18

siruppiddy

டிசம்பர் 31, 2013

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம் .

.முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து,கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம்,ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.

பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, டிசெம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின்

செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டிசம்பர் 28, 2013

கடத்தப்பட்ட நாயுடு மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாது!!


விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செயய முயற்சித்த குற்றச்சாட்டுக்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியிருந்த இந்திய வம்சாவளி சிங்கப்பூர் பிரஜை நாடு கடத்தப்பட்டார்.
இவர் விடுதலைப் புலிகளுக்கு 900,000 டொலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த
நாடு கடத்தப்பட்ட 51வயதான பால்ராஜ் நாயுடு ராகவன் கடந்த 16 ஆம் திகதியன்று சிங்கப்பூருக்கு வந்தடைந்தார்.

இந்தநிலையில் நாயுடு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் சட்டத்தினால் மூடப்பட்டுள்ள. 2006 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கப்பல் மூலம் தாம் கொள்வனவு செய்த ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பிவைக்க பால்ராஜ் முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டே 4 வருட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

டிசம்பர் 23, 2013

கொழும்புக்கு அழைக்கப்பட்ட பதுமனை காணவில்லை:


பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று

தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. பதுமன் - கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவை தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்த செய்தியின் பின்னணி என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
   
இதற்குப் பதிலளித்துள்ள கோத்தபாய, இவை வெறும் வதந்திகளைப் பரப்பும் செய்திகள் எனவும், இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பதிலளித்துள்ளார். எனினும், கோத்தபாய - பதுமன் கூட்டுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்குக் கூட தெரியாத வகையில் பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுத்துள்ளார். கோத்தபாய - பதுமன் இரகசிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர், பதுமனைத் தொடர்புகொண்டு இதுகுறித்து யாருடனாவது கலந்துரையாடப்பட்டதா எனக் கேட்டுள்ளார். அத்துடன், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வெளித் தொடர்புகளை துண்டிக்குமாறும் கோரியுள்ளார்.

ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர் பதுமனை மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த வாரம் பதுமன் கொழும்பு அழைத்துவரப்பட்டிருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டில், இவர் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கொழும்பிற்கு அழைத்து தங்கவைக்கப்பட்ட பின்னர், மன்னார் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைப்பதே கோத்தபாய ராஜபக்‌ஷவின் திட்டமாக இருந்தது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்றின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

சிறிது காலத்தின் பின்னர் முன்னதாக திட்டமிட்டிருந்ததன்படி மீண்டும் ஆயுதப் படையொன்றை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததால் தற்போது வெளிப்படையாக எதனையும் செய்யக்கூடாது எனவும் தீர்மானித்தே இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கொழும்பு அழைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த பதுமன் தற்போது திடீரென காணாமல்போயுள்ளமையானது கோத்தபாய ராஜபக்‌ஷ தரப்பினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை இரகசியமாகவும், துரிதமாகவும் கையாள வேண்டிய நிலையில் பாதுகாப்புச் செயலாளர் செயல்பட்டு வருவதாக குறித்த செய்தி முகவர் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், வடக்கில் பிரிவினைவாதத்தை தூண்டும் நோக்கில் படையினர் செயல்படுவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
 

டிசம்பர் 21, 2013

என்னை அதிகாரியைப்போல் மிரட்டினார்- நளினி திடுக்கிடும் பேட்டி!


 சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார்.

கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். பிரியங்கா காந்தி - நளினி சந்திப்புக்குப் பிறகு, பத்திரிகைகளைத் தவிர்த்து வந்த நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி மூலம் தொடர்புகொண்டபோது அவர் வழங்கிய செவ்வி வருமாறு!

பேரறிவாளனின் வாக்குமூலம் முழுமையானது அல்ல. அதை நான் சரியாகப் பதிவு செய்யவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் கூறியுள்ளார். உங்களிடமும் தியாகராஜன்தான் வாக்குமூலம் பெற்றாரா?

பேரறிவாளனிடம் மட்டுமல்ல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போது தண்டனை அனுபவிக்கும் யாரிடமும் உண்மையாக வாக்குமூலம் வாங்கப்படவில்லை. அது நேர்மையாகப் பதிவு செய்யப்படவும் இல்லை. கடுமையான சித்திரவதைக்கிடையில் அந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைவரும் சித்திரவதைக்கு அஞ்சித்தான் கையெழுத்துப் போட்டோம்.

