18

siruppiddy

செப்டம்பர் 29, 2013

நடைபெற்ற, இன அழிப்புக்கு எதிரான மாநாடு !

 
 
"லண்டனில் "
இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு ஒன்று நேற்றூ லண்டனில் நடைபெற்றது.மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆரம்ப நிகழ்வாக இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுச்சுடரினை திரு.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஆரம்பமான மாநாட்டில் சர்வதேச பிரமுகர்களின் உரையும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொல்ஐகளை புள்ளிவிபரத்துடனும், ஆதார வரை படங்கள், மற்றும் சாட்சியங்களோடும் இளையோரினால் எடுத்துவிளக்கப்பட்டது. இது அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது.
மானாட்டில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட திரு. Francis A Boyle, கூறும்போது தான் பொஸ்னியாவிலும் செல்பேனிக்காவிலும் நடந்தது இனப்படுகொலை என உலக நீதிமன்றில் வாதிட்டு, இரண்டு வழக்குகளிலும் தான் அவை இனப்படுகொலை என நிரூபித்ததாகவும், அதில் முதலாவது வழக்கு இலட்சக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், ஆனால் செல்பேனிக்காவில் 7000 இளைஞர்கள்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆனபடியால், இனப்படுகொலை என்பது எண்ணிக்கைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை என்றும், இலங்கைளில் 147,000 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் சில ஆய்வுகளின்படி 40,000 என்றும் 70,000 என்றும் கணித்திருந்தார்கள். ஆனால் இதில் எண்ணிக்கை முக்கியமல்ல என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததா? என்பது தான் முக்கியம்.
ஒரு இனரீதியாகவோ, மதரீதியாகவோ முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இலங்கை அரசாங்கம் நடந்துகொண்டது. ஆனபடியால் அது UN article 2 – 2a, 2b, 2c ஆகிய சட்டங்களை மீறியுள்ளார்கள். ஆனபடியால் இது ஒரு இனப்படுகொலை என உறுதியாகிறது. இதனால் தமிழினம் தனக்கென ஆட்சியை அமைக்க உரித்துடையது என்பதை உறுதியுடன் அடித்துக் கூறினார். ஆனால் சர்வதேச சமூகம் ஏன் இது ஒரு இனப்படுகொலை என ஏற்க மறுக்கின்றதென்றால், தமிழர்கள் தனிஈழம் பெற உரித்துடையவர்கள் ஆகிவிடுவார்கள் என்பதும், அத்துடன் தமது நாடுகளில் தாங்கள் சிறுபான்மை இனங்களுக்குச் செய்யும் கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவுமே அவர்கள் இலங்கைப் பக்கம் நிற்கிறார்கள். என்றும் கூறினார். திரு. Robertson கூறுகையில் இனப்படுகொலை என்பது ஊடகவியலாளர்களோ அல்லது மற்றவர்களோ சொல்லுவதை வைத்து அதை இனப்படுகொலை எனக் கூறிவிட முடியாது.
நீதிமன்றத்தில் நீதிபதி இது ஒரு இனப்படுகொலை என ஏற்க வைக்கவேண்டும். அதற்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து சிறந்த வழக்கறிஞர்களை அமைத்து அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அல்லது ஒரு நாடு தமிழர்களுக்காக இலங்கைக்கு எதிராக உலக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வந்தால் இது இலகுவாகச் சாத்தியமாகும். ஊதாரணமாக தமிழ்நாடு தனது அழுத்தத்தை டெல்லி மீது பிரயோகிப்பதன் மூலம் இந்தியா இந்த முயற்சியை எடுக்க வைக்கலாம். Crime against humanity என்பது நிரூபிப்பது சிறிது இலகுவாக இருக்கும். இப்படியான கொடுமைகள் நடந்த நாட்டில் நடக்கும் ஊழஅஅழn றுநயடவா மகாநாட்டிற்கு பிரித்தானியாவின் பிரதமர் திரு. Cameron, இளவரசர் திரு. Charles ஆகியோர் செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கு உரியதும் எனக்கூறினார்.
திரு. Alibodon கூறுகையில் ஒரு அமெரிக்க பிரஜை அமெரிக்காவிற்கு வசிக்க வரும்போது அவர் செய்த குற்றத்தை எத்தனை வருடங்கள் சென்று இருந்தாலும் அரசு தரப்புச் சட்டத்தரணிக்கு போதிய ஆதாரங்களுடன் ஒப்படைத்தால் அவர் அதைத் தகுந்த முறையில் ஆராய்ந்து நிரூபிக்கக் கூடியதாக இருந்தால் அவரை நீதிமன்றின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுப்பார். இது முக்கியமாக திரு. கோத்தபாய போன்றவர்களுக்குப் பொருந்தும் என்று கூறினார். இனப்படுகொலை மட்டுமல்ல கற்பழிப்பு, சித்திரவதை, கட்டயாக் கருஅழித்தல் உலகில் எங்கு செய்திருந்தாலும் அவர் அமெரிக்காவிற்கு வசிக்க வருமிடத்தில், அவருக்கு எதிராக முறையீடு செய்து தண்டனை பெற வைக்கலாம். முக்கியமாக அவர் கூறியது சாட்சியங்களை விளம்பரப் படுத்தாமல் இருப்பது சாலச்சிறந்தது என்றும், ஏனெனில் அதற்கெதிராக குற்றவாளி நடவடிக்கை எடுக்கவும் தடயங்களை அழிக்கவும் முற்படுவான் என்று கூறினார்.
Dr. Metha ஜெனீவாவில் 2009ல் படுமோசமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்பு அடுத்தடுத்து 2 தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகும். முற்றும் UN தனது இலங்கைக்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதற்கு மனித உரிமை சபை அல்லது பாதுகாப்பு சபை இன் தீர்மானங்களை எதிர்பார்த்து இருக்கிறது. ஆத்துடன் உலகரீதியாக தமிழ் அகதிகளின் கஸ்டமான நிலைமைகளை எடுத்துக் கூறினார். கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் பலரும் தமது ஆணித்தரமான சிறந்த கருத்துக்களை முன்வைத்தனர். இந்த மாநாட்டில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனித உரிமை சட்டவியலாளர்கள் திரு. Francis A Boyle, திரு. Alibodon, கனடாவைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி Dr. Metha, இங்கிலாந்தைச் சேர்ந்த சட்டத்தரணி சங்கத்தலைவர் திரு. Harry, Robertson qc ஆகியோர் சிறப்பு விருந்தினர்க்அளாக வருகை தந்து உரையாற்றியிருந்தனர்.
இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகளாக அவுஸ்திரேலியாவிலிருந்து திரு. மாணிக்கவாசகர், கேர்மனியிலிருந்து திரு. ராஜேந்திரா, திரு. பரமானந்தம், பிரான்ஸிலிருந்து அமைச்சர் திரு. மகிந்தன், பிரித்தானியா சார்பில் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், மற்றும் நா.க.த.அ உறுப்பினர்களான திரு. மணிவண்ணன், திரு. நிமலன், திரு. யோகி, அமைச்சர் திரு. சேகர் மற்றும் தமிழர்களுக்கான மனித உரிமை அமைப்பைச்சேர்ந்த திரு. கிருபாகரன் உட்பட பல அமைப்பு பிரதிநிதிகளும், ஈழ விடுதலை உணர்வாளர்களும், குறிப்பாக அதிகளாவான இளையோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மா நாட்டின் இறுதி நாளான இரண்டாவது அமர்வு இன்று (29.09.2013) அதே மண்டபத்தில் பிரித்தானிய நேரம் காலை (9:00 மணிமுதல் மாலை 7:00 மணிவரை நடைபெறவுள்ளது{புகைப்படங்கள்}
 


