18

siruppiddy

நவம்பர் 22, 2022

யாழ் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்க நிகழ்வு 21.11.22

 நல்லூரில் மாவீரர் வாரம் 21-11-2022.அன்றயதினம்   ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்
 செய்து வைக்கப்பட்டன.
இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம்
 செய்துவைக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மே 14, 2022

இலங்கை அரச தலைவர் முன்னிலையில் இன்று பதவியேற்கும் நான்கு அமைச்சர்கள்

நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சராகவும் , தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் , பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு 
அமைச்சராகவும் இருந்தனர்.
இந்நிலையில், தற்பொழுதும் அவர்களுக்கு அதே அம்மைச்சு பதவிகளே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் 
கிடைக்கப்பெற்றுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஜனவரி 25, 2022

கிளிநொச்சி புதிய கருவிகளுடன் வந்த தென்னிலங்கையர்கள் கைது

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சிக்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் இருந்து புதையல் தேடுவதற்குப் 
பயன்படுத்தப்படும் ஸ்கானர்
ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது. இராமநாதபுரம், சம்புக்குளம்
 பகுதியில் புதையல் அகழ்வதற்காக வந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுகள் இடம்பெற்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>