தியாகராஜன் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய தேதி 1991-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி. அன்று வெளியில் பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. அன்று முழுவதும் நான் சித்திரவதையின் வேதனை தாங்காமல் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணி. இரவு 8 மணிக்கு என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அரை மணிநேரம் பரிசோதனை நடைபெற்றது.

அரை மணிநேரம் கழித்து, என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சில காகிதங்களுடன் அமர்ந்திருந்தார். அவற்றில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். 'இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய்’ என்றார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல்தான், நான் கையெழுத்துப் போட்டேன்.

அதன் பிறகு அந்தக் காகிதத்தில் அவர்களாக நிரப்பிக் கொண்டதுதான் இன்று உலகத்தின் பார்வைக்கு என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாகக் காட்டப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் எனக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்படித்தான் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார். இது எதுவும் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கு விசாரணை முழுவதும் தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நீங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லையா? இந்தப் படுகொலை பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?

சத்தியமாகத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், காதலித்துத் திருமணம் செய்த என்னை, அதுவும் நான் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்களுடன் அனுப்பி இருப்பாரா? அதுபோல், இப்போது இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் யாருக்கும் அந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.

நாங்கள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், குற்றவாளிகளாக மாற்றப்பட்டு இன்று தண்டனைக் கைதிகளாக இருக்கிறோம். அந்தச் சம்பவம் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. அவர்கள் இறந்துவிட்டனர். குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி இறந்து பல மணி நேரம் கழித்துத்தான் எனக்கே விவரம் தெரியவந்தது.
சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், 'நளினிக்கு இதுபற்றி தெரியும்’ என்று வயர்லெஸ் ஆதாரம் ஒன்றைச் சொல்கிறாரே?

வயர்லெஸ் பேச்சு சங்கேத வார்த்தைகளால் ஆனது. அந்த சங்கேத வார்த்தைகளை சி.பி.ஐ. உடைத்துப் பார்த்தனர். அதில் பேசிய குரல் சொன்ன விஷயம் என்னவென்றால், 'ராஜீவ் காந்தி கொலை பற்றிய விஷயம் எங்கள் மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது’ என்றுதான் வருகிறது. அது சிவராஜன், சுபா, தனு ஆகிய மூவரைத்தான். என்னை அல்ல.

அந்த வயர்லெஸ் தகவலில், 'ஆபீஸர்... பெண் நம்பிக்கையானவர்’ என்று என்னைப் பற்றி வருகிறது. நளினிக்குத் தெரியும் என்று எந்த இடத்திலும் அந்தக் குரல் குறிப்பிடவில்லை. ஆனால், தியாகராஜன் ஏன் இப்படி திரித்துக் கூறினார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

இத்தனை வருடச் சிறை வாழ்க்கையில் உங்கள் மனதை வெகுவாக பாதித்த சம்பவம் ஏதாவது?
இந்தச் சிறையில் பக்கா என்ற விஜயா என்று ஒரு கைதி இருக்கிறாள். கடந்த 24 ஆண்டுகளாக அவள் சிறையில் இருக்கிறாள். கழைக்கூத்தாடியான அவளது நடனத்தினால் கவரப்பட்ட ஒருவர் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய வீட்டில் சாதியைக் காரணம் காட்டி, இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊரைவிட்டு விரட்டிவிட்டனர்.
அதன் பிறகு இருவரும் கழைக்கூத்தாட்டம் நடத்தி பிழைத்து வந்துள்ளனர். ஒரு நாள் இரவு ரோட்டோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். இதையடுத்து கணவன் மனைவி இருவரும் அவனைக் கல்லால் அடித்து விரட்டி உள்ளனர். அதில் காயம்பட்ட அவன் இறந்துவிட்டான்.

இவர்களை கைதுசெய்த போலீஸ், இறந்தவனிடம் இருந்து 500 ரூபாயை திருடுவதற்காக இவர்கள் அவனைக் கொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டி இரண்டு பேரையும் சிறையில் அடைத்துவிட்டனர்.

கணவன் ஆண்கள் சிறையிலும் இந்தப் பெண் இங்கும் என இரண்டு பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர். அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு இப்போது ஒரு குழந்தையைப்போல் உளறிக் கொண்டிருக்கிறாள். ஒட்டுமொத்த சிறைக்கும் அவள் செல்லப்பிள்ளை. அவளை விடுதலை செய்வதற்கும் விடுதலையானவுடன் ஏற்றுக்கொள்வதற்கும் காப்பகங்கள் தயாராக உள்ளன. ஆனால், சிறை நிர்வாகம் அவளை வெளியே அனுப்ப மறுக்கிறது.
இப்போது என்னுடைய விடுதலையைவிட நான் அவளுடைய விடுதலைக்காகத்தான் அதிகமாக என் வழக்கறிஞரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.
பிரியங்கா - நளினி சந்திப்பு... என்ன நடந்தது அந்தச் சந்திப்பில்?

அன்று சிறைச்சாலை வழக்கத்துக்கு மாறான பரபரப்புடன் இருந்தது. திடீரென பரபரப்புகள் ஓய்ந்து பேரமைதி நிலவும்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த கைதிகளும் செல்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை மட்டும் சிறைத் துறை கண்காணிப்பாளர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பிரியங்கா அமர்ந்திருந்தார். எனக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆனால், எஸ்.பி. சொன்னதும் அதிர்ச்சியும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பிரியங்காவும் நானும் மட்டும்தான் அங்கு இருந்தோம். என் அச்சத்தை அதிகரிப்பது போல், பிரியங்காவின் முகம் இறுக்கமாகவும் அவரது பார்வை கோபமாகவும் இருந்தது.

என்னைப் பார்த்த உடனேயே, ஒரு போலீஸ் அதிகாரியைப்போல் என்னை மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்தார். கேள்விகள் மேல் கேள்விகள். தன் தந்தை கொல்லப்பட்ட அன்று நீ ஏன் அங்கு போனாய்? உனக்கு முதலிலேயே தெரியுமா? அவர்கள் உனக்கு எப்படிப் பழக்கம்? நோக்கம் என்ன? என்று வரிசையாகக் கேள்விகள் கேட்டார்.

அதற்கு நான் எனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினேன். ஆனால், அந்தச் சந்திப்பில் நடந்த மற்ற விவரங்கள் மிகமிக முக்கியமானவை. ஆனால், அவற்றை சொல்வதற்கான நேரம் இது அல்ல. காலம் நினைத்தால் அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கும். அப்போது அந்த விவரங்களை வெளியிடுவேன்.
உங்கள் விடுதலை தள்ளிப்போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களில் விடுதலையாவதற்கான வாய்ப்பு எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்காக முன் விடுதலைக் குழு அமைக்கப்பட்டு பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு என் விடுதலையை ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒரு அறிக்கை வாங்கி, நளினி வெளியே வந்தால் ராயப்பேட்டையில்தான் தங்குவார். அது வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி-க்கள் நிறைந்த பகுதி. அதனால், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் என்னுடைய விடுதலை தடைபட்டுள்ளது.

இது அரசியல் வழக்கு என்பதால்தான், இதில் தலையிட யாரும் விரும்பவில்லை. சிறையில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போதும் முதல்வராக இருந்தார். அவர் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுத்து என்னுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்.
அதுபோல், என்னுடைய விடுதலை விவகாரத்திலும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

டிசம்பர் 18, 2013

தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனுடன் இரகசியப் பேச்சு : ஆதாரங்களை அம்பலமாக்க இலங்கை திட்டம்

விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானத்துள்ளது. புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளிகளின் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள், அவர்கள் இரகசியமான முறையில் வன்னிக்கு வந்தமை தொடர்பான காட்சிகளும் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன. வன்னியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு இலக்கங்கள் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 400 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அதேவேளை போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புலிகளின் 20 உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது

டிசம்பர் 15, 2013

ஆனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற உறுப்பினர். வெளிநாட்டுறவுகள்


அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்பு. அண்மையில் மிகப் பெரும்பாண்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவுஇபாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப்போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார்.
   
வடமாகாண ஆளுநரான முன்னைநாள் இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துக்க்கூறினார். இவரோடு உள்ளுராட்சிமன்ற அரச கட்சியைச் சேர்ந்த ஸ்டீவன் புஸ்பராஜா மற்றும் கண்ணன் நாகேந்திரா ஆகியோரும் இச் சந்திப்புகளில் பங்கேற்றனர்.




டிசம்பர் 12, 2013

ராஜபக்ச அரசு குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக ..

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசுகள் இலவச கல்வி, சுகாதார சேவை உட்பட மக்களின் நலன்புரி பணிகளுக்காக 1.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் நாட்டின் மொத்த கடன் 6.6 ட்ரில்லியன் ரூபாவாகும். இந்த கடன் பணத்தில் பெருந் தொகையான ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொள்வதுடன் அதன் மூலம் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.
வெளிநாடுகளில் பெறப்பட்டுள்ள இந்த பெருந் தொகை கடனில் அதிகளவான கடன் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பெற்ற கடனில் பெருந் தொகை கமிஷனாக பெறப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
இதன்படி ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடன் தொகையில் பெருந் தொகை பணம் ராஜபக்ஷ குடுமபத்தினரின் சட்டை பைகளுக்குள் சென்றுள்ளமை தெளிவாகியுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

டிசம்பர் 10, 2013

கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: -

விடுதலை வானின் கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: - ஆயினும் நம்பிக்கை ஓளியினை நமது கைகளியே தந்துவிட்டுச் சென்றது.
ஆம்! உலகப்போக்குளைப் புரட்டிப் போட்டு, நாம் வாழும் காலத்திலேயே, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலையை நம் கண்முன்னேநனவாக்கிக் காட்டிய மாபெரும் தலைவர் நெல்சன் மன்டெலா அவர்கள் நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்றுள்ளார். உலகெங்கும்

விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார். தென்னாபிரிக்காவில் தங்கள் சொந்தத் தாய்மண்ணிலேயே இனவெறிபிடித்த சிறுபான்மை காலனித்துவவாதிகளின் (ஆப்ரிகனர்)

அரசினால் இனஒடுக்குதலுக்கும், உரிமை மறுப்புகளுக்கும் உள்ளாகி கறுப்பின மக்கள் பெரும் அவலவாழ்வில் வீழ்ந்து கிடந்தபோது, அவர்களை நிமிர்ந்து எழச்செய்து ஒன்றிணைத்துப் போராடி விடுதலையைப் பெற்றுத்தந்த பெருமை நெல்சன் மன்டெலா அவர்களையே சேரும்.
   
அறவழிப்போராட்டமாகவும், ஆயுதவழிப் போராட்டமாகவும் காலத்தின் தேவைக்கு ஏற்ப போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டும் போராட்ட இலக்கினில் இருந்து என்றும் விலகிடாமல் விடுதலையை நோக்கி வழிநடத்திச் சென்றவர். விடுதலைக்கு விலையாக தன் வாழ்வின்

பெரும்பகுதியை, 27 ஆண்டுகளை, கொடும் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. பயங்கரவாத முத்திரை இவர் மீதும் குத்தப்பட்டது. ஆனால் அவர்;;; ஓய்ந்து விடவில்லை. தென்னாபிரக்க இனவெறிபிடித்த காலனித்துவவாதிகளின் (ஆப்ரிகனர்) அரசினை சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்

முயற்சியில் வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக மன்னிப்புக் கேட்கச் சொல்லி காலனித்துவ (ஆப்ரிகனர்) அரசு வற்புறுத்திய போது தனது உயிரைவிட இலட்சிய உறுதியே பெரிதெனக் கருதி அதனை மறுத்துவிட்டார்.

நெல்சன் மன்டெலா அவர்களது வாழ்வனுபவ ஏட்டில் இருந்து கற்றுக் கொள்வதற்கு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிறையப் பாடங்கள் இருக்கின்றன. அந்த அனுபவங்களை எங்கள் விடுதலைக்கான உரமாக்கிக் கொண்டு எமது தேசவிடுதலையை வென்றெடுப்பது தான் அவருக்கு நாம்அளிக்கும் அஞ்சலியாக நாம் கருதுகின்றோம்.
 

டிசம்பர் 09, 2013

அபிலாசையை சாதகமாக பரிசிலீப்போம் - கனடிய மனிதவுரிமை

 கனடிய மனிதவுரிமை மையம் கனடிய அரசு நிறுவனங்களினுடன் இணைந்து ஏனைய நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான விடயங்களிலும் பங்களிக்க வேண்டுமென கனடியப் பிரதமர் விடுத்த வேண்டுகோளை தாங்கள் 2014ம் ஆண்டிற்கான முக்கிய திட்டமாகப் பரிசீலிக்கவுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை கனடிய அரசிற்கும் கனடாவின் இதர கட்சிகளிற்கும் துறைசார் நிபுணத்துவத்துடன் எடுத்தியம்பி வரும் கனடடிய மனிதவுரிமை மையம் 2013ம் வருட இறுதிக்கான அரசியலாளர்களுடனான ஒன்றுகூடலை டிசம்பர் 6ம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தியிருந்தது.

இதன்போதே கனடியப் பிரதமர் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடிய மனிதவுரிமை மையத்திற்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியில், கனடிய மனிதவுரிமை மையமானது ஏனைய நாடுகளில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களில் கனடிய அரச நிறுவனங்களுடன் இணைந்து பங்காளராகப் பணியாற்ற வேண்டும் என்ற கனடியப் பிரதமரின் அபிலாசையை செயற்திட்டமாக்குவது என்ற முடிவு வெளியிடப்பட்டது.

ஈழத்தமிழர் விவகாரத்தை நுட்பத்துடன் கையாளும் கனடிய மனிதவுரிமை மையத்தின் செயற்பாட்டாளர்களாக கனடிய தேசிய நீரோட்டத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருவதும், கனடிய மனிதவுரிமை மையத்தின் நிகழ்வுகளிற்கே அதிகளவில் கனடிய அரசியலாளர்கள் ரொறன்ரோ மாநகரிற்கு வந்து பங்கு கொள்வதும் இடம்பெற்று வருகிறது.

கனடியப் தமிழர்களிடம் அமைப்பு ரீதியாக அணுகக்கூடிய ஒரு நடுநிலைக் கட்டமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள கனடிய மனிதவுரிமை மையத்தினை, கனடாவின் ஆளும் கட்சி கனடியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்வது உகந்ததா இல்லையா என்பதைக் கண்டறியும் கருத்துக் கணிப்பை நடத்தும் பணியை ஒப்படைத்தபோது கனடிய மனிதவுரிமை அதனை நேர்த்தியாகவும் அனுபவ முதிர்ச்சியுடனும் கையாண்ட விதம் இந்த அமைப்பு மீது அரசியலாளர்களிற்கிருந்த மதிப்பை உயர்த்தியிருந்தது.

2014ம் ஆண்டில் கனடியத் தமிழ் அமைப்புக்களின் சகல பிரதிநிதிகளையும் மற்றும் சிறந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்த குழுவொன்றை உருவாக்கி அவர்களை இலங்கை விவகாரங்கள் தொடர்பான மற்றும் கனடாவில் வாழும் தமிழ் மக்களிற்கான அரசு சார்ந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் ஒரு குழுவாக செயலாற்ற வைப்பதென்றும்,
2014ம் ஆண்டில் கனடிய மனிதவுரிமை மையம் தங்களது சேவைகளை ஏனைய நாடுகள் சார்ந்த விடங்களிலும் ஈடுபடுத்துவதென்றும் இந்த தேவைகளிற்காக ஏனைய நாடுகளிலுள்ள மனிதவுரிமை விரும்பிகளையும் தங்களுடன் இணைத்து கொள்வதென்றும் கனடிய மனிதவுரிமை முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தங்களுடன் இணைந்து செயலாற்ற விரும்பும் ஏனைய நாடுகளிலுள்ள அமைப்புக்களையும், துறைசார் நிபுணர்கள் மற்றும் தனிநபர்களையும் info@chrv.ca என்ற முகவரியினூடாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கனடிய மனிதவுரிமை வேண்டி நிற்கிறது







டிசம்பர் 08, 2013

சந்திரிக்கா அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் மக்களை அழிக்க தயாராக!!


இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சந்திரிகா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
   
சொந்த நலன்களை பற்றி மட்டும் சிந்திக்காத ஒரு அரசியல்வாதியாக மன்னித்தல், மீள் நல்லிணக்கம் ஒரு தேசமாக எல்லோரிடமும் அன்புடனும் அமைதியுடனும் சேர்ந்து வாழுதல் போன்ற அளவுகடந்த பல பண்புகளை நெல்சன் மண்டேலாவிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்சன் மண்டேலாவிடமிருந்து தனது அரசும் பல பாடங்களை கற்றுக் கொண்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நாங்களும் உண்மை அறியும் ஆணைக்குழுவை உருவாக்கினோம். சில சிங்கள கடும்போக்கு வாதிகளினால் தமிழ் மக்களுக்கு நடந்த துயரங்களுக்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் நான் மன்னிப்புக் கோரியிருந்தேன். மண்டேலாவிடமிருந்தும் அவரது செயற்பாடுகளிலிருந்தும் தான் இவற்றை கற்றுக் கொண்டதாக சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கையின் இன்றைய நிலை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள பெளத்த தேசத்துக்கு மட்டுமே பிரதிநிதிகள் என்று காட்டுவதற்காகவே மற்ற சமயங்களை, இனங்களை, சமூகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகள் முனைகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

டிசம்பர் 07, 2013

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வதந்திகளைப் பரப்புவோருக்கு


தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமு; வகையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலோ செயற்படும் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷ, புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தெற்கு கடும்போக்குடைய சிங்கள அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்கள் தேச விரோத வதந்திகளை பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் புலிகளின் பெயரில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

டிசம்பர் 05, 2013

முள்ளிவாய்க்காலில் ஐ.நா விசேட பிரதிநிதி சலோகா பெயானி!

கேப்பாபிலவுக்கும் அதிரடி விஜயம்.  இலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவிசேட பிரதிநிதி சலோகா பெயானி, முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவுக்கு திடீரெனச் சென்று அதிர்ச்சி அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்ற பெயானி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனைச் சந்தித்தார். மாவட்டத்தின் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளித்தாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
   
பெயானியின் பயணத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவு விஜயம் என்பன இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் அதிரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இறுதியுத்தம் நடந்தமுள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பெயானி அங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்ட கேப்பாபுலவு மக்களையும் அவர் சந்தித்தார்.

தமது சொந்த இடங்கள் அபகரிக்கப்பட்டு தாம் முகாம்களில் வசிப்பதாக கேப்பாபுலவு மக்கள் பெயானியிடம் தெரிவித்தனர். தமது மீள்குடியேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் இந்த தருணத்தில் கோரிக்கை வைத்தனர். இதேவேளை முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானியை சந்தித்துள்ளார்.

இதன்போது தாம் நடத்திய மனிதாபிமான யுத்தம் தொடர்பிலும் மக்களை மீட்ட நடவடிக்கை தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னர் மக்களை மீள்குடியேற்றம் செய்வது உள்ளிட்ட இராணுவத்தின் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் சலோகா பெயானிக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 

டிசம்பர் 03, 2013

வான்படை முகாம் தாக்குதல் சந்தேகநபர் சாட்சியம்.

  
ரஷ்யர்களிடம் விசேட கொமாண்டோ பயிற்சி பெற்றேன்!தாம் உள்ளிட்ட சிலருக்கு பத்து ரஷ்யர்களால் விசேட கொமாண்டோ பயிற்சி, வழங்கப்பட்டதாக அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

வான்படை முகாம் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் என்பவர் நேரடியாக சாட்சியமளித்தார்.
   
தம்மால் வழங்கப்பட்ட தொலை தொடர்பு தகவல்களுக்கு அமைய யாழ்ப்பாண குடாநாட்டில், சுமார் 100 எறிகணை தாக்குதல்கள் மெற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தாம் உள்ளிட்ட சிலருக்கு விசேட கொமாண்டோ பயிற்சி, பத்து ரஷ்யர்களால் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அநுராதபுரம் வான் படை முகாமிற்கு தாக்குதலை மேற்கொள்ளும் பொருட்டு

தகவல்களை வழங்க புறப்பட்டுச் சென்ற தங்களுக்கு இரவு நேர தூரபார்வை கண்ணாடி, சைலன்சர் கைத் துப்பாக்கி, தூரநோக்கி, ஜீ.பி.எஸ் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

அநுராதபுர வான்படை தளத்திற்கு எதிரான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி படைப்பிரிவினர் வான் மற்றும் தரை வழியாக கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலின் போது 14 பாதுகாப்பு படைத்தரப்பினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

டிசம்பர் 01, 2013

தேசியத்தலைவரின் 59வது அகவை கனடாவில்



தேசியத்தலைவரின் 59வது அகவை ரொன்ரோ, கனடாவில் 26:11:2013 அன்று மாலை  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்களின் முன் தேசியத் தலைவர் அவர்களை வாழ்த்திய பல நிகழ்வுகளுடன் வெகு சிப்பாகவம், அமைதியாகம் கொண்டாப்பட்டது.













 

நவம்பர் 28, 2013

தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!


துபாயில் தங்கியிருக்கின்ற ஈழத்தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவிற்கு வெகு விமர்சையாக மாவீரர் தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து உள்ளனர்.





 
 

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்


லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும்,

வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.