 
 
 
 

செப்டம்பர் 26, 2013

தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? -


, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள்.
ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். சங்கரை, எதிரியின் ஆழ உடுருவும் கோழைப்படையணி  முள்ளியவளையில் வீழ்த்திய நாள்.

அந்த நாள்....ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டெழும் தேசங்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் விடுதலை உணர்வினை ஊட்டும் நாள்.
266 மணி நேரம், மரணத்துள் வாழ்ந்த திலீபனின் ஒருமுகப்பட்ட சிந்தனை 5 அம்சக் கோரிக்கைகளிலேயே நிலைத்து நின்றது. சாவினை அரவணைத்தபடியே இலக்கோடு வாழ்ந்தார் திலீபன்.

இனத்தின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, அழிப்பவனோடு நல்லிணக்க அரசியல் பேசும் அடிபணிவாளர்களுக்கு மத்தியில், காந்தி தேசத்தோடு 12 நாட்களாக அகிம்சை மொழியில், விடுதலை அரசியல் பேசியவரே எங்கள் திலீபன்.

தேச விடுதலைக் காட்டில், தன் உயிர்ப்பூவை அக்கினிக்குஞ்சாக வைத்தவரே திலீபன் என்கிற இராசையாவின் பார்த்தீபன். தம்மை இழந்து, தடைகளை அகற்றிய ஆயிரமாயிரம் மாவீரர்களை எமதினத்தின் வரலாறு பெருமையுடன் பதிந்திருக்கிறது.

பார்த்திபனின் மொழி சற்று வித்தியாசமானது. அமைதிகாக்க வந்த படையிடம் ஆயுத எழுத்தை ஒப்படைத்து, உயிர் எழுத்தினை ஆயுதமாக்கி, விடுதலை இலக்கணத்தில் புது மரபினைப் புகுத்தினான்.

ஒவ்வொரு தடவையும் திலீபனைப்பற்றி எழுதும்போது, அர்த்தங்கள் புரியாத ஒளிமிகுந்த மறைவிடங்கள் வந்து மறைகின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் அறம் சார்ந்த கூட்டுமன உளவியலின் குறியீடாக திலீபனை ஏற்றுக்கொள்ளும் பொதுப் பார்வையுமுண்டு.

வரித்துக்கொண்ட இலட்சியத்திலும், சொல்லிலும் செயலிலும், சலனமற்ற தெளிந்த பார்வையும் நேர்மையும் கொண்டோரே, வரலாற்றினை புரட்டிப்போடும் உந்து சக்தியாக மாற முடியும்.
தியாகி நடராசன், சார்ல்ஸ் அண்டனி போன்ற, போராட்ட வரலாற்றின்போக்கினை மாற்றிய மாவீரர்களின் வரிசையில் திலீபனும் இணைகின்றார். ஆனால் விடுதலைப்பாதையாய், தற்காப்பு வன்முறை வடிவத்தை ஏற்றுக்கொண்ட திலீபன், தனை வருத்தும் அகிம்சையை ஆயுதமாக உள்வாங்கிக்கொண்டது, முன்னெப்பொழுதும் பரீட்சித்துப் பார்க்கப்படாத முறைமையாக ஈழப்போராட்ட வரலாற்றில் அமைந்துவிட்டது.
உலகின் பிகப்பெரிய மக்கள் திரள் கொண்ட சனநாயக நாடு என்று

சொல்லப்படும் இந்தியாவுடன் நட்புறவினை பேண வேண்டும் என்பதனை உலகிற்கு உணர்த்தவும், அதேசமயம் இனத்தின் பிறப்புரிமை மற்றும் பாதுகாப்பு என்பது தொடர்பாக எவருடனும் சமரசமோ அல்லது விட்டுக்கொடுப்போ இல்லை என்பதனை தெளிவாக வலியுறுத்தவும், திலீபன் இந்த அகிம்சைப்போரினை ஆரம்பித்தார்.

இப்போதெல்லாம், திலீபன் உரத்துக்கூறிய ‘மக்கள் புரட்சி’ பற்றி, அவரின் நினைவு நாட்களில் மட்டுமே பேசுகின்றார்கள். போராட்டத்தில் மக்களின் மகத்தான பங்கு குறித்து பேசுவதைத் தவிர்த்து, ‘இராசதந்திரப் போராட்டம்’ என்று இலகுவான மொழியில், ஓரிருவரின் கரங்களில் பொறுப்பினை ஒப்படைத்து ஒதுங்கிக்கொள்ளும் நடைமுறையே இங்கு காணப்படுகிறது. அவர்களும், புவிசார் அரசியலின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொள்ளாமல், வல்லரசுகளின் நலன்களோடு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு, அதுதான் ராசாக்களுடனான இராசதந்திரப் போர் என்று நம் மக்களுக்குச் சொல்கிறார்கள்.

மறுபடியும் திலீபனின் ‘மக்கள் புரட்சி’ என்கிற விடுதலைப்பாதை பற்றி நோக்கினால், அதற்கு சரியான பரந்துபட்ட மக்களை உள்ளடக்கிய அரசியல் வேலைத்திட்டம் அவசியம் என்பது உணரப்படும். அதனை குறுகிய இனவாத, பிரதேச, சாதிவாத அடிப்படைகளில் இருந்து கட்டமைக்க முடியாது என்கிற யதார்த்தமும் புரியப்படும்.

