18

siruppiddy

டிசம்பர் 08, 2017

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களத்தில் ஸாலி- ரோஸி மோதல்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வங்காட்டி 
வருகின்றன.கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுவதுடன், அந்த சபையில் மேயராக பதவி வகிப்பவர், மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவருக்கு நிகரான சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தாலும், கொழும்பு மாநகர சபையே அதற்குக் கைகொடுத்தது. அத்துடன், தேர்தல் வெற்றி
 நாயகன் என சிங்கள மக்களால் போற்றப்படும் மஹிந்தவால்கூட குறித்த மாநகர சபையைக் கைப்பற்ற முடியாமல் போனது. இவ்வாறு பல வழிகளிலும் கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுகின்றது.இதனால்தான் இம்முறை அந்தச் சபையைக் கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் கங்கணங்கட்டியுள்ளன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி. ரோஸி சேனாநாயக்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அஸாத் ஸாலியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒமர் காமிலும் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் திருகேதீஸ் செல்லசாமி மேயர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவம்பர் 03, 2017

பஸ்களுக்குள் வைத்து யாழில் பெண்கள் மீது பாலியல் சித்திரவதை?

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையிலீடுபடும் பேருந்துகளே பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த இடமாக காணப்படுவதாக பொதுமக்களால் குற்றம்
 சாட்டப்படுகின்றது.
வறிய மக்களுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களும் நாளாந்தம் தமது தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தி வரும் போக்குவரத்து சாதனம்தான் இந்த தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள்.
நாளாந்தம் மக்கள் தத்தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பயணிக்கும் இந்த பேருந்துகளில் அதன் கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால் நாளாந்தம் பயணிகள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்புகளுக்கும் மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் தொழில்களுக்கு செல்லும் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை நாளாந்தம் பல பிரச்சினைகளை குறித்த பேருந்து சேவைகளால் எதிர்கொண்டுவருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் மட்டுமல்லாது அரச பேருந்துகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது. காலை வேளைகளில் தொழிலுக்கு பாடசாலை மற்றும் தெழிலகங்களுக்கு செல்லும்போதும்  மாலை நேரங்களில் வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் பல பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதை 
காணமுடிகின்றது.

பேருந்துகளில் பாலியல் எண்ணத்துடன் பல ஆண்கள் பயணிப்பதனால் பெண்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்துகளில் பகல் நேரங்களை விடவும் மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் அதிகம் என்பதால் இவ்வாறு நெருக்கடி நிலையை பயன்படுத்தி குறித்த கூட்டங்கள் பெண்களை தொல்லைகொடுத்து வருவதைக்
 காணமுடிகின்றது.
அலுவலகம், தொழிற்சாலை, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாலை வேளையிலேயே வீடு திரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருந்துகளில் ஏறும் சில ஆண்கள் திட்டமிட்ட வகையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன் அவற்றை படங்கள் எடுத்து அந்தப் படங்களைக் கொண்டு  குறித்த பெண்களை மிரட்டி  படுக்கையறைக்கு இழுப்பதான சம்பவங்களும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
அதைவிட பரிதாபமான விடயம் என்னவெனில் சில தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து நடத்துநர்கள் பெண் பயணிகளை குறிப்பாக திருமணமான பெண்களை அதிகளவில் சீண்டி தமக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதற்கு சான்றாக சட்டத்தின் முன் சென்ற சம்பவங்கள்
 பல உள்ளன.
இதைவிட தனியார் பேருந்து நடத்துநர்கள் பெண்களின் முதுகில் தடவுவதும் மார்பகங்களில் தட்டுவதுமான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதை தட்டிக்கேட்டால் இது சகஜம் என்று சொல்லும் வாகன நடத்துநர்கள் அவ்வாறு ஒத்துப்போகாவிட்டால் இறங்குமாறும் சத்தமிடுகின்றார்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை 
தெரிவித்துவருகின்றனர்.



அக்டோபர் 13, 2017

ஒரு நாள் பள்ளிக்கூடம் வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம்  கவனம் 
செலுத்தி வருகின்றது.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பள்ளிக் கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பள்ளி செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பள்ளிக்கூடம் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என 
கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது"
 என கூறுகின்றது.
"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.
இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 45 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட அதிபரான சி
தம்பரபிள்ளை நவரெத்தினம்.
"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது
 போன்று அனுப்புவார்கள்.
மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பள்ளிக்கூடங்களில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார்.
"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத
 மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அக்டோபர் 11, 2017

வித்தியா வழக்கில் மரண தண்டனை விதித வர்களுக்கு விடுதலை கிடைக்குமா


மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா வழக்கு!! மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா??

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

படுகொலையின் பிரதான குற்றவாளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


அக்டோபர் 10, 2017

பிரபாகரம் குறித்த வீரவரலாற்றின் தொடர்ச்சி என்ன?

முதலில் உங்கள் மக்களிற்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவேண்டும்… இரண்டாவதாக அதை அடைவதற்கான மார்க்கம் தெரிந்திருக்கவேண்டும்… இறுதியாக அதை அடைவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இருந்தாக வேண்டும்… என்றார்.
இன்று இவை மூன்றையும் கொண்டிருக்கும் ஒரு தலைமையை ஈழத்திலோ ஈழத்திற்கு வெளியிலோ முடிந்தால் அடையாளம் காட்டுங்கள்… இந்நிலையை எட்டுவதற்கு பல்பரிமாண ஆளுமை
 இருந்தாக வேண்டும்….
இன்றும் பிரபாகரன் என்ற தலமையை தமக்கு பிடித்த ஒரு பரிமாணத்திலேயே அறிந்து புரிந்து பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிற்ன்றனர். அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதுவே அவரை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் முழுமையாக புரிந்து கொண்ட
வர்களாக இல்லை.
பிரபாகரன் தன்னை சுற்றியிருந்தவர்களிடமும் இவ்வாறான பல்பரிமாண ஆளுமையை வளர்த்துக் கொண்டே இருந்தார். அதை புரிந்து கொண்டு தம்மை அவ்வாறு வளர்த்துக் கொண்ட பலர் ஈழ விடுதலை வரலாற்றில் தாமும் சாதனையாளர்களானார்கள்… கூடவே அர்ப்பணிப்பின் உயர் வடிவமாகி மாவீரக்களுமாகினர்… அது குறித்து விரிவாக 
பின்னர் பார்ப்போம்….
சொன்ன மூன்று விடயங்களை கொண்டிருந்தால் மட்டும் போதாது… எந்த மக்களுக்காக களம் கண்டீர்களோ அந்த மக்களின் மனங்களை வென்றவர்களாக அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்கள் பின்னால் அணிவகுக்க எப்போது உங்களால் முடிகிறதோ அப்போதே மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு தேசிய போராட்டத்தில் 
மக்கள் பலத்துடன் உங்களால் முன்னேற முடியும். இதில் முதலில் உங்கள் மக்களின் பலம் பலவீனம் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருந்தாக வேண்டும்… இது ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சற்று மாறுபடலாம்…
மலேசியாவில் இன்னும் வேறுபடலாம்… இவேவேளை காலத்திற்கு காலமும்… போராட்ட களங்களிற்கு ஏற்பவும் கூட இது மாறுபடலாம் அல்லது வேறுபடலாம்… சுருங்கக்கூறின் இதற்கென்று ஒன்றும் நிரந்தர போமிலா கிடையாது… இங்கு தான் தலைமைகளின் ஆளுமை வெளிப்படுகிறது… அதனால் தான் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த 
தலைமை என்கிறோம்…
ஈழத்தமிழினத்தில் உள்ள முக்கிய பலவீனம் நம்பிக்கையை இலகுவாக தொலைத்துவிடுவது… இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதை பிரபாகரன் வெற்றிகரமாக கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக ஏறுநிலை 
படிமாணத்தில் செய்தார்.
இதை முள்ளிவாய்காலுக்கு பின்னராக கடந்த எட்டு ஆண்டுகளில் யாரும் செய்யதாக தெரியவில்லை…
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலம் என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் தொலைத்துவிட்ட காலம்… சிறதுசிறிதாக என்றாலும் மக்களிற்கு வெற்றியை காட்டுங்கள்… இல்லையேல் விரைவில் இந்த மக்களை இழந்து விடுவீர்கள் என தாயகத்தில் இருந்து புலம்வரை நானும் அனைவரிடமும் கதறிப்பாத்துவிட்டேன்… பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்… பந்தா தலைமைகள் மக்கள் தலமைகளாக
 முடியுமா?
இதற்கான ஒரு உதாரணத்தை என் பதிவுகளில் இருந்தே எடுத்து வருகின்றேன்… நானும் பல பதிவுகளை இட்டு வருகின்றேன்… சமீபத்தில் அமெரிக்க கோப்பைளை வென்றது கனடிய தமிழர் இளையோர் உதைபந்தாட்ட அணி என்றொரு செய்தியை 
தரவேற்றியிருந்தேன்… அதற்கு காட்டிய ஆதரவு வெளிப்பாடும் பகிர்வுமே இதற்கான பதில்… அவர்களின் சாதிப்பு உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது….
உங்களின் வெற்றி போன்ற உணர்வை 
ஏற்படுத்தியது… இளையோர் சாதிப்பார்கள் என்றொரு சிறு நம்பிக்கையையாவது ஏற்படுத்தியது… இவ்வாறு நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வருமானால் இனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் தானாகவே 
அதிகரிக்கும் அல்லவா?
இவ்வாறான நல்ல செய்திகள் அரசியல் சார்ந்தோ பொருண்மியம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ விளையாட்டு சார்ந்தோ கலை சார்ந்தோ அல்லது இன்னும் ஏதோ துறைசார்ந்தோ அமையலாம்… இரண்டாவது இவ்வாறு அமையும் செய்திகள் உடனுக்கு உடன் அம்மக்கள் குழுமத்திடமும் உரிய முறையில் பகிரப்படல் வேண்டும்… அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால மாக்கட்டிங்…
இங்கும் தமிழ் இனத்தில் பாரிய குறைபாடு… போராட்ட காலத்தில் கூட இவ்விடயத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பு தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளவில்லை… குறிப்பாக தமிழர் கடந்த 
பரப்புரையில்…
ஆகவே பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால் சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்… அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன்
 உரியமுறையில் பகிர்ந்து அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்…
அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை 
விடுத்து… ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து இம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்…. அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின்
 தொடர்ச்சியாகும்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 11, 2017

நாளைய ஜெனிவா கூட்டத்தொடரில் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதாரம்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு கூட்டத்தொடரில் கலந்து 
கொள்ளவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை.
ஆனால் ஐநாவின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் 
காணப்படுகின்றன.
பொதுவான விவாதங்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல், காணாமல்போனோர் மற்றும்
 இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்து அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கான சூழலை உருவாக்கலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்லும் மனித உரிமை செயற்பாட்டு பொது அமைப்புகள் உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ள நிலையில் இது மிகவும் நெருக்கடியான நிலைமைகளை உருவாக்கக் கூடும் என்றும் 
அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கை 
தாக்கல் செய்துள்ளன.
2007ம் ஆண்டு தொடக்கம் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற 2009ம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப்படைகளின் தளபதியாக செயற்பட்ட நிலையில் வவுனியாவில் உள்ள யோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்ததாக போர்க்குற்ற வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதமாகவும் சித்திரவதை
 செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தரப்பினரிடம் கேள்விகள் முன்வைக்கப்படலாம்.
அதேபோன்று ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இறுதிக்கட்டப் போரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகள் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளால் ஜெனிவாவின் கவனத்திற்கு கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்குள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 10, 2017

இருவர் பொலனறுவையில் உயிரிழப்பு: ஜனாதிபதியின் சகோதரர் கைது!


பொலனறுவையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த வாகன விபத்தில் பொலனறுவை எதுமல்பிட்டி பகுதியில், வசிக்கும் 48 வயதுடைய ஹேரத், மற்றும் 58 வயதுடைய புத்ததாச எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் லால் சிறிசேன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து 
வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும், பொலனறுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 09, 2017

பொலிஸ் அதிகாரி ஒருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு; ?

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த உப பரிசோதகரது சடலம், பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக அவரது விடுதிக்குச் சென்றிருந்தபோது குறித்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் 
கண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஏனைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
எனினும் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்தமை இதன்போது கண்டறியப்பட்டது. உயிரிழந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் உப பரிசோதகர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவே தற்போது வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் 
கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த கெமரா ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆகஸ்ட் 27, 2017

போதைவஸ்து கடத்தலை இல்லாதொழிக்க ஒரு வருட அவகாசம் கேட்கும் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையா

இலங்கை கடல் எல்­லையில் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளன. எமக்கு ஒரு வரு­ட­காலம் அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்­திக்­காட்­டு­கின்றோம் என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா சவால் விடுத்துள்ளார்.இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து விரைவில் புதிய கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தா­கவும்
 அவர் குறிப்­பிட்டார்.
கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா நேற்று கண்டி தலதா மாளி­கையில் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன் அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற்­றி­ருந்தார். இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.
ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தளபதி;
இலங்­கையின் கடல் பாது­காப்பில் இலங்கை கடற்­படை அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நாம் எமது கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்தி புதிய கப்­பல்­களை கொள்­வ­னவு 
செய்­ய­வுள்ளோம்.
அடுத்த மாதம் ஒரு கப்­பலை நாம் கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். அத்­துடன் இந்­தி­யா­விடம் இருந்து அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நவீன கப்­பலை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். மேலும் மூன்று புதிய கப்­பல்கள் அடுத்த ஆண்டில் எமக்கு கிடைக்­க­வுள்­ளன. இவை எமது கடல் எல்லை பாது­காப்பை பல­ப்ப­டுத்த நாம் எடுக்கும் முயற்­சி­க­ளாகும்.
எமக்கு கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் உள்­ளது. போதைப்­பொருள் கடத்தல் விட­யங்­களில் நாம் அதிக அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் இந்த கப்­பல்­களை கொள்­வ­னவு செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­களை தடுக்க வேண்­டிய முயற்­சிகள் எம்­மிடம் உள்­ளன. எமக்கு ஒரு வருட காலம் தாருங்கள் நாம் முழு­மை­யாக இந்த செயற்­பா­டு­களை நிறுத்திக் 
காட்­டு­கின்றோம்.
இலங்கை கடற்­படை மீது பல்­வேறு குற்­றங்கள் கடந்த காலங்­களில் சுமத்­தப்­பட்­டன. எனினும் இவை தொடர்பில் நாம் அக்­கறை செலுத்தி வரு­கின்றோம். ஒழுக்கம் என்­பது முக்­கிய அம்­ச­மாகும். இந்த ஒழுக்­கத்தை வைத்­து­க்கொண்டு எதிர்­வரும் காலங்­களில் நாம் எமது கட­மை­களை
 முன்­னெ­டுப்போம்.
நடந்த விட­யங்கள் தொடர்பில் நாம் நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இதில் எவரும் சந்­தே­கம் ­கொள்ள வேண்­டிய அவசியம் இல்லையெனத்
 தெரிவித்த அவர்
இந்­திய கடற்­றொ­ழி­லா­ளர்கள் இலங்கை எல்லை குறித்த தெளி­வில்­லாமல் அத்­து­மீறி பிர­வே­சிக்­கின்­றனர்.
இந்த நிலையில் அவர்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை இந்­திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கைக் கடற்படையுடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஆகஸ்ட் 10, 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பதவியினை துறந்தார்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது அமைச்சு பதவியினை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் 
இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜூலை 19, 2017

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2017

யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபதாவது  ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2017.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜூலை 15, 2017

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை! நோர்வே அதிரடி அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் 
அறிவித்துள்ளது.
மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார்.
அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமாக 
அறிவித்துள்ளது.
மேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.
எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து
 வருகிறது.
போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும்
 அறிவித்துள்ளது…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூன் 27, 2017

வடமாகாண சபையில்மீண்டும் சர்ச்சை? இரு அமைச்சர்கள் முரண்படும்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஏற்படுத்தப்படும் புதிய ஆணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என வடமாகாண சபை அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர். Asian Tribune ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடமாகாண முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக 
கூறப்படுகிறது.
ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் உள்ளடங்கிய இந்த குழு ஒருமாதக் காலத்தில் தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறான குழு ஒன்றின் நியமனம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என குறித்த இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறான குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழும் இல்லை.
மாகாணசபையின் செயற்குழுவுக்கே இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, சட்டவிரோதமான எந்த விசாரணைக் குழுவிலும் முன்னிலையாகப்போவதில்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிப்ரவரி 03, 2017

இந்திய மத்திய அரசினால் முதல்வருக்கு அச்சுறுத்தல்!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால்.( பிரித்தானியா பின்னணியில் ) பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் இணைவதற்கு பதிலாக இந்திய மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால், மிகவும் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க முடிந்திருக்கும் என முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய மத்திய அரசாங்கம், வடக்கு முதல்வருக்கு 
தெரிவித்துள்ளது.
தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபை எல்லை, இலங்கைக்கு தொடர்புடைய பாரிய அளவு தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
கடந்த வருடம் கிங்ஸ்டன் நகர சபை மற்றும் வட மாகாண சபை இணைந்து செயற்படுவதற்கு ஒப்பந்தம் ஒன்று 
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்ததிற்கமைய வட மாகாண சபையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு அவசியமான பயிற்சி வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஜனவரி 06, 2017

எழுச்சியடையும் மீன்பாடும் தேன்நாடு பொங்கல்விழா 21.01.17.


மண்காக்க எழுகதமிழ் அடையாளம் காக்க பொங்கல்விழா எழுச்சியடையும் மீன்பாடும் தேன்நாடு இரண்டையும் ஒழுங்குபடுத்தும் தமிழ்மக்கள் பேரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வளரட்டும்
 உங்கள் சிறப்பான பணி இடையில ஏன் கொஞ்ச காத்துப்போதுகள் துள்ளுதுகள் என்ற விளங்கல எங்களுக்கு இனம் தான் முக்கியமே தவிர 
காத்துப்போனவர்கள் அல்ல?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>