இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை அவற்றுள் உச்சமானதாகும்.
இவை சரியாக கணக்கிட முடியாதுள்ளன. 146,679 தனி நபர்கள், 90,000 போர்க்கால விதவைகள், ஆகக் குறைந்தது 25,000 அநாதைப் பிள்ளைகள், சேதமாக்கப்பட்ட 160,000 வீடுகள் என்பன ஐ.நா.வின்
மதிப்பீடாகும்.
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான 18,000 சதுர கிலோமீற்றரில் 7,000 சதுர கிலோமீற்றர் படைத்தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட 3 அங்கத்தவர் கொண்ட நிலைக்குழு மரண எண்ணிக்கையை 40,000 எனக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐ.நா.வின் மீளாய்வு நிலைக்குழுவின் சார்ள்ஸ் பெற்றீ குறைந்த மதிப்பீடாக 70,000ஐக் குறிப்பிட்டுள்ளார். 6 வருடத்துக்கு முன்னே யுத்தம் நிறைவடைந்த போதும் உலகில் ஆகக்கூடிய படைத்தரப்பு நிலைகொண்டுள்ள வலயமாக இலங்கையின் வடக்குப் பகுதி விளங்குகின்றது.
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோரைச் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியுள்ளது. இனங்காணப்படாத இரகசிய மையங்களில் எந்தப் பாவமுமறியாத பல தமிழர்கள் வாடி அல்லலுறுகின்றனர்.
ஏதாவது ஒரு நாட்டுக்கேனும் இத் தமிழர்கள் அரசியல் தனிச்சிறப்புடையவர்கள் இல்லாமையினால் இந்தச் சரிபார்க்கப்பட்ட உண்மைகளும் எண்ணிக்கைகளும் உலகின் மனச்சாட்சியை உலுக்கவில்லை.
பல மனித உரிமைகள் அதன் மீது திணிக்கப்பட்ட நீதிநெறி அழுத்தங்கள் காரணமாக 2009ற்குப் பின்னர் ஐ.நா.வே தமிழர்களுக்கும் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குடிமக்களுக்குமான ஒரேயொரு ஆறுதலும் தேறுதலும் உறவுமாக இருக்கின்றது.
ஏதுமறியாத குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. இலங்கையிலும் சரி, சிரியாவிலும் சரி மக்கள் உபாதைக்குள்ளாகும் போது ஐ.நா. அரிதாகவே அதில் சம்பந்தப்படுகின்றது. அங்கத்துவ நாடுகளின் இறையாண்மையை ஊறுபடுத்த அது விரும்பவில்லை.
மனித உரிமைகளும் தேசங்களினால் மக்கள் மீது சுமத்தப்படும் துன்பவருத்தங்களும் தேச இறையாண்மையின் உள்ளீட்டு எல்லைகளுக்குள் அடங்குகின்றனவா?
இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழர்கள் மீது 99 சதவீதமான சிங்களவர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட இராணுவத்தினூடாக தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து
விடப்பட்டது.
2009ன் பின் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவது தீர்மானத்தின் மூலம் உலகின் வரலாற்றுப் பயங்கரவாதத்தை ஒழித்த முதல் நாடு இலங்கை என மேம்படுத்தப்பட்டது.
இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அக்கறையைத் தன்பால் ஈர்த்த தீவுத் தேசத்தில் சீனாவின் பாரிய பிரசன்னம் போர்க்குற்றம், மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் என்பவற்றை காரணம் காட்டி அமெரிக்கா இலங்கையினுள் நுழைய வழிவகுத்தது. அதுமட்டுமன்றி, ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் மீதான அதனது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த மென்மையான தீர்மானங்கள் 2012, 2013ல் வழிவகுத்தன.
2014ல் அதனுடன் இணங்கி நடக்காமல் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.
புதிய ஜனாதிபதியின் சீர்திருத்தங்களுக்கு வழிவிடுமுகமாக 2015 மார்ச் இல் வெளியிடப்பட வேண்டிய அறிக்கை 6 மாதங்கள் பிற்போடப்பட்டது. அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
செப்டெம்பர் 16ல் அறிக்கை வெளிவந்த போதும்
ஆணைக்குழு
இலங்கையில் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இலங்கை சார்பாக சர்வதேச நெருக்கடி குழுமத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பின்வரும் விசாரணையை உள்ளடக்குகின்றது.
இலங்கை பல தசாப்த காலமாக தோல்வி கண்ட பல விசாரணைகளையும் மனித உரிமை மீறல் வழக்குத் தொடுப்புக்களையும் கண்டுள்ளது. இதில் அரசினருக்கு எதிரான குறைவான வழக்குகள் தொடுத்தல்களே நிறைவேற்றப்பட்டன.
மூத்த தளபதி ஒருவரேனும் போர்க்குற்றத்திற்காக விசாரணைக்குள்ளாக்கப்படவில்லை. படைத்தரப்பு குறிப்பிட்ட அளவில் தன்னாட்சி அதிகாரத்திற்கு அனுமதிக்கின்றது.
தமிழர் பகுதிகளில் சாட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ராஜபக்ச சகாப்தத்திலான உயர்மட்ட விசாரணைகள் படைத்தரப்பின் உயர் அதிகாரிகளின் தடைகளுக்குள்ளாகின்றன என சொல்லப்படுகின்றது.
பாராளுமன்றத்தினால் பெப்ரவரியில் அனுமதியளிக்கப்பட்ட சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைப் பாதுகாத்தல் சார்பான சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொலிஸ் ஈடுபாடு அற்றதும் வெளிநாடுகளில் உறையும் சாட்சிகளதும் அத்தாட்சிப்படுத்தலுக்குமான வழிவகை செய்யும் ஏற்பாடு இதில் இல்லாது காணப்படுகின்றது.
இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கெதிரான குற்றங்கள் என்பன சார்பானதே ஐ.நா.வின் இலங்கை மீதான விசாரணை. இலங்கை சர்வதேசச் சட்டங்களைப் பாரதூரமாக மீறியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் அது இழைத்த கோரக் குற்றங்களை விசாரிக்கக் காத்திரமானவையாக
இல்லாமையானாலும்
ஐ.நா.வின் சட்டதிட்டங்களில் ஒப்பமிட்ட நாடாக இருப்பதனாலும் ஒரு சர்வதேசப் பொறிமுறையின் மூலமே விசாரிக்கப்படல் வேண்டும்.
எங்கேனும் மனித நேயத்திற்கெதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் என்ற பதம் வரைவுத் தீர்மானத்தில் பாவிக்கப்படவில்லை.
இலங்கையை அமெரிக்கா குஷிப்படுத்த விரும்புவதால் பாவிக்கப்பட்ட மொழிப் பிரயோகம் இலங்கையின் மனதை அமெரிக்கா புண்படுத்த விரும்பவில்லையென்பதை அறிக்கையின் வார்த்தைப் பிரயோகம் எடுத்துக் காட்டுகின்றது.
முகப்புரையில் வரவேற்கிறோம் என்ற பதம் 7 முறை வருகின்றது. செயற்பாட்டுப் பந்தியில் இது 10 முறை வருகின்றது. அத்துடன் உற்சாகப்படுத்துகிறோம் என்ற வார்த்தை 6 முறை பாவிக்கப்படுகின்றது.
செயற்பாட்டு பந்தி 5ல், விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட துஷ்பிரயோகம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
6வது பந்தியின் மூலம் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் என்பவற்றையும் சர்வதேசச் சட்ட மீறுகைகளும் விசாரிக்க விசேட வழக்குரைஞர்களுடனான நீதிமுறைப் பொறிமுறையொன்றின் உருவாக்கத்தைத் தீர்மானம் வரவேற்கின்றது.
நடைமுறைப்படுத்துவதற்கான காலவரையறை குறித்துத் தீர்மானம் குறிப்பிடவில்லை. முன்னைய பாதுகாப்பு அமைச்சர் என்ற கோதாவில் குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும் ஜனாதிபதி சிறிசேன சட்டவிதி விலக்கை அனுபவிப்பதால் யாரால் அவர் மீது வழக்குத்
தொடரமுடியும்?
விடுதலைப் புலிகள் தேச ரீதியானவர்கள் இல்லையென்பதால் அவர்களை இலங்கை அரசாங்கத்துடன் சமமாக வைக்கப்படலாகாது.
இருப்பினும், அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்களை மதிக்கும் நேர்மையான கடப்பாடுண்டு. அவர்களால் சர்வதேச உடன்படிக்கைகள் செய்யப்படாமையை அவர்கள் உள்ளூர் சட்டங்களுக்கமையவே விசாரிக்கப்படல் வேண்டும்.
அத்துடன் 18,000 விடுதலைப் புலிகள் தண்டனைக்கோ அல்லது புனர்வாழ்வுக்கோ உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தண்டனையிலிருந்து காப்பளித்தல், கூட்டு புதைவிடங்கள், காணாமற்போதல், சித்திரவதை, கற்பழிப்பு, கொலை, வெள்ளை வேன் கடத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியில் சாட்சிகளைப் பாதுகாத்தலுக்கான சர்வதேச உத்தரவாதம் சார்பான தீர்மானம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட போதும் படை விலக்கல் நடைபெறாது என அரசாங்கம் உறுதியாகக் குறிப்பிடுகின்றது.
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட 67,000 ஏக்கர் நி
லப்பரப்பில் 1,000 ஏக்கரே கடந்த 8 மாதகாலப்பகுதியில் மீளளிக்கப்பட்டுள்ளது.
குடி மக்களுக்குச் சொந்தமான சகல காணிகளையும் விடுவிப்பது சம்பந்தமாகவோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது சார்பாகவோ எவ்வித உறுதிமொழியும் இல்லை.
விசாரணைக் காலம் 1983ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு மீளளிப்புக்கள் கிடைக்குமா?, அவர்கள் கணிக்கப்படுவார்களா?
வாக்களிப்பில்லாத பொது இசைவுக்கான ஒன்றே இத்தீர்மானம்.18 மாத காலப்பகுதியையும் இக்குழப்பத்திலிருந்து சுலபமாக வெளியேறக்கூடிய தந்திரத்தையும் தருவதால் அடுத்த தீர்மானம் குறித்து இலங்கையில் எதிர்பார்ப்புண்டு.
அவர்களுக்கு இது குறுகிய காலந்தான் என்பதால் தேசங்களும் அரசாங்கங்களும் காத்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்திருக்கச் செய்யலாமா?