18

siruppiddy

மே 29, 2016

நாட்டில் போரின் கொடூரத்தினால் கண்களை இழந்த 282 போ்!!!

கிளிநொச்சியில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை
 பதிவாகியுள்ளது.
யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து
 வருகின்றனா்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர கணக்கெடுப்பின்படி 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை 
பதிவாகியுள்ளது.
இதில் மிகவும் வேதனையான விடயம் இந்த 282 போில் 43 போ் தங்களுடைய இரண்டு கண்களையும் இழந்திருப்பது. அத்தோடு மிகுதி 239 பேரும் தங்களுடைய ஒரு கண்ணை இழந்திருக்கின்றனா். என கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் வெளிப்படுத்துக்கிறது.
இதில் கரைச்சி பிரதேச செயலக பிாிவில் 108 போ் ஒரு கண், 18 போ் இரண்டு கண்களையும், கண்டாவளையில் 49 போ் ஒரு கண், 12 போ் இரண்டு கண்களையும், பூநகாி பிரதேச செயலக பிாிவில் 40 போ் ஒரு கண், 13 போ்’ இரண்டு கண்களையும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவில் 42 போ் ஒரு கண்ணையும் இழந்துள்ளனா்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

மே 25, 2016

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை.உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகள்!?

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொண்டால் மட்டுமே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளதாக, சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி. சலுகையை கடந்த 2006ம் ஆண்டில் இடைநிறுத்தியது.
இதன் காரணமாக இலங்கையின் ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதித் தொழில் துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. அத்துடன் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளையும் இழந்திருந்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் இது தொடர்பில் சாதகமான சமிக்ஞைகளை 
வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் சிங்கள செய்திப் பத்திரிகை ஒன்றில் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணப் பொறிமுறையில் சர்வதேச நீதுிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டால் மாத்திரமே ஜீ.எஸ்.பி. சலுகை வழங்கப்படும் என்று 
ஐரோப்பிய ஒன்றியம் 
நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் முக்கிய அமைச்சர் ஒருவர் அண்மையில் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.
இதன் பலனாக எதிர்வரும் ஜுன் மாதம் 
ஆரம்பிக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைக் கட்டமைப்பில் சர்வதேச நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவு ஒன்று நீண்ட நாட்களுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



மே 15, 2016

தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்!

தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறித்து கருத்துத் 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட சம்பந்தன் இதில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்
 கூறினார்.
இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

மே 12, 2016

முன்னாள் பத்து விடுதலைப் பு11லி உறுப்பினர்கள் விடுதலை!!!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை
புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 
இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 29 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அங்கு புனர்வாழ்வு பெற்று வருவதாக குறித்த புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

மே 02, 2016

யாழில் சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம்!

தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிவளாகத்தை 
அடைந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தாங்கிய ஊர்திகளுடன்,உழைப்பாளர்களை கெளரவிக்கும் ஊர்திகளுடன் தமிழ்த் தேசிய மே நாள் ஊர்வலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தை அடைந்து மே நாள் எழுச்சி கூட்டம் 
இடம்பெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>