18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2013

மேர்வினின் திருமண ஆசை! கடுப்பான நவிபிள்ளை:



   மன்னிப்பு கோரியது சிறிலங்கா  சிறிலங்காவின் கோமாளி அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

 நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

 இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்னிப்பு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உயர் ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு அமைச்சர் ஒருவரை கருத்து வெளியிட அனுமதித்தமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

 நவநீதம்பிள்ளையை மணக்க விரும்புகிறேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமைக்கு முழு நாட்டு மக்களும் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

 கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 30, 2013

நவநீதம்பிள்ளையுடன் காரசார விவாதத்தில்

 ஈடுபட்ட அருண் தம்பிமுத்து!
விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை

ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப்

படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர். அன்று தமது பெற்றோரை கொலை செய்த புலிகள்

சிறுவனாக இருந்த தன்னையும் கடத்திச் சென்றதாக அருண் தம்பிமுத்து, மனித உரிமை ஆணையாளரிடம் கூறியுள்ளார். இன்று மனித உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் நபர்கள் தன்னை மீட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வன்னியில் போரின் இறுதிவாரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்துள்ள அவர், அப்படியொன்றால் கொழும்பில் நடைபெற்ற குற்றங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

மீண்டும் ஆயுத கலாசாரம் தலைதூக்கிவிட்டதா?


வடபகுதியில் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி சீனவெடிகளே சத்தமிடும் என்றிருந்த வேளையில், கடந்த 27ம் திகதி சாவகச்சேரிப் பகுதியில், ஒரே அணி சார்ந்த வேட்பாளர்களிடையே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை, வடபகுதியில் பெரும் அச்சத்தையும்

ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துமளவில் என்ன நடந்தாயிற்று என்ற கேள்வி நியாயமாயினும், அதற்கான பதிலை இந்த நாட்டில் அறிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் எடுக்கும். எதுவாயினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

 குறிப்பிட்ட இரு வேட்பாளர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி வேட்டும் வடபகுதியில் மீண்டும் ஆயுத கலாசாரம் தலைதூக்கி விட்டதா? என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது, நாட்டில் ஆயுத கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதென்று அரசு கூறுகின்ற நிலையில், ஆளும்தரப்பின் வேட்பாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியமை, அதிலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில், ஜனாதிபதி இந்த நாட்டில் இல்லாத போது வடக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை

சாதாரணமான விடயமன்று. இச் செயலானது வடபகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரககட்சியை வேரூன்ற எடுத்த முயற்சிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறலாம். இதற்கப்பால் வடபகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட அரசியல் இராஜதந்திரம் தோற்றுவிட்டதென்று கூறுவது பொருத்தமுடையதாகும்.

 அதாவது வடக்கு மாகாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடுவதை விரும்பாத ஜனாதிபதி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆளும் கட்சியின் சார்பில் மூன்று பிரிவுகள்

வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டன. இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் ஒன்றாயினும் அந்தக் கட்சி தனித்துவமாக, அமைதியாக தேர்தலைச் சந்திக்க தயாரான போது, ஆளும் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஏனைய இரு பிரிவுகளும் துப்பாக்கியால் சுடும் அளவில் நிலைமையை மோசமாக்கின.
இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கு நிச்சயம் விருப்பமானதாக இருக்க முடியாது. ஆக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தேர்தலில் போட்டியிட

அனுமதித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஜனாதிபதி வருமளவில் அவர் நியமிததவர்கள் நடந்து கொண்டனர். எதுவாயினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் மெளனத்தைக் கடைப்பிடிப்பதால் வடபகுதியில் அரசு நிறையவே கற்றுக் கொள்ளும். இதற்கு அங்கு நீங்கள் இங்கு நாங்கள் என்ற ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது தமிழன் சரியான சந்தர்ப்பத்தில் ஒன்றுபட்டான் என்று உலகம் கூறும் அளவில் செய்யலாம்.

ஆகஸ்ட் 29, 2013

தளபதியாக இருந்த கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்:!


இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார்.
முக்கியமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த காலத்தில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்மை, சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டமை ஆகியன தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் என திருகோணமலை நகரில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பிரதியமைச்சர் கருணா, விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த சமயத்தில், புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் பிள்ளைகளின் பெற்றோர், காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முக்கியமாக அரந்தலாவ பிக்குகள் கொலை, திம்புலாகல விகாரையின் தலைமை பிக்கு கொலை உட்பட பல குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ககுமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்

கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை!!!!


விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது.

அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் அவர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வர்ததக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட்டு என்பவரின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
குறித்த வர்த்த நிலையத்தை பொலிஸார் சீல் வைத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன

ஆகஸ்ட் 26, 2013

தமிழர்கள்காலம் வரும்வரை காத்திருந்தால் சிங்களத் தமிழர்களாக மாறிவிடுவர்!


