18

siruppiddy

டிசம்பர் 26, 2014

இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம்!!

மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் 20 வருட தண்டனை விதிக்கலாம்
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவிநீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துதெரிவித்துள்ள சரத்என் சில்வா,ஜனாதிபதி இவ்வாறான போலியான ஆவணமொன்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது 20 வருட கால சிறைத்தண்டனை விதிக்ககூடிய குற்றச்செயல் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கைச்சாத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம் செய்துவரும் ஆவணம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டங்களின் கீழும் இது ஒரு குற்றமாகும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான போலியான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் மூலமாக அவர் மீது இதற்காக குற்றம்சாட்டலாம்.என அவர் குறிப்பிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 21, 2014

இளைஞர் குழு அட்டகாசம்! மக்கள் விசனம்

பொலிஸார் அசமந்தம்! யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நள்ளிரவு கல்வீசி இளைஞர் குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.இதுகுறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்தது பொலிசாரின் அவரச அழைப்பிலக்கமான 119 க்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் அறிவித்தனர். இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த பொலிசார் வீட்டு உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்தில் வந்து முறைப்பாடு பதிவு செய்தால் மட்டுமே தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதற்கு உரிமையாளர்கள் தாம் நள்ளிரவு நேரம் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது காலையில் வந்து முறைப்பாடு செய்கின்றோம். தற்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த இளைஞர் குழு அப் பிரதேசத்தில் நடமாடும் வாய்ப்புள்ளதால் தேடி பார்க்கும் மாறும் வீட்டு உரிமையாளர்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்க மறுத்த பொலிசார் முறைப்பாடு பதிவு செய்தால் மாத்திரமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.முறைப்பாடு இல்லாமல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து அங்கிருந்து சென்றனர். பொலிசாரின் இந்த நடவடிக்கை வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 19, 2014

அதிக படையினர் சந்திரிக்காவின் ஆட்சியில்தான் கொல்லப்பட்டனர்

.ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உரிமை கோரியது குறித்து கருத்து வெளியிடுகையில்,“போரில் 23ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்திலேயே உயிரிழந்தனர்.
அவரது ஆட்சிக்காலத்தில் தான் முக்கியமான பொருளாதார இலக்குகளான, மத்திய வங்கி, கொலன்னாவ எண்ணெய்க் குதம், கட்டுநாயக்க விமான நிலையம் என்பன தாக்கப்பட்டன.போர் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக இருந்தாலும், கொழும்பிலுள்ள மக்கள் அதனால் பெரிதும் பாதிப்புகளை சந்தித்தனர்.
ரெலிகொம், மத்திய பேருந்து நிலையம், மத்திய வங்கி, மருதானை, கலதாரி குண்டுவெடிப்புகளின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே இதற்கெல்லாம் முடிவு கட்டினார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

டிசம்பர் 18, 2014

தமிழர்கள் 10 பேருக்கு சிறைத்தண்டனை! விதிக்கப்பட்டுள்ளது. !!

ஜேர்மனியில்  இலங்கைத் தமிழர்கள் 10 பேருக்கு   விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும், சுமதி உதயகுமார் என்பவருக்கு, 7 மாதங்களும், கோபாலபிள்ளை ஜெயசங்கர் என்பவருக்கு 8 மாதங்களும், பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 22 மாதங்களும், குமணன் தர்மலிங்கம் என்பவருக்கு 6 மாதங்களும், வைத்திலிங்கம் ஜோதிலிங்கம் என்பவருக்கு 1 ஆண்டும், யோகராஜா சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு 1 ஆண்டும், செந்தில்குமரன் கந்தசாமி என்பவருக்கு 1 ஆண்டும், துஸ்யந்தி அருணாசலம் என்பவருக்கு 9 மாதங்களும், தயாபரன் ஆறுமுகம் என்பவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவர்கள், 32 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் ஐவர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்கள்.

இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம் யூரோவைத் திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த தண்டனை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகவே இருக்கும் என்றும், இதற்கு எதிராக, ஒரு வார காலத்துக்குள் சமஸ்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் பெர்லின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குற்றவியல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதைத் தடுக்கின்ற சட்டத்தின் கீழேயே இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 13, 2014

பாலச்சந்திரன் சினிமாவாகிறது படுகொலை!!!

மீண்டும் !!தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாரிக்கப்படுகிறது. இறுதிப்போரில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளிவந்திருந்தது.
  இந்த நிலையில் தற்போது பி.ஜி;ரவீந்திரனின் இயக்கத்தில் வீரத்தின் மகன் என்று ஒரு படம் வெளிவரவுள்ளது.      இந்தப்படத்தில் அத்வைது என்ற சிறுவன் பாலச்சந்திரனாக நடிக்கிறான். படப்பிடிப்பு நிறைவுபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




டிசம்பர் 11, 2014

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்து தொடர்பில் அதிருப்தி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது அதிருப்தியைவெளியிட்டுள்ளார் அண்மையில் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹியானொன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இது  தொடர்பில் டொன் ரண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
போரின்போது பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் அவர் தமது கருத்துக்களை வெளியிட்டார்.
அவர்களின் தாக்குதல் காரணமாக, இலங்கையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
 ஒரு ஜனாதிபதி வேட்பாளர், 10 அரசியல் .
கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்மன் கதிர்காமர் ஆகியோர் கொல்லப்பட்டமையை டொன் ரண்டல் சுட்டிக்காட்டினார்எனவே கிறீன் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் ரண்டல் கோரிக்கை விடுத்தார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 07, 2014

தமிழர் தொடர்பான நிலைப்பாடும் ராதிகா சிற்சபைஈசனும்!

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனை பொறுத்தவரை 2014ம் ஆண்டு அவரைப் பிரபல்யமாக்கும் ஆண்டாக இருந்து வருகிறது.
ஜனவரியில் இலங்கை விஜயத்தின் போதும், இப்போது பாராளுமன்றப் பேச்சுக் குறித்தும் அவர் பிரபல்யப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனடியப் போர்வீரர்களின் நினைவு தினத்தோடு மாவீரர் தினத்தை ராதிகா ஒப்பிடுவது மிகவும் தவறு என கண்டித்து பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட வார்த்தைப்பிரயோகங்கள் மிகவும் கடுமையானவையாக இருந்தது.
மாவீரர்கள் தினமெனக் குறிப்பிடுவது தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் ஒரு தினமே தவிர அது போரில் இறந்த சகலரையுமோ அல்லது இதர தரப்புக்களையோ நினைவுகூரும் தினமல்ல என்பதை ஊடகங்களே வெளிக்கொணர்ந்து இந்த விவகாரத்திற்குத் தூபமிட்டன.
கனடிய அரசாங்கமோ ஆளும்கட்சியோ என்றுமே தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாற்றமடையவில்லை. அவர்கள் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதில் திடமாக இருக்கிறார்கள்.
தற்பெருமை தேடுவதற்காக தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் பேச்சாளராக இருந்த தமிழர் தங்களது ஏற்பாட்டில் சில தமிழர்கள் தற்போதைய கனடிய ஆட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று சொன்ன தகவலே கனடிய அரசைக் கோபமுற வைத்திருக்கிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 04, 2014

சாம்பல்தீவு பகுதியில் முன்னால் போராளி ஒருவர் கைது!

திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை சேர்ந்த ஸ்கந்தராஜா (32 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கொழும்புக்கு கொண்டுசென்று விசாரணைகளை நடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 02, 2014

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைந்து கொண்ட முறை தவறானது என்று ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் நாள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராகவே, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவினால் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>