18

siruppiddy

மார்ச் 26, 2013

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-9

 (எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது)

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

வார்தைகளினால் வர்ணிக்க முடியாத அளவிற்கு யூத இனம் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இனப்படுகொலை ஜேர்மனியிலும், ஜேர்மனி ஆக்கிரமித்த மற்றைய
தேசங்களிலும் நடந்தேறியிருந்தது.
கிட்லரின் இனப்படுகொலை பற்றி அறிந்துகொள்ளும் அனைவருக்கும் சாதாரணமாகவே எழுகின்ற கேள்விகள் இவை:
கிட்லர் எதற்காக யூதர்கள் அத்தனைபேரையும் அழிக்கவேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்தார்?
யூதர்கள் அத்தனைபேரையும் படுகொலைசெய்யும்படியான கிட்லரின் உத்தரவிற்குப் கட்டுப்படும் மனநிலை ஜேர்மனியர்களுக்கு எப்படி உருவானது?
ஜேர்மனியர்களால் ஒட்டுமொத்தமாக வெறுக்கப்படுவதற்கு யூதர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்திருந்தார்கள்?
யூதர்களுக்கு எதிராக ஜேர்மனியில் கிட்லரால் மேற்கொள்ளப்பட்ட அந்த இனப்படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?
யூதர்களுக்கு எதிரான அந்த இனப்படுகொலை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளுபவர்களைக்கூட ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் கேள்விகள் இவை.
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த வார உண்மையின்தரிசனம்

மார்ச் 24, 2013

ரகசியமாக உதவுகிறதா சீனா? அமெரிக்கா எச்சரிக்கை,


சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் மூன்றாவது அணு உலை கட்டப்பட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் உள்ளன. இந்நிலையில் தற்போது 3-வது அணு உலை கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு சீனா இரகசியமாக தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனின் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 18-ந் திகதிக்குள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அணுசக்தித்துறை பிரதிநிதிகளை சந்திந்து ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் சாஷ்மாவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி உலையை நிறுவுவது என திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அங்கு 2 அணு உலைகளும் சீன தொழில் நுட்பத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தகவலை தி வாஷிங்டன் ஃப்ரி பேகன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து சீனாவோ, பாகிஸ்தானோ எந்த வித பதிலும் அளிக்கவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை. அதே சமயம் அணு ஆயுதங்களையோ, தொழில் நுட்ப உதவிகளையோ வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவும் இல்லை என்று சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிஸ்கு அணு உலை கட்டுவது தொடர்பான உதவியோ, வேறு ஏதோனும் அணு ஆயுத உதவியோ சீனா வழங்கியிருக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் தொடங்கும் என்.எஸ்.ஜி மாநாட்டில் எதிரொலிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 

தாக்கிய பகுதிகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள்


சுனாமியால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா நகரில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் ஜப்பானையே புரட்டி போட்டது.
இதில் புகுஷிமா நகரத்தில் இருந்த அணு உலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அணு  உலைகளிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டது.
மேலும் அப்பகுதிகளில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழும் சூழல் இருக்காது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, தன் கணவருடன் வெளியேறிய யுமிகோ நஷிமோட்டோ(வயது 59) கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் புகுஷிமாவுக்கு மீண்டும் திரும்பினார்.
வரும் 30 ஆண்டுகளில், அப்பகுதியில் மக்கள் மீண்டும் வசிக்க தகுந்த சூழலை உருவாக்கும் வகையில், அந்நகரின் கடற்ரை பகுதியில் 190 கி.மீ தூரத்துக்கு 20 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
தற்போது அப்பகுதியில் செர்ரி மரக்கன்றுகளை நடும் பணியில், அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

இளஞ்சிகப்பு நகரத்திற்கு சுற்றுலா சென்ற ஒபாமா


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 4 நாள்கள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார்.
அங்கு ஜோர்டானின் பெட்ரா என்ற நகரத்தில் உள்ள 2000 வருடங்கள் பழமையான மலைக்குகையொன்றை சுற்றிப்பார்த்தார்.
இளஞ்சிவப்பு பாறையில் அமைந்துள்ள இக்குகையில் பல விதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இது UNESCO உலக பாரம்பரிய தளமாக கடந்த 1985ம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு முதல் அரை மில்லியன் மக்கள் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 1989ம் ஆண்டில் வெளியான Indiana Jones and the Last Crusade திரைப்படத்தில் இந்த இளஞ்சிகப்பு குகை காண்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.