18

siruppiddy

நவம்பர் 30, 2019

காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரணில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரின்
 உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில், 
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் 
நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற 
உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணுக்கு 29.11.19. (வெள்ளிக்கிழமை) மாலை இரவு நேரக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றிருந்தார்.எனினும், இன்று காலை 
அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 முன்னெடுத்துள்ளனர்.

மாணவி ஒருவருக்கு கோயில் மடப்பள்ளியில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சிச் சம்பவம் யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது.
தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில், விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்றுப் பொருளாக ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு 
மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து, தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக
 குற்றம் சுமத்தப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு, அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றதுபூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக 
பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு 
பிறப்பித்துள்ளது.

நவம்பர் 13, 2019

யாழ் நகரில் ஊடகவிலாளர்களுக்கு நீதி கோரும் நடை பயணம் முன்னெடுப்பு

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது.நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து 
விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும், சர்வதேச தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பயணம்
 இன்று.13.11.2019. புதன்கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.   இதன் போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட
 வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.மின்சார நிலைய வீதி, 
ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்றும் யாழ்.பிரதான பஸ்நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது
 கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.இவ் விழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>