மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் நிலையில், கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான
நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் உன்னத உறவுகள் சார்பாக தெரிவித்திருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் போராட்ட குணமும் கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக,
ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும்,
உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக்களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது எனவும்
தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்த விதமான செயலூக்கமும் இல்லாமல், தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம் எனவும், சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.
இத்தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வு பூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே எனவும், உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும், எமது பூர்வ பந்த ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோம் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மேலும்
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>