தமிழ் மக்ளுக்கான இன்றைய தேவையான தனியரசையும் அதன் சாத்தியப்பாடுகள்,இடையூறுகள் என கொஞ்சம் அகலப்பார்வையுடன் அலசிப்பார்ப்போம் ஓர் முழமையான தேசிய இனமான நாம் நவீன தேசமாக வளர எமது சொந்தத் தேசிய அரசை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
தேசிய அரசு இன்றி மொழி,இலக்கியம்,ஏனைய இதர துறைகளிலிருந்து வளர்ச்சி அடையமுடியாது மாறாக சொந்த மக்களாலேயே புறக்கணித்து ஒதுக்கப்படும் நிலையே காணப்படும் இதுவே இன்றைய தம்ழரின் நிலை இதில் மாறுபாடான கருத்துக்கள் இருக்கமுடியாது.
ஈழத்தில் தமிழ், சிங்கள இன முரண்பாடு என்பது பன்நெடுங்காலமாக காணப்படும் ஒன்றாகும் இன முரண்பாட்டுக்கான மாபெரும் விதை பௌத்தம் அல்ல பெத்தம் வளர்த்த மாபெரும் துறவிகள் . இது பல பேருக்கு எவ்வாறு என்பது புரியாமல் போகலாம் பௌத்தம் பிறந்தது பாரத தேசத்தில் கௌதம புத்தர் சித்தாத்தராக இருந்த வேளை அவா ஓர் இந்து. அதன் பின்பு அசோகன் தன் சத்துருக்களாக எண்ணி உறவினர்,சகோதரர் எனறு பாராமல் கொன்று குவித்து தாயாதிச் சண்டையில் பெரும் போர்களின் பின் சக்கரவர்த்தியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்அவர் கொடுத்த இராஜதந்திரத் தாக்குதலே பௌத்த மதம் இதன் மூலம் அரசன் எவ் வழியோ குடிகளும் அவ் வழி என சுக்குநூறாய் பிளந்து கிடந்ந பாரதம் ஒன்றிணைக்கப்பட்டது. துன ஆட்சி அதிகார எல்லை எல்லாவற்றுக்குமே பௌத்தம்
அனுப்பப்படடது.பௌத்த மதம் மாறிய எல்லா நாடுகளும் அசோகச் சக்கரவர்த்தியின் நட்பு நாடுகளாகின நட்பு நாடுகள் மேல் யார் கை வைத்தாலும் அசோகனின் மேல் கை வைத்ததாகப் போய் விடும் இதனாலயே பாண்டிய மன்னனுக்குப் பயந்து தேவநம்பியதீசன் பெத்தனானான்.இது ஓர் அரசியல் சாணக்கியம் அசோகனின் காலத்துக்கு பின் சக்கரவர்த்தி ஸ்தானம் ஆட்டம் கண்டது உறங்கு நிலையில் இருந்த இந்துக்கள் விழித்து கொண்டனர் அடக்கி ஆழப்பட்ட அவர்கள் விழிப்புணர்ச்சிசை மக்களிடம் மேற்கொண்டனர் இன்னொரு புறம் பௌத்தம் தீவிர சைவ,வைஷ்ணவ பற்றாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. விகாரைகள் சூறையாடப்பட்டன பௌத்ததுறவிகள் கழுவேற்றப்பட்டனர் இதனால்
நாளடைவில் பௌத்தம் பாரதத்தில் நலிவடைந்து காணாமல் போயிற்று பெரும்பாலான துறவிகள் உயிர் காக்க இலங்கை உட்பட பல நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் இது பௌத்தத்தின் வரலாற்று பக்கங்கள் இதை நாம் நாளடைவில் மறந்து விடுகிறோம் ஆனால் அவர்கள் மறக்கவில்லை தற்போதைய சூழ்நிலையில் இங்கு துறவிகள் எவ்வாறு அரசியல் செய்கின்றனரோ அதே போல் அன்று காணப்பட்ட நிலை பாரதத்தில் பொறுக்க முடியாமல் அழிக்கப் பட்டது இதில் தென்னிந்தியா பெரும் பங்கு வகித்தது அப்பர்,சம்மந்தர் போன்ற தமிழ் நாயன்மார்கள் பௌத்தம்இசமணம் ஆகிய மதங்களுக்கு எதிராக பெரும் பிரச்சாரம் செய்தார்கள். மன்னர்கள் மனம்மாறி மீண்டும் இந்து சமயத்திற்குத் திரும்பினார்கள்.