இனப்பரம்பலை சிதைக்கும் தீவிர செயற்பாட்டில் பௌத்த சிங்களப் பேரினவாதம் இயங்கும்போது, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மக்கள் புரட்சிக்கான அத்திவாரமே இங்கிருந்துதான் எழுப்பப்படும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை, நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும் சக்திகளின் இணைவால்தான் இப்புரட்சி சாத்தியமாகும். இந்த தர்க்கீகரீதியான இயங்கியல் உண்மையை மறுதலித்து,

கட்டமைப்புரீதியான இனவழிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள சிங்களத்தோடு பேசித்தீர்க்கலாமென்று சொல்வது, காலத்தை இழுத்தடிக்க மட்டுமே உதவும்.
சிங்களத்தோடு முரண்பாடு ஏற்படும்போது, சர்வதேசம் உதவிக்கு வருமென்று எதிர்பார்ப்பதை மக்கள் நம்பவேண்டும் என்கிறார்கள். நில அபகரிப்புக் குறித்துப் பேசிப்பார்ப்போம் என்கிறார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைப்போம் என்கிறார்கள். இவையனைத்தும் சாத்தியமாகும் வகையில் செயற்படுவோம் என்பதுதான், புதிதாகத் தெரிவானவர்கள் மக்களுக்குக் கூறும் வாக்குறுதி.

மாகாணசபைக்குரிய அதிகார வரையறைகளைப் புரிந்துதான் இவர்கள் பேசுகின்றார்கள். ஆகவேதான் அரசோடு பேவோம் என்கிறார்கள். இவர்களின் இராசதந்திர முயற்சிகள் தோல்வியடையும் போது, மக்கள் போராட்டத்திற்கான வெளி உருவாகும் என்கிற பேச்சுக்களும் தேர்தல் காலத்தில் வந்தன.

ஆனால் தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது இன்னொரு தேர்தல் திணிக்கப்படும். மறுபடியும் இறைமை, தேசம், சுயநிர்ணயம் எல்லாம் பேசப்படும். அப்போது மக்களின் நிலங்கள், பன்னாட்டுக் கம்பனிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். அந்த வேளையில், எங்கள் இராசாக்களின் இராசதந்திரங்களைக் கேட்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
திலீபன் கண்ட கனவு, ஒரு பெரும் நீண்ட கனவாக மாறிவிடும்.

செப்டம்பர் 25, 2013

இறுதி யுத்தத்தின் போது ஐ.நா தோல்வியடைந்து விட்டது -

 

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டோம் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68ஆவது கூட்டத்தொடரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர்

இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்ற முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், அமைப்பு ரீதியாக ஐ.நா சபை தோல்வியை தழுவியுள்ளது. எனவே குறித்த நடவடிக்கைகளை

எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா அமைப்பு முழுமையாக செயற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

இராணுவத்தையும் ஆளுநரையும் வெளியேற்றிப் பாருங்கள்:

 :

வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ. வடமாகாணசபையை கைப்பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும்

எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சிரிபாயவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும்

தெரிவித்தவை வருமாறு; இனவாத, பிரிவினைவாத அரசியல் பயணத்துக்கு நாட்டை மீண்டும் கொண்டுசெல்ல எம்மால் இடமளிக்க முடியாது. வடக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த பயன்படுத்தினால் அதற்கான முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.
   
அதைவிடுத்து, தமிழ், சிங்கள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் தனி இராச்சிய எண்ணக் கருவை கொண்டு சென்று நாட்டில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கவும் வெளி அழுத்தங்களின் தலையீட்டுக்கு வழிவகுக்கும்

வகையிலும் அமைந்தால் நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதை நாம் ஏன் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதவேண்டும்.

இலங்கை, இந்தியா போன்று லோக் சபையின் கீழ் ஆட்சிக்குட்படுத்தப்படும் நாடு அல்ல. அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்வதைச் செய்யும் நாடும் அல்ல. ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ, சோனியா

காந்தியையோ, மன்மோகன் சிங்கையோ விக்னேஸ்வரன் சந்தித்தால் அது எமக்குத் தேவை இல்லை. எவரும் எவரையும் சந்திக்கலாம். வடமாகாண ஆளுநரையும் வடக்கிலுள்ள இராணுவத்தையும் வெளியேற்ற முடியுமா என விக்னேஸ்வரன் முயற்சித்துப் பார்க்கட்டும். இரவில் தூக்கத்தில் தெரிவதை எல்லாம் செய்ய முடியும் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அமைச்சர் விமல்.
 

தேர்தலின் போது இடம்பெற்ற அடக்குமுறைகள், வன்முறைகள் குறித்து


 
வடமாகாண சபை தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வடக்கு தேர்தலை அரசாங்கம் நடத்தியமையினை தாம் வரவேற்பதாக பிரித்தானிய

வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள்

மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மீதான அடக்குமுறைகள், அரச சொத்து பயன்பாடு போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட

வேண்டியது அவசியமானது. நாட்டில் உள்ள மக்களுக்கு தேர்தல்களின் மூலம் தேவையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

செப்டம்பர் 24, 2013

ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை மிதியுந்துப் பயணம்

                                    

இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட  மிதியுந்து பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து  74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து  ‘வொந்தனைம்’, சவரென், பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது.   

இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன், சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன், தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு  பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

ஈருறுளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வும்  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்வதற்கு,
தொ.பே.- 0033 625 90 85 93


 

செப்டம்பர் 23, 2013

சாராயம் வாங்கிக் குடித்து விட்டு வீட்டிற்கு வாக்களித்த


'வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட றெமீடியசிடம் நேற்று காலை மூக்கு முட்ட சாராயம் வாங்கிக் குடித்து விட்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு வந்த யாழ். குடிமகனின் வீரச் செயல் இது. குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இந்தக் குடிமகன் றெமீடியஸ் சாராயம் எனத் தெரிவித்துக்

 கொடுத்த கசிப்பை பருகி விட்டு குருநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு போயுள்ளார். அங்கு வீட்டின் மீது வாக்களித்து விக்னேஸ்வரனின் இலக்கத்திற்கும் புள்ளடி போட்டு விட்டு அங்கு வைத்தே பாட்டுப் பாடியபடி வெளியில் வந்துள்ளார்.
   
