18

siruppiddy

டிசம்பர் 27, 2015

இப்போ கறுப்பு வேன் வெள்ளைக்கு பதிலாக !!!

வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பம்
வெள்­ளைவேன் கடத்தல் கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு கறுப்பு வேன் கடத்தல் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. கூட்டு கட்­சி­களின் ஜன­நா­யக ஆட்­சியில் இதுவும் ஒரு அடை­யா­ளமா என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் கேள்வி எழுப்­பினர்.
ஜன­நா­யகம் என்ற பெயரில் அடக்­கு­முறை அர­சாங்­கமே இன்றும் முன்­னெ­டுக்­கப்­ப­­டு­வ­தாக ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யது.
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­ற­போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த காலத்தில் ஆட்­க­டத்தல், காணா­மல்­போகும் கலா­சாரம் அதி­க­மா­கவே காணப்­பட்­டது. அப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­வர்கள் அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்து ஜன­நா­யகம் பேசி­ய­தையும் நாம் அவ­தா­னித்தோம். அதேபோல் கடத்தல் சம்­ப­வங்கள், கா­ணா­மல்­போ­தலை தடுக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் தான் ஆட்­சி­மாற்றம் ஒன்றை மக்கள்
 மூலம் ஏற்­ப­டுத்­தவும் 
அனை­வரும் முன்­வந்தோம். அவ்­வா­றான நிலையில் ஆட்­சி­மாற்றம் ஒன்றும் நிக­ழழ்ந்­தது. இந்த மாற்­றத்தில் ஜன­நா­யகம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் வெள்­ளைவேன் கலா­சாரம் உள்­ளிட்ட அடக்­கு­முறை செயற்­பா­டுகள் முற்­றாக அழிக்­கப்­பட வேண்டும் என்­ப­னவும் 
வலி­யு­றுத்­தப்­பட்­டது.
ஆனால் இன்று வெள்­ளைவேன் கலா­சாரம் அழிக்­கப்­பட்­டாலும் கறுப்பு வாக­னத்தில் கடத்தும் கலா­சாரம் தலை­தூக்­கி­யுள்­ளது. அமைச்­சர்­களின் தேவைக்கும் அவர்­களின் பழி­தீர்க்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அமைய ஆட்­களை கடத்தும் கலா­சாரம் மீண்டும் இந்த ஆட்­சியில் பல­ம­டைந்து 
காணப்­ப­டு­கின்­றது.
 கடந்த ஆட்­சியில் நடந்த மோச­மான சம்­ப­வங்­க­ளையும் ஆட்­க­டத்தல் கலா­சா­ரத்­தையும் மாற்­ற­வேண்டும் என்று வலி­யு­றுத்தப்பட்­டதே தவிர வெள்­ளை­வே­னுக்கு பதி­லாக கறுப்பு டிபென்டர் வாக­னங்­களை மாற்­ற­வேண்டும் என கூற­வில்லை.
அதேபோல் ஆட்­க­டத்தல் அர­சி­யல்­வா­திகள் என கூறப்­படும் நபர்­களின் பின்­னணி என்ன? அவர்கள் எவ்­வா­றான சூழலில் வளர்ந்­த­வர்கள் என்­பது புதி­தாகக் கூற­வேண்­டிய அவ­சியம் இல்லை. கடந்த காலத்தில் இவர்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைந்­தது என்­பதும் மக்­க­ளுக்கு 
நன்­றா­கவே தெரியும்
. ஆகவே, அர­சி­யல்­வா­தி­களை பற்றி கதைத்து மக்­களை ஏமாற்­றாது இந்த கலா­சா­ரத்தை முற்­றாக ஒழிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.
அதேபோல் பொரு­ளா­தார ரீதியில் இந்த அர­சாங்கம் மிகவும் 
மோச­மான 
கொள்­கை­க­ளையே முன்­வைத்­துள்­ளது. எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத வகையில் இந்த கூட்டு அர­சாங்கம் தமது பொரு­ளாதாரக் கொள்­கை­களை வர­வு­ – செ­லவு திட்­டத்தில் முன்­வைத்­துள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்தின் ஊழல்­க­ளையும் கொள்­ளை­யையும் கண்­ட­றி­வ­தாக தெரி­வித்து
 உரு­வாக்­கிய
 இந்த அர­சாங்கம் இந்த ஆட்­சி­யிலும் ஊழல் நட­வ­டிக்­கை­யையே முன்­னெ­டுக்­கின்­றது. ஊழலில் ஏற்­பட்ட நஷ்டத்தை சமாளிக்க மக்களின் மீது பொருளாதார சுமைகளை சுமத்தி பணத்தை அறவிட
 முயற்சிக்கின்றது.
இவைகளும் நல்லாட்சியில் ஒரு அடையாளமா என்ற கேள்வியே இப்போது அனைவர் மத்தியிலும் எழுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கமும் இன்று அராஜக அரசாங் கமாகவே மாறியுள்ளது என அவர் குறிப் பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 19, 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை?

போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன.
இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டு, போர்க்குற்ற விசாரணையை 
திணித்துள்ளன.
குறித்த நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகள் எம்-16 தாக்குதல் ஆயுதங்கள், குரூனர் தகவல் தொடர்பு சாதனங்கள், வோட்டர் ஸ்கூட்டர், விமான ஓடுபாதை கருவிகள், சேரா ரக செய்மதித் தொடர்பாடல் கருவிகள், ரேடார் கருவிகள் மற்றும் ஏனைய ஏராளமான நவீன ஆயுதங்களையும் பெற்று பயன்படுத்தியிருந்தனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவில் இருந்து குறித்த ஆயுதங்களுடன் ஹெரிசைட் வெடிமருந்துகள் ஆயிரம் கிலோவும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இவற்றில் ஹெரிசைட் வெடிமருந்து மேற்குலகின் சக்தி வாய்ந்த நாடு ஒன்றினால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றது.
அந்தவகையில் போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய குறித்த ஐந்து நாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான ஆவணங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 12, 2015

மைத்திரிக்குப் பின்னும் வெள்ளை வான்தொடர்கிறது???

இலங்கை அரசாங்கங்கள், மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் கூட, வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 
தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆற்றிய சிறப்புரையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. அதுவும், தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் அல்லல், அவலங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகள் கொண்டவை. 
தொடர்ந்துவந்த
 இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் உரித்துக்கள், தனிமனித ரீதியிலும் நிர்ணயிக்கப்பட்ட மக்கட் கூட்டம் என்ற ரீதியிலும், காலாதிகாலமாக மீறப்பட்டு வந்துள்ளன. ‘சகல மக்கட் கூட்டங்களும் சுய நிர்ணய உரித்தையுடையவர்கள். அவ்வுரித்தின் அடிப்படையில் 
அவர்கள், தமது 
அரசியல் நிலையை வகுக்க முடியும். அத்துடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை வழிநடத்திச் செல்லமுடியும்’ என ஐ.நா சுயநிர்ணய உரிமையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுயநிர்ணய உரிமைதான், தமிழ்பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிக முக்கிய மனித உரிமையான சமத்துவத்துக்குமான உரித்து, இலங்கை இயங்கத் தொடங்கிய காலம் முதல், தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.
தனிப்பட்ட தமிழ் மக்களுக்கான உயிருக்கான உரித்துக் கூட, அரசாலும் அதன் முகாமைகளாலும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. நடந்த மனிதப் படுகொலைகளுக்கு, இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை. குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சமவாயத்தில் கூறப்பட்டிருக்கும் மாற்றமுடியாத உரித்துக்களாகிய சுதந்திரத்துக்கான உரித்து, நூற்றுக்கணக்கிலான 
தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு
 இன்றும் மறுக்கப்பட்டு அவர்கள், விளக்கமற்ற விளக்கமறியல்களிலும், விளப்பமற்ற விளக்கங்களிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களைச் சிறைப்படுத்தி வைத்தல், 
இலங்கை அரசாங்கம்,
 சுதந்திரத்துக்கான மனித உரிமையை மீறும் செயலாகும். ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளைத் தாமதமின்றி உடனே விடுவிப்பது, அரசாங்கத்தின் தலையாய கடனாகும். அவ்வாறு விடுவித்தால்தான், எமது நாட்டில், எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று, உணரக் கூடியதாக 
இருக்கும் என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 11, 2015

