புனித வெசாக் தினத்திலாவது ஆயுட்கால சிறைத்தண்டனை அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மனிதவள அபிவிருத்திகள் தொடர்பான நிலையியல் குழுத் தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரக்க நல்லெண்ணத்தையும் மதக் கோட்பாட்டு நற்சிந்தனையாளன் என்பதையும் காட்ட வேண்டிய மிக முக்கியமான நாள் வெசாக்
திருநாள் ஆகும்.
ஆயுட்கால சிறைத் தண்டனை அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் மனைவி இறந்த பின்னர் அவரின் பிள்ளைகள் நிர்க்கதியாகி உள்ளனர்.
இந்த அவலநிலை இன, மத பேதமின்றி சகல இன மக்களாலும் பார்க்கப்பட்டுத் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
இவ்வேளையில் புத்த பகவானின் அருட் போதனைகளை கடைப்பிடிக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி, புனித வெசாக் தினத்தில் அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>