18

siruppiddy

செப்டம்பர் 25, 2016

விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம்ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர் 
தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இந்தத் தடை நீக்க உத்தரவை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதற்கு முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக அமையாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்
இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார். எனினும் இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
கட்டாயம் இல்லை. அந்தந்த நாடுகள் தனித்து இந்தத் தடை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளலாம். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதன் உயர் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதே இதுவரை வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்படன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும்
 நீக்கப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செப்டம்பர் 19, 2016

முற்றைவெளியில் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம்?

எழுக தமிழா இது இருக்கைக்கான நேரமல்ல எழுக்கைக்கான நேரம் எம் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம் முற்றைவெளியில் ""
மண்ணில் விழுந்த பொருட்கள் எல்லாமே உக்கி மண்ணோடு மண்ணாகி 
அழிந்தொழிந்து போனாலும் போராடி வெல்லும் விதைகள் மட்டுமே முளைத்தெழுந்த விருட்சங்கள் ஆகின்றன.
போராடும் மனிதர்களே வெற்றி 
காண்கிறார்கள்.
எமது போராட்டத்தை சூழ் நிலைகள் கூட தடுத்து நிறுத்த முடியாது மனதில் நம்பிக்கை என்ற விதை விழுந்து விட்டால்.
விதை போல இருப்போம்.. முளைத்தால் பயிராகியும் பிழைத்தால் உரமாகியும் பயனை தரும் வாழ்வை 
நமதாக்குவோம்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>