18

siruppiddy

ஜனவரி 29, 2015

பதவியிழந்த ஷிரானி மீண்டும் தலைமை நீதிபதியானார்..

 ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியான, ஷிரானி பண்டாரநாயகேவை, மீண்டும் அதே பதவியில் அமர்த்தியுள்ளார், இலங்கையின் புதிய அதிபர், மைத்திரிபால சிறிசேன.
கடந்த 2013ம் ஆண்டில், ஷிரானி பண்டாரநாயகே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பார்லிமென்டில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஷிரானியை, ராஜபக் ஷே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக் ஷே தோல்வியுற்று, புதிய அதிபராக, மைத்திரிபால சிறிசேன 
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ராஜபக்சவின் பழிவாங்கும் படலத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு, நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளை புதிய அதிபர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, அண்மையில், முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த 
சரத் பென்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதே போன்று, தற்போது, ஷிரானி பண்டாரநாயகேவுக்கும், தலைமை நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, 43வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்ட ஷிரானிக்கு, நீதிமன்ற வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 27, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! ஜனாதிபதி உறுதிமொழி !!

இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி
 மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற மன்னார் ஆயர் அங்கு 120 தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று அங்குள்ள 5 பெண் அரசியல் கைதிகளையும் சந்தித்து உரையாடினார். அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது 
சாத்தியமாகாது. எனினும் இந்த வருட முடிவுக்குள் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால மேற்கொள்வார் என்று மன்னார் ஆயரிடம் தெரிவித்தார் என மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 26, 2015

எச்சரிக்கை!! பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்;??

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   வடக்கில் யுத்தம் 
உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.     மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும்
 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது.    நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும்.
   வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை. ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.      தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. 
விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.     சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.
 முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.   இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 22, 2015

மனு தாக்கல் !பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும்:!!

அமெரிக்க நீதிமன்றத்தில் !!ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு என்ற அமைப்பு உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு(sfj) என்ற அமைப்பு நியூயார்க்கின் தென் மாவட்டத்தில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், 
ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும். அந்த அமைப்பு பாஷிச கொள்கைகளையும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கொள்கைகள், தீய மற்றும் வன்முறை பிரச்சாரத்தில்  நம்பிக்கை கொண்டு  இந்தியாவை இந்து நாடாக்க  முயற்சிக்கிறது,வீடு திரும்புதல் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை கட்டாயமாக மதமாற்று பிரச்சாரத்தை செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாபர் மசூதி இடிப்பு மற்றும் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையை ஏற்படுத்த தூண்டியதாகவும் 2008 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கிறிஸ்தவ ஆலயங்களை எரித்ததாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு  தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரிக்கு சம்மன் அனுப்பியுள்ள நீதிமன்றம் இன்னும் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 21, 2015

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு; இலங்கை புதிய பிரதமர் ரணில்உறுதி!!!!

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு,
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர்.
13-வது திருத்தம்
அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இதுவரை அதிகார பகிர்வு கிடைக்கவில்லை.
ஆனால், 13-வது சட்ட திருத்தத்தை எழுத்திலும், செயலிலும் அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதிய பிரதமர்
இந்நிலையில், கடந்த 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி ஏற்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். 27 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
பாராளுமன்றம் கூடியது
புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம் பற்றி விளக்கி கூறினார்.
அப்போது அவர், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-
வெவ்வேறு கொள்கைகளும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட நாங்கள் ஒன்று சேர்ந்தோம்.
எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நாங்கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர்சனங்களையும் வரவேற்கிறோம். தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச்சினைகளை இந்த பாராளுமன்ற பதவிக்காலத்துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.
அதிகார பகிர்வு
மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வகை செய்யும் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்ட 6திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

அதிபர் அதிகாரம் ரத்து

ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும்பகுதியாக இருக்கும். ராஜபக்சே, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இதன்மூலம், அதிபர் பதவிக் கான அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும். பாராளுமன்றத்துக்கும், மந்திரிசபைக்கும் அதிகாரங்கள் அளிக்கப்படும். பாராளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட மந்திரிசபையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இந்திய ஆதரவை இழந்தது
தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19-வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.
ராஜபக்சே ஆட்சியால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனாவையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 19, 2015

மீண்டும்விஜலட்சுமி! வருகின்றார் இளங்கோவன்!!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தூக்கி அடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு தற்போதைய ஆளுநர் சந்திரசிறியுடன் பணியாற்றிய ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தூக்கியடிக்கப்பட்ட விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் வடமாகாண பிரதம செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மூப்பின் அடிப்படையில் முன்னிற்கு நிற்கும் ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 16, 2015

ராஜபக்சே கட்சி தலைவர் பதவியையும் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் பறிகொடுத்தார்

 இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே, இதுநாள் வரை பொறுப்பேற்றிருந்த இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைத்தார்.

தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சே நீக்கினார்.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியடைந்து, மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை விட்டும் ராஜபக்சே விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் கட்சிக்குள் கிளம்பியது.

இந்த எதிர்ப்பையடுத்து, தலைவர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக இன்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்துவந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் ராஜபக்சே தோற்பது உறுதி என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இதனையடுத்து, ராஜபக்சேவின் தேர்தல் பிரசார ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்த பசில், அமெரிக்காவுக்கு சென்று விட்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ராஜபக்சே ஒப்படைத்தார். இதனையடுத்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அக்கட்சியின் புதிய தலைவரானார்.

எனது கட்சி துண்டாடப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைக்கிறேன் என இது தொடர்பாக ராஜபக்சே வெளியிட்ட இரு வரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 12, 2015

குமரன் பத்மநாதன் பேட்டிஇலங்கையில்தான் இருக்கிறேன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக ‘கே.பி.’ என்று அழைப்பார்கள்.

குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர். விடுதலைப்புலிகளின் தலைவரான பிரகாபரனுக்கு வலது கரம் போல் திகழ்ந்த இவர், அந்த இயக்கத்தின் ஆயுத கொள்முதல் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

2009-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி குமரன் பத்மநாதன் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது அவர் அரசு ஆதரவாளராக மாறினார்.

இதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்த குமரன் பத்மநாதன் அங்கிருந்தபடியே போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இதனால், குமரன் பத்மநாதனை விசாரணைக்காக தங்கள் வசம் ஒப்படைக்கும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. எனினும் இலங்கை அரசு அவரை இந்தியா வசம் ஒப்படைக்கவில்லை.

இதனிடையே, நேற்று முன்தினம் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், குமரன் பத்மநாபன் நேற்று கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக இலங்கை அரசு நேற்று தெரிவித்தது.

இதுபற்றி அதிபர் சிறிசேனா கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ரஜிதா சேனரத்னா கூறும்போது, ‘‘விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் அறையில் இருந்து குமரன் பத்மநாதன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர் தப்பி ஓடியது தொடர்பாக விசாரணை நடத் தப்பட்டு வருகிறது’’ என்றார்.

எனினும் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றார் என்ற தகவல் தெரிய வரவில்லை.

சிறிசேனா தலைமையிலான புதிய அரசு தன்னை கைது செய்து விசாரணைக்காக இந்தியா வசம் ஒப்படைக்கும் என்று கருதி இலங்கையில் இருந்து குமரன் பத்மநாதன் தப்பியோடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில் கிளிநொச்சி யில் உள்ள அவரது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு குமரன் பத்மநாதன்  போன் மூலம் பேட்டியளிதுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் இலங்கையில்தான் இருக்கிறேன். வேறு எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் எனக்கு வழங்கப்படும் ராணுவ பாதுகாப்பு குறைக் கப்படவில்லை.
போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனித நேய பணிகளை தொடர்வதற்கு புதிய அரசு  அனுமதித்தால் இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

இதனிடையே குமரன் பத்மநாபனிடம் விசாரணை நடத்த இலங்கையின் புதிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து சிறிசேனாவின் பிரசார மேலாளர் மங்கல சமர வீரா கூறியதாவது:-

ராஜபக்சே அரசுடன் குமரன் பத்மநாபன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பணம் ஆகியவை எங்கே போனது என்பது பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 08, 2015

மாவட்டங்களிற்கான வாக்களிப்பு சூடுபிடித்தது வீதம் .

