18

siruppiddy

ஜூலை 29, 2020

எழுவர் விடுதலை,! ஒரு வாரத்தில் பதில் தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு


எழுவர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.
அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளனுக்கும் கொரோனா
தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர  முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்
வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் ? எனவே இது குறித்தும், பேரறிவாளன் பரோல் தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
தெரிவித்தனர்.



ஜூலை 11, 2020

இராணுவத்தின் அலுவலகம் வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட 
உள்ளனர்.
பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.
இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினர், கிராம சேவகர் அலுவலகத்துடன் இணைந்து கடமையாற்றுவார்கள்.
அதேவேளை காங்கேசன்துறை கடற்படை 
முகாமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி இசுரு தேவப்பிரிய, கடற்படையினருக்கு கொரோனா வைரசுடன்
 மாத்திரமல்லாது போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 350 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றியதாகவும் 
அவர் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


ஜூலை 09, 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கம்பஹாவில்
 கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது  
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


யாழ் நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு 
அஞ்சலி செலுத்தினர்
>>>>>>>>>>>>>>>
யாழ் நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று
>>>>>
யாழ் நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை 
படுகொலை செய்தது.
இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>



கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப் சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதவிகளை வழங்கி வருகின்றனர் .


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்த தொழில் செய்பவர்களில் தொழில் பாதிப்புக்குள்ளானவர்களில் தெரிவு

 செய்யப்பட்டவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தொழில் பாதிப்புக்குள்ளான விசேட தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் உதவியின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவிகளை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ் பாபு, உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உளவள துறை பிரிவு

உத்தியோகத்தர் விக்னேஸ்வரி பிரதீபன், விவசாய பிரிவு உத்தியோகத்தர்கள், கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் மாவட்ட பொருளாளர் எம்.ஷிராணி, சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜெகதேவன் ஜெரோன் ஆகியோர்
கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>