முக்கிய 2 விடுதலை புலிகள் விடுதலையாகவுள்ளர் இதனால் கோட்டபாய கதறல் !

நல்லிணக்க அடிப்படையில் , மைத்திரி அரசானது 2 முக்கிய விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை
 இன்றைய தினம்
 இது குறித்து கோட்டபாய ராஜபக்ஷவும் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலையாக உள்ள முக்கிய புலிகள் உறுப்பினர்களின் மொறிஸ் என்னும் நபரும் அடங்குகிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது 
ஆச்சரியமான உண்மை.
விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டமிடலின் சூத்திரதாரி மொறிஸ் என்று கூறப்படுகிறது.முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் "ஜின் "என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என
 தெரியாது, என்று 
கோட்டபாய மேலும் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் விடுதலைசெய்யப்பட்டனர் இவ்வாறு விடுவிக்கப்படாமலிருந்தவர்கள் தேசியபாதுகாப்பிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்கள் என்றும் கோட்டபாய மேலும்
 புலம்பியுள்ளார்.
தாங்கள் தடுத்து வைத்திருந்த சில புலிகள் உறுப்பினர்கள், போட்டு அம்மானோடு நேரடித்தொடர்பில் இருந்ததாகவும். அவர்கள் சிறையில் இருந்தவேளை தமது இலக்கு மாறமல் இருந்ததாகவும் கோட்டபாய தெரிவித்துள்ளார். அவர்களின் மண்டையை எம்மால் கழுவமுடியவில்லை. புணர்வாழ்வும் கொடுக்க முடியவில்லை. இதனால் தான் நாம் 
அவர்களை தொடர்ந்தும்
 தடுத்து வைத்திருந்தோம். ஆனால் மைத்திரி அரசு அவர்களை விடுதலை செய்கிறது. இனி என்ன நடக்குமோ தெரியாது என்று கோட்டபாய மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 08, 2015

அரசியல் கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்!!!

யாழ்ப்பாணம் .சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவராசா ஜெனீபன் (வயது 36) என்ற நபரே உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் நேற்றைய தினம் இவரது வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கின் சாட்சிக்காரராக புலனாய்வுத்துறை அதிகாரி மன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதுவரை காலமும் புலனாய்வுத் துறை அதிகாரி, மன்றில் ஆஜராகாத நிலையில் தனது வழக்கு தொடர்ந்து கொண்டு போவதாக கூறியே குறித்த கைதி போராட்டத்தில் குதித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டிசம்பர் 02, 2015

பாரிய மோசடியில் போக்குவரத்துசபை சிக்கியது???


கடந்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2200 பேருந்துகள் தருவிக்கப்பட்ட போது 3080 மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்திரஜித் மாரசிங்க இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த காலத்தில் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் இருந்து 2200 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் CIF விலை (COST INSURANCE AND FREIGHT) விலை 30,000 அமெரிக்க டொலர்கள் எனக் 
குறிப்பிடப்பட்டுள்ளது
. இருந்தபோதிலும், இலங்கைக்கு 40,000 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலேயே 2200 பேருந்துகள் இறக்குமதி 
செய்யப்பட்டுள்ளன.
இதற்கமையே 3080 மில்லியன் ரூபா எங்கு சென்றது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரஜித் மாரசிங்க 
கேள்வியெழுப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>