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது.
உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் நாம் புரிதல் இன்றிச் செயற்படுவோமானால் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சிகளே எமக்கு எஞ்சும்.
நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்ற தமிழினம் 1948 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக ரீதியாகப் போராடி பின்னர் 1970 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டது தொடக்கம் அதற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக இருந்து வளர்ச்சியடைந்து ஒரு மரபுவழித் தேசிய இராணுவமாக கட்டமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது வரை அவர்கள் தமது சொந்த முயற்சியாலேயே முன்னேறினார்கள். கெரில்லா அமைப்பாக இருந்த போது தனியே தமது திறமைகளைப் பயன்படுத்தி தாங்களாகவே ஆயுதங்களைத் தயாரித்து எதிரிகளை அழித்தார்கள். கட்டமைக்கப்பட்ட படைப்பிரிவாக புலிகள் வளர்ச்சியடைந்த பின்னரேயே அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகள் கிடைக்கத் தொடங்கின.
அதுவரை அவர்கள் பட்ட கஷ்டங்களை உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் எதிர்நோக்கியிராது. இத்தனை துன்பங்களையும் வலிகளையும் சுமந்த போதிலும் தனது மன வலிமையால் புலிகள் அமைப்பை  தேசியத் தலைவர் வளர்த்தெடுத்தார். முப்பது வருடமாக தலைவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை மூன்று வருடங்களாக மிகவும் கடும் முயற்சி செய்து, நாட்டின் சகல வளங்களையும் பயன்படுத்தி, சுமார் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்ற பின்னர் சிங்களப் படைகள் அழித்திருக்கின்றன. போராட்டம் அழிந்த பின்னரும் எமக்கு உரிய தீர்வை யாரும் முன்வைக்கவில்லையே. இது ஏன்?
உலக நாடுகளிலுள்ள பலம்பொருந்திய தலைவர்கள் பலர் தமிழ் மக்களின் போராட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் வீரத்தை மெச்சியுள்ளனர். அவர்களின் தியாக உணர்வை மதித்திருக்கின்றனர். இன்றுவரை அவர்கள் புலிகளையும் தமிழ் மக்களையும் மனதார நேசிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் காக்கின்றமை தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிதமரான லீ குவான் யூ, தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் நேர்மைத்தன்மையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். அந்தக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அந்த மாபெரும் அரசியல் தலைவரின் கருத்துக்களால் ஈழத் தமிழ் மக்கள் தமது வலிகளையும் மறந்து ஆனந்தமடைந்திருக்கின்றனர்.
ஆனால், அவர் இந்தக் கருத்துக்களை பதவியில் இருக்கும் போது ஏன் கூறியிருக்க முடியாது. அப்போது கூறியிருந்தால் அது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருந்திருக்குமே என்று ஈழத் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களை மகிழ்வித்த அந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமரின் கருத்து, ‘சிங்களவர்களால் தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க சிங்களவர்கள் அதீத முனைப்புக் காட்டுகின்றனர்’ என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. எனவே, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் லீ குவான் யூ தெரிவித்திருக்கிறார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். சிங்கப்பூரின் சிற்பி என்று வர்ணிக்கப்படுகின்ற லீ, தற்போதைய சிங்கப்பூர் பிரதமரின் தந்தையாவார். சிங்கப்பூர் மக்களிடையே சிறந்த செல்வாக்குடன் மிளிர்ந்த இவர் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பிலும் சிறீலங்காவின் சர்வாதிகாரம் தொடர்பிலும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.
ஈழத் தமிழர்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிறீலங்காவில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவேண்டும்-நம்பவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அடங்காத் தமிழர்களான ஈழத்தமிழர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடவும் மாட்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத் தமிழர்களைச் சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.   
சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது.  இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப் பேராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
நிச்சயமாக சாதாரணமான ஒருவரால் இந்தக் கருத்துக்களைக் கூற முடியாது. லீ குவான் யூ உலகிற்கு வழிகாட்டியான ஒரு நாட்டின் முதலாவது பிரதமராக இருந்தவர். அவரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் எங்களைப்பற்றி தெரிந்து வைத்திருப்பவர்களிடம் நாம் நெருங்கிய உறவைப் பேண வேண்டும். உலகிலுள்ள ஏனைய நாடுகளின் தலைவர்களும் ஈழத் தமிழர் தொடர்பில் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்காவிட்டாலும் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிடம் தேடிச்சென்று நாம் எமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதற்படியாக நாம் லீ குவான் யூ அவர்களைச் சந்தித்து எமது சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான அடுத்த கட்ட வழிமுறைகள் தொடர்பில் உரையாடல்களை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
மேலும், லீ யைப்போன்று எமது போராட்டத்தை தெளிவாக புரிந்துகொண்ட அரசியல் தலைவர்களை நாங்கள் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம் சர்வதேச ரீதியாக எமது விடுதலைக்கான புதிய களம் ஒன்றை நாங்கள் திறக்க முடியும். இதன் மூலம் எமது போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்வதும் இலகுவானதாக்கப்படும். இந்தக் களத்தில் யார் இறங்குவது, யாரை இறக்குவது என்று எமக்குள் போட்டிகள் இல்லாமல் ஈழத் தமிழ் மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறையுடன் சர்வதேச ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களை உள்ளடக்கி இந்தக் குழுவை அமைக்க முடியும். 
காலம் எமக்காக காத்திருக்காது. தற்போது நாம் இதனைச் செய்யாமல் இருந்தால் இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் இதே வேகம் எங்களிடம் இருக்கப்போவதில்லை. தற்போது தமிழீழத்திற்காகச்  செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களைத் தேடித் தேடி அழிப்பதில் சிங்களம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு மேலாகத்  தமிழர் தாயகத்தில் உள்ள இளைஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் பல்வேறு சுகபோகங்களைக் காட்டி அவர்களை போராட்ட சிந்தனைகளிலிருந்து திசை திருப்ப மகிந்த அரசு அதீத முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.
எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து நாம் செயற்பட முன்வர வேண்டும். தற்போது தமிழ்க் கட்சிகள் நினைப்பது போன்று இனியும் இலங்கைக்குள் பேசி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது வெறும் பகற்கனவு. எனவே, பொறுப்புடைய தமிழ்த் தேசியவாதிகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பு ஒன்றை உருவாக்கி எமது விடுதலை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துங்கள். இல்லையேல் இன்னும் சில பத்தாண்டுகளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தேவைப்படாது. ஏனெனில், பெரும்பாலான தமிழர்கள் சிங்களத் தமிழர்களாக மாறிவிடுவர்.

இரவோடு இரவாக சிறிலங்கா இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேற்றம்!


 சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லும் அவர், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்திப்பார்.  பின்னர், அங்கிருந்து கிளிநொச்சிக்குப் புறப்படுவார்.

ஏ9 வீதியால் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டம் மற்றும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.

இறுதிப்போர் நடந்த புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளையும் நவநீதம்பிள்ளை பார்வையிடவுள்ளார்.

இந்நிலையில் ஆணையாளரின் வருகைக்கு முன்னர் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

போர்த்தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், நேற்று இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அங்கு இருந்த இராணுவ மினிமுகாம், காவலரண்கள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆகஸ்ட் 24, 2013

மஹிந்தரின்அதிரடி நடவடிக்கை - அடக்குவாரா நவநீதம்பிள்ளை?


