18

siruppiddy

மார்ச் 28, 2014

தற்போதைய நாட்டின் நிலைமைக்கு அரசாங்கமே காரணம்

 
 ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசியல் காரணத்திற்காக அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டின் நன்மதிப்பையும் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை சவால்களை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார் எனவும், மாகாணசபை தேர்தலையே இலக்கு வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அறிந்து கொண்டே அரசாங்கம் தேர்தல் தினத்தை நிர்ணயித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை சீண்டி, பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளது,

ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிப்போரின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பிரதான எதிரி அமெரிக்கா என்றால், ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் முக்கிய தலைவர்கள் ஏன் அமெரிக்க குடியுரிமையை பேணி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசப்பற்றாளர்கள் என தங்களை பெருமிதப்படுத்திக் கொள்ளும் குறித்த தலைவர்கள் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை துறக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்பை நாளைய தேர்தலில் காட்டுமாறு அரசாங்கம் கோருகின்ற போதிலும், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்கள் பிரச்சினைகளினால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசியல் காரணத்திற்காக அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டின் நன்மதிப்பையும் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை சவால்களை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார் எனவும், மாகாணசபை தேர்தலையே இலக்கு வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அறிந்து கொண்டே அரசாங்கம் தேர்தல் தினத்தை நிர்ணயித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை சீண்டி, பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளது,

ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிப்போரின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பிரதான எதிரி அமெரிக்கா என்றால், ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் முக்கிய தலைவர்கள் ஏன் அமெரிக்க குடியுரிமையை பேணி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசப்பற்றாளர்கள் என தங்களை பெருமிதப்படுத்திக் கொள்ளும் குறித்த தலைவர்கள் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை துறக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்பை நாளைய தேர்தலில் காட்டுமாறு அரசாங்கம் கோருகின்ற போதிலும், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்கள் பிரச்சினைகளினால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது

மார்ச் 23, 2014

புலி இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள்

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் காக்கைதீவுச் சந்திப்பகுதியில் இன்று பகல் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.
எனினும் அந்தப் பகுதியால் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் இராணுவத்தினரும் சோதனைகளை நிறுத்தி அவ்விடத்தையும் விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த வீதிச்சோதனை நடவடிக்கைகள்  இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது காக்கைதீவுச் சந்திப் பகுதியால் நான் வந்து கொண்டிருந்தேன். 
அப்போது குறித்த பகுதியில் 15 மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் 20 மோட்டார் சைக்கிள்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் இராணுவமும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன்.

உடனடியாக இறங்கி அவ்விடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் கேட்டு அறிந்து  கொண்டதுடன் இராணுவத்தினருடன் தற்கத்திலும் ஈடுபட்டேன்.
அத்துடன் தற்போது சமாதான சூழல் புலியை அழித்து விட்டோம் என்று கூறிவரும் நீங்கள்  இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்கிறீர்கள்? இதனால் மக்கள் சுதந்திரமாக தமது வேலைகளைச் செய்யமுடியாது அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களுக்கு நான் தெரிவித்தேன்.

இருப்பினும் தாம் பொலிஸாருக்கு உதவுவதாகவும் வாகன அனுமதிப்பத்திரம், வானக காப்புறுதி என்பனவே சோதனையிடப்படுகின்றது என்றனர்.
எனினும் அவற்றைப் பார்ப்பதற்கு பொலிஸார் உள்ளனர் இதற்கு இராணுவம் சம்பந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர்களுக்கு தெரிவித்தேன்.

அத்துடன் இவ்வாறான செயற்பாட்டினால் மருத்துவ மனைக்கு வந்தவர்கள் கூட ஒரு சுற்றி வளைப்பில் மாட்டிக் கொண்டது போல காத்து நிற்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதனையடுத்து அவர்கள்  குறித்த இடத்தை விட்டு அகன்று சென்றனர். மேலும்  இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடானது யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையினை ஏற்படுத்துவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் 20, 2014

நாட்டையும் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார்: ரணில்

நாட்டைப் போன்றே, மக்களின் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனவடனகம பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் திட்டமானது கடந்த 1990 – 1991ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 19, 2014

மாணவர்கள் போராட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை

 இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

இதனால் கொழும்பு – கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 16, 2014

இராணுவம் சோதனை மக்கள் அச்சத்தில்

கிளிநொச்சி பூநகரிப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இன்றைய தினம்(16.03.2014) தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்கள் இதனால் மக்கள் பதட்டத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றார்கள். பூநகரிப் பிரதேசக் கிராமங்களான வலைப்பாடு,

