18

siruppiddy

ஆகஸ்ட் 27, 2017

போதைவஸ்து கடத்தலை இல்லாதொழிக்க ஒரு வருட அவகாசம் கேட்கும் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையா

இலங்கை கடல் எல்­லையில் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளன. எமக்கு ஒரு வரு­ட­காலம் அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்­திக்­காட்­டு­கின்றோம் என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா சவால் விடுத்துள்ளார்.இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து விரைவில் புதிய கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தா­கவும்
 அவர் குறிப்­பிட்டார்.
கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா நேற்று கண்டி தலதா மாளி­கையில் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன் அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற்­றி­ருந்தார். இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.
ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தளபதி;
இலங்­கையின் கடல் பாது­காப்பில் இலங்கை கடற்­படை அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நாம் எமது கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்தி புதிய கப்­பல்­களை கொள்­வ­னவு 
செய்­ய­வுள்ளோம்.
அடுத்த மாதம் ஒரு கப்­பலை நாம் கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். அத்­துடன் இந்­தி­யா­விடம் இருந்து அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நவீன கப்­பலை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். மேலும் மூன்று புதிய கப்­பல்கள் அடுத்த ஆண்டில் எமக்கு கிடைக்­க­வுள்­ளன. இவை எமது கடல் எல்லை பாது­காப்பை பல­ப்ப­டுத்த நாம் எடுக்கும் முயற்­சி­க­ளாகும்.
எமக்கு கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் உள்­ளது. போதைப்­பொருள் கடத்தல் விட­யங்­களில் நாம் அதிக அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் இந்த கப்­பல்­களை கொள்­வ­னவு செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­களை தடுக்க வேண்­டிய முயற்­சிகள் எம்­மிடம் உள்­ளன. எமக்கு ஒரு வருட காலம் தாருங்கள் நாம் முழு­மை­யாக இந்த செயற்­பா­டு­களை நிறுத்திக் 
காட்­டு­கின்றோம்.
இலங்கை கடற்­படை மீது பல்­வேறு குற்­றங்கள் கடந்த காலங்­களில் சுமத்­தப்­பட்­டன. எனினும் இவை தொடர்பில் நாம் அக்­கறை செலுத்தி வரு­கின்றோம். ஒழுக்கம் என்­பது முக்­கிய அம்­ச­மாகும். இந்த ஒழுக்­கத்தை வைத்­து­க்கொண்டு எதிர்­வரும் காலங்­களில் நாம் எமது கட­மை­களை
 முன்­னெ­டுப்போம்.
நடந்த விட­யங்கள் தொடர்பில் நாம் நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இதில் எவரும் சந்­தே­கம் ­கொள்ள வேண்­டிய அவசியம் இல்லையெனத்
 தெரிவித்த அவர்
இந்­திய கடற்­றொ­ழி­லா­ளர்கள் இலங்கை எல்லை குறித்த தெளி­வில்­லாமல் அத்­து­மீறி பிர­வே­சிக்­கின்­றனர்.
இந்த நிலையில் அவர்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை இந்­திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கைக் கடற்படையுடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஆகஸ்ட் 10, 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பதவியினை துறந்தார்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது அமைச்சு பதவியினை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் 
இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>