தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்… ” தனி நாடு கிடைக்கும் வரை ”?
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை , தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது குரலை உயர்த்திக் கத்தினான் அந்த துறை என்கிற சிறுவன் …. கண்கள் சிவக்க அந்தச் சிறுவன் துரை கேட்டது
என்ன தெரியுமா ???? …..
அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ???? …… என்று கண்கள் சிவக்கக் கத்தினான் அந்தச் சிறுவன் துரை …..
அந்தச் சிறுவன் துரை யார் என்று தெரியுமா ???
பிரபாகரன் ( வீட்டில் அனைவரும் செல்லமாக துரை என்றுதான் அழைப்பார்கள்
தமிழர்களைத் தேடித் தேடிக் கொன்றனர் வெறி பிடித்த சிங்களக் காடைகள் ….. அப்போது பணதூர என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு இந்து அர்ச்சகரின் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சிங்களர்களை பற்றிக் கேள்விப்பட்ட அந்த சிறுவன் பிரபாகரன் கேட்டதுதான் …..
” அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை ” என்று ………
கேட்டதோடு நிற்க வில்லை அந்தச் சிறுவன் பிரபாகரன் …. செயலிலும் காட்டினான் …. தமிழ் இன எதிரிகளை பந்தாடினான் … புலியாய்ப் பாய்தான் …. முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்குப் பிறகு …. புலிகளின் ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனித்திருக்கும் வேளையில் ….. ,,
சென்றவாரம் ….
தமிழ் மாணவர்களுக்கும் , சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் …. இத்துணை அடக்கு முறைகளையும் மீறி …. சிங்களக் காடைகளின் கை ஓங்கியிருக்கும் இன்றைய நாளிலும் …. பொங்கி எழுந்த எமது தமிழ் மாணவர்களின் தான் மான உணர்ச்சியை நினைக்கும் போது …. ஈழம் மலரும் காலம் மிக விரைவில் என்றே தோன்றுகிறது ….. தமிழ் மாணவன் கையில் கம்புடன் நிற்கும் காட்ச்சி மூன்று விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது ….
1. சிங்களன் அடக்கு முறை இன்னும் தொடர்கிறது
2. என்னதான் அடக்க நினைத்தாலும் தமிழன் பொங்கி எழுவான்
3. தமிழீழமே தீர்வு
தமிழ் மாணவர்களும் , சிங்கள மாணவர்களும் மோதிக்கொண்ட அந்த சம்பவம் …. மேர்ச் சொன்ன மூன்று விஷயங்களையும் நமக்கு மட்டுமல்ல …. சர்வதேசத்திற்கும் உணர்த்துகிறது ….. தமிழ் மாணவன் ஒருவன் …. கையில் கம்புடன் ஆக்ரோஷமாக நிற்கும் அந்தக் காட்ச்சியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் …. அந்தத் தமிழ் மாணவன் கையில் கம்புடன் எச்சரிக்கை விடுப்பது சிங்களனுக்கு மட்டுமல்ல ….
சர்வதேசத்திற்கும்தான்
தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள் ….. .. ” தனி நாடு கிடைக்கும் வரை ” ஆமா அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …. கம்புதானா ?? எனக்கென்னவோ துப்பாக்கி போல தெரிகிறது !!!!! எங்கே ….. இப்போது மீண்டும் ஒருமுறை நன்றாகப் பாருங்கள் …….. ,, இப்போது சொல்லுங்கள் ….. அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …… கம்பா ???? …………. துப்பாக்கியா ????? …
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>