செம்பன்குன்று, பொன்னாவெளி, கிராஞ்சி போன்ற கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு உடல் சோதனைகள் அடையாள அட்டைப் பரிசோதனைகள், சோதனைகள் என்பவற்றை வீதிகளால் போவோர் வருவோரிடமும் வீடுகளில் இருப்போரிடத்திலும் நடத்திவருகின்றார்கள். இதனால் இங்குள்ள மக்கள், வீதிகளால் போக்குவரத்துச் செய்யும் மக்கள் எனப்பலரும் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள். தருமபுரம்

முசலாம்பிட்டியில் அவர்களது வீட்டில் வைத்து வயோதிபத் தாயாரான பா.ஜெயக்குமாரி வயது-51 மகளான 13 வயதுச் சிறுமி பா.விபூசிகா ஆகியோர் கைதுசெய்யப்ட்தன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் இராணுவச் சுற்றிவளைப்புக்கள் சோதனைகள் மக்களை அச்சமூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

மார்ச் 13, 2014

சர்வதேச விசாரணைக்கு பூரண ஆதரவளிக்கப்படும்

 
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ;கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைமையிலான சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், அந்நாட்டு பாராளுமன்றிற்கு எழுத்து மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தக் கூடிய வலுவான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச தீர்மானத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உறுப்பு நாடுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முழு அளவிலான விசாரணைகளை நடாத்தி நியாயம் வழங்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்தானியா ஏற்கனவே வரவேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முன்னேற்றங்களை உதாசீனம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்து குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானமானது சகல இன மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 06, 2014

ஜெயதிலக சீற்றம் சிறந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் பீரிஸ்!

 ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நிகழ்த்திய உரை மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்குப் பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களையும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்ததாக இலங்கையின் மூத்த இராஜதந்திரி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில்,எழுதியுள்ள தயான் ஜெயதிலக, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உரை, மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்க பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களையும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்தது

இலங்கை ஜெனீவா மாநாட்டில் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே எழுதி வைத்த குறிப்பினை பக்கம் பக்கமாக வாசித்து முடித்தாரே தவிர,

இலங்கை மீது குற்றங்கள் இல்லை என்பதை அழுத்தமாக கூறத் தவறிவிட்டார். அத்துடன் அவர் தமது உரையின் போது சபையில் இருந்துவர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கவோ, தாம் கூறும் விடயங்களுக்கு முகத்திலும், உடலசைவிலும் பாவனைகள் செய்யவோ இல்லாமல், உயிரோட்டம் இல்லாத உரை ஒன்றையே நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம் சிறந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
 

மார்ச் 04, 2014

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடுவில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வதிவிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் பெண்கள் உட்பட சிங்கள மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பட்டமொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையின் பிரதம குரு அம்பிட்டியே சுமனரத்ன தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குமார்களும் கலந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் முன்பாக கூடிய பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டு, மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தனர்.
போருக்கு பின்னர் அந்தப் பகுதியில் சிங்கள குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்கு பிரதேச செயலக அதிகாரிகள் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் வாசக அட்டைகளையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிகாரிகள், சட்ட விரோதமாக அரச காணிகளில் அத்துமீறி குடியேறியவர்களே வெளியேற்றப்படுவதாக கூறுகின்றனர்.
ஆர்பாட்ட பேரணி முடிவில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் கெவிலியாமடு கிராமத்தில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று அரசாங்க அதிபர் பி. எம். எம். எஸ். சார்ள்ஸை சந்தித்து, கெவிலியாமடுவில் போருக்கு பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்த மனுவொன்றை கையளித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் தான் ஆராய்ந்து கவனம் செலுத்துவதாக அரசாங்க அதிபரால் பதில் அளிக்கப்பட்டதையடுத்து, ஆர்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு எல்லையான கெவிலியாமடுவில் போருக்கு பின்னர் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பௌத்த பிக்குகளின் ஆதரவுடன் அரச காணிகளில் அத்து மீறி குடியேறுவதாக ஏற்கனவே மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

கெவிலியாமடு கிராமத்தில் அரச காணிகளில் அத்துமீறிக் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக ஏற்கனவே பிரதேச செயலாளரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

மார்ச் 03, 2014

சில திருத்தங்கள்நவனீதம்பிள்ளையின் அறிக்கையில்

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

இது தொடர்பான உத்தேச அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.
இந்த பதில்களின் அடிப்படையில் அறிக்கையின் ஒரு சில விடயங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையில் திருத்த செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தல், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவற்றுக்கு கால வரையைறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமென முதில் கோரப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இலங்கை தொடர்பில் அவ்வாறான பணிப்புரைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்வைக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.