 வாக்களிப்பு! யாழ்ப்பாணம் 51%, மன்னார் 50%, கிளிநொச்சி 55.3%, முல்லைதீவு 68%, வவுனியா 60%
வடமாகாணத்திற்குட்பட்ட  மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் இன்று மதியத்தின் பின்னர் சூடுபிடித்துள்ளது.இன்று பிற்பகல்; 02.30 மணிவரையிலான காலப்பகுதியினில் பின்வரும் விபரப்படியாக மந்தமாகாவே உள்ளது.
குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் அது 60 சதவீதத்தை தாண்டிச்செல்லாலமென தேர்தல் அதிகாரிகள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திய விவரம்
யாழ்ப்பாணம் -51%,
மன்னார்  -50%,
கிளிநொச்சி -55.3%,
முல்லைதீவு -68%,
வவுனியா -60%,

செய்தி இணைப்பு 2
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் மதியம் 12 மணிவரை மந்தமாகாவே உள்ளது.குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் 40 சதவீதத்தை தாண்டமாட்டதென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிந்திய விவரம்
யாழ்ப்பாணம் -25%
மன்னார் -30%
கிளிநொச்சி -26%
முல்லைதீவு -19%
வவுனியா -30%
 
வடக்கு மக்கள் ஆட்சி மாற்றக்கோசத்துடன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பினில் களமிறங்கியுள்ளனர். எனினும் காலை 11 மணிவரையினில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையினில் வடக்கிலும் மக்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பினில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக இருக்கின்றது.  
காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர். எந்தவொரு அரசியல் அழுத்தமின்றி மக்கள் தாமாக திரண்டு வந்து வாக்களிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.மாகாணசபை தேர்தலுடன் ஒப்பிடுகையினில் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளபோதும் காலை முதல் வாக்களிப்பினில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக இளம் சமூகத்தினர் வாக்களிப்பினில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பிரதான வீதிகள் வெறிச்சோடியுள்ள போதும் மக்கள் வாக்களிப்பு மைய சூழலினில் அதிகம் காணப்படுகின்றார்கள். எனினும் மயான அமைதி காணப்படுகின்றது.இராணுவத்தினரது பகிரங்க நடமாட்டங்களை காணமுடியாதேயுள்ளது.
எனினும் காலை முதல் பரவலாக தேர்தலை புறக்கணிக்க கோரும் அநாமதேய குறுஞ்செய்திகள் தொலைபேசிகளிற்கு அனுப்பப்பட்டிருந்தது.இராணுவ புலனாய்வு கட்டமைப்பினால் அச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
அதே போன்று வடமாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியினை திருப்பிவிட்டதாக கூறும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.எனினும் பரவலாக நேற்றிரவு மஹிந்தவின் எஞ்சிய பேனர்களும் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனந்தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் தற்போது பெருமளவில் பொலிசாரும் இராணுவத்தினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிசார்  மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.ஆயினும் அப்பகுதியினில் படைமுகாம் ஒன்றுமுள்ளது.
 

இதனிடையே யாழ். மாவட்டத்தில் வாக்குப்பதிவு திருப்தியாக உள்ளதாக  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்
வாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள்  அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி :-
வவுனியா நெளுக்குளம் பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல்!
வடக்கில் மதியம் வரை யாழில் 25%, மன்னாரில் 30%, கிளிநொச்சி 26%, முல்லைதீவு 19%, வவுனியா 30% வாக்குப்பதிவு! (செய்தி இணைப்பு 2)
இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு!!
அரியாலை பூம்புகார் பகுதியில் பெற்றோல் குண்டு! (திருத்தம்)

தென்மராட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மந்த கதியில் மக்கள் வரவு குறைவு!
இதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு!
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்!
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு! ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்!
மரத்தில் ஏறி போராட்டம்! மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை!
வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.

மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்!
யாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்!

புத்தளத்தில் வாக்காளர்களை தடுக்கும் நோக்கில் வீதிக்கு குறுக்காக பாரிய மரத்தை வெட்டி வீழ்த்தி இடைஞ்சல்!
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்!

எமக்கே வெற்றி நிச்சயம் வாக்களித்த பின் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!
தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்!
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது!
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 07, 2015

பிரசார கூட்டத்தில் தமிழனே வெளியே போ: ராஜபக்சே ஆவேசம்

இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது.
இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய அவர் மைக்கில், ‘‘இது சிங்கள நாடு. நானும் சிங்களன்தான். தமிழா கேட்டுக் கொண்டிரு. முடியா விட்டால் வெளியே போ’’ என்று ஆவேசமாக கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்த தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மஹிந்தவுக்கு ஆதரவாக தமிழ் பெண்கள் பிரசாரம்

கூட்டமைப்பின் கோட்டைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளில் இந்த பிரசார நடவடிக்கைகள் 
இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை பிரதேசங்களில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வீடு வீடாகச் ஜனாதிபதிக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சங்க கூட்டமைப்பின் தலைவி செல்வி மனோகரர் உட்பட பல மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் இணைந்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 05, 2015

திருமலையில் தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும் அவ்விடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>