'கள்ளன் றெமீடியஸ் நல்ல சாராயம் தாறன் என்டு போட்டு கசிப்பை ஊத்தித் தந்துவிட்டான். அவனுக்கு தெரியாது என்னைப் பற்றி. "நான் யார் என்று புரிகிறததா??? இவன் தீ என்று தெரிகிறதா??? " என கமலின் பாடலைப் பாடியபடி ஆனோல்ட் நீ வாழ்க எனத் தெரிவித்தபடி சென்றதாக தெரியவருகின்றது
 

செப்டம்பர் 22, 2013

பெரும்பான்மை வெற்றியை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டைப்பு

 
 
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கோசங்களுடன் தேர்தல் பிரச்சர பணிகளை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாத்தான வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான நிருபர் தெரிவிக்கின்றார்.

  இதுவரை தமிழ்த் தேசத்துக்கு எதிராக இன அழிப்பின் உச்சக் கட்டம் நிகழ்தப்பட்ட முல்லைத் தீவு மற்றும் தமிழீழத்தின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி மாவட்ட முடிவுகள் வெளிவந்துள்ன. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மகிந்த அரசாங்கத்துக்கு நல்ல பதிலடியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

  இதன் படி, கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 36,323 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 7737 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. முல்லைத் தீவில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 27,620 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 7063 வாக்குகளும்

 கிடைக்கப்பெற்றுள்ளது. வடதமிழீழத்தின் எல்லா மாவட்டங்களிலும் சரத் பொன்சேகாவின் ஐனநாயகக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  
இவற்றின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 2 ஆசனங்களும் கிடைத்துள்ளது
 

செப்டம்பர் 21, 2013

போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி!!!


இரு தரப்புமே வெற்றி பெற வாய்ப்பில்லை : போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி
சிரிய மோதல் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிரியாவின் பல நகரங்களில் அரச படைகளுக்கும் - கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையில் மோதல் இன்னமும் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில், அரச படைகளோ, கிளர்ச்சிப் படைகளோ இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கு போதுமான பலத்தில் இல்லை என சிரிய துணைப் பிரதமர் கத்ரி ஜமில் அறிவித்துள்ளார்.
 
இதையடுத்து ஆயுததாரிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மேற்குலக நாடுகள் யோசித்து வருகின்றன. இதற்கு சிரிய அரசும் இணங்கும் நிலை தோன்றியிருப்பதாக துணைப் பிரதமரின் பேச்சுக்களிலிருந்து அறிமுய முடிகிறது.
  
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து சிரியாவின் பொருளாதாரம் மிகப் பாரதூரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு தரப்புமே வெற்றி வரவாய்ப்பில்லை. மேற்குலகம் இச்சிக்கலில் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர முன்வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை துணைப் பிரதமரின் இக்கோரிக்கையை சிரிய கிளர்ச்சிக் குழு நிராகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

செப்டம்பர் 19, 2013

தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு

  
 
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (15.09.13) பிற்பகல் 3.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன்
ஆரம்பமாகிய வணக்கநிகழ்வில் மாவீரர் லெப்.சைமன் அவர்களின் சகோதரன் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றிவைக்க திலீபன் அவர்களின் திருவுருவப்

 படத்திற்கான ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் என்பனவும் திலீபனின் நினைவுகளையும் சமகால விடயங்களையும் உள்ளடக்கிய பேச்சு, கவிதை, பாட்டு என்பனவுடன் சிறப்புரை மற்றும் திலீபன் அவர்களின்

உண்ணாநோன்புக் காலத்திலான ஒளிப்படப் பதிவுகளும் திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகப் பங்கு கொண்டு வணக்கம் செலுத்தினர்..

செப்டம்பர் 18, 2013

கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ??


வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுநாள்வரை தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

14:42 17.09.2013நேறறு கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
அதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யாவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமனம் வழங்கப்பட்டது என்பதினால், கட்சிக்கு தேர்தலில் வேலை சேய்ய வேண்டும் என்பது கீதாஞ்சலியின் கண்டிப்பான கட்டளையாகும்.
எனவே அனைவரும் அறிவியல் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக கருதப்பட்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

இவர் திட்டமிட்டுப் பேசினாரா? அல்லது தடுமாறிப் பேசினாரா என்று தெரியாமல் பிரசாரக் கூட்டததில் இருந்த ஆதரவாளர்கள் விழித்தனர்.
கூட்டம் முடிந்ததும் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள

 கீதாஞ்சிலியின் நிறுவனத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அத்துடன் குறித்த பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று உரையாற்றியவரை கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் தனியே அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.

உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டில் வரும் என்று தெரிவித்த ஆதரவாளர்கள், தம்மிடம் வேலை வாய்பை வாங்கி விட்டு கூட்டமைப்பை ஆதரிப்பதாகவும், இதை எதேச்சையாக கண்டு கொண்டதாகவும் கூறி குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

எங்கள் தமிழினத்தின் கனவுகள், அபிலாசைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலையளிப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தெற்கில் எதிர்ப்பலை வீசுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நீண்ட காலக்கனவுகள், அபிலாசைகள்,  எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியதாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தேவையற்ற விதத்தில் பயங்கரவாதமாக மாற்றியமைத்துள்ளனர். மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கருத்துக்களாகவே இருக்கின்றன. அரசே இந்தக் கருத்தை கூறியபோது கவலையளிக்கின்றது.

எங்கள் வரலாற்று உண்மையை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சரியான நேரத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறாத வகையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டே தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உரிமையை மதித்து நடக்கும் போதுதான் இலங்கை முன்னேறும். அதனை விடுத்து தென்னிலங்கை மக்களை உணர்ச்சி யூட்டுவதற்காக பிழையான தகவலை வழங்கக்கூடாது என்றார்.

செப்டம்பர் 17, 2013

காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!


முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்தவர்கள் அவரது உறவினர் முறையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காடையர்கள் என்று சங்கதி24 செய்திப் பிரிவின் முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெலி ஓயா பிரதேசசத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரான ராஜகருணா என்பவருக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட மு.தயாபரன், த.சிவராசா ஆகிய இரண்டு காடையர்களுமே இராசையா சுரேஸ் அல்லது கபிலன் என்ற 35 வயதான இளைஞனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இறந்தவர் ஒரு குடும்பஸ்தர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மர வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர். நேற்று இரவு ஏழு மணியளவில் சுரேஸ் வள்ளிபுனத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

மேற்படி இரு காடையர்களில் தயாபரன் என்பவர் வவுனியாவில் வசிப்பவர் என்றும் முல்லைத்தீவிற்கு வந்து சிறிலங்கா படையினரின் உதவியுடன் மரம் மற்றும் இரும்பு என்பவற்றைக் கடத்திச் சென்று வியாபாரத்தில் ஈடுபடுபவர்.
இவர் சுரேஸின் தங்கையைத் திருமணம் செய்துகொண்டவர். ஆனால்,

இருவருக்கும் இடையில் கட்சி ரீதியாக வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று மேற்படி தயாபரன் வற்புறுத்தி வந்த நிலையிலேயே சுரேஸ் அதற்கு மறுத்ததால் அவரைத தீர்த்துக் கட்டியிருக்கின்றார்.

