்று தந்து “நாடகத்தை” முடித்து, இங்குள்ளவர்களின் பாராட்டையும் சேர்த்துப் பெறுவது போன்ற தந்திர உபாயங்களை நடத்தி வருகின்றது.
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!
ஊசலாடிய 5 மீனவச் சகோதரர்களின் உயிர் எப்படியோ காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான், அதற்காக அந்த அளவு பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள் நமது நன்றிக்கும், பாராட்டிற்கும் உரியது என்ற போதிலும், உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வராமலா போகும்?
எனவே, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!.. புரியாத புதிர் - கிடைக்காத விடை! என் செய்வது தமிழர்களின் இன உணர்வு சிதறிய தேங்காய்களாகி உள்ள நிலையினால் ஏற்பட்ட விரும்பத் தகாத விளைவு இது அந்தோ! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 21, 2014

அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமைச்சர்கள்!

நாடாளுமன்றில் இன்று கட்சித் தாவல் அரங்கேறும்? ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர், கட்சி தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்றிரவு பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளனர்.
முக்கியமான பதவிகள் தருவதாகவும் இவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மீதான அதிருப்தி காரணமாக இன்று மேற்கொள்ளப்படவுள்ள தமது கட்சி தாவல் தீர்மானத்தில் குறித்த முக்கியஸ்தர்கள் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான நாடாளுமன்ற அமர்வில் குழப்பங்களை ஏற்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் தற்போது பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 12, 2014

காணாமல் போன தமிழரை அழைத்துச் செல்லுமாறு நீதிமன்றம் கடிதம் அனுப்பியது!

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தமிழர் ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.
சுன்னாகம் மத்தி தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் வயது தற்போது 53 என்பரே 1991-ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார்.
உறவினர்களினால் மறக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறவினர்கள் தொவித்துள்ளார்கள்.
1991-ஆம் ஆண்டு கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடையொன்றில் குறிப்பிட்ட நபர் சிப்பந்தியாகக் கடமையாற்றிய வேளையில் கொழும்;பில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரும் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் குறிப்பிட்ட நபரை எங்கு தேடியும் விபரம் அறியமுடியாத நிலையில் பெற்றோர்களும் இறந்துள்ளார்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட நபரை உறவினர்கள் வந்து அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தினால் கடிதம் அனுப்பபப்பட்டுள்ளது. இதனால் தற்போது உறவினர்கள் குறிப்பிட்ட நபரை அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 10, 2014

வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைககளில் இராணுவத்தின்

யாழில் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர்.
இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டும் உள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது.
அத்துடன் யபழ்.பல்கலையில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது மாணவர் மத்தியிலும் அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித பயத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்ற நிலையிலேயே இராணுவத்தின் பிரசன்னம் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களில் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கெடுபிடிகள் நடக்கலாம் என்றும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழில் இளைஞர்களும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதை தடுப்பதற்கே இவ்வாறான முன் ஆயத்தங்களை அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 06, 2014

மகிந்த மகன் நாமலின் பெயரில் “ சிங்களக் கிராமத்தை உருவாக்கிறார்

வடமாகாணத்தின் முக்கிய மாவட்டம் ஒன்றில் மகிந்தராஜபக்ச, தமது மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் சிங்கள கிராமம் ஒன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல்கம என்ற பெயரில் இந்த கிராமம் அமைக்கப்படகிறது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த கிரமத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணிப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தெற்கில் சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 01, 2014

பொலிஸாருக்கு எதிராகவே ஊடகங்கள் செயற்படுகிறது!

 யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது.
மாநகரசபை, வீதிகள், பாடசாலை எங்கே குற்றம் நடந்தாலும் பொலிசாரையே குற்றம் சுமத்துகிறார்கள். சமுகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும், என மேலும் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய  தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது.
மாநகரசபை, வீதிகள், பாடசாலை எங்கே குற்றம் நடந்தாலும் பொலிசாரையே குற்றம் சுமத்துகிறார்கள். சமுகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும், என மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>