18

siruppiddy

பிப்ரவரி 25, 2020

மருதனார்மடத்தில் விடுதியில் இராணுவ சுற்றி வளைப்பில் 41 இளைஞர்கள் கைது

.02.2029
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் இன்று (24) இரவு சற்றுமுன் சுற்றி வளைக்கப்பட்டு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் இராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 23, 2020

சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை 4 பேரும்(22.02.20= அன்றறைய தினம் இரண்டு பேரும் அடங்கலாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிப்ரவரி 22, 2020

ஊழியர்கள் மீது அச்சுறுத்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த குழு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற
 நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக தெரியவருவதாவது, அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்தியவர் 
படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தபோதும் நேற்று இரவு சிகிச்சை பயனின்றி
 உயிரிழந்தார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் 
ஒருவர் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு 
வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், 
தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவரை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.சம்பவம்
 தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதும் பொலிஸார் அங்கு செல்லும்போது அடாவடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரை கைது
 செய்துள்ளனர்.இது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கைதானவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>