நவம்பர் 28, 2013
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும்,
வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
நவம்பர் 27, 2013
கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள்
கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள் – நவ-27
தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! –
தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள்.
இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர்.
இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 – கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது.
வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.
அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.
இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.
நவம்பர் 17, 2013
நினைவு முற்றம் சிதைப்பு, பழ.நெடுமாறன் கைது : !!
தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக சையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது.
இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நவம்பர் 14, 2013
சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் -
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மதவாச்சி, பூனாவ உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது,
சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று,
எமது ஒற்றுமையை குலைக்காதே,
சனல் 4 வேண்டாம்
போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.
இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெயதிலக உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலளார் கலும் மக்ரேவிற்கு எதிராக வாகனச் சாரதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற வாகனத்தின் சாரதியே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, பிரேத்தியேக வாகனமொன்றில் மக்ரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு பணம் செலுத்தவில்லை என கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், மக்ரேவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரே இந்த வாகனத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இதனால் பொலிஸாரிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் மக்ரே தெரிவித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 12, 2013
தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு கனடிய தமிழர்கள் தார்மீக ஆதரவு.
கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடகிழக்கில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பட்டங்களை நடாத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் முகமாக தொடர் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இராணுவ மயப்படுத்தல், இனஅழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல் போனவர்களின் விடயங்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடயங்கள், மற்றும் பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட விடயங்களை கண்டித்தும், சர்வதேச போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்
வரும் நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை,
டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக (36 Eglinton Ave. West, Toronto, Intersection Eglinton & Yonge)
பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து கனடிய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.
இம்முக்கியமான கட்டத்தில் இந்த ஆர்பாட்டதிற்கு அனைத்து கனடிய தமிழர்களும் வருகை தந்து தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
"இனப்படுகொலைகளின் தலைவன் மகிந்த பொது நலவாய நாடுகளின் தலைவனா?" முடிவு காண; வாரீர் அணி திரண்டு!!!
தொடர்புகளுக்கு,
கனடிய தமிழர் அமைப்புகள்-
416-888-1128 , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
416-281-1165 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா
416-240-0078 , கனடியத் தமிழ் காங்கிரஸ்
416-917-8951 , நாம் தமிழர் - கனடா
416-402-9393 , கனடாத் தமிழர் இணையம்
மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. பதிவு செய்வோருக்கு மட்டும். அதனால் ஆசனப் பதிவிற்கு முந்திக் கொள்ளுங்கள். 647 209 4100 , 416 240 0078
நவம்பர் 10, 2013
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 7ம் ஆண்டு
வீரவணக்க நாள் இன்று. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ்
அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
அரசியலில் இணைவு
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
மறைவு
நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். மாமனிதர் விருது
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.
வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது.
இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு,
சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார்.
இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்றுபாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான
அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப்
பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர்
ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன
சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்
.
இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.
தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர்
கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.
என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.
சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன
நவம்பர் 08, 2013
சிதைக்கப்படும் போராட்ட அசைவியக்கம் -
ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது அரசுகள் பயங்கரவாத முத்திரை குத்துவதும், தமது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் உன்னத செயற்பாடுகளாகச் சித்தரிப்பதும் இன்றைய உலகில் புதிய விடயம் அல்லவே.
மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய நாடுகளில் எழுச்சி கொண்ட தேசிய விடுதலைக் கிளர்ச்சிகளை மையப்படுத்தி தொடங்கி வைக்கப்பட்ட இப் பயங்கரவாத முத்திரை குத்தும் படலம், பின்னர் அயர்லாந்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவில் மார்க்சிய பொதுவுடமைத்துவப் புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனாலும் பயங்கரவாதம் என்ற சொற்பதம் ஆயுத எதிர்ப்பியக்கங்களை மையப்படுத்தித் தோற்றம் பெற்ற ஒன்றன்று. அடிப்படையில் அதன் ஆணிவேர் அரசுகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டஸ்தாந்த் மதப்பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரப் போட்டியின் உச்ச கட்டமாக வெளிவந்த அரசியல் கருத்துருவாக்கங்களில் இச்சொற்பதம் கையாளப்பட்டது.
