தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையான
பொதுநூலகமாக விளங்கியதும் உலகில் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காத அன்றைய தமிழ்ப் புலமையாளர்கள் சேர்த்து
உருவாக்கிய தமிழ் மரபையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணம் நூலகம்.
ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளைஅழி என்பார்கள்.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின்
புலமைச் சொத்தாகக் கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாக்கப்பட்ட சம்பவம்
வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகக் கருதப்படுகிறது.
1933 இல் அறிவால் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை யாழ் நூலகம் உருவாகக் காரணமாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த யாழ்ப்பாண நீதிமன்றக் காரியதரிசியாக இருந்த k.m செல்லப்பா அவர்கள்.
வணக்கத்திற்குரிய வணபிதா லோக் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டினார்.
கலாநிதி எஸ்.ஆர் ரங்கநாதன், சென்னை
அரசின் கட்டடக் கலை நிபுணர் கே.எஸ் நரசிம்மன் கட்டக்கலைக்கான வரைபடங்களை வழங்கியிருந்தார்.
1959 இல் யாழ்முதல்வராக இருந்த
துரையப்பா அவர்களால் யாழ் நூலகம்
திறந்து வைக்கப்பட்டது.
31.05.1981 அன்று நள்ளிரவு யாழ் நூல் நிலையம் எரிந்து கொண்டிருந்ததை யாழ் புனித சம்பத்தரியார் கல்லூரி மேல்மாடிக்
கட்டடத்தில் வசித்த வேளை இதனைப்
பார்த்த பாதிரியார் தாவீது அடிகளார்
இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில்
மாரடைப்பால் உயிரிழந்தார்.
9700 நூல்களும்,
ஓலைச்சுவடிகளும் தடுமாறி நிறம் மாறி உருச்சிதைந்தன.
1660 இல் Robert கினொக்ஸ் எழுதிய
History of ceylon,
யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம்,
தமிழில் முதன்முதலில் வந்த இலக்கியக்
கலைக் களஞ்சியமான அபிதானகோசம்.
,சித்த வைத்தியம் பற்றிய ஓலைச்சுவடிகள்
அனைத்தும் அன்று கருகிச் சாம்பலாகின.
1994 இல் மீளக்கட்டியெழுப்பும் திட்டம் மங்கள சமரவின் வெள்ளைத்தாமரை
அமைப்பால் Book & Brick
என்ற தலைப்போடு அதே இடத்தில் கட்டப்பட்டது.
தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிய நாள்.மறக்க முடியாத வடு. எத்தனையோ பேரின்
சிந்தனைக்கு அறிவூட்டிய அறிவுச்சிகரம்
சிதைந்து போனதே யாழ்ப்பாண நூலகத்தின் கதையாகிறது