இதே சம காலத்தில் இலங்கையில் பல இராட்ச்சியங்கள் காணப்பட்டன. சிங்களம் எனபதே அக் காலத்தில் காணப்படவில்லை. சிங்களம் இந்த இடர்பாடுகளின் பின்திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மொழி அதில் பல திராவிட மொழிகளின் கலப்பும் சமஸ்கிரதமும் காணப்படுகின்றது. மொழி உருவாக்கப் பட முன்பே இஙகு இன குரோதத்தை விதைக்ககூடிய விதத்தில் பாரத இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு தம் வரலாற்றை மகா வம்சம் எனும் நூலாக மகா நாமதேரரால் எழுதப்பட்டு பின் வந்த அரசர் காலங்களில் பின்னிணைப்புகளையும் கொண்டமைந்து காணப்படுகிறது. இதில் பல உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சில பல சந்தர்ப்பங்களை
இராமாயன,மகாபாரத, மற்றும் ஜம்பெரும் காப்பியங்களின் தளுவல்கள் காணப்படுகின்றன இதற்கு காரணம் கதாநாயக அந்தஸ்தை பெற்று கொடுப்பதும் நியாயப்படுத்துவதுமேயாகும்.தமிழி மக்கள் தமக்கென வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கத் தவறியிருக்கின்றனர் இதற்கு காரணம் இவர்களின் அரசுகள் அடிக்கடி எதிரிகளால் ஆளப்பட்டதே ஆகும். பல தமிழ் மன்னர்களும் மக்களும் சிங்கள மயப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன இதை இந்திய பார்ப்பனர்கள் போல் இங்கு தேரர்கள் வழிநடத்தினர்.
மகாவம்சத்தின் சாரம் சிங்களவனாக பிறந்தால் உன் எதிரி தமிழன். உனக்காகவே புத்தரால் தேர்தெடுக்கப்பட்ட நாடு இது. என்பதாக அமைகின்றது கதாநாயகனாக துட்டகைமுனுவை முன் நிறுத்துகிறது காரணம் எல்லாளன் எனும் தமிழ் மன்னனை வென்று துட்டகைமுனு இலங்கையை ஆழ்கிறான் எல்லாளன் ஓர் சோழப் பரம்பரை அவன் கொடி புலிக்கொடி. சிங்களவர்கள் தமிழரை புலியாக எண்ணி அழிக்க முனையும் குரோதம் இன்று ஏற்பட்டதல்ல.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும் வரை பல அரசுகளை சில சிற்றரசுகளும் காணப்பட்டது அவர்கள் தம் நிர்வாக திறனுக்காகவும் உள் நாட்டு கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் இன முரண்பாட்டை ஓர் ஆயுதமாக பயன்படுத்தினர் அதனால் அவர்களுக்கு தேவைப்பட்டது ஒன்று பட்ட இலங்கைக்குள் முரண்பாடுகள். சுரண்டலை கை விட்டு வெளியேர வேண்டிய நிர்ப்பந்தம் இரண்டாம் உலக போரினால் ஏற்பட்டது அதனால் மணமுவந்து அவர்கள் கொடுத்த இலவச இணைப்பு இலங்கையின் சுதந்திரம். அது நாட்டின் பூர்வீக குடிகளை அவர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கிச் சென்றது. பின்பு கண்டறிந்த தமிழ் பெரியோர்களின் தாராண்;மையாலும் சிலரின் பதவி மோகத்தினால் ஏற்பட்ட துரோகங்களாலும் தமிழரின் துன்ப வாழ்வு தொட்கதையானது.