 
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிதாக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 இந்த அமைச்சின் நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ள மஹிந்த ராஜபக்ச, புதிய அமைச்சின் செயலராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்துள்ளார்.

 இவர் முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியவராவார். 

 இதையடுத்து, இதுவரை கோத்தாபய ராஜபக்சவின் வசம் இருந்து வந்த சிறிலங்கா காவல்துறை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்தப் புதிய அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 சிறிலங்கா காவல்துறையை, பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்குமாறு, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

 எனினும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து காவல்துறையை தனியாக பிரிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

 இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று காண்பிக்கவே இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிதாக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 இந்த அமைச்சின் நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ள மஹிந்த ராஜபக்ச, புதிய அமைச்சின் செயலராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்துள்ளார்.

 இவர் முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியவராவார்.

 இதையடுத்து, இதுவரை கோத்தாபய ராஜபக்சவின் வசம் இருந்து வந்த சிறிலங்கா காவல்துறை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்தப் புதிய அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 சிறிலங்கா காவல்துறையை, பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்குமாறு, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

 எனினும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து காவல்துறையை தனியாக பிரிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

 இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று காண்பிக்கவே இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 23, 2013

தமிழீழத்தில் போர் எச்சங்களை அழிக்கும் முயற்சியில்


இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சிறிலங்கா செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை, போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளார்.
 இந்நிலையில் அவர் வருவதற்கு முன்னதாக போர் எச்சங்களை அகற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இராணுவத்தினர் உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
 எச்சங்களை அகற்றும் பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.   
 இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது.
 இவற்றி பெரும் பகுதி கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறு கின்றனர்.
 கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம், சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன.   
 இவை வெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர்.
 சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நவனீதம்பிள்ளையில் வருகையால் மஹிந்த அரசாங்கம் பெரும் சங்கடத்தையும், அச்சத்தையும் எதிர்கொள்வதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
 

ஆகஸ்ட் 21, 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது


கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று நேற்று மீண்டும் லோக்சபாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதனை வலியுறுத்தின.
நேற்று லோக்சபாவில் உரையாற்றிய அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதுரை இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை இந்தியா மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் நட்பு நாடாக இலங்கையை கருத முடியாது என்று�� திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எந்த அழுத்தங்களையும் இலங்கை பொருட்படுத்தியதில்லை.
இந்தியாவின் பேச்சுக்கு மதிப்பளிக்காக இலங்கையை நட்பு நாடாக கருத முடியாது என்று அவர் அவர் தெரிவித்தார்

ஆகஸ்ட் 19, 2013

சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள


பாதுகாப்பான எதிர்காலத்தினை கூட்டாக கட்டியெழுப்ப அழைப்பு !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு !
இலங்கைத்தீவில் சிறீலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகத்தினை வன்மையாக கண்டிப்பதோடு சிங்கள பௌத்த தேசியவாத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லீம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை தமிழ்மொழியினை தாய்மொழியாக் கொண்ட சகோதரர்கள் என்ற வகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ்மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறும் முஸ்லிம் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையோடு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்தினை ஆக்கிரமித்துவைத்திருக்கும் சிங்கள பௌத்த தேசியவாத அரசு தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தினை தனது இராணுவ சர்வாதிகாரத்தின் வல்லாதிக்க கரங்கொண்டு அடக்கிவிடலாம் என நினைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தனது இன அழிப்பு காட்டுமிராண்டித்தனத்தினை முஸ்லீம் மக்களினை நோக்கியும் அவர்களது வழிபாட்டு உரிமையினையும் ஏனைய பண்பாட்டு உரிமைகளினைக் குறிவைத்தும் செயற்படத் தொடங்கியுள்ளது.
உலகின் 600 மில்லியன் மக்களின் வழிபாட்டிற்கும் மதிப்புக்கும் உரியபௌத்த மதத்தினை தங்களது அரசியல் அதிகாரத்திற்காக சிங்கள பெருந்தேசியவாதத்தினுள் சிறைப்படுத்தியுள்ள சிறீலங்காவின் இனவெறிஅரசு தமிழர்தாயகத்தினுள் காணப்படக்கூடிய தமிழ்பௌத்த புராதன சின்னங்களினை சிங்களபௌத்த சின்னங்களாக பிரகடனப்படுத்தி தமிழ்மக்கள் பௌத்தமதத்தின் மீது கடந்த காலங்களில் கொண்டிருந்த பெருமதிப்பினை களங்கப்படுத்துவதோடு அப்பிரதேசங்களில் சிங்களமக்களினைக் குடியேற்றுவதன் மூலம் தமிழர்தாயகத்தினை சிதைத்து கூறுபோடும் முயற்சியினை துரிதப்படுத்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியினை தற்போது முஸ்லீம் மக்களின் மீது திருப்பிவிட்டுள்ளது. முஸ்லீம் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடையணியும் முறைமைகள் ஆகியவற்றில் தனது வன்முறையினை ஆரம்பித்த சிங்களபௌத்த தேசியவாதம் தற்போது அவர்களின் வழிபாட்டு தலங்களினை அழிப்பதிலும் வழிபாட்டு உரிமைகளினை மறுப்பதிலும் தனது சட்டரீதியானதும் சட்டத்திற்கு புறம்பானதுமான சகலசக்திகளினையும் ஈடுபடுத்தியுள்ளது.
பௌத்த மதத்தினை தேசிய மதமாக தனது அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தியுள்ள சிறீலங்கா ஏனைய மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் உரியசமத்துவ உரிமைகளினை மறுத்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையினை அபகரிப்பதில் சுவைகண்ட சிங்கள பௌத்த தேசியவாதம் அடுத்தகட்டத்தில் முஸ்லீம் மக்களின் இருப்பினை அழிப்பதற்கான திட்டங்களினை விரிவுபடுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தலைநகரினை அண்டிய வெல்வெரி பிரதேசத்தில் கத்தோலிக்க சிங்களமக்கள் மீதுநிகழ்த்தப்பட்ட இராணுவ வன்முறையினையும் புரியமுடிகின்றது.
கூர்மையடைந்துள்ள சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களவராயினும் கிறீஸ்தவ மதத்தவர்களினைக்கூட விட்டுவைக்கத் தயாரில்லை என்கின்ற அளவிற்கு மூர்க்கமடைந்துள்ளது.
இது மறுவகையில் மாற்றுப் பண்பாடுகளினையோ மற்றைய மதங்களினையோ ஏனைய மக்களின் தேசிய உரிமைகளினையோ ஏற்று அங்கீகரித்து இணைந்து வாழதயாரில்லை என்ற சிஙகள பௌத்த தேசியவாதிகளின் உறுதியான நிலையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
இத்தகைய நிலையில் நாடுகடந்ததமிழீழஅரசாங்கம் தனது சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தினை மீண்டும் இங்கு நினைவூட்டவிரும்புகின்றது.
''தமிழீழஅரசு ஒரு மதசார்பற்ற அரசாக அமையும். அதன் கீழ் சகல மக்களினதும் மதவழிபாட்டு உரிமையும் தங்கள் மதக்கடமைகளினை நிறைவேற்றுவதில் அவர்களுக்குரிய பண்பாட்டு உரிமையும் தங்கு தடையின்றி உறுதிப்படுத்தப்படும்.'
இலங்கைத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் உருவாகவிருக்கும் சுதந்திர தமிழீழம் சகலவித மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் சமஉரிமையும் மதிப்பும் அளிக்கும் ஒருதேசமாகும். சிங்கள பௌத்த தேசியவாதத்தினைப் போன்று சகல மாற்றுப்பண்பாடுகளினையும் இனங்களினையும் தனது பெருந்தேசியவாதத்தினுள் விழுங்கி அழிக்கின்ற குரோதமனப்பான்மையற்றதும் 'யாதும்ஊரேயாவரும் கேளீர்'என்ற முது பெரும் தமிழ்பண்பாட்டிற்கு அமைய வந்தார் அனைவரினையும் வாழவைக்கும் சுதந்திரபூமியாக தமிழீழத்தின் மண்ணும் அங்குஅமையும் மக்கள் ஆட்சியும் இருக்கும்.
அவ் விடுதலை நாளினை நோக்கி காத்திருக்கும் உலகெங்கும் சிதறியுள்ள தமிழீழமக்கள் அனைவரும் இன்று சிஙகள பௌத்த தேசியவாதத்தின் கொடியகரங்களுக்குள் சிக்கியுள்ள முஸ்லீம் மக்களின் போராட்டம் வெற்றிபெற தங்களது ஆதரவினை பெருமனதுடன் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளையில் தமிழ்மொழியினை தாய்மொழியாக் கொண்டசகோதரர்கள் என்றவகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ்மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறு வரவேற்கப்படுகின்றனர்.
இவ்வாறு தோழமையுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 17, 2013

இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்


சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக சிங்கள இளைஞர் அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிதுள்ளார்.
இதன்பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் அவரது கையை பின்னால் கட்டி வைத்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
ஆயினும் பொது மக்கள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
படுகாயமடைந்த இளைஞரை பொது மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்

 

ஆகஸ்ட் 16, 2013

பெருகி வரும் நிர்வாண திருமணம்: சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்


 
சீனாவில், "நிர்வாண திருமணம்' எனப்படும், புதிய வகை திருமண முறை, வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும், இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 சீனாவில், கடந்த, 13ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பிப்., 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த காதலர்களும், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் பூங்காக்களுக்கு சென்று, காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது அந்நாட்டின், "டிவி' நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. சீன இளைஞர்கள் எவ்வகை திருமணம் செய்ய விரும்புகின்றனர் என்ற வகையில், அந்த ஆய்வு அமைந்திருந்தது. சீனர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் போது, மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு, ஏராளமான வரதட்சணை கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தானியங்களும், ஆடை ஆபரணங்களாகவே தரப்பட்ட இந்த வரதட்சணை, நாளடைவில் நாகரீக மாற்றத்திற்கேற்ப, கார், வீடு என உருமாறியது. இதனால், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்வதில், ஏராளமான பொருட்செலவு ஏற்படுகிறது. இக்கால இளைஞர்கள் பலரும் இதை விரும்புவதில்லை. இதனால், இளைஞர்களில் சிலர், சில ஆண்டுகளுக்கு முன், வரதட்சணை பெறாமல், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், அதிகப்படியான இளைஞர்கள் இந்த புதிய முறை திருமணங்களால் பெரிதும் கவரப்பட்டு, எளிய வகை திருமணங்களை செய்து கொண்டனர். பாரம்பரியத்தில் மூழ்கிய பலரும், இவ்வகை திருமணங்கள், "நிர்வாணத் திருமணங்களே' என, கேலி செய்தனர். முறையான சடங்குகள் பின்பற்றாமல் செய்யப்படுவதால், "ஆடையில்லாத மனிதனுக்கு ஒப்பானது' என, கூச்சலிட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்புக் குரலையும், தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள், இவ்வகை திருமணத்திற்கு, "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டினர்.
 கடந்த சில ஆண்டுகளாக, சீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை திருமணங்கள், நாடு முழுவதும் வேகமாக பரவத் துவங்கியுள்ளன. "டிவி' நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், நிர்வாணத் திருமணத்தை ஆதரித்தனர். இவ்வகை திருமணம் செய்வதால், தேவையற்ற பொருட் செலவு குறைக்கப்படுவதாகவும், பெற்றோரின் மன உளைச்சலை குறைக்க முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "ஆடம்பர திருமணத்திற்காக செலவிடப்படும் தொகையை சேமித்து, திட்டமிட்ட வாழ்க்கை வாழலாம்' என, கூறியுள்ளனர். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவே, வரதட்சணைகள் கொடுக்கப்பட்டதாகவும், இக்காலப் பெண்கள் அதிகம் படித்துள்ள நிலையில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால், வரதட்சணை, பெற்றோர் மீது சுமத்துப்படும் தேவையற்ற சுமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ""புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், ஆடம்பரமற்ற திருமணங்களை பழமைவாதிகள், நிர்வாணத் திருமணம் என கேலி செய்தனர். நாங்கள் அதையே எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, எங்களின் புதிய முயற்சிக்கு "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டியுள்ளோம்'' என, சீன இளைஞர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்
 

ஆகஸ்ட் 14, 2013

புலனாய்வு நிபுணர்களின் உதவியை நாடும் அமெரிக்க



தமது அரசின் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் மேற்பார்வை தராதரங்கள் குறித்து அறிவுரைகளைப் பெற புதிய குழுவொன்றை ஸ்தாபிக்க உள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பெர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
 இக்க்குழுவானது தான் இனங்காணும் திருத்தங்களை இன்னும் 60 நாட்களுக்குள் மீளாய்வு செய்து அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்து அதன் பின் இறுதி அறிக்கையினைத் தயாரிக்கவுள்ளது.
 ஆக்ஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அதிபர் ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளார். அதில் அவர் புலனாய்வுத் தொழிநுட்பங்களுக்களை மீளாய்வு செய்வதற்காகத் தமது அரசு உயர் மட்டக் குழுவொன்றை அமைத்திருப்பதாக பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். அதிபர் ஒபாமாவுக்கு குறித்த குழு தமது முடிவுகளைச் சமர்ப்பித்த பின் இறுதி அறிக்கை 2013 டிசம்பர் 15 இற்கு முன்னரே தயாரிக்கப் படும் எனக் கூறப்படுகின்றது.
 இக்குழுவில் எத்தனை பேர் உள்ளனர் என்றோ அல்லது பங்குபெறுபவர்களின் சுய விபரமோ வெளியிடப்படவில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறையான NSA இன் முன்னால் உறுப்பினர் எட்வர்ட் ஸ்னோவ்டென் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் யாவும் அத்துமீறி பொது மக்களின் தகவல்களை தொலைபேசி மற்றும் இணையத்திலுள்ள முக்கிய தளங்களில் (electronic information) இருந்து திருடி நோட்டமிடுவதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைக் கசிய விட்டிருந்தார். இதன் பின் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியே அதிபர் ஒபாமா இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
 இந்நிலையில் அதிபர் ஒபாமா புதிய உயர் மட்டக் குழுவின் உதவியுடன் மக்களின் சுய உரிமையைப் பாதிக்காத வண்ணம் அதிக சிரத்தையுடனும் நம்பகத் தன்மையுடனும் புலனாய்வுத் திணைக்களங்கள் தொழிற்படும் என உறுதியளித்துள்ளார்
 

