18

siruppiddy

மார்ச் 31, 2015

தமிழ்மக்களுக்கு சந்திரிகா தலைமைகுழு தீர்வு காணும் ???

சந்திரிகா தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு தமிழ்மக்களுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் - இரா.சம்பந்தன்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான எல்லா விபரங்களையும் அவரிடம் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இந்த பிரச்சினைகள் அர்த்தபூர்வமான வகையில்,உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
1994ம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க அதிபராகப் பதவியேற்ற போது, தமிழ்மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை கொண்டிருந்தார்.
அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளையும் ஆரம்பித்திருந்தார். எனினும் அதை வெளிப்படையாக காண முடியவில்லை.
முன்னைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து, அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
சிங்கள மக்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள், தமிழ்மக்கள் பெரும்பான்மையாக அவரை ஆதரித்திருந்தனர். அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியினால் எல்லோரும் நன்மை பெற வேண்டும்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மதிப்பளிப்பார் என்று நம்புகிறேன். அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதில் நாம் தெளிவான கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான அரசியல்தீர்வு காணுமாறு அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக சிறிலங்காவிடம் வலியுறுத்தி வருகிறது” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 29, 2015

தாக்குதலுக்கு ஆளான இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி மரணம்!!!

இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா (வயது 40). தொழில் அதிபர். கொழும்பில் இருந்து 215 கி.மீ. வட கிழக்கே உள்ள பொலன்னருவா என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கும் அவரது நண்பரான லக்மல் என்பவருக்கும் 26–ந்தேதி இரவு ‘திடீர்’ தகராறு ஏற்பட்டது. இதில் பிரியந்தா தலையில் லக்மல், கோடரியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவருக்கு முதலில் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கொழும்பு நகருக்கு விமானத்தில் கொண்டு 
செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை கொழும்பு நகரில் போலீஸ் செய்தி தொடர்பாளர் ரூவன் ஞானசேகரா வெளியிட்டார்.
இலங்கை அதிபர் சிறிசேனா, சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
லக்மல் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 8–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 27, 2015

இடைநிறுத்தப்பட்ட உதவிகளை மீண்டும் வழங்க தீர்மானம்!!!

மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவுக்கான உதவிகளை, அமெரிக்கா மீண்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சி சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்படவில்லை. இதனால் அமெரிக்காவில் பல உதவிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

புதிய அரசாங்கம் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது.
எனவே புதிய அரசாங்கத்துக்காக இடைநிறுத்தப்பட்ட உதவிகளை மீள வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



மார்ச் 25, 2015

ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்

 
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடமும் லங்கா பத்திரிகை நிறுவனத்திடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பி வைத்தார்.
தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காகவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பியுள்ளார்.
அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை களங்கப்படுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் லங்கா பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பெப்ரவரி 12ம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள செவ்வியில், அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசியலுக்கு வந்ததன் பின்னரே வீடு வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை மறுத்து தனது சொத்துக்களை பிரகடனப்படுத்திய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் கோத்தபாயவும் தனது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டுமென ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
கோத்தபாய அதனை நிறைவேற்ற தவறியமையினாலேயே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதத்தினை அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை துறைமுகப் பணிகளுக்காக அமைச்சர் ரவியினால் 200 வாகனங்கள் சேவையிலீடுபடுத்தப்படப் போவதாக போலியான தகவல்களை லங்கா பத்திரிகை வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 21, 2015

அரசாங்க செயலணியும் பிரசன்னமாக வேண்டும்

  அரசாங்கத்தினால் வடமாகாண்தில் குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அரசாங்கத்தின் காணி விடுவிப்பு செயலணியும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வசாவிளானில் பொது மக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், உண்மையில் அங்கு குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் நேற்று தங்களின் காணிகளை பார்வையிட சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தனர்.
இந்த நிலையில் காணிகளை விடுவிக்கும் போது காணி விடுவிப்பு செயலணியும் குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, உண்மை நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்று இந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமருக்கோ, ஜனாதிபதிக்கோ இங்கு விடுவிக்கப்படும் காணியின் தன்மை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்த நிலையில் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள செயலணி, இந்த பகுதிக்கு விஜயம் செய்து விடுவிக்கப்பட்ட காணிகளை அவதானிக்கும் பட்சத்தில், அது குறித்த உண்மைத் தன்மைகளை புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறியு.ள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 18, 2015

தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.. காணொளி,


உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - ஓவியர் சந்தானம்         ஜெனீவா நோக்கி அறைகூவல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பழைய தேர்தல் முறைமையிலேயே புதிய தேர்தல் முறைமை

19ம் அரசியல் திருத்தச் சட்டத்துடன், புதிய தேர்தல் முறைமையையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால் பழைய தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையை அமுலாக்குமாறு பல்வேறுத் தரப்புக்களினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் புதிய தேர்தல் முறை அமுலாக்கப்பட்டால் 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தவும், ஆனால் புதிய தேர்தல் முறைமைக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்
 கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு??'