தற்போது ஓங்கி ஒலிக்கும் சுயநிர்ணயம்,சுயநிர்ணயஉரிமை எனும் பதங்கள் வௌ;வேறு பொருளுடையன என கணடறிந்தோரால் சுட்டிக்காட்டப் படுகின்றது இதற்கான தமிழ் பதம் ‘தன்னிலை தீர்வுரிமை” என்பதே சரியானதாகும் தன்னிலை தீர்வுரிமை எனபது ‘தனித்து எமது தேசிய அரசை அமைத்துக் கொள்வது அல்லது அதே உரிமையுடன் பிற தேசங்களுடன் இணைந்து ஒன்றிய அரசை அமைத்துக் கொள்வதாகும்”
ஆண்டாண்டு காலமாய் எமது ஒற்றுமை இன்மையின் மூலமேஒடுக்கப் படும் ஓர் இனமாக தமிழ் தேசம் அடையாளப் படுத்தப் படுகின்றது எனவே இங்கு தன்னிலைதீர்வுரிமையின் அடிப்படையில் நாம் தனித்தோ அல்லது இணைந்தோ அரசமைத்துக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். சிங்கள தேசம் ஏகாதிபத்தியவாதிகளாய் எம் தேசத்தினை கைப்பற்றி எமது அரசுரிமையை மறுத்து தனிச் சிங்கள அரசை நிறுவ முயல்கிறது அதை நடைமுறைப் படுத்தியும் வருகிறது.
தமிழராய் இருந்து தமிழ் பேசும் சமூகமாய் மாற்றம் பெற்றுக் காணப்படும் முஸ்லீம் சமூகம் பற்றி வாதபிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகத்துடன் இணைய வேண்டுமெனகுரல் கொடுத்த வண்ணமுள்ளனர் இது ஓர் தற்காலிக அரசியல் நிலைப்பாடாகவே ஆக முடியும் ஒரே விடயம் பல தடைவ புரியப்படாமல் இருப்பது தான் விந்தை முஸ்லீம்கள் என்றுமே தமிழ் சமூகத்துடன் ஒன்றினைக்கப் பட முடியாதவர்கள். எனவே தமிழத் தேசம் மாற்று வழியை தேட வேண்டியது காலத்தின் தேவை. புலனற்ற விடயத்தில் தொடர்ந்து பயணிப்பது கானல் நீராகவே அமையும்.
இலங்கையில் முஸ்லீம் சமூகம் 600 வருடங்களுக்குட்பட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது அடிப்படையிலேயே வியாபார மனோபாவத்தைக் கொண்டு அவர்கள் சமுதாயத்தில் நிலைபெற்றிருக்கின்றனர். அவர்களில் பெரும் பங்கு அதன் அடிப்படையில் வாழ்வியலாக்கப்படுகின்றது. அவர்கள் விரைந்து சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றனா. இந்து சமயக் கொள்கைகளில் இருந்து புறப்பட்ட பௌத்தமும் அதன் பின் தோன்றிய கிறிஸ்தவமும் இறுதியில் தோன்றி நிலை பெற்றதே இஸ்லாமிய மதம். ஆனால் இலங்கை மக்களின் இந்து பௌத்த கலாச்சார விழுமியங்களுக்கு புறம்பான பல விடயங்களை இஸ்லாம் அடிப்படைவாதமாகக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இஸ்லாமியக் கொள்கைகளில் சிறந்த நல்ல விடயங்களும் அடங்கிக் காணப்படுகிறது. அவை மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவை.
