18

siruppiddy

செப்டம்பர் 11, 2017

நாளைய ஜெனிவா கூட்டத்தொடரில் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதாரம்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு கூட்டத்தொடரில் கலந்து 
கொள்ளவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை.
ஆனால் ஐநாவின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் 
காணப்படுகின்றன.
பொதுவான விவாதங்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல், காணாமல்போனோர் மற்றும்
 இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்து அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கான சூழலை உருவாக்கலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்லும் மனித உரிமை செயற்பாட்டு பொது அமைப்புகள் உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ள நிலையில் இது மிகவும் நெருக்கடியான நிலைமைகளை உருவாக்கக் கூடும் என்றும் 
அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கை 
தாக்கல் செய்துள்ளன.
2007ம் ஆண்டு தொடக்கம் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற 2009ம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப்படைகளின் தளபதியாக செயற்பட்ட நிலையில் வவுனியாவில் உள்ள யோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்ததாக போர்க்குற்ற வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதமாகவும் சித்திரவதை
 செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தரப்பினரிடம் கேள்விகள் முன்வைக்கப்படலாம்.
அதேபோன்று ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இறுதிக்கட்டப் போரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகள் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளால் ஜெனிவாவின் கவனத்திற்கு கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்குள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 10, 2017

இருவர் பொலனறுவையில் உயிரிழப்பு: ஜனாதிபதியின் சகோதரர் கைது!


பொலனறுவையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த வாகன விபத்தில் பொலனறுவை எதுமல்பிட்டி பகுதியில், வசிக்கும் 48 வயதுடைய ஹேரத், மற்றும் 58 வயதுடைய புத்ததாச எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் லால் சிறிசேன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து 
வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும், பொலனறுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 09, 2017

பொலிஸ் அதிகாரி ஒருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு; ?

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த உப பரிசோதகரது சடலம், பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக அவரது விடுதிக்குச் சென்றிருந்தபோது குறித்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் 
கண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஏனைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
எனினும் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்தமை இதன்போது கண்டறியப்பட்டது. உயிரிழந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் உப பரிசோதகர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவே தற்போது வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் 
கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த கெமரா ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>