மேற்படி இருவரும் கடந்த பல மாத காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிவராசா என்பவர் வள்ளிபுனத்தில் ஒரு இளைஞரைக் கடுமையாகத் தாக்கி மண்டை உடைத்திருந்தார்.

அவர் துடித்துக்கொண்டிருந்தபோது அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். ஆனால் அவரின் உறவினர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தளவிற்கு அவர்களுக்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர்.

காவல்துறையினரின் அனுசரணையுடனும் படையினரின் ஆசியுடனுமே இவர்கள் முல்லைத்தீவில் தமது அராஜகங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்தச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இவர்களின்

அடாவடிக்கு தாங்கள் முடிவுகட்டவேண்டி வரும் என்று முல்லைத்தீவு மக்கள் எச்சரித்துள்ளதாகவும் சங்கதி24 இன் முல்லைத்தீவுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்

செப்டம்பர் 16, 2013

விடுதலைப்புலிகளை எவரும் கொச்சைப்படுத்த முடியாது


தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை நவநீதம்பிள்ளையம்,பெண்புலிகள் தொடர்பில் சிவகாமி அவர்களும் கொச்சைப்படுத்தும் கருத்துக்ககைள வெளியிட்டுள்ளார்கள் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூயதமிழில் பேசினால் அவன் புலிஎன்ற முத்திரை குத்தப்படுகின்றது என்று உணர்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மகேந்திரவர்மாவின் இயக்கத்தில் இயக்குனர் களஞ்சியம் நடித்த தமிழ் என்ற குறும்பட வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த குறும்படத்தில் பயங்கரவாதி என்று அழைக்கப்படுகின்றது அதாவது சுத்த தமிழில் பேசுபவன் மது,புகைத்தல் அற்றவன் என்றால் அவன் புலி என்ற முத்திரை குத்துகின்றார்கள்.
உலகத்தில் அனைத்து படைகளும் குடிக்கின்றார்கள் புகைக்கின்றார்கள் பிராபாகரன் படை தான் குடிக்கவில்லை வெண்சுருட்டை பற்றவில்லை அவனை இவ்வாறுதான் இவ்வாறு புனிதமான அமைப்பு தான் விடுதலைப்புலிகள் அமைப்பு அடையாளப்படுத்துகின்றார்கள்.பேசாத படம் தொடக்கம் இன்றுவரை ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு திரைப்படம் தான் பாக்கின்றார்கள் இந்தபடங்கள் கொண்டுசெல்கின்ற ஆங்கில கலப்பு தமிழீழ தமிழர்களையும் தொடுகின்றது.
அவன் இயல்பாக பேசுகின்ற தமிழ் தூயதமிழ் அந்தவகையில் தான் மதுஅருந்தவில்லை என்றால் அவன்புலி,வெண்சுருட்டுபாவிக்கவில்லை என்றால் அவன் புலி என்ற அடையாளம் காண்கின்ற நிலையினை இந்த தமிழ் திரைப்படம் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று விடுதலைப்புலிகள் அமைப்பினை கொச்சைப்படுத்த பார்க்கின்றார்கள்.இன்று சிங்கள சிறீலங்கா தொடர்பில் கடுமையான கருத்தினை நவநீதம்பிள்ளை வைத்துள்ளார் ஆனாலும் அவர் ஒருசந்திப்பில் புலிகள் இயக்கம் ஒருகொலைகார இயக்கம் என்று தெரிவித்துள்ளார்.கில்லாரிகிளிண்டன் ஒருகூட்டத்தில் அமெரிக்காவில் பேசுகின்றபோது அவர் சொன்னார் விடுதலைப்புலிகள் வன்முறையாளர்கள் அல்ல அவர்கள் விடுதலை போராளிகள் என்று சொன்னார்.
ஒருவனை கொலைசெய்கின்றவன் கொலைகாரன் கொலைசெய்கின்றவனை கொலைசெய்கின்றவன் விடுதலை போராளி அவன்தான் விடுதலைபோராளி இன்று நவநீதம் பிள்ளை இவ்வாறு கருத்தினை தெரிவித்துள்ளார்
1983 ஆன்று இந்திராகாந்தி அம்மையான் ஈழத்தில் நடைபெறுவது ஒரு இனப்படுகொலை என்று சொன்னார் இன்றும் இங்கிருக்கிற அதேஇந்திய அரசுகளிலம் சரி மற்றவர்களிலும் சரி இன்னும் இனஅழிப்பு என்பதை சொல்ல தயங்குகின்றார்கள் சொல்ல பின்வாங்குகின்றார்கள்.
உலகில் தகுதியானவர்கள் என்று கருதுபவர்கள் ஒன்றை சொல்லுவார்கள் பின்னர் அந்த கருத்தினை மறுத்து சொல்லுவார்கள் இதெல்லாம் நடைபெறுகின்றுகின்றது உலகத்தின் கணிப்பு என்ன என்று தெரியவில்லை இப்படியா கலங்கப்படுத்துகின்ற ஒரு உலகம் சிவகாமி என்ற அம்மையார் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளை மிகமிக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.இப்படியான துன்பங்களுக்கு மத்தியில்தான் தமிழீழமக்கள் அவர்களின் போராட்டத்தினை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் புலிகள் எவ்வளவு தூய்மையானவர்கள் என்பதை தமிழ் என்ற குறும்படம் சொல்லாமல் சொல்கின்றது.தமிழ்என்பது ஒருவாழ்வு ஒருபண்பாடு,ஒருமிகப்பெரிய பரப்பு தமிழை காக்கவேண்டும் என்ற உணர்வினை இந்த திரைப்படம் காட்டுகின்றது .
என்று தமிழ் எவ்வாறு தமிழ்நாட்டில் அழிந்துகொண்டு செல்கின்றது என்பது தொடர்பாக விரிவான கருத்தினை  என்றும் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
{காணொளி, }

 

செப்டம்பர் 15, 2013

அயல்வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறிய


 
விக்னேஸ்வரன், இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுவது ஏன்? சீமான் 
ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான். தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால்

பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள்.
   
ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல்துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.
இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு

விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடும்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர்.
எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன்

முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சினை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சினை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்!

சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள பிரச்சினைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.

தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது
 

செப்டம்பர் 14, 2013

சீன அச்சுறுத்தும் - சிறீலங்கா உறவு


நாளுக்கு நாள் சீன - இலங்கை உறவு வலுப்படுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப்போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர்அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது.

பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென்பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வாணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.

பண்டித நேரு இராணுவத் தளவாடம் சம்பந்தமான ஆலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடகிழக்கு, வடமேற்கு இந்தியாவில் பாதுகாப்பு அற்ற நிலை. இந்தியாவின் தென்பகுதிகள் குறிப்பாக தமிழகம் பாதுகாப்பானது எனக் கருதியதால்தான் இராணுவம் தொடர்பான தொழிற்சாலைகள் அனைத்துமே தென்னகத்தில் அமைக்கப்பட்டன. இதை

 மனதில் கொண்டுதான் சீனா இலங்கையைத் தனது தளமாக அமைக்கிறது.
இலங்கையிலிருந்து தென்னகத்தில் உள்ள இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளையும், விண்வெளி சோதனை நிலையங்களையும், அணு உலைகளையும் தாக்கவோ தகர்க்கவோ முடியும் என்பதேகூட சீனாவுக்கு

இலங்கை மீதான கரிசனத்திற்குக் காரணமாக இருக்கலாம். சில வாரங்களுக்கு முன்னதாக, சீனாவின் உதவி அரச பாதுகாப்பு அமைச்சர் சோயு குயுங் இலங்கைக்குப் பயணம் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் லியாங் குவாங்லி, இலங்கைக்கு

 மேற்கொண்டிருந்த பயணத்தை அடுத்து, இலங்கைக்கு வந்த சீனாவின் உயர்நிலைப் பாதுகாப்பு அதிகாரி இவரேயாவார். சீனாவின் உதவி அரச பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங்கிற்கு இலங்கை அரசாங்கம் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தபோதும், அவர் யார் என்பதை ஊடகங்களால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

இவர் முதலில் திருகோணமலைக்குச் சென்று இரண்டு நாள்கள் தங்கியிருந்தார். அங்கு இலங்கைக் கடற்படையின் கிழக்குத் தலைமையகம் அமைந்துள்ள கப்பல் தளத்தில் (டாக் யார்ட்) அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதுடன், கடற்படை அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். திருகோணமலைத் துறைமுகத்தை படகில் பயணித்து

முழுதாக ஆய்வு செய்த அவர், சீனக்குடா விமானப்படைத் தளத்தையும் பார்வையிட்டு, விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். சோயு குய்ங்கின் இந்தப் பயணம், சீனங்குடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய முடிச்சுகளைப் போடுவதற்கான பிள்ளையார் சுழியாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வான் புலிகளை எதிர்கொள்ள சீனா கொடுத்த முப்பரிமாண ரேடர் இங்குதான் நிறுவப்பட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு, இலங்கை விமானப் படையிடம் உள்ள - சீனாவில் தயாரிக்கப்பட்ட - ‘எஃப்-7’ ரக ஜெட் போர் விமானங்கள் சீனக்குடாவில்தான் நிலை கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. திருகோணமலை

கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய கரும்புலித் தாக்குதல் படகையும் சீன உதவி அமைச்சர் சோயு குய்ங் பார்வையிட்டார். அதன் பின்னர் விமானத்தில் பலாலிக்குச் சென்ற சீன உதவி அமைச்சருக்கு அங்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் சோயு குய்ங்கும் அவருடன் வந்த ஆறு சீன அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். பின்னர் விமானப்படை ஹெலிகாப்டரில் யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்று பார்வையிட்ட அவர்கள் கொழும்பு

திரும்பி, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினர். சீனாவின் பாதுகாப்பு கூட்டமைப்பை விளங்கிக் கொள்ளாமல் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது கடினம். சீனாவில் பாதுகாப்புத்துறை சார்ந்து மூன்று அமைச்சகங்கள் உள்ளன.

முதலாவது, தேசிய பாதுகாப்பு அமைச்சகம். இதன் கீழ்தான் செஞ்சேனை எனப்படும் சீனாவின் முப்படைகளும் உள்ளன. இரண்டாவது, அரச பாதுகாப்பு அமைச்சகம். இதுவே சீனாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பு. இதன் பிரதானமான கடமை வெளியகப் புலனாய்வுப் பணிகளை

மேற்கொள்வதாகும். இந்தியாவின் ‘ரோ’ எனப்படும் ‘ஆய்வு மற்றும் பகுப்பாய்வுஹ அலகு, அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவு போன்றவற்றுக்கு இணையாக இது செயல்படுகிறது

. சுருக்கமாக இது ‘எம்.எஸ்.எஸ்.’ என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம். இது சீனாவின் காவல்துறைக்குப் பொறுப்பாக உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் -

ஒழுங்கைப் பேணுவது இதன் பொறுப்பு. சீனாவின் வலுவான அமைச்சகம் ஒன்றின் உதவி அமைச்சரே இலங்கைக்கு வந்து சென்றுள்ளபோதிலும், அதற்கு அவ்வளவாக ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கும் காரணம் உள்ளது. அடக்கி வாசிக்கப்பட்டதால், சீனாவின் அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர்களே அதிகம் பேர்.

சீனாவைப் பொறுத்தவரையில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சீனா அவற்றைவிட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான

விடயங்கள். தென் சீனக் கடலிலும் பசிபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப்போரே நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அண்மையில் இலங்கையுடன் ஜப்பான் செய்துகொண்ட கடல்சார் உடன்படிக்கை, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதை அடிப்படையாகக் கொண்டது.


அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில்தான், சீன அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணம் இடம்பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க, சீனா பெரும் வியூகத்தை வகுத்து

காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானந்தாங்கி கப்பல்கூட இந்தியப் பெருங்கடலில்தான் நிலைகொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

சீனாவின் நீர்மூழ்கிகளை எதிர்கொள்ளும் வகையில் விசாகப்பட்டினத்திற்கு அருகே நிலத்திற்கடியிலான நீர்மூழ்கித் தளம் ஒன்றை அமைக்கும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இத்தகைய சூழலில்தான் சீன உதவி அமைச்சரின் பயணம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை உளவு பார்ப்பதற்கான ஒரு தளமாக இலங்கையை சீனா

பயன்படுத்தி வருகிறது. விசாகப்பட்டினம் கிழக்குக் கடற்படைத் தலைமையகமும், கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள ரொக்கெட் ஏவு தளங்களும் சீனாவின் கவனத்துக்குரிய முக்கிய இலக்குகளாகும். இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரதான தளமாக விசாகப்பட்டினமே உள்ளது. இங்கிருந்து இந்தியக் கடற்படைக்கான ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

அதேவேளை ஒரிஸ்ஸாவின் வீலர் தீவு, சண்டிப்பூர் ஆகியன இந்தியாவின் முக்கியமான ஏவுகணைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் ஏவுதளங்களாக உள்ளன. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி ஏவுகணைகள் அனைத்தும் ஆந்திரத்தின் சிறீஹரிகோட்டாவில் இருந்தே ஏவப்படுகின்றன. இவையெல்லாம் சீனாவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் இலக்குகளாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் தீவுகளுக்கு அருகே மீன்பிடிப்படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை துரத்திச் சென்றபோது, அது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடிக் கொண்டதாக செய்திகள் வெளியானது. கடலின்

தன்மையையும், இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியிலுள்ள ஏவுகணைத் தளங்களையும் கண்காணிக்கும் பணியில் அந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டதாகவே கருதப்பட்டது. இந்தியாவை உளவு பார்க்க இலங்கையை மட்டுமின்றி நேபாளத்தையும் கூட சீனா பயன்படுத்திக் கொள்கிறது.

நேபாள எல்லையில் பதினோரு புலனாய்வு தகவல் நிலையங்களை சீனா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் பொறுப்பாக இருப்பது சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சுதான். இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை இந்தப் பிரிவு பல்வேறு வழிகளில்

பெற்றுக்கொள்கிறது. மரபு சார்ந்த வழிமுறைகளை மட்டுமின்றி, இணையவழி ‘சைபர்’ தாக்குதல்கள் மூலமும், இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகளினுள் ஊடுருவியும் பெருமளவு இரகசியங்களையும் சீன உளவுப் பிரிவு களவாடியுள்ளது.

அண்மையில் ‘இஸ்ரோ’ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் ஏவுகணைகளை வடிவமைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் இரகசியங்கள்கூடத் திருடப்பட்டன. பெருமளவு பாதுகாப்பு இரகசியங்களை சீனா திருடியுள்ளதாக அண்மையில் இந்தியா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கும்கூட சீனாவின்

இத்தகைய நெருக்கடிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே, சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் கிளை அமைப்புகளால்தான் வழி நடத்தப்படுகின்றன. இத்தகைய வலுவான அமைப்பு ஒன்றின் இரண்டாவது பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் இலங்கைப் பயணத்தை இந்தியாவோ, அமெரிக்காவோ, ஏன் ஜப்பானோ கூட இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இலங்கை - சீன நெருக்கம் இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தபோதிலும், அதை இலங்கை திரும்பத் திரும்பச் செய்து வருவதுதான் ஆச்சரியம்
 

செப்டம்பர் 12, 2013

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு

  
எதிராக வழக்குத் தொடர முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் தீர்ப்பை பெற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே காணப்படுகின்றது. விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவே உள்ளது. எனவே வழக்குத் தொடர முடியாது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நளினி மீதான செல்போன் வழக்கு தள்ளுபடி,,,


வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி செல்போன் வைத்திருந்ததாகவும், அதை சிறை அதிகாரிகள் கைப்பற்ற முயன்றபோது கடமையைச் செய்ய விடாமல்

தடுத்ததோடு, செல்போனை கழிவறையில் வீசியதாகவும் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

செல்போன் வைத்ததற்கான குற்றச்சாட்டுக்காக என்னை முதல் வகுப்பு சிறை அறையில் இருந்து, சாதாரண சிறை அறைக்கு மாற்றி தண்டித்த பிறகு, அதே குற்றச்சாட்டுக்கு போலீசில் புகார் கொடுத்து, கோர்ட்டில் விசாரிப்பது தவறானதாகும். அதனால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

மனு மீது நீதிபதி பி.தேவதாஸ் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் நளினியின் அறையை சிறை அதிகாரிகள் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோதனை செய்தபோது, அங்கு செல்போன் இருப்பதைக் கண்டறிந்து கைப்பற்ற முயன்றபோது அதை அவர் தடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த சிறைக் கண்காணிப்பாளர், பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நளினி மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக, உயர் வகுப்பு சிறையிலிருந்து கீழ்நிலை வகுப்பு சிறை

அறைக்கு நிரந்தரமாக மாற்றியுள்ளார். சிறை சட்டப்படி, ஒரு குற்றத்துக்காக சிறைக் கண்காணிப்பாளரால் தண்டனை கொடுக்கப்பட்ட பிறகும் அதே குற்றத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.
சிறைக் கண்காணிப்பாளர் தண்டனை கொடுக்கவில்லை என்றால்

நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இரண்டையும் செய்ய முடியாது எனக் கூறி நளினியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்

செப்டம்பர் 11, 2013

அமெரிக்கா வடகொரியாவை எச்சரிக்கும்!!


 
"ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பேசி வருவதற்கு'' அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா மீது எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து பேசுவதற்காக அமெரிக்கா பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மில்லர் சீனா சென்றுள்ளார்.

அங்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வாங்க் கூன்ஜியாங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு, அவர் கூறியது:
சிரியா மீது ஏன் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவரித்தேன். ரசாயன ஆயுதங்களை எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வதேச சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடகொரியா தற்போது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக பேசுவது அச்சுறுத்துவதாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷியாவுடன் இணைந்து சீனாவும் எதிர்ப்பு

தெரிவித்து வருகிறது. சீனாவின் நட்பு நாடான வடகொரியாவோ இன்னமும் ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறது. தவிர, அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றார்

செப்டம்பர் 10, 2013

சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயார்!


 
தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க தயார் என சிரியா அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்று குவித்தது.
இதனையடுத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சிரியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா வலியுறுத்தியது. இதை ஏற்றுக் கொண்ட சிரியா அமைச்சர் வாலித், சர்வதேச நாடுகளின்

கட்டுப்பாட்டில் இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதற்கு காலக்கெடு எதுவும் தர முடியாது. இது தொடர்பாக ஜெனிவா மாநாட்டில் பங்கேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அனைத்து அரசியல் கட்சியுடனும் பேச தயார்.

ஆனால் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி

குறிப்பிடுகையில், சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை, அதை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

செப்டம்பர் 07, 2013

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டேன்: குமுறும்?