அதிலும் அக்காலப் பகுதியில் புரட்டஸ்தாந்த் மதப்பிரிவினரின் அரசியல் சித்தாந்தவாதியும், நவீன தாராண்மை சனநாயகத்தின் பிதாமகனாகக் கருதப்படுபவருமான ஜோன் லொக் அவர்களின் தத்துவார்த்த ஆக்கங்களில் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பொதிந்து கிடப்பதை நாம் காணலாம். தமது இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பயங்கரவாதத்தை அரசு கையாள்வதில் எவ்வித தவறும் இல்லை என்கின்றார் ஜோன் லொக்.
இதனையத்த கருத்தை பதினெட்டாம் நூற்றாண்டில் முதற்கூறில் பிரெஞ்சு தேசத்தின் பிரசித்தி பெற்ற அரசியல் தத்துவாசிரியராக விளங்கியவரும், தாராண்மை சனநாயகத்தின் மற்றுமொரு மூத்த சித்தாந்தவாதியாகக் கருதப்படுபவருமான மொன்ரெஸ்கியூ அவர்களும் தனது தத்துவார்த்த ஆக்கங்களில் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு அரசுகளுக்கு உரித்தானதொரு யுக்தியாகப் பழம்பெரும் தாராண்மை சனநாயக சித்தாந்தவாதிகளால் முன்நிலைப்படுத்தப்பட்ட இக்கருத்தியல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு தேசத்தில் நடந்தேறிய புரட்சியைத் தொடர்ந்து செயல்வடிவம் பெற்றது. பதினாறாவது லூயி மன்னனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு அரசபீடம் ஏறிய ‘புரட்சியாளர்கள்’ முற்றுமுழுதாக அரச இயந்திரத்தைக் கையாண்டு தமது எதிராளிகள் மீதும், மன்னனின் விசுவாசிகள் என்று கருதப்பட்டோர் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன.
‘பயங்கரவாத ஆட்சி’ என்று பிற்காலத்தில் வரலாற்றாசிரியர்களாலும், அரசறிவியலாளர்களாலும் விளிக்கப்பட்ட இப்படுகொலைகளே நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தின் தொடக்கமாக அமைந்தது. இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தை பிரெஞ்சு தேசத்தின் அப்போதைய ‘புரட்சிகர’ ஆட்சியாளர்கள் மட்டும் மேற்கொள்ளவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
கீழைத்தேயங்களில் வெடித்த கலகங்கள் - கிளர்ச்சிகள் போன்றவற்றை நசுக்குவதற்கு அப்போதைய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் கையாளப்பட்ட சக்தி மிக்க ஆயுதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதம் விளங்கியது.
1848ஆம் ஆண்டு ஈழத்தீவில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த கண்டி
இராச்சியத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிராக சிங்களவர்களால் தொடங்கப்பட்ட கலகத்தையும், அதன் தொடர்ச்சியாக வெடித்த ஆயுதக் கிளர்ச்சியையும் நசுக்குவதற்கான ஆயுதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தை பிரித்தானியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். இதுபற்றி அக்காலப் பகுதியில் பிரித்தானிய
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் பொழுது கருத்துக்கூறிய இந்தியாவின் வங்காள மாநிலத்திற்கான பிரித்தானியாவின் சட்டவாளர் நாயகம் சார்ஜன்ற் ஸ்பாங்கி, ‘ஒரு அரசு தன்னைப் பாதுகாப்பதற்காக பயங்கரவாத ஆட்சியில் ஈடுபடுவதில் எவ்வித தவறும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதேபோன்ற கருத்தை 1865ஆம் ஆண்டு ஜமெய்க்காவில் நடைபெற்ற கறுப்பின மக்களின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு கையாளப்பட்ட பயங்கரவாத யுக்திகளை நியாயப்படுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் ஜமெய்க்காவிற்கான அப்போதைய பிரித்தானிய ஆளுநர் எட்வேர்ட் ஜோன் இயர் அவர்கள் வெளியிட்டார்.
தொடர்ந்து 1919ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆயிரத்திற்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அமிரிட்சார் படுகொலைகளை நியாயப்படுத்தி இதுபற்றிய விசாரணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்த பிரித்தானிய படைத்தளபதி பிரிகேடியர்-ஜெனரல் டயர், பஞ்சாபில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோர் மீது ‘பயங்கரவாதத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே’
இப்படுகொலைகளுக்கு தான் கட்டளையிட்டதாக நியாயம் கற்பித்தார்.
இவ்வாறு அரசுகளில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தையே கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு பிடுங்கியெறியும் இன அழிப்பை இலக்காகக் கொண்ட இவ் அரச பயங்கரவாத நடவடிக்கையின் உச்ச கட்டமாகவே முள்ளிவாய்க்காலில்
ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. நிராயுதபாணிகளாக சிறைப்பட்ட இசைப்பிரியா போன்ற பெண் போராளிகளையும், போராளிகள் அல்லாத இளம் பெண்களையும் மானபங்கப்படுத்தியும், கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தியும் கோரமாகக் கொன்று குவித்தது.
ஆனாலும் அத்தோடு தனது தமிழ் மாமிச வேட்டையை சிங்களம் நிறுத்திக் கொள்ளவதில்லை. துட்டகாமினியை வயிற்றில் சுமந்த பொழுது தமிழனின் தலையை வெள்ளித்தட்டில் அறுத்து வைத்து, அதிலிருந்து வடிந்த தமிழ்க் குருதியைக் குடித்து மகிழ்வுற்ற விகாரமாதேவியின் கொள்ளுப் பேரன்களுக்குத் தமிழ்க் குருதி குடிக்கும் தாகம் தணியவில்லை. தணியாத இந்தத் தமிழ்க் குருதி குடிக்கும் தாகத்தின் ஓர் அங்கமாகவே கடந்த ஆண்டு தனது கொலைக் கரங்களைப் பிரெஞ்சு தேசத்திற்கு நீட்டிய சிங்களம், மாவீரன் பரிதியின் உயிரைக் காவுகொண்டது. நிராயுதபாணியாகத் தனது
அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த பரிதியை ஆயுதபாணி ஒருவரை ஏவிவிட்டு கோழைத்தனமான முறையில் சிங்களம் பலிகொண்டது.
ஆனாலும் இது விடயத்தில் கொலையாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது மந்த கதியில் தமது விசாரணைகளை பிரெஞ்சுக் காவல்துறையினர் மேற்கொள்வது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை வேதனைக்கு
ஆளாக்கியிருக்கின்றது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் கொலைக் கரங்களில் இருந்து சொந்த மண்ணில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற உண்மையை உணர்த்தும் வகையிலேயே பிரெஞ்சுக் காவல்துறையினரின் அசமந்தப் போக்கான விசாரணைகள்
அமைந்திருப்பதாகவே ஒவ்வொரு தமிழரும் எண்ணத் தலைப்படுகின்றனர்.
இது புலம்பெயர் தேசங்களில் ‘அதுவும் பிரெஞ்சு தேசத்தில்’ சிங்களம் நிறைவேற்றிய முதலாவது அரசியற் படுகொலை அன்று. 1996ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று இதே பிரெஞ்சு தேசத்தில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரை கோழைத்தனமாக சிங்களம் படுகொலை செய்தது. இன்று மாவீரன் பரிதியின் படுகொலை விடயத்தில் எவ்வாறு பிரெஞ்சுக் காவல்துறை நடந்து கொள்கின்றதோ, அதே அசமந்தப் போக்குடனேயே அப்பொழுது லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலை விடயத்திலும் பிரெஞ்சுக் காவல்துறை நடந்து கொண்டது.
அன்று லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய இரு அரசியல் போராளிகளை சிங்களம் படுகொலை செய்த பொழுது தமிழீழ மண்ணில் பலமான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த வெற்றிகளுக்கு முதுகெலும்பாக விளங்கிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் நிதி வழங்கலை முடக்கும் நோக்கத்துடன் லெப்.கேணல் நாதன் அவர்களை சிங்களம் படுகொலை செய்தது. அதேபோன்று ஊடகப் பரப்பில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துப் போரை முறியடிக்கும் நோக்கத்துடன் கப்டன் கஜன் அவர்களின் உயிரைச் சிங்களம் பலியெடுத்தது.
ஆனாலும் சிங்களத்தின் நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் அடிபணிந்து போகவில்லை. தவிர அப்பொழுது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் தமிழீழ மண்ணில் இருந்ததால் புலம்பெயர் தேசங்களில் சிங்களம் மேற்கொண்ட அரச பயங்கரவாதம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
ஆனால் இன்று நிலைமை வேறு. தாயக மண்ணில் தமிழீழ ஆயுத
எதிர்ப்பியக்கம் இடைநிறுத்தம் பெற்றிருக்கும் இன்றைய புறநிலையில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும், தாய்த் தமிழகத்திலும் மட்டுமே காண முடிகின்றது. தமிழீழத் தாயக மண்ணில் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி கொள்வதற்கு இவ் அசைவியக்கம் காரணமாக அமையும் என்ற வலுவான அச்சம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உண்டு.
இருந்த பொழுதும் தாய்த் தமிழகத்தோடு மோதுவது இந்தியாவோடு மோதுவதற்கு ஒப்பானது என்பது சிங்களத்திற்கு தெரியும். இதன் காரணமாகவே தனது கொலைக் கரங்களை தமிழக மண்ணிற்கு விரிவுபடுத்தாது கடற்பரப்போடு மட்டும் சிங்களம் மட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் புலம்பெயர் தேசங்களில் நிலைமை வேறு. கே.பியின் ஒத்துழைப்புடன் 2009ஆம், 2010ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்
மலேசியாவிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் போராளிகள் சிலரையும், செயற்பாட்டாளர்களையும் கொழும்பிற்கு கடத்திச் சென்ற சிங்களம், இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஆண்டு மாவீரன் பரிதியை படுகொலை செய்தது.
பரிதியின் படுகொலை என்பது வெறுமனவே பிரான்சில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன்
மேற்கொள்ளப்பட்ட ஒன்று அன்று. பிரெஞ்சுச் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் பிரான்சில் மட்டுமன்றி ஏனைய புலம்பெயர் தேசங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழீழ தேசிய விடுதலைச் சுடரை அணையாது பாதுகாத்தவர் பரிதி. கொண்ட கொள்கையில் உறுதியோடும், தனது சக செயற்பாட்டாளர்கள் - பொறுப்பாளர்களுடன் நேர்மையோடும் நடந்து கொண்டவர் பரிதி.
புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களைத் தலைமையேற்று வழிநடத்தும் நேர்மையும், ஆளுமையும் அவருக்கு இருந்தது. மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் வெடித்த உட்பூசல்களுக்கு முடிவுகட்டி, அனைத்து நாடுகளிலும் உள்ள
செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் பணியை மாவீரன் பரிதி முன்னெடுத்த பொழுதே தனது கைக்கூலிகளை ஏவிவிட்டு அவரை சிங்களம் படுகொலை செய்தது. தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்துப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை வழி நடத்தும் தலைமைத்துவ ஆளுமையை பரிதி வெளிப்படுத்தியதை சிங்களத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
புலம்பெயர் கட்டமைப்புக்களில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த சிங்களத்தின் கைக்கூலிகளாலும் இதனை சீரணித்துக் கொள்ள இயலவில்லை. இதுவே மாவீரன் பரிதியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. தமிழீழத் தாயகக் களத்தில் ஒரு சிறந்த போராளியாகவும், தளபதியாகவும், பின்னர் பிரெஞ்சு மண்ணில் தமிழீழத் தேசம் கண்ட தலைசிறந்த பொறுப்பாளனாகவும் திகழ்ந்து, இருண்டு கிடந்த புலம்பெயர்
வானில் ஒளியூட்ட எழுந்த நட்சத்திரமாக மிளிரத் தொடங்கிய மாவீரன் பரிதியின் உயிரைப் பறித்ததன் மூலம் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்கும் தனது முயற்சிக்குத் தடையாக இருந்த அரண் ஒன்றை வெற்றிகரமாக சிங்களம் இடித்து வீழ்த்தியது. இதுவே மடையுடைத்து ஓடும் நீர் போன்று ‘மெத்தப்படித்த கனவான்களாக’ வேடமிட்டுப் புலம்பெயர் கட்டமைப்புக்களுக்குள் சிங்களக் கைக்கூலிகள் ஊடுருவி நிலையெடுப்பதற்கான புறநிலைகளை தோற்றுவித்துள்ளது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் ஓர் அங்கமாக சிங்களம் முன்னெடுக்கும் ‘சைக்-ஒப்ஸ்’ என ஆங்கிலக் குறியீட்டைக் கொண்ட இந்த உளவியல் யுத்தத்தின் பரிமாணங்களை நுட்பமாகப் புரிந்து கொண்டு எமது அரசியல் மூலோபாயங்களை நாம் வகுக்கத் தவறினால் புலம்பெயர் தேசங்களில் உயிர்ப்புடன் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் செயலிழப்பதை தவிர்க்க முடியாது.
நவம்பர் 07, 2013
இசைப்பிரியாவின் காணொளிப்பதிவு மீண்டும் விசாரணைக்கான !
சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை மையமாக கொண்டு பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சியின் சமீபத்தில் வெளிக்கொணர்ந்த விவரணம் சிறிலங்கா தொடர்பிலான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தெரிவித்துள்ளது. தமிழீழத் தாயகப் பெண்களின் ஆத்ம உருவமாக அனைவராலும் நோக்கப்படும் சகோதரி இசைப்பிரியாவினது காட்சிப்பதிவுகள் தமிழ்பெண்கள் மீதான சிங்கள அரசு பயங்கரவாத படையினது
கோரமுகத்தினை மீண்டும் மீண்டும் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கைத்தீவில் நடந்தேறிய இறுதி யுத்தகளத்தில் நடந்தேறிய மனிதப்பேரவலம் குறித்து பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கிய மற்றுமொரு விவரணப்படம் மானிடநேயத்தை நேசிக்கும் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில்
ஆழ்த்தியுள்ளதோடு கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக் கட்டங்களில் அப்பாவிப் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா இழைத்துள்ள போர்க்குற்றங்களில் ஒரு மிகச் சிறிய பகுதியே இவையாகும். இவ் ஆவணப்படத்தினைவிட பிற ஆதாரங்களையும் நாம் இந்த வேளையில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் இசைப்பிரியா தொடர்பில் வெளிவந்திருந்த ஒளிப்படங்கள் தொடர்பில் சிறிலங்கா அரச கட்டமைப்பு பொய்யான வியாக்கியானங்களை முன்வைத்து வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சலனக்காட்சிகள் இசைப்பிரியா உயிருடன் சிறிலங்கா இராணுவத்தின் கோரக்கரங்களுக்குள் அகப்படுவதானது சிங்களத்தின் பொய்யான வியாக்கியானங்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது.
சிறில்ங்கா இராணுவத்தினரது கோரக்கரங்களுக்குள் அகப்பட்ட அனைத்து தமிழ்பெண்களின் ஒட்டுமொத்த குறியீடாக இசைப்பிரியாக விளங்குகின்றார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமல்ல போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழுகையில் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு தமிழ்பெண்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவைகள் யாவற்றுக்கும் நீதியினையும் பரிகாரத்தினையும் ஏற்படுத்துவதற்கான உகந்த உள்ளக சூழல் இலங்கைக்குள் இல்லை என்பது இலங்கைத்தீவின் கல்வியாளர்கள் மனித உரிமைவாதிகளின் கருத்தாகவுள்ளது.
இந்நிலையில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையே இவற்றுக்கான வழிநிலையாக உள்ளது தென்பது தெளிவாகின்றது. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடுயாதெனில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையானது போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுடன் மட்டும் நின்று விடாது இன அழிப்பையும்
உள்ளடக்க வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 06, 2013
வன்னி மோதலில் இரத்தமின்றி அதிகளவான சிறுவர்கள் மரணம்:
இலங்கையின் வன்னியில் நடைபெற்ற போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான அணுகல் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியிருந்தாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்திருந்தது.
ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய இரகசிய கேபிள் உரையாடல் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
எந்த தகுந்த காரணமும் இன்றி வன்னி மோதல்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவப் பொருட்கள், குருதி பைகள் போன்றவற்றை விநியோகிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசியமான இந்த உரையாடல் குறிப்பை 2009 ஜூலை 15 ஆம் திகதி ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கிளின்ட் வில்லியம்சன் வொஷிங்டனுக்கு அனுப்பியிருந்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான தலைவர் ஜெக் டி மயோ வை அமெரிக்க தூதுவர் போர் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 9 ஆம் திகதி சந்தித்த போதே இந்த தகவல் அறிந்துள்ளார்.
தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தினால் போரில் காயமடைந்த அதிகளவான சிறுவர்களின் உயிரிழப்பை தடுக்க முடியாது போனதாக அமெரிக்க துதூதுவர் தனது தகவலில் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்
நவம்பர் 05, 2013
நல்லவனாக இருக்கிறேன்மக்களை கொல்வதில் ?
மக்களை கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொள்கிறது.
இதில் பொதுமக்களும் கொல்லப்படுவதாக கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் ஒபாமா கூறியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மேற்கொண்ட பிரசாரம் குறித்த புத்தகம் தான் இந்த கருத்து இடம்பெற்றுள்ளது.
லண்டனைச் சேர்ந்த மார்க் ஹால்பெரின், ஜான் ஹெய்ல்மென் ஆகிய இரு புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் இந்த நூலை எழுதியுள்ளனர்.
இதில் ஒபாமா குறித்த பல பரபரப்புத் தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான், ஏமன் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அமெரிக்கப் படையினர் நடத்தும் டிரோன் எனப்படும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த பல முக்கியத் தகவல்களை இதில் அவர்கள் கொடுத்துள்ளனர்.
ஜனாதிபதியான பின்னர் மொத்தம் 326 டிரோன் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2004ம் ஆண்டு முதல்
டிரோன் தாக்குதல்களில் 2500 முதல் 3600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து தனது நெருங்கிய உதவியாளர்களிடம் ஒபாமா, மக்களைக் கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
இக்கருத்து குறித்து ஜனாதிபதி மாளிகை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், ஒபாமாவின் ஆலோசகரான டேன் பீபர், எப்போதுமே தகவல் கசிவுகள் ஜனாதிபதியை எரிச்சலூட்டுகின்றன.
இந்த நூல் குறித்து நான் ஜனாதிபதியுடன் இதுவரை பேசவில்லை, அவரும் இதைப் படிக்கவில்லை.
ஆனால் இப்படிப்பட்ட கசிவுச் செய்திகளை அவர் வெறுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 04, 2013
இசைப்பிரியா படுகொலை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது
-
உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த போது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,
12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது.
சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத் தலைமையகத்தில் இருக்க வேண்டும்.
கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூற முடியும்.
இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து தான் மறுக்க முடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா கூறினார்.
உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த போது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,
12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது.
சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத் தலைமையகத்தில் இருக்க வேண்டும்.
கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூற முடியும்.
இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து தான் மறுக்க முடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா கூறினார்.
நவம்பர் 03, 2013
மிக பிரமாண்டமான போர் ஒத்திகை (வீடியோ இணைப்பு)
ரஷ்யா அருகே பால்டிக் கடல் பகுதியில் நேட்டோ படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையை தொடங்கியுள்ளன.
வரும் 9ம் திகதி வரை நடக்கவுள்ள இந்த ஒத்திகையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த ஒத்திகையில் 350 வாகனங்கள், 1000 போர் தளவாடங்கள், 11 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல், 46 ஜெட் விமானங்கள், 11 ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்கின்றன.
இது கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட ஒத்திகைகளை காட்டிலும் பல மடங்கு பெரியதாகும்.
இதன் காரணமாக ரஷ்ய கடலோர பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது
நவம்பர் 01, 2013
கொடூர பாலியல்பொங்கி எழுந்து வா தமிழா {காணொளி}
சிங்களத்தை கருவறுப்போம்.சகோதரி இசைப்பிரியாவை படுகொலை செய்யப்படும் முன்பு இழுத்துச் செல்லும் சிங்கள பயங்கரவாத இராணுவம்! -CHANNEL4 வீடியோ கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)