18

siruppiddy

நவம்பர் 28, 2018

முப்படைகளின் பிர­தானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான 
சந்­தேகநபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.
எனினும், எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ
 அறி­வித்­தலும் கிடைக்கவில்லை.எனினும் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவம்பர் 27, 2018

கிளிநொச்சி பத்து வருடங்களின் பின்பு இன்று ஏற்பட்ட பாரிய மாற்றம்

 இறுதி யுத்தத்தின் பின்னராக பத்து வருடங்களின் (2009)  பின் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மாவீரர் வளைவு நாட்டி நிமிர்த்தப்பட்டுள்ளது.ஏ-9 வீதியில் நாட்டப்பட்டுள்ள குறித்த வளைவினை 
தென்னிலங்கை பயணிகளும் பிரமிப்புடன் பார்த்துச்செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதனிடையே யாழ்.முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் முன்னதாகவும்
 இன்று மாவீரர் தின அலங்காரங்கள்,பதாதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது
.இதனிடையே பெரும்பாலான பாடசாலைகளில் இன்று காலை மாவீரர்களிற்கான மாணவர்களின் வணக்கம் செலுத்தப்பட்டு கற்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவம்பர் 15, 2018

அதிரடிப் படையினரால் யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். குருநகர், இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால்
 மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு குருநகர் இறங்குதுறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் இருந்து ரி.என்.ரி. மற்றும் சி4 வகை 2 கிலோ 196 கிராம் நிறையுடைய வெடிமருந்துகள் 
கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதுடன், மீட்கப்பட்ட வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் குறித்த வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ். நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.