  யாழில் இன்று  சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
இச்சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில், 
ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் கேட்டிருந்தார்கள்.
குறிப்பாக சூழ்நிலைகளில் மாற்றம் நிலவுகின்றது என்பதனை நாங்கள் கூறியிருக்கின்றோம்.
அதற்கு அவர், சற்று தாமதமாகவேனும் சூழ்நிலையும், மனோநிலையும் மாற்றமடைந்தால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என கூறினார்.
மேலும் நாங்கள் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சினைகள் குறித்த எடுத்துக்காட்டியிருந்தோம்.
அதனை அவர்கள் ஒத்துக்கொண்டதோடு. அவை தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
மேலும் சுவிஸ் அரசாங்கம் வடமாகாணத்தில், மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பிலும் எடுத்துக்காட்டியதுடன், தங்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? என கேட்டிருந்தார்.
அதற்கு நாங்கள் திறன் விருத்தி தொடர்பில் 
சில தேவைகள் இருப்பதை கூறியிருந்தோம். அந்தவகையில் எமது கோரிக்கையினை தாம் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியிருக்கின்றார்கள். மேலும் இந்த நாட்டில் அமைதியும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், தாம் பார்ப்பதாகவும் எதிர்காலம் மகிழ்ச்சியானதாக அமையும் எனவும் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



மார்ச் 14, 2015

ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள்

 
ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு  , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில்
 எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 09, 2015

அடுத்தவாரம் ஜெயகுமாரிக்கு விடுதலை?

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சிறிலங்கா விஜயத்தை முன்னிட்டு அவர் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மோடிக்கு காண்பிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 07, 2015

அமெரிக்கா நம்பிக்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாம்!

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை  நிறைவேற்றும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசாங்கம் மனித உரிமைப் பேணல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள்
 நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தலைமையேற்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம்  தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறிலங்காவுக்கு ஊடகவியலாளர் சுனந்த மீண்டும் !!!

கடந்த அரசாங்க அட்சிக்க் காலத்தில் விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டை விட்டுச் சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இம்மாதம் மீண்டும் 27ஆம் திகதி சிறிலங்கா திரும்புகிறார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று இவர் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 06, 2015

சர்வதேச அரங்கில் மங்கள சமரவீர சொன்னதை செயலில் காட்ட வேண்டும்-

 ஊடகவியலாளர் சுனந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகள் மத்தியில் கூறிய விடயங்களை செயல்படுத்தி காட்ட வேண்டும் என இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
ஜெனிவா ஐ.;நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை தொடர்பாக கேட்ட போதே சுனந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 04, 2015

அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை???

பசில் ராஜபக்சவை அழைத்து விசாரணை நடத்துவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என குறித்த அரசாங்கத்தின் 
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 02, 2015

யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர்???

சிறிலங்காவின் தமது அடுத்த யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த தமது ஆவணப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவை சென்றடையவில்லை.
இந்த நிலையில் அடுத்து வெளியாகவுள்ள ஆவணப்படும்
, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைச் சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு, சிங்கள மக்களின் ஒத்துழைப்பும், புரிதலும் முக்கியமானதாகும்.
மகிந்த அரசாங்கத்தின் ஊழல்களை அறிந்து கொண்ட சிங்கள மக்களை அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார்கள்.
அதேபோன்று இறுதி யுத்தத்தில் உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் இடம்பெற்றன? 
என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொண்டால், அவர்களும் தமிழர்களுக்கு ஆதரவான சக்தியாக மாறுவார்கள்.
எனவே தாம் தயாரித்துள்ள அடுத்த ஆவணப்படம் சிங்கள மொழியிலும் உருவாக்கப்படுவதாகவும், அத்துடன் சிங்களவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்படுவதாகவும் கெலம் மெக்கரே தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>