18

siruppiddy

ஆகஸ்ட் 21, 2016

ஜனாதிபதி மைத்திரி தேசியத்தலைவர் உயிருடன் இருக்கும் இரகசியத்தைவெளியிடத்தயார்!!!

அந்த இரகசியம் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா ஆட்சி அரசியல் பீடங்களில் பெரும்பூகம்பம் நிகழும் போர் வெற்றி நாயகர்களாக வலம்வரும் சிங்களத்தின் முகமூடி கிழியும்
இறுதி யுத்தத்தில் ஶ்ரீலங்கா அரசால் இறந்தாக கூறப்பட்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை.
இதன் காரணமாக தொடர்ந்தும் தேசிய தலைவர் கொல்லப்படவில்லை உயிருடன் இருப்பதாகவே செய்திகள் வெளிவருகின்றன.
ஒருவேளை தலைவர் பிரபாகரனுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நிகழ்ந்தது? இறுதி யுத்தத்தின் உண்மையான தன்மை என்ன? கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்தது என்ன? என்பதையே ஶ்ரீலங்கா  ஜனாதிபதி வெளியிடப்போகின்றாரா? என்பதே கேள்வியாக உள்ளது.
தற்போது வரை மஹிந்தவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர் நாட்டில் யுத்தத்தை நிறுத்தினார் என்ற காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் எடுபடாமல் செல்கின்றது.
இங்கு சிங்கள மக்களால் மன்னனாக வர்ணிக்கப்பட்டு வரும் மஹிந்தவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு போர்க் குற்றம் மற்றும் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை வெளியிடப்படும் போது மஹிந்தவிற்கு உள்நாட்டில் வாழும் சாத்தியம் குறைந்து விடும் என்பதும் உண்மையே.
மஹிந்தவை அடக்க ரணில் மற்றும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தலைவர் பற்றிய உண்மையே எனவும் தற்போது சந்தேகங்கள் வழுப்பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இறுதியுத்தம் தொடர்பில் உண்மைகள் வெளிவரும் போது நாட்டு மக்களாலும் மஹிந்தவின் ஆதரவாளர்களினாலும் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
மாறாக மஹிந்தவினால் தற்போதைய ஆட்சிக்கு இடையூறுகளும், புதிய கட்சி எண்ணங்களும் உருவாகாமல் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் போது நாட்டில் குழப்பம் ஏற்படும் அது சிலவேளை இனக்கலவரமாகவும் மாறிவிடலாம். அவ்வாறு ஏற்பட்டு விட்டால் அதற்கு நல்லாட்சி மட்டுமே பதில் கூறவேண்டும்.
அதன் காரணமாகவே தகுந்த நேரம் வரும் வரை இரகசியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது எனவும் எவ்வாறாயினும் தற்போது நாடு செல்லும் போக்கில் இறுதியுத்தம் தொடர்பில் மெது மெதுவாக உண்மைகள் புலப்படுத்தப்படும் எனவும் அரசியல் தரப்பு அவதானிகள் தெரிவித்து
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>ஆகஸ்ட் 15, 2016

மேலும் 500 ஏக்கர் காணியை இராணுவம் விடுவிக்கும் சாத்தியம்!

வலி.வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் மீதியாக உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்கக் கோரிய 1528 ஏக்கர் காணிகளில் 500 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரியவருகிறது.
மீதியாக 5043 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளது.
அந்த வகையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 1528 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அண்மையில் மீள் குடியேற்ற அமைச்சினால் அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்
 பட்டிருந்தது.
பாதுகாப்புபடை பிரிவில் இருந்து அதற்கான பரிந்துரை அறிக்கை கிடைக்காத காரணத்தினால் அமைச்சரவை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு கோரிய 1528 ஏக்கர் காணியில் அண்ணளவாக 500 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்படும் என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று வலி.வடக்கு பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு படைத்தரப்பு மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் பளை, வீமன்காமம் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டார்.
மேலதிகமாக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக செயற்படுவது தொடர்பிலும் இதன்போது 
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆகஸ்ட் 08, 2016

இலங்கைசிங்கப்பூரை நோக்கி நகர்கின்றது !

இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது என்ற உண்மையை, தற்போதைய அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், இடைநிறுத்தப்பட்ட
 கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தான், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இந்தியாவின் அழுத்தங்களால் தான் இந்தத் திட்டத்தை இடைநிறுத்த நேரிட்டது என்று கூறியிருக்கிறார்.
சீனாவின் முதலீட்டில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியா தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.
அந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் மஹிந்த ராஜபக்ச, இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததால் தான், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தன.
இதனை மனதில் வைத்துக் கொண்டே, இந்தியப் புலனாய்வுத்துறை மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகப் பணியாற்றியிருந்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே, துறைமுக நகரத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்த உத்தரவிட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் இரண்டாவது வாரத்தில் மேற்கொண்ட பயணத்துக்கு ஒருவாரம் முன்னதாகவே துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் அல்லது இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொண்டே துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியதாக காரணம் கூறியது அரசாங்கம். அதற்கேற்ப, சுற்றுச்சூழல் அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியதால், சீனாவின் ஒட்டுமொத்த திட்டங்களும் முடங்கிப் போகும் ஆபத்து ஒன்று ஏற்பட்ட நிலையிலும், இலங்கையின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு சீனாவின் தயவு தேவை என்று உணரப்பட்ட நிலையிலும் தான், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகால மௌனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சீனாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை.
துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பீஜிங் பயணத்தின் போது முடிவு செய்யப்பட்டது.
அதைவிட, சீனாவின் முதலீட்டில், அம்பாந்தோட்டையில் பொருளாதார முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இப்போது இந்த இரண்டு திட்டங்களையும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து சீனாவும் இலங்கையும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பேச்சுக்களில் நேரடியாகவும் தனது நேரடிக் கண்காணிப்பிலும் மேற்கொண்டு
 வருகிறார்.
எப்படியாவது சீனாவைப் பயன்படுத்தி, பொருளாதார நிலையை முன்னேற்றி விட வேண்டும் என்பது, அரசாங்கத்தின் திட்டமாக இருந்தாலும், இந்தியாவின் கரிசனையோ தனது பாதுகாப்புக்கு சீனாவினால் அச்சுறுத்தல் வந்து விடலாம் என்பதாக இருக்கிறது.
சீனா பற்றிய இந்தியாவின் கரிசனைகள், அச்சம் என்பனவற்றுக்கு அப்பால், இலங்கையில் சீனாவின் முதலீடுகளைப் பெறுவது தான் இலங்கைக்கான முதல் சவாலாக இருந்து வந்திருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான நிலை இருக்கவில்லை. ஆனால் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு கண்டபடி அனுமதிகள் அளிக்கப்பட்டன.
இது தனது பாதுகாப்புக் குறித்து இந்தியா அதிக அச்சமும் கவலையும் கொள்வதற்குக் காரணமாகியது.எனினும், தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறது.
சீனாவின் திட்டங்களின் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது.இதனால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத வகையில், சீனாவுடன் நெருக்கத்தையும், அதன் முதலீடுகளையும் பெற்றுக்கொள்ள முனைகிறது தற்போதைய அரசாங்கம்.
சீனாவின் திட்டங்கள் தொடர்பாக இந்தியா அழுத்தங்களைக் கொடுப்பது குறித்து இதுவரையில் இலங்கை அரசாங்கம் வாய் திறந்ததில்லை.
ஆனால், மஹிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சீனா விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தன என்று கடந்த ஆண்டு 
கூறியிருந்தார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறு புதுடில்லியில் வைத்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனக்கு அழுத்தங்களைக் கொடுத்ததாக கோத்தபாய ராஜபக்ச
 தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, இந்தியாவின் அழுத்தங்களினால் தான் துறைமுக நகரத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான மஹேஷினி கொலன்னே, அந்தக் கருத்தை நிராகரித்திருந்தார்.ஆனால், இப்போது, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இந்தியாவின் அழுத்தங்களே காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது பற்றிய இந்தியாவின் கருத்துக்கள் எதுவும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.ஆனாலும், இந்தியா இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க முனையுமா என்பது சந்தேகம் தான்.
அவ்வாறு கருத்து வெளியிட முனைந்தாலும் தனது தேசிய பாதுகாப்புக் குறித்த கரிசனைகளையே வெளிப்படுத்தும்.தற்போது, இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் இடைநிறுத்தப்பட்ட துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பாந்தோட்டையில், 55 சதுர கி.மீ பரப்பளவுடைய காணிகள், சீனாவுக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைப்பதற்காக
 வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு, சீனாவின் முதலீடுகளுக்கான கதவுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் திறந்து விட்டுள்ள நிலையில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருக்கிறது,இந்தியாவின் இந்த மௌனம், இலங்கைக்குச் சாதகமானதா? என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தொடரப்பட்டால் தான், அதன் முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் தான், பொருளாதார ரீதியாகத் தலையெடுக்க முடியும்.இதனை இந்தியா உணர்ந்திருக்க 
வேண்டும்.
இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது போனால், அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற நிலையும் ஏற்படும். அத்தகைய குழப்பமும், உறுதியின்மையும், இந்தியாவின் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொழும்பின் தற்போதைய அரசியல் உறுதிப்பாட்டை பாதுகாக்க வேண்டுமானால், பொருளாதார ரீதியான சீனாவின் தலையீடுகளுக்கு மௌனமாக தலையாட்டிக் கொள்வது தான் இந்தியாவுக்கு உள்ள ஒரே வழியாகும்.
அந்த முடிவைத் தான் இந்தியா இப்போது எடுத்திருப்பதாகத் தெரிகிறது. விரும்பியோ விரும்பாமலோ சீனாவுக்கு அனுமதி கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
எனினும் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் மூலம், தவிர்க்கவும் முனைந்திருக்கிறது.
துறைமுக நகரத் திட்டத்தில் 20 ஹெக்ரெயர் நிலம் சீனாவுக்கு உரிமையாகும் என்று முன்னைய உடன்பாட்டில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் திருத்தப்படவுள்ள புதிய உடன்பாட்டில் சீனாவுக்கு நில உரிமை வழங்கப்படாது. 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தான் நிலம் வழங்கப்படும்.
இது போன்ற திருத்தங்களின் ஊடாக இந்தியாவை முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்குத் திருப்திப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசாங்கம்.
அதுபோலவே, அம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டு வலயம் ஒன்றுக்கு பெரியளவில் காணிகளை வழங்கி சீனாவையும் திருப்திப்படுத்த முனைந்திருக்கிறது.
பிராந்திய, சர்வதேச அரசியல், அதிகாரப் போட்டிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், முதலீடுகளைக் கவரும், வர்த்தகத்தை மேம்படுத்தும் புதிய உத்தியைக் கையாள தற்போதைய அரசாங்கம்
 முயற்சிக்கிறது.
சிங்கப்பூரை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது இலங்கை அரசு. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளைச் சமநிலையில் பேணுகின்றமை முக்கிய காரணமாகும்.அதனைத் தான் இலங்கை பின்பற்ற முனைகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்களும் சிங்கப்பூரை நோக்கி அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதன் இரகசியமும் இது தான். சிங்கப்பூரின் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு, இலங்கை அரசாங்கம் அதற்கேற்றவாறு தனது நகர்வுகளை முன்னெடுக்கப்
 பார்க்கிறது.
சீனாவின் முதலீடுகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து, இதுவரையில் இந்தியாவிடம் இருந்து பகிரங்கமான எந்தக் கருத்தும் வெளிவராதமை, சிங்கப்பூரின் நிலையை நோக்கிய இலங்கையின் பயணம் சாதகமான ஒன்றாகத் தான் தெரிகிறது.
அதேவேளை, இந்தியாவின் ஒப்புதலைப் பெறாமல் இலங்கையில் எதுவும் நடந்து விட முடியாது என்பதைத் தான் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>