18

siruppiddy

ஜனவரி 31, 2014

ஈழத் தமிழர்களுக்கு தீராப்பழியை இந்தியா செய்துவிடக் கூடாது

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.இந்நிலையில் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரச பிரதிநிதிகள் உலக நாடுகளுக்குச் சென்று தமக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் விநயமாக வேண்டி நிற்கின்றனர். அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன.
நிலைமை இதுவாக இருக்க, இலங்கைக்கு எதிராக-மூன்றாவது தடவையாக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பது கடுமையான அவதானத்துக்கு உட்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்த போதிலும் அந்த ஆதரவிற்காக, தமிழகம் முழுவதும் படாப்பாடுபட்டமை மறப்பதற்குரியதல்ல. ஐ.நாவில் வைத்து இலங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் முடிவாக இருந்தது.

எனினும் தமிழக மக்களின் கொந்தளிப்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் விடாப்பிடி, பொதுத் தேர்தலில் நெருங்குநிலை என்பன காரணமாக இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்திருந்தது.
இந்தியாவின் இந்த ஆதரிப்பு இலங்கை அரசுக்கு கடுப்பினை ஏற்படுத்தவில்லை என்ப தற்குள், இந்திய மத்திய அரசின் ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து விட்டு, அதன் பின்னர் இலங்கையை ஆசுவாசப்படுத்துவதென்பது சாதாரண விடயம் அல்ல.

இருந்தும் ஆசுவாசப்படுத்தல் நடந்துள்ளதெனில், இந்தியா ஐ.நாவில் அளித்த வாக்கை விட, ஒருபடி உயர்வான உதவியை செய்வதாக இலங்கை அரசுக்கு உறுதியளித்திருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, இப்போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இந்தியாவுக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிச்சயம் கேட்டிருப்பார்.

இதற்கு சர்மான் குர்ஷித் சிரித்தபடி, இலங்கையை இந்தியா எப்போதாவது கைவிட்டது உண்டா? என்று மறுத்தான் போட்டிருப்பார்.
நிலைமை இதுவாயினும் ஈழத் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு இந்திய மத்திய அரசும் மூலகாரணம் என்பதால், தமிழ் மக்களின் அவலநிலைக்கு ஒரு நிரந்தரமான தீர்மானம் கிடைக்க இந்தியா உதவுவது அதன் தார்மீகக் கடமை என்பதை ஒரு போதும் மறந்து விடலாகாது.

ஜனவரி 30, 2014

அறிவிப்புஅரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு

 இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்களை வர்ண கொடிகளினால் அலங்கரிக்குமாறும் அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெறவுள்ளது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.

ஜனவரி 29, 2014

புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்டவிரோத ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது,

25 ஆண்டு கால பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ளது,
இலங்கை அரசாங்கப்படையினர் இரசாயன மற்றும் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 12, 2014

டக்ளஸ் - சங்கரி வடக்கில் இணைந்து புதிய கூட்டணி! –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க இணைகின்றனர்.
வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக பலமான கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக தமிழ்க்கட்சிகள் சில யாழ்ப்பாணத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான

கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சிறீடெலோ சார்பில் அதன் செயலாளர் உதயராசா மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் செந்தூரன், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் சுகு சிறிதரன், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   
இந்த கலந்துரையாடல் நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது.இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில்

மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதாக இருந்தவுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 

ஜனவரி 09, 2014

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக

இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வாதற்காக உறுதிப்பாடுகளை இந்தியா மேற்கொண்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் உதவியை நாடியது. இந்தியாவில் உள்ளது போல் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் என இலங்கை உறுதியளித்தது.

எவ்வாறாயினும் இலங்கை ஒரு இறையாண்மைமிக்க நாடு. அந்த நாடு தன்னை பற்றிய முடிவுகளை எடுக்கும்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இலங்கை தமிழர்கள் உட்பட ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான உறுதிப்பாடுகளை இந்தியா வழங்கும் என சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 08, 2014

மனித வெடிகுண்டாக செயல்பட வந்த 10 வயது சிறுமி மீட்பு

  
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சிறுமி, தன் மீது பொறுத்தியிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக காப்பாற்றப்பட்டதாக உள்துறை அமைச்சம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெடிகுண்டை வெடிக்க சிறுமியின் அண்ணனால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், சிறுமியின் அண்ணன் தலிபான் இயக்கத்தின் முக்கிய கமாண்டராக உள்ளான் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்ட அப்பெண்ணை பாதுகாப்பு படையினர் சமாதானப்படுத்தி, அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து பேராபத்திலிருந்து அவளையும், பொதுமக்களையும் காப்பாற்றியுள்ளனர்.
 

ஜனவரி 07, 2014

கடவுள்களால் துரத்தப்படும் சாத்தான்கள்

 ஈழத் தமிழினத்தின்மீதான இன அழிப்புக் குற்றவாளிகள் ஓட, ஓட விரட்டப்படுகின்றார்கள். ஈழப் போரின் இறுதிக் கணம்வரை கொல்லப்பட்டவர்களால், இந்த இன அழிப்புக்குக் காரணமானவர்கள் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

முதலாவது நேரடிக் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் இன அழிப்புப் போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கால்படாத நாடுகளுக்கெல்லாம் காவடி எடுத்துக்கொண்டு செல்கின்றார்கள். தாங்கள் தப்பிக் கொள்வதற்காக, என்ன விலை கொடுக்கவும், எதை இழக்கவும் தயாரான இவர்கள், இந்த நிலையிலும் தங்களது பௌத்த – சிங்கள இனவாத மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் இழந்துவிடத் தயாராக இல்லை.

தமிழின அழிப்பின் கூட்டுக் குற்றவாளிகளான இந்திய மத்திய காங்கிரஸ் ஆட்சியினர் என்றுமில்லாத வகையில் மிக மோசமான அரசியல் சரிவுக்குட்பட்டவர்களாகத் தவித்து நிற்கிறார்கள். இவர்களை, இவர்கள் செய்த ஊழல் மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்புக்குத் துணை நின்ற குற்றச்சாட்டும் சேர்ந்தே துரத்துகின்றது. தமிழகத்தில் வேண்டப்படாத கட்சியாக காங்கிரஸ் கட்சி தீண்டுவாரில்லாமல் தனிமைப்பட்டுப் பொயுள்ளது.

ஈழத் தமிழர்கள்மீது சிகழ்த்தப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்தும் வல்லமை இருந்தும், தனது குடும்ப வரவுகளுக்காக நடைபெற்ற இன அழிப்புக் கொடூரத்தைத் தமிழகமே அறிந்து கொள்ளவிடாமல் ஊடக இருட்டடிப்பு மூலம் காங்கிரஸ் பங்காளிகளைக் காப்பாற்றியி கொடுமைக்காக தமிழக மக்களால் தண்டிக்கப்பட்ட பிரமுகராகிவிட்டார் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. தமிழர்களைக் காப்பாற்ற கட்டுமரமாக மிதப்பேன் என்றவர், ஒதிய மரமாக வீழ்ந்து கிடக்கின்றார்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கு முகவரி இல்லை. முன்நின்று வழிகாட்ட ஒரு சாரதியும் கிடையாது. ஆனாலும், ஈழத்தை நோக்கியே உலகத்தின் கண்கள் பார்வையைத் திருப்புகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அத்தனை குழப்பங்கள் உருவாக்கப்பட்டாலும், தமிழ்த் தேசியத்திற்கான அவர்களது பணி தொடர்ந்து செல்வதன் அற்புதங்களை வியந்து பார்க்காதவர்கள் இல்லை. திக்குகள் பார்த்துத் திரும்பி நிற்கும் நவக்கிரகங்களும், கார்த்திகை 27 அன்று கனத்த மனங்களுடன் விளக்கேற்ற மறுப்பதில்லை.

தேசத்தின்மீது இடி விழுந்தபோதும், தேசமே எரிந்து சாம்பலானபோதும் தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளுடன் உலகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காகப் போர் தொடுக்கின்றாhகள். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபாகரன் நாமம் நிறைந்து போயுள்ளது. கண்கள் காணத் தவித்தாலும், பிரபாகரன் என்ற அந்த உத்தமத் தமிழனே எல்லாத் தமிழர்களுக்கும் மூலவராகத் திகழும் அதிசயம், அமிசயமாகவே பார்க்கப்படுகின்றது.

சிங்கள ஆட்சியாளர்கள் நடாத்திய சாட்சியமற்ற போரின் அத்தனை கொடூரங்களும் எப்படிச் சாட்சியங்களாகியது. இறுதி யுத்தத்தில் வீழ்ந்த தமிழர்களது அத்தனை எச்சங்களும் சிங்களப் படைகளால் தேடி அழிக்கப்பட்ட பின்னரும், மனிதப் புதைகுழிகள் தாங்களாகவே சாட்சியமாகியது எப்படி? கல்லறைகளுமற்ற சவக் கிடங்குகள் எப்படித் தாமாகத் திறந்து கொண்டன?

கடவுள்கள் சாத்தான்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டார்கள். சாத்தான்கள் தங்களை அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்!

இப்போது மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன், ‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் என்றொரு காலம் தமிழர்களுக்கு இல்லை’ தேசியத் தலைவர் சொன்னது எவ்வளவு புனிதமான உண்மை என்பதை!