அவர்கள் இலங்கைக்கு எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அதை இன்னும் திறம்படக் கையாளுகின்றனர் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக இன்னும் மாற்றம் பெறவில்லை. இங்கு மாத்திரமே அவர்கள் தம்மை முஸ்லீம்கள் என தனித்து அடையாளப்படுத்துகின்றனர் மொழி
அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை தேவைப்படின் அவர்கள்
தமது மொழி உருது அல்லது அரபு என கூறப்பின்நிற்பதில்லை. ஏந்தச் சமூகம் அவர்களை அரவணைத்ததோ,வாழவைத்ததோ தம் மத்தியில் குடிப்பரம்பலை ஏற்படுத்தியதோ அந்தச் சமூகத்துடன் இணைந்து வாழத் தயாரில்லை முஸ்லீம் சமூகம். காரணம் தமிழர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதே. இது பூர்வகுடிகளான தமிழர் நிலையை கேள்விக்குட்படுத்தியதோடு பல வரலாற்றுத் தவறுகள் நேரவும் வழிசமைத்தன. தற்போதைய நிலையில்
முஸ்லீம்கள் தமிழ் மொழியில் இருந்து மொழி மாற்றம் பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. இவை தமிழர்,முஸ்லீம் இனங்கள் இணைந்து ஓர் சமூகமாகச் செயற்படும் செயல்திறனை இல்லாமல் செய்கின்றன. ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்களாகக் காணப்படும் நாம் ஒடுக்கும் வல்லாதிக்கத்துக்கு எதிராக ஒன்றுபடும் திறனற்றிருப்பதால் தனி வழி செல்வதே சாலச்சிறந்ததாகும். ஓர் இனத்தின் எழுச்சி மற்றைய இனத்தை எழுச்சியுற வைக்க முடியாது என்பது எம் அனுபவத்தின் உண்மை எனவே’தன் குழந்தையை அவளே பெற வேண்டும்” எனும் முது மொழிக்கேற்ப தமிழினம் செற்பட வேண்டும்.
ஈழ விடுதலைப் போரினால் தோற்றம் பெற்ற இயக்கங்களின் எண்ணிக்கை முப்பதுகளிற்கு அதிகம் அவற்றில் பல அரச வங்கிகளையும் தனியார்,பொதுச் சொத்துக்களையும் கொள்ளையிட்டு நாட்டை விட்டு வெளியேறின சுக போகங்களுக்காக. நிலைத்து நின்ற ஒரு சில இயக்கங்களும் துரோகங்களின் மூலமும் சகோதர யுத்தத்தாலும் அழிந்தன சில சிங்கள இனவாத அரசுடன் ஐக்கியமாகின இதன் மூலம் தமிழரின் போர்ப் பலம் சிதைக்கப்பட்டது. இவற்றில் எதையுமே உருப்படியாகச் செய்யாத இயக்கங்களும் இருக்கின்றன. அரச துதிபாடிகளாதக இருந்து கொண்டு தமிழ் மக்களை கொள்ளையிடல் கடத்தல் கப்பம் என மேலும் மேலும் துன்பத்திற்குள் தள்ளிவிடுகின்றனா.; இறுதி வரை தமிழர் விடிவிற்காய் போராடி அதற்காக அன்னிய சக்திகளின் பேருதுவியில் தமிழர் புல்லுருவிகளின் காட்டிக் கொடுப்புடன் சிங்கள இனவாத அரசினால் தமிழர் பெருவீரம் முள்ளிவாய்காலில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.
மீண்டும் தலமைத்துவ வெற்றிடத்துக்குள் தமிழர் தள்ளிவிடப்பட்டுள்ளனர் இதனை சாக்காகப் பயன்படுத்திப ல குழுக்களாக மீண்டும் சகோதர யுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர் ஒரு சில மேதாபிகள். சுpங்கள அரசாங்கத்தின் ஊடுருவல் மூலம் புலம் பெயர் தமிழர் ஒன்றிணைவை பிரிவினையின் மூலம் அழிக்கும் அல்லது தலைமைததுவ ஒருங்கிணைவை தடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப் பட்டு வருகிறது. எனவே தற்போதைய தேவை கொள்கை கோட்பாடுகளுடன் கூடிய தளம்பல் நிலையற்ற இராஜதந்திர முதிர்ச்சியை பேனக்கூடிய தமிழர் தேசிய விடுதலையில் வேட்கை கொண்ட ஓர் தலைமைத்துவம்.
தமிழர் பிரதிநிதிகளாக வடகிழக்கில் மட்டும் முடங்கி விடாது இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றுபட வேணடியது மிக முக்கியமானதாகும் இதற்குத் தற்போதும் ஒரு சில கட்சிகள் தயாராகவே இருக்கின்றன. அல்லாது முரன்பட்டு அரச துதிபாடும் கட்சிகள் இருப்பின் அவர்கள் செல்வாக்கு செலுத்தும் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை முன நிறுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப் படாத எந்தவொரு தமிழ் கட்சியோ தனிநபரோ தேர்தலில் வெற்றியீட்டாத ஓர் நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழர் தரப்பு தேர்தலைச் சந்திக்குமெனில்
அது தான் தமிழ் மக்களுக்கான ஓர் உயரிய அங்கிகாரமும் வரவேற்பை பெறுவதுமாகவும் அமையும். அது தன்நிச்வையாகவே தமிழரை எதிர்கட்சி வரிசையில் உட்காத்துவதோடு ஒன்று பட்ட ஓர் இலங்கைக்குள் தேசிய அரசை அமைப்பதற்கான முதற் படியாக அமையும் தமிழர் குடிப்பரம்பலை மட்டுப்படுத்தி விகிதாசார முறைமையில் தமிழரை அடிமைப்படுத்தும் நோக்கில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ள படுகின்றன. பரவலாக திரை மறைவில் எம்மவர்களும் இதற்கு உடந்தையாக்கப் டுகின்றனர் இளஞர்கள் நாட்டை விட்டு புலம் பெயர வைப்பதும், காணாமல்போதல், சிறையிடுதல் கட்டுப்பாடுகளுக்குள் இரானுவ பிரசன்னத்தின் மூலம் மக்களை முடக்கி வைத்தல்,பொருளாதார மூலங்களை இராணுவம் கைப்பற்றி மக்களை நழிவடைய செய்தல் காணி அபகரிப்பு எனவும் குடும்பகட்டுப்பாடு முறை மூலம் இனப்பெருக்க விகிதத்தை குறைத்தல் என பல வழிகளிலும் இனவெறி அரசு தமிழ் மக்களின் இனப்பரம்பலை அழித்தும் நில அபகரிப்பின் மூலமும் தமிழர் தேசம் விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
கோசங்களை விடுத்து திட்டமிட்ட சீறிய நடவடிக்கைகளை தமிழ் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும் போரில் பிடியில் இருந்து உடுத்த உடையுடன் உயிர் தப்பி வந்த மக்களின் மேல் அரச, தனியார் வங்கிகள,நிதிநிறுவனங்கள் என்பன பெரும் விளம்பரத்தின் மூலம் கடன் சுமையை ஏற்றி அவர்களை உள்ளதையும் இழக்கசசெய்திருக்கின்றனர். தமிழர் பிரதேசங்களில் ஏராளமான சிங்கள மொழி உத்தியோகத்தர்களை நியமித்து அவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அழித்து சிங்களவர்களுக்கு வேலை வாய்ப்பு வளங்கப்படுகிறது இதன் மூலம் தமது சொந்த நிலத்தில் தமக்கான வேலைவாய்ப்பை பெற முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றது. அதிகார பீடத்தை தமிழர்களுக்கு வளங்க சிங்களம் எப்போதும் தயாராக இல்லை சிங்கள மொழி திணிப்பு சீராக நடைபெறுகின்றது கலாச்சாரம் சீரழிக்க படுகின்றது புராதான முது சொத்துக்கள் சூரையாடப் படுகின்றன இவை எல்லாவற்றுக்கெதிராகவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட எதி;ர்ப்;பியங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழர் பகுதி;யில் தாய்மொழியின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் குறுகிய காலத்தில் இன கலப்பின் மூலம் தமிழர் பூர்வீக நிலங்கள் மட்டுமல்ல தமிழே கரைபடிந்து காணாமல் போய் விடும்.
தலைவர்கள் எதிரிகளை விமர்சிப்பதை விடுத்து தமிழர் வரலாற்றை பேச வேண்டும் பேசாது விடுவதால் ஏற்படும் பெரும் தவறே இன்றைய எமது நிலை அதிகப்படியான மக்களுக்கு கடந்த கால வரலாறுகள் தெரிந்திருக்கவில்லை என்பது நிஜம் எதற்காக போராட்டம் ஆரம்பமானது மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போர் ஏன் என்பது சரியாக இலங்கை வாழ் தமிழ் மக்களாள் புரிந்து கொள்ளப் படவேயில்லை இது ஓர் வரலாற்று குறைபாடே இராவணனை கூட சிங்களவர் உரிமை கோறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். விஜயன் பாரதத்தில் இருந்து புலம் பெயர்ந்து குவேனியை மணந்து குவேனியின் நாட்டை ஆட்சி செய்தான் என்பதை பலர் அரியவில்லை. சித்தாத்தரும்,விஜயனும் ஓர் இந்துக்கள் அடிப்படையில் பௌத்த மதமும் துறவிகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பதை தமிழரும் சிங்களவரும் உணரும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று இனப் பிரச்சனை காணாமல் போயவிடும் நவீனயுகத்தில் அரியாமையில் திளைக்கும் மக்களை விழிப்படைய செய்வதும் அதற்கெதிராக அணிதிரட்ட வேண்டியதும் மக்கள் தலைவர்களின் கடமை.
சிங்கள இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து அதற்காக அகிம்சை வழியில் போராடி சிறை சென்றார்கள் என கடந்த இரு தசாப்தங்களில் எந்தவொரு தமிழ் முஸ்லீம் தலைவர்களையும் காணவில்லை அப்படி ஒரு நிலை ஏற்படுமிடத்து அரசாங்கத்துடன் சமர போக்கை கையாளவே விரும்புகின்றனர். அகிம்சை என்பதும் ஓர் ஆயுதம் தான் அது உரத்து குரல் கொடுப்பதும் பின் ஏகாதிபத்தியத்துக்குள் ஐக்கியமாவதும் அல்ல. ஆனால் எம் தலைவர்கள் இதையே ஓர் இராஜதந்திரமாக காண்பிக்க முயல்கின்றனா. மக்களை ஏமாற்றுவதிலேயே இவர்களின் ஆயுள் முடிந்து விடுகின்றது மக்கள் மீண்டும் மீண்டும
சூனியத்துக்குள்ளேயே தள்ளிவிடபட படுகின்றனர்.
இங்கு வேறு பல விடயங்கள் என்னால் தவறவிடப் பட்டிருக்கலாம் அவற்றை ஆராய இந்த பந்தி மிக நீண்டதாக அமைந்து விடலாம் எனவே ஓரளவேனும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தமிழர் தேசிய விடுதலையை விரைவு படுத்த பல் தேசிய அரசில் இருந்து பிரிந்து சென்று தனியரசை அமைத்தல் அல்லது அதே உரிமையுடன் சமத்துவ அடிப்படையில் பிறதேசிய இனங்களுடன் கூட்டரசில் நீடித்தல் எமது உரிமையாகும் இதை அடையக் கூடிய திறன்,பலம்,இராஜதந்திரம்,உளவுறன் கொண்ட மக்களையும் வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தையும் ஏற்படுத்தி கொள்வதே எம் முன்னே உள்ள ஒரே தெரிவு அதன் பின்பு தான் ஏனையவை எல்லாமே.