ஆகஸ்ட் 12, 2013

தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் உயிர், ஓர் ஆன்ம பலம்


”மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?”
”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா, அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம் படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார் இருப்பா? நான்தான் இருப்பேன். இந்த அடக்குமுறைகள் எல்லாம் மேலும் மேலும் நம்மை வெறியேற்றி, இன்னும் வீரியமாகப் பாயவைப்பதற்கான வேலையே தவிர, வேறொன்றும் இல்லை!”
” ‘பிரபாகரன் இறந்துவிட்டார். அவரின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகுறித்து உங்கள் கருத்து என்ன?”
”என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியவில்லை என்பதே சத்தியம். பயிற்சி எடுக்கும்போதுகூட தலைக் கவசம், புல்லட் ஜாக்கெட் இல்லாமல் என் தலைவன் நின்றது இல்லை. சாக்ஸ் வரை வெடி மருந்து நிரப்பி இருக்கும். குறைந்தது 200 பேருக்கு மேல் அவரைச் சுற்றி எப்போதும் பெட்ரோல் கேனுடன் நிற்பார்கள். ஒருவேளை என் அண்ணன் செத்திருந்தால், அந்தப் பாதுகாப்புப் படையினர் அவரைச் சாம்பலாக்கிவிட்டுத்தான் நகர்ந்திருப்பார்கள். சண்டையிட்டபோது கால் கருகிப்போனதால் எங்கள் அண்ணனுக்குக் ‘கரிகாலன்’ என்கிற வேறொரு பெயரும் உண்டு. ஆனால், அவர்கள் காட்டும் உடலில் கால் எங்கே கருகி இருந்தது? சில விஷயங்கள்ல நீங்கள் கேள்வி எழுப்பாமலே இருந்துவிட வேண்டும். ராஜபக்ஷே சொல்வதை நம்புறீங்க… நான் சொல்றதை நம்ப மாட்டீங்களா? என் அண்ணன் இருக்கும்போது என்ன செய்தோமோ, அதையெல்லாம் இப்பவும் ‘அவர் இருக்கிறார்’னு நினைச்சு செய்கிறோம். பிரபாகரன் என்பவர் ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் உள்ள உருவம்னு நீங்க நினைக்கக் கூடாது. அவர், தமிழ் தேசிய இனத்தின் உயிர்; ஓர் ஆன்ம பலம்! ‘இருக்கிறார்’ என்ற நம்பிக்கையோடு இந்த மக்கள் செயல்படும் போது, அதை அப்படியே விட்டுடணும்! புலிகளிடம் நான் காசு வாங்கிட்டுப் பேசுறேன்னு சொல்றாங்க. அண்ணனை நான் சந்திச்சப்ப அவர் எனக்கொரு கடிகாரம் தந்தார். பிறகு, ‘உன் பாதுகாப்புக்கு வெச்சுக்க’னு ஒரு கத்தி தந்தார். அவ்வளவுதான்! பொணத்தைக் கட்டிப்பிடிச்சு அழுற என் இன மக்கள் எனக்கு பணத்தை அனுப்பிட்டா படுத்துக்கிடப்பான்?”
”இணையத்தில் உங்களை காமெடியனைப் போல சித்திரிக்கிறார்களே?”
” ‘விமர்சனம் என்பது எப்போதும் வெறும் சொற்கள்தானே தவிர; நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல’ – இது என் அண்ணன் பிரபாகரன் சொன்னது. அதைக் கடந்து போயிடணும். தந்தை பெரியார், காமராஜர், என் அண்ணன் போன்றவர்களைப் பற்றி எல்லாம் பேசாததையா என்னைப் பற்றிப் பேசிடப்போறாங்க? பொழுது போகாம தண்ணி அடிச்சுட்டு, சிகரெட் புகைச்சுட்டுப் எழுதிட்டுப் போறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் முன்வந்து ‘சீமான் அயோக்கியன்’னு பேசுங்களேன். அந்தத் துணிச்சல் இருக்காது. ‘அப்படியான எந்த விமர்சனத்துக்கும் பதில் எழுதாதீங்க’ன்னு என் தம்பிகளிடம் சொல்லியிருக்கேன். ‘சீமான் முதல்வராகும் கனவோடு இருக்கிறார்’னு என்னைக் கிண்டலடிக்க அவங்க யாருங்க?”
”என் அடுத்த கேள்வியே அதுதாங்க. ‘நான் முதல்வரானால்…’னு பல இடங்கள்ல பேசுறீங்க. அது அத்தனை எளிதான காரியமா?”
”அதில் என்ன சிரமம் இருக்கு? எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவால் ஆகிட முடியும். ஸ்டாலினால் ஆகிட முடியும்னா, சீமானால் முதல்வராக முடியாதா? விஜயகாந்த் முதல்வராக விரும்பும்போது, சீமான் ஆகக் கூடாதா? இந்த மண்ணின் பிள்ளைகளான எங்களுக்கு, ‘இந்த மண்ணை ஆளும் லட்சியம்கூட இருக்கக் கூடாது’னு நினைச்சீங்கன்னா, அந்த மாதிரி துரோகம், அயோக்கியத்தனம் இந்த உலகத்தில் கிடையாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த நாடு அய்யா நல்லகண்ணுவிடமும் பழ.நெடுமாறனிடமும் இருந்திருந்தால், என்றைக்கோ உருப்பட்டு இருக்கும். பத்து, இருபது பொண்டாட்டிக் கட்டி, ஏகப்பட்டப் புள்ளைங்களைப் பெத்து… எல்லாருக்கும் சொத்துச் சேர்க்குறதுக்கும், ஆத்து மண்ணை 60 ஆயிரம் கோடிக்கு அள்ளி விற்கவும், கமிஷன் வாங்கவுமா நாங்க ஆட்சிக்கு வர்றோம்னு சொல்றோம்?”
”உங்கள் திருமணச் செய்தியைச் சொல்லுங்களேன்..?”
”செப்டம்பர்-8 எனக்குக் கல்யாணம். எனக்கு மனைவியா வரப்போகும் கயல்விழி… முன்னாள் சபாநாயகர், அய்யா காளிமுத்து அவர்களின் மகள். தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் அதிகமாகச் சொன்ன வகையில், காளிமுத்து அய்யா தெரிந்தும் தெரி யாமலும் விடுதலைப் போராட்டத்துக்கு அதிக அளவில் உதவியுள்ளார். அந்த அடிப்படையில் இன விடுதலைப் போராட்டத்தில் கயல்விழிக்கு அதீதப் பற்று. தம்பி பாலச்சந்திரன் இறந்தபோது, திருச்சியில் பட்டினிப் போராட்டம் நடத்தி னேன். அந்தச் சமயத்தில்தான், ‘நான் இன்னார் மகள், சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கி றேன். நானும் உங்கள் இயக்கத்தோடு இணைந்து போராடணும்னு நினைக்கிறேன்’னு கயல்விழி பேசினாங்க. ஒரு பெண் இப்படிப் பேசியது பெருமகிழ்ச்சி, நம்பிக்கையைத் தந்தது. ‘சென்னை வந்ததும் சந்திக்கிறேன்’னு சொன்னேன். ஆனால், வேலைப்பளுவில் மறந்தேவிட்டேன். ‘சந்திக்க லாம்னு சொல்லிட்டு நேரம் தர மறுக்கிறீங்களே’னு மறுபடியும் பேசினாங்க. அதைத் தொடர்ந்து சந்தித்தோம். பேசினோம். புதிதாக என்னைப் பற்றிப் பேசி, புரியவைக்கவேண்டிய அவசியம் அவங்களுக்கு இல்லாமல் இருந்தது. இருவருக் குள்ளும் புரிதல் இருந்தது. ‘ஆணும் பெண்ணும் இணைந்துதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’னு என் தேசியத் தலைவர் சொல்வார். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற இரண்டு பேர் இணைந்துப் பயணிப்பது சரியாக இருக்கும் என நினைத்து இந்த முடிவெடுத்தோம். அப்படித்தான் இந்தத் திருமணம் முடிவானது!”
”எந்த நேரமும் சிறையில் அடைக்கப்படக்கூடிய ‘மாப்பிள்ளை’யை கயல்விழி வீட்டில் எப்படி எதிர்கொண்டார்கள்?”
”எடுத்த எடுப்பில் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவங்க ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்காங்க. நானும் ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்கேன். நடுவில் கேடுகெட்ட சாதிகள் வேற இருக்கு. எல்லாத்தையும் மீறி, பூரண சம்மதத்துக்குப் பிறகுதான் இந்தத் திருமணம் நடக்குது. நெடுமாறன் ஐயா, எங்க அப்பா மணிவண்ணன், எங்க அண்ணன் சந்திரசேகர் எல்லாரும்தான் எனக்காகப் பொண்ணு கேட்டுப் போய் பேசி முடிச்சாங்க. ஏற்கெனவே பலமுறை சிறைக்குச் சென்று வந்தவன்தானே நான். சிறைக்குச் செல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கும் எங்கய்யா பழ.நெடுமாறன், வைகோ அண்ணன் மூவருக்கும் உயிருக்கு ஆபத்துனு செய்தி வந்ததும் கொஞ்சம் பயந்தாங்க. மற்றபடி யாவையும் நலம்!”
‘தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்…இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம்காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?”
”சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள். சாதி மத உணர்வைசாகடிச் சுட்டுதான் ‘தமிழர்’ என்ற உணர்வோடுமேலெ ழுந்து வர்றோம். திவ்யாவுக்குச் சாதி வெறி இருந்திருந்தால், இளவரசனை மணந்து இருக்குமா? இளவரசன் மரணத்தைப் பா.ம.க-வில் உள்ளவங்க எல்லாரும் கொண்டாடிட்டாங்களா என்ன? அவங்களுக்குள்ளும் வருத்தம் இருக்கும். இளவரசனே, ‘திவ்யாவைக் காதலிப்பதற்கு அதிகமா உதவியது வன்னிய நண்பர்கள்தான்’னு சொன்னானே! அதேபோல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வாழும் ஏழு குடும்பங்கள் தர்மபுரியில் இருக்கின்றன. ஆனால், திவ்யா – இளவரசன் காதல் மட்டும் திட்டமிட்டு அரசியல் நோக்கத்துக்காகத் திசைத் திருப்பப்பட்டு இருக்கு. அதை கொம்பு சீவிக் குத்தவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியா? இதுக்கு ‘அறிக்கை விடு, கருத்து சொல், எதிர்த்துப் பேசு’ என்ற சிந்தனைதான் பிழை. அதைச் சரிபண்ணணும்!”
{காணொளி}

மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு :இலங்கை கடல்,,


 இலங்கை கடல் எல்லைக்குள் வந்து டோலார் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றில் பிரபல அமைச்சர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளதாகவும்  இதனடிப்படையில் எதிர்காலத்தில் சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஆரம்பிக்கும் எனவும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்திற்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கும், எஞ்சிய 60 வீதம் அமைச்சரின் இணைப்புச் செயலாளருக்கு சொந்தமான கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனவும் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இரண்டு சீன கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அதனை பிடித்து இலங்கை கடற்படையினர் சீனாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் முக்கியமான அமைச்சர் ஒருவர் சீனாவுக்கு சென்று,  சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், இலங்கை கொடியுடன் மீன்பிடிக்கும் வகையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் டோலார்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கையின் மீன்பிடி தொழிலை கடுமையாக பாதிக்க செய்யும் என இதற்கு எதிராக போராட்டங்களை நடத்த போவதாகவும் இலங்கை மீன்பிடி சங்கங்கள் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 11, 2013

கொல்லப்பட்ட மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை

 
 
வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்காக அரசாங்கமோ அமைச்சர்களோ இதுவரையில் ஏன் மன்னிப்பு கோரவில்லை என அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
படையினரால் கொல்லப்பட்ட மூன்று பேருக்காக அமைச்சர் ஒருவர் மன்னிப்பு கோரியமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரியவில் இராணுத்தினர் நடந்து கொண்ட விதம், வடக்கு கிழக்கில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதனை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தெரிவித்தள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் படையினர், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான ஓர் விழிப்புணர்வாக வெலிவேரிய சம்பவத்தை தெற்கு மக்கள் கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதனை பாதுகாப்புச் செயலாளரும் அரசாங்கமும் ஒப்பு;க் கொண்ட போதிலும் இதுவரையில் யுத்த கால பொதும்ககள் உயிரிழப்புக்காக மன்னிப்பு கோரப்படவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 09, 2013

தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்`??



இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இவ்வாறான வழிமுறையை கையாளும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இந்திய பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அழுத்தங்களை கொடுக்க இந்த அமைப்புகள் தமிழக அரசியல் கட்சிகளை பயன்படுத்தி வருகின்றன.
   
முக்கியமாக பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்ப முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இவர்களில் முன்னணியில் இருக்கின்றார். இதற்கு நிகரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் வீ. ரவிகுமார், இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பத்தில் இந்தியாவைின் தலையீட்டின் முக்கியத்துவத்தை புலம்பெயர் அமைப்புகள் உணர்ந்துள்ளதாக குறித்த இந்தியா ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்தியா அரசுடன் மேற்கொண்ட முனைப்புகள் தமக்கு பாதகமாக அமைந்தது என அவர் கூறியுள்ளார். இந்தியா பிராந்தியத்தில் வல்லரசு நாடுகள் என்பதால் அதனை தவிர்த்து விட முடியாது என்பது உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் வலுவான யோசனையை ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்தியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற யோசனை இவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனையாகும். அதேவேளை இந்தியா அரசு நடு நிலையான புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் அனுகூலமாக அமையக் கூடும் என ஆசிய கல்வியியல் மத்திய நிலையத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் அவர்களின் ஈழம் என்ற கோட்பாட்டை இந்தியா விரும்பாது எனவும் அவர் கூறினார்

ஆகஸ்ட் 08, 2013

: ரஷ்ய பயணத்தை ரத்து செய்தார் ஒபாமா


அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார்.
இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார்.
ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்,

ஆகஸ்ட் 07, 2013

தாயகப் பகுதியுடன், கொழும்பை இணைக்கும் முயற்சியில்

 
 
 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவது தொடர்பாக, சீன அரசு நிறுவனத்துடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ள சீன மேர்ச்சர்ன்ட் குழும நிறுவனத்தின் தலைவர் லீ ஜியாங்கொங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.

இதன்போது, தமிழர் தாயகப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த, வடக்கு-தெற்கு மக்கள் விரைவாகப் பயணம் மேற்கொள்வதற்கு, அதிவேக நெடுஞ்சாலை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

எனவு இந்தத் திட்டத்தை விரைவாக செயற்படுத்துமாறும் அவர் சீன அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப, நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான சாத்திய ஆய்வை சீனாவின் மேர்ச்சன்ட் குறூப் தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனமே, கடந்த திங்கட்கிழமை, திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது

முன்னெச்சரிக்கை நவனீதம்பிள்ளையின் வருகை -


  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இம்மாதம் சிறிலங்கா வரவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் சில விபரங்களை முன்னரே அறிவிக்க வேண்டுமென அவரை சிறிலங்கா அரசு கோரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன.
இந்த கோரிக்கையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
நவநீதன் பிள்ளையின் சிறிலங்கா விஜயத்தின்போது அவர் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அரச சார்பற்ற அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், தமிழர் தாயகப் பகுதிகளில் அவர் பயணிக்கவுள்ள பிரதேசங்கள், அவருடன் வருகை தருவோர் பெயர் மற்றும் விபரங்கள் போன்றனவற்றை அவரது வருகைக்கு முன்னரே வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அறிவிக்க வேண்டுமென கேட்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்காவில் அவர் தங்கியிருக்கும் காலத்தில் அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட எந்த விடயங்களில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 06, 2013

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு!!


யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாவி­தன்­வெளி பிர­தேச மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு உத­வு­மாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.
நாவி­தன்­வெளிப் பிர­தே­ச­மா­னது கடந்த காலப் போர்ச்­சூ­ழலால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். இங்­குள்ள மக்கள் பலர் பல்­வேறு வச­தி­க­ளற்ற நிலை­யி­லேயே வசித்து வரு­கின்­றனர்.
இங்­குள்ள மத்­திய முகாம், சவ­ளக்­கடை, 4ஆம் கிராமம், குடி­யி­ருப்­பு­முனை, வேப்­பை­யடி போன்ற பல கிரா­மங்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், மத்­திய முகாம் உட்­பட பல இடங்­களில் மீளக்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் தொடர்ந்தும் வச­தி­க­ளற்ற நிலையில் இருந்து வரு­கின்­றனர்.
குறிப்­பாக வீட்டு வசதி, வாழ்­வா­தார வசதி, வீதி அபி­வி­ருத்தி, ஆல­யங்­களின் புன­ர­மைப்பு, சிறுவர் அபி­வி­ருத்தி, சுயதொழில் வாய்ப்புக்கள் என வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அம்மக்கள் கேட்கின்றனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக்"



வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்; கலந்துகொள்ளவுள்ளனர்.
முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக பல பாரிய தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதெனவும் தமிழ்க் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும்; ஒன்றிணைத்து வடக்கில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் 11 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்தே யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 05, 2013

குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்க??




மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. வெலிவேரிய பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தாக்குதல்களின் வேதனையை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நன்கு அறிவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் இதனை நல்லாட்சிக்கான பண்பாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பாவி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் இரணுவ அடக்குமுறைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். வெலிவேரிய குடிநீர்ப் பிரச்சினையானது மனிதாபிமானப் பிரச்சினை எனவும், இதனை இராணுவ பலத்தைக் கொண்டு அடக்கிவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினரை விடவும் கலகத் தடுப்பு காவல்துறையினரை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது இராணுவ அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதனை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஆகஸ்ட் 03, 2013

பத்தேகம பொலிஸ் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை



காலி - பத்தேகம பொலிஸ் சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தான் அணிந்திருந்த சாரத்தின் உதவியுடன் கைதி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரலுகட பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு எதிராக காலி மேல் நீதிமன்றில் மனிதக்கொலை வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாணவன் கொலைக்கு அரசாங்கமே பொறுப்பு


வெலிவேரிய மோதலில் பாடசாலை மாணவரான அக்கில தினேஸ் கொல்லப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடங்க அரசாங்கம் இராணுவத்தை ஏவி மேற்கொண்ட தாக்குதலில் 17 வயது பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.
உரிமைக்காக போராடிய மக்கள் மீது இராணுவம் பொலிஸார் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தியதில் நிராயுதபாணிகளாக இருந்த பொது மக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஐதேக பி.சபை உறுப்பினரும் அவரது மகனும் கைது


களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடாவஸ்கடுவ - ரணவிரு மாவத்தையில் வைத்து நேற்று (02) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நடாத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2013

வேட்புமனு நிராகரிப்பு முருகன் குமாரவேலின் –



 தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் சூழ்ச்சியா ?
முருகன் குமாரவேல் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறியுள்ளன. வேட்புமனு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

வேட்புமனுவை தாக்கல் செய்யச் சென்றபோது வேட்பாளார் ஒருவரின் சத்திக்கூற்று பத்திரம் தவறவிடப்பட்டதாகவும் இதனால் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனாலும் தவறவிடப்பட்ட சத்தியக்கூற்று கiதிரையின் கீழ் இருந்து 10 நிமிடத்துக்குள் கண்டெடுக்கப்பட்டு  மீண்டும் ஒப்படைத்ததாகவும் எனினும் அரச அதிபர் அதனை ஏற்க மறுத்ததாகவும் முருகன் குமாரவேல் தெரிவித்தார்.

ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்று வெள்ளிக்கிழமை இறுதி நாள் என்றும் தவறவிடப்பட்ட வேட்பாளரின் சத்தியக்கூற்று நண்பகல் 12மணிக்கு பின்னரே மீள ஒப்படைக்கப்பட்டதால் அதனை நிராகரித்ததாகவும் யாழ் செயலக அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் கூறினார்.

இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறாது என கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையும் வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறுகின்றன. அரசாங்கத்தின் பின்னணியுடன் குறித்த சுயேற்சைக்குழு செயற்படுவதாக யாழ்ப்பாண தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பரிய அறிவித்திருந்தார்

ஆகஸ்ட் 01, 2013

சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவனம்!!

                          
செலுத்தி வருவதாக அறிவித்துள்ளது. தெரனியகல பிரதேச நூரி தோட்டத்தில் அண்மையில் தோட்ட முகாமையாளர் படுகொலை செய்யப்பட்டமை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. தெரனியகல நூரித் தோட்டத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தோட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. குற்றச் செயல்கள் விசாரணை செய்யப்பட்டு உரிய தண்டனை விதிக்;கப்பட வேண்டியது அவசியம் என தூதரகத்தின் தகவல் அதிகாரி ஜூலியன் ஸ்பேவன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கடத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், கள்ளச்சாராயம், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நூரித் தோட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

மனித உரிமை நிலமைகளில் முன்னேற்றம்

ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.இலங்கை  மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகளை கிரமமாக நடாத்துமாறு சர்வதேச நாடுகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் சரியான முறையில் நடாத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2006 ஆகஸ்;ட் 4ம் திகதி மூதூரில் அக்செய்ன் பார்ம் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பல்வேறு ஆணைக்குழுக்களின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளது. மூதூர் தன்னார்வ தொண்டர் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது