18

siruppiddy

ஜூன் 25, 2014

விடுதலைப்புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள்

1986ஆம் ஆண்டளவில் யாழ் கோட்டை சிங்கள இராணுவ முகாம் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக இருந்தது மட்டுமன்றி,அடிக்கடி அங்கிருந்து எறிகணைகளை ஏவி, மக்களைக் கொன்று குவித்து வந்தது சிங்கள இராணுவம்.
அதனால் ,புலிகள் அந்த முகாமைச் சுற்றி நான்கு புறமும் காவல் போட்டிருந்தனர்.பல சந்தர்ப்பங்களில் கோட்டை முகாமில் இருந்து கனரக வாகனங்களுடன் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வெளியில் இன அழிப்பு நோக்கத்துடன் வருவார்கள்.அப்போது கோட்டை வாசலில் வைத்தே புலிகள் அவர்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடாத்தி மீண்டும் உள்ளே அனுப்பி விடுவர்
தளபதி கேர்ணல் கிட்டு தலைமையில் நடந்த அந்த தாக்குதல்கள் மறக்க முடியாதவை-.வீரம் செறிந்தவை.அப்படியே போய்க் கொண்டிருந்தபோது,86இன் நடுப்பகுதியில் எமது படைப் பிரிவுக்கு வெளியில் இருந்து வந்து சேந்தது 50 கலிபர் என்னும் நவீன
தாக்குதல் துப்பாக்கி ..ஓரளவு பதிவாக பறக்கும் உலங்கு வானூர்திகளை குறிபார்த்து சுட்டால் பெரும் சேதம் விளை விக்ககூடியது ..சிலவேளை குறிப்பிட்ட இடத்தில் சுட்டால் உலங்கு வானூர்தி தீப்பிடிக்கவும் கூடும் .பின்னாளில் அதனால் பல இழப்புகள் இலங்கைப் படைகளுக்கு ஏற்பட்டதுண்டு .
இப்படியிருக்கும்போதுதான் 50 கலிபரின் துணையோடு கோட்டைக்குள்- இறங்கி உலங்கு வானூர்தி மூலம் உணவு, ,ஆயுதங்களை விநியோகம் செய்த உலங்கு வானூர்திகளை இறங்க விடாமல் தொடர்ந்து தாக்கி கோட்டை இராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கும் தாக்குதல்களை தளபதி கிட்டு போராளிகளுடன் சேர்ந்து தொடங்கினார்
 அன்றுமுதல் உலங்கு வானூர்திகள் ,குண்டு வீச்சு விமானங்கள் என்பன கோட்டையை சுற்றியிருந்த புலிகளின் நிலைகளின் மீது பாரிய தாக்குதல் நடாத்தி விட்டு கோட்டைக்குள் இறங்க முயற்சி செய்தன…ஆனால்
பல நாட்கள் ஆகியும் அது முடியவில்லை இறுதியில் கப்டன் கொத்தலாவலை பணிந்தார்..தமது இராணுவத்தினர் குடிநீர்,நல்ல உணவின்றி-சமைக்க விறகு இன்றி தவிப்பதாகவும்,முற்றுகையை எடுத்து விடும்படியும்,தளபதி கிட்டுவை வாக்கி டாக்கி’ மூலம் கேட்டுக் கொண்டார்.ஆனால், கிட்டு முற்றுகையை எடுக்கவில்லை ,அதற்கு
 பதிலாக,ஒரு லாரியில் விறகு குடிநீர்,பாண்(ரொட்டி ) கோதுமை மாவு,போன்றவற்றை எமது போராளிகள் மூலம் அனுப்பி வைத்தார். அதற்காக நன்றி சொன்னார் கப்டன் கொத்தலாவலை. .
பின்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட போது ,, கப்டன் கொத்தலாவலை யாழ் நகரில் இருந்த எமது முகாமுக்கு தனது ஒரு சில இராணுவத்தினருடன் வந்து தளபதி கிட்டுவைச் சந்திக்க விரும்பினார்.ஆனால் அப்போது கிட்டு அங்கே இல்லை ..தனது காலில் ஏற்பட்ட பெருங் காயத்துக்கு சிகிச்சைக்காகவும்,செயற்கைக் கால் போடும் நோக்கத்துடனும் தமிழ் நாட்டில் இருந்தார்.அப்போதுதான் கப்டன் கொத்தலாவலை பின்வருமாறு என்னிடமும் வேறு சிலரிடமும் சொன்னார்..”புலிகள் பயங்கர வாதிகள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தை முறியடித்தவர் தளபதி கிட்டுதான்…மனச் சாட்சியும், மனித நேயமும் உள்ளவர்கள் புலிகள்”என்று சொல்லி பாராட்டினார்..சில வருடங்களில் கப்டன் கொத்தலாவலை இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு போய் விட்டார்.நினைவில் இருந்து அழியாத நாட்கள்
 அவை !
 

ஜூன் 24, 2014

கனடா ஜெனிவாவில் முன்வைத்த குற்றச்சாட்டு - இலங்கை நிராகரிப்பு!

வடக்கு பகுதிகளில் உள்ள பெண்களை இலக்கு வைத்து படையினரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக கனடா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வசித்து வரும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் துன்புறுத்தல்களை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து கனடா குற்றச்சாட்டை முன்வைத்தது. பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிராக இலங்கை படையினர் பாலியல் துன்புறுத்தல்களை ஆயுதங்களாக பயன்படுத்துவதாக கனடாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதி இதன்போது குறிப்பிட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கை முற்றாக மறுத்துள்ளது. சாட்சியங்கள் எதுவும் இன்றி இவ்வாறு எதேச்சையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தொடர்பில் கனடா சிந்திக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் கனேடிய அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மற்றைய செய்திகள்

ஜூன் 21, 2014

இலங்கைக்கு ஐ.நா விசேட பிரதிநிதிகளைஉடன் அனுப்பி வையுங்கள்!

ina0
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ, இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய் நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நேற்று மாலை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரமாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் கூறியவை வருமாறு:
அண்மையில் அளுத்கமை, தர்கா நகர், பேருவளை, சீனன்கோட்டை மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத வன்செயல்களின் பின்னணியில் அமைந்த பல விடயங்களைத் தெரிவித்திருக்கிறேன். மக்களை ஆத்திரமூட்டி, வன்செயல்களை தூண்டிய இனவாத அமைப்புகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை அவற்றை மேற்கொண்டோருக்கெதிராக குறிப்பாக பொலிஸாரும்,அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையை பற்றி சுட்டிக்காட்டி, இவ்வாறான வன்செயல் புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் பின்புலம் பற்றி விளக்கம் அளித்தேன்.
மற்ற சமூகங்களை இழிவுபடுத்தி மோசமான வார்த்தை பிரயோகங்களை கையாண்டு, வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுவோரை தண்டனைக்குரிய குற்றத்தின்கீழ் கைது செய்வது தொடர்பில் ஏற்கனவே தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தங்களை கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்ற குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டும் என்பதை கூறியதோடுமட்டுமல்லாமல், பயங்கரவாத தடைச்சட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே இருக்கின்ற பின்னணியில், அரசு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் இன்று குறைந்து வருகின்ற அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட மூலத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருகின்றமை பற்றியும் கூறப்பட்டது. அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைபிடிப்பார்கள் என்ற தோற்றபாடு இருக்குமானால், நாங்கள் தனிப்பட்ட விதத்தில் அதற்கான முறைப்பாடுகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகின்றோம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறோம். தொடர்ந்தும் நடந்து வருகின்ற சம்பவங்கள் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான விடயத்தில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற விடயத்தில் காணப்படும் தாமதங்கள் அவதானத்தை மீண்டும் திருப்பியுள்ளன.
மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இவ்வாறான இனவாத அமைப்புகளுக்கு கூட்டம் நடத்த தடை உத்தரவு விடுத்திருந்த பின்னணியில், அந்நீதிமன்றத்தில் காவல் புரிந்த பொலிஸார் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் பாரதூரமானது. மிகக் குரூரமான முறையில் அவர்களது அங்க லட்சணம் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது சட்டதுறைக்கு ஒரு சவாலாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியை கேள்விகுறியாக்கியிருக்கிறது. இவற்றுக்கு தூண்டுகோளாக அமைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும். யாருக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் இவ்வாறான படுமோசமான பாதகச் செயல்களை செய்பவர்களின் பின்னணியில் இந்த விடயத்தில் மோசமான வார்த்தைகளை பேசியவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும்.
எனவே இவ்வாறான செயல்கள் இந்த அரசாங்கம் எந்தத் தரப்பினருக்கும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கும் பின்னணியில், அது வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல், நடைமுறையில் காட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிறது. இது குறித்த நடவடிக்கைகள் தாமதமடையுமானால், நீதியமைச்சர் என்ற முறையில் என்மீதுள்ள நம்பிக்கையும் பாதிப்படையும் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
வட்டரக்க விஜித தேரர் என்பவர் பொதுபல சேனா அமைப்புக்கெதிராகவும், அதன் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பகிரங்கமாக பேசி வந்த நிலையில், ஏற்கனவே அந்தத் தேரரால் அச்சுறுத்தப்பட்டு பின்னர் இப்பொழுது படுகாயங்களுடன் பாதையோரத்தில் புதருக்குள் வீசியெறியப்பட்டிருந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் பின்புலமும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறேன்.
அளுத்கமை சம்பவங்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட சூத்திரதாரிகள் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறேன். என்னிடத்தில் ஐ.நா. உயரதிகாரிகளினால் பல்வேறு கோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்ட பொழுது, விடயங்களை மிக தெளிவாக அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். ஏற்கனவே நாங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு இவ்வாறான முன்னைய சம்பவங்கள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்பித்தமை விமர்சனத்துக்கு உரியதாக இருந்தது. ஆனால், அவ்வறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தற்பொழுது மிக மோசமான வன்முறைகளுக்கு உரிய அம்சங்களாக மாறியிருக்கின்றன என்பதையும் அவர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். குற்றவாளிகளை நீதிமன்றங்களின் முன் கொண்டுவந்து உரிய தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் என்னைச் சந்தித்த உயர் அதிகாரியிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
அத்துடன் ஐ.நா. சபையின் சமய நல்லிணக்கம் சம்பந்தமான மற்றும் சிறுபான்மையினர் சம்பந்தமான விசேட பிரதிநிதிகள் இருவர் இங்கு வருவதற்கு அவசரமான ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டிருக்கிறேன் இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி எம்.பி., கட்சியின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான நஸீர் அஹமட், கல்முனை மாநகரசபை மேயர் நிஸாம் காரியப்பர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அமைச்சரின் சட்ட ஆலோசகர். எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






மற்றைய செய்திகள்
ina ina0
மற்றைய செய்திகள்

ஜூன் 20, 2014

யுத்தம் தமிழினத்துக்கு எதிரானது அல்ல மஹிந்த...

இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கு எதிரானது அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்சேவை ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் நாகோவ் இன்று சந்தித்து பேசினார் .இந்த சந்திப்பின் போது 2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜனாதிபதி ராஜபக்சே விவரித்தார்.
அப்போதுதான், தாங்கள் நிகழ்த்தியது தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே. போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக் குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று மஹிந்த ராஜபக்சே கூறியிருக்கிறார். மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை ஆசிய வளர்ச்சி வங்கி பார்வையிடலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
  
 
    

ஜூன் 17, 2014

பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடியில் !!

கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று  செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.
இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் பாதுகாப்பு அமைச்சரே பொது பல சேனாவை உடனடியாக தடை செய், சிறு பான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா?, இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்து, பாதுகாப்பு செயலாளரே சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா?, இனவாதிகளை கைது செய், அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பேரணியின் இறுதியில் பொது பல சேனா அமைப்பை தடை செய்ய கோரி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியதுல் உலமா சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்புவதற்கான மஹஜர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது.
இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றதுமேலதிக புகைப்படங்கள் இனைப்பு </
 
மேலதிக புகைப்படங்கள் இனைப்பு </

ஜூன் 13, 2014

முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன – ஐ.நா

இலங்கையிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மாய்னா கியாய் Maina Kiai இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக உலகின் பல நாடுகளில் பெண்கள் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்கள் முடக்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, கம்போடியா, இந்தியா, கியூபா, சி;ம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்படுவோர் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு குரல் கொடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் போராட்டங்களை நடாத்துவோர் மீது திட்டமிட்ட வகையில் பல்வேறு வழிகளில் கண்காணிப்பு நடத்தி ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 06, 2014

தமிழக முதலமைச்சர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே

:  உறுதியான நிலைப்பாடு உற்சாகத்தினை தருகின்றது : நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ்
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடு , மகிழ்ச்சியினையும் உற்சாகத்தினையும் தருகின்றதாக நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி அவர்களுடனான சந்திப்பின் பொழுது, ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில், தமிழக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :
மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அவர் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு மகிழ்ச்சியினையும், உற்சாகத்தினையும் தருகின்றது.
ஈழத்தமிழினத்துக்கு நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் உறுதிபட தெரிவித்திருப்பது எம்மை எல்லாம் ஆறுதலில் ஆழ்த்தியுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் அனைத்துல விசாரணையொன்றினை ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையம் விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில், அனைத்துலக நீதிமன்றத்துக்கு சிறிலங்காவினை இந்தியா கொண்டு செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டினை, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் உரிய நேரத்தில் முன்னெடுப்பார் என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.
தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பொன்றினையும் நடத்த வேண்டும் என்ற மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்களது நிலைப்பாடும், எமக்கு உற்சாகத்தினையும் நம்பிக்கையினையும் தருகின்றது.
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசே ஈழதமிழர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக அமைவதோடு, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கும் ஏற்றதாக அமையும்.
இவ்வாறு அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.