                               

தீவிரவாதம் எனக்கூறி “பிரபாகரன்” என்ற பெயரில் சிங்கள திரைப்படத்தை தயாரித்து சொத்துக்களை இழந்த சிங்கள தயாரிப்பாளர் தனக்கு நேர்ந்த நிர்க்கதி நிலைமையை விளக்கியுள்ளார்.

தீவிரவாதத்தின் கொடூரம் பற்றிய திரைப்படம் ஒன்றை தயாரித்து அதனை உலகத்திற்கு கொண்டு சென்று தனது சகல சொத்துக்களை இழந்துவிட்டதாக ரோமில் வசிக்கும் சிங்களவரான ஒஸ்மன் டி சில்வா தெரிவித்தார்.

அநுராதபுரம் ஆலங்குளத்தில் பிறந்த வளர்ந்த தான் ஜயஸ்ரீ மகாபோதி நடத்தப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்துள்ளதாகவும் அன்று மனத்தில் ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு “பிரபாகரன்” என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும் அவர் கூறினார்.

அந்த படத்திற்கு தான் 175 லட்சம் ரூபாய்களை செலவிட்ட போதும் தனது கைகளுக்கு வெறும் 5 லட்சம் ரூபாவே கிடைத்தது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

ரோமில் தனக்கிருந்த தொலைபேசி நிலையம், சில்லறை வர்த்தக நிலையம், அரைவாசி பணம் செலுத்தி கொள்வனவு செய்த வீடு, ரோமில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிடைத்த 50 லட்சம் இழப்பீட்டு தொகை ஆகியவற்றை தான் இந்த படத்திற்காக இழந்து விட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது ரோமில் முதிய பெண்ணொருவரை பராமரித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
{காணொளி }

செப்டம்பர் 06, 2013

நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ


 
சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை, புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர்.
பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.
இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரின் அப்துல் சமத் இஸ்ஸா, முதலில் ஒன்றை வாசித்து துப்பாக்கி சூட்டை ஆரம்பித்து வைக்கிறார்.
இவர் பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் ஊழல்வாதிக்கும், ஊழலுக்கும் துணை போயிருக்கிறார்கள்.
கடவுளின் பெயரால் நாம் உறுதி எடுக்கிறோம், நாம் பழி தீர்ப்போம் என்று கூறுகிறார்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தை, வீடியோவாக புரட்சிபடையினரே படமாக்கியுள்ளனர்.
தற்போது புரட்சி படையினரின் செயலால் மனம் அதிர்ந்து போன நபர் ஒருவர், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்..

செப்டம்பர் 05, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்.

 
 யாழ். சுன்னாகம் பஸ் நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில்  பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மிகப் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.{புகைப்படங்கள்}

 

மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை -


இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது. அதில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கொண்டு அங்குள்ள பிரச்சினைக்கான தீர்வைக் காண விரும்புவதாக பான் கீன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய முறையில் செயற்படாது தோல்வி கண்டது என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பணிக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பொறுப்புக்கூறலை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா !


சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது:
சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும், தாக்குதல் நடத்தவும் முனையும் என்பது சிரியாவுக்குத் தெரியும்.

ஒருவேளை சிரியாவில் ரசாயன ஆயுதங்களை ராணுவம் பயன்படுத்தியது என்றால் அதற்கான ஆதாரங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட தகவல் எங்களால் நம்பும்படி இருக்க வேண்டும். ஆனால், அது வதந்திகளின் அடிப்படையிலோ, ரகசிய உளவாளிகள் அளிக்கும் தகவல் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.

ஜி-20 நாடுகளின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா என்னைத் தனியாகச் சந்திக்கவிருந்தார். அந்தச் சந்திப்பை அவர் ரத்து செய்தது வருத்தம் அளிக்கிறது. ரஷ்யாவுக்கு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் என்னை மற்றநாடுகளைத் திருப்திசெய்வதற்காக ரஷ்ய மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றார் புதின்.

இதனிடையே, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 60 நாள்கள் வரை தாக்குதல் நடத்த அனுமதிக்கும் வகையில் இத்தீர்மானம் வரையப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஒபாமாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியா மீது தாக்குதல் நடத்தும் ஒபாமாவின் திட்டத்துக்கு அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் நடத்திய கணிப்பில் சுமார் 48 சதவீத அமெரிக்கர்கள், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த

நடவடிக்கைக்கு வெறும் 29 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஏபிசி செய்தி சேனலும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பிலும் சுமார் 48 சதவீதம் பேர் சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்
 

செப்டம்பர் 04, 2013

தூக்கு தண்டனை அமுல்படுத்த வேண்டும்;


இலங்கையில் உடனடியாக தூக்கு தண்டனையை அமுல்படுத்துமாறு  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால்  நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

எனவே இலங்கையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொலலையாளிகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக  தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

செப்டம்பர் 03, 2013

மண்டேலா இறந்து விட்டார்! மன்னிப்பு கேட்ட , ஜனாதிபதி


உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா(வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக பிரிடோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து நேற்று அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
மண்டேலா வீடு திரும்பினாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தென் ஆப்ரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் ஜுமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், புஷ்ஷின் தந்தையுமான சீனியர் புஷ்(வயது 95) தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி சேனலில் அவரது உதவியாளர் ஜிம் மெக்ராத் அறிவிப்பு வெளியிட்டிருந்தார், இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மண்டேலா உயிருடன் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கூறுவதா என எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து உடனடியாக டுவிட்டர் இணையதளத்தில் ஜிம் மெக்ராத் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தியில், வாஷிங்டன் போஸ்ட் சேனலில் தவறுதலாக எனது கருத்து பதிவாகிவிட்டது. இதற்கு என் முட்டாள்தனம்தான் காரணம்.
யாருடைய மனதையாவது இது புண்படுத்தி இருந்தால் இதற்காக முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

செப்டம்பர் 01, 2013

இரசாயன தாக்குதலா? முற்றிலும் பொய் என்கிறார் ஜனாதிபதி


சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்களை கொன்று குவித்தது.
இதை ஐ.நா ஆய்வாளர்கள் உறுதியாக கூறியதை அடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ஒபாமா காத்துகிடக்கிறார்.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது, அதை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது என்பதற்கு அமெரிக்கா ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும் ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும்.
என்னை பொருத்தவரை, சிரியா பிரச்சினையில் மற்ற நாடுகளை இழுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வேறொன்றுமில்லை. இதன்மூலம் உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவது யார் என்பதே.
சிரியா மீது ஒபாமா, தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிரியாவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பது என்பது முற்றிலும் பொய் என்றும், அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதே நல்லது என்றுட“ தெரிவித்துள்ளார்