பொலிஸ் சேவைக்குள் அரசியல் தலையீடுகள் கடந்த காலங்களில் இருந்திருக்கலாம். ஆனால், இதன்பின்னர் பொலிஸில் அரசியல்தலையீடுகளுக்கு இடமில்லை.
அத்தகைய அரசியல் விளையாட்டுக்களுக்கு இடமளிக் கப் போவதில்லை என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன் யுத்த காலப்பகுதி முதல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை பொலிஸ் சேவை யானது தற்போதைய சமாதான காலப்பகுதியில் அவசியமற்றது.
தற்போது மக்களோடு மக்களாக இருந்து அவர்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சிவில் பொலிஸ் சேவையொன்றையே மக்கள் கோருகின்றனர். பொதுமக்களின் அத்தகைய கோரிக்கையை ஏற்று அவர்கள் கோரும் சேவையினை வழங்கத் தயார் எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையேற்றுள்ள பூஜித ஜயசுந்தர, நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமை களை பொலிஸ் தலைமையகத்தில் பொறுப் பேற்றபின்னர் நடத்திய விஷேட ஊடகவி யலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத்
தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மேலும் குறிப்பிடுகையில், 150 வருட பழைமையான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை பொலிஸ் சேவையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக நான் தெரிவு செய்யப்பட்டமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த பாரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு சபையினர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
என்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி தாய் நாட்டுக்கு என்னாலான அத்தனை சேவையையும் செய்ய நான் எதிர்ப்பர்க்கின்றேன்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆரம்பம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
அவர் எனது குரு. அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நான் அதிரடியாக செயற்படவேண்டும் என எதிர்ப்பார்க்கின்றேன். அதன்படி அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து கடமைகளை ஆரம்பித்து இலங்கை பொலிஸ் சேவையின் நம்பகத் தன்மை மற்றும் நம்பிக்கையை வெல்லும் விதமாக பொது மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புக்களை நிறைவேற்றவுள்ளேன். குற்ற விசரணை தொடர்பிலான பிரதிபலன்
தற்போது நாம் குற்ற விசாரணை மற்றும் குற்றப் பரிகாரம் தொடர்பில் நல்ல நிலையில் உள்ளோம். இது குறித்த எமது சதவீதம் 60 ஆகும். இதனை எனது சேவைக் காலத்தில் மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன்.
அப்படியாயின் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படுவோரின்
வீதம் அதிகரிக்கும்.
எனினும் அண்மைய நாட்களில் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படுவோர் அதிகமாக இருந்த போதும் அவர்களில் குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்ப்டுவோரில் வீழ்ச்சியைக் காண்கிறோம். அப்படியானால் பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இதற்காக விசாரணை முறைகளில் மாற்றம் செய்து, விசாரணைகளை மேலும் பலப்ப்டுத்த வேண்டியுள்ளது. விசாரணை
அதிகாரிகளுக்கு
இது குறித்த மேலதிக அறிவை வழங்கி நீதிவான் நீதிமன்ரங்களில் வழக்கை வழி நடாத்தும் விதத்தை தொழில் தரத்துக்கு ஏற்ப விருத்தி செய்ய வேண்டியுள்ளது.
போதைப் பொருள், விபத்துக்களைக் கட்டுப்படுத்த திட்டம் இன்று நாட்டில் அனைவரினதும் பேசுபொருளாக உள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த விஷேட திட்டங்களை அமுல் செய்யவுள்ளோம்.
நாளுக்கு நாள் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணும் நாம், முடியுமான வரை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விபத்துக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தவுள்ளோம்.
சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பாதை விதிகளை உரிய முறையில் கடை பிடிக்கும் போது விபத்துக்களைக் குறைக்க முடியும் என்பது விஷேட நிபுணர்களின் கருத்தாகும். அது தொடர்பிலும் நம் தெளிவு படுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம்.
இதேவேளை போதைப் பொருளினை ஒழிக்க ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகளுக்கு எம்மாலான அத்தனை ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம். நான் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபராக
கடமையாற்றிய காலப்பகுதிகளில் போதைப் பொருளை ஒழிக்க முன்னெடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.
இந்த நடவடிக்கைகளி முன்னெடுக்க எனக்கு பொலிஸ் சாரதிகள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வரையிலான அத்தனை பேரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
புலனாய்வுத் தகவல்களை மையப்படுத்திய பொலிஸ் சேவை பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் தொடர்பு பல சந்தர்ப்பங்களில் இடைவெளியாக காணப்படுவதை நான் அவதானிக்கின்றேன். பொலிஸாரையும் பொது மக்களையும் வேறு படுத்த முடியாது. பொது மக்கள் இன்றி பொலிஸார் இல்லை. அதே போது பொலிஸார் இன்றி பொது மக்களும் இல்லை.
அதனால் பொது மக்களை பொலிஸாருடன் தொடர்பு படுத்தி நாடளாவிய ரீதியில் பிரஜா பொலிஸ் சேவையை நடைமுறைப்படுத்த நான் எதிர்ப்பார்க்கின்றேன். இலங்கை பொலிஸாரின் அடிப்படை குறிக்கோள், குற்றம் மற்றும் வன்முறை குறித்த பயமற்ற நம்பிக்கையுடன் கூடிய வாழக் கூடிய சூழலை உருவாக்குவதாகும்.
இந்த குறிக்கோளை அடைய புலனாய்வுத் தகவல்களை மையப்படுத்திய தொழில் சார் பொலிஸ் தேவையாகும். இந் நிலையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி முதல் நாம் பயன்படுத்தும் நடவடிக்கை சார் பொலிஸ் சேவையில் இருந்து மனித நேய முகத்தைக் கொண்ட புலனாய்வுத் தகவல்களை மையப்படுத்திய தொழில் சார் பொலிஸ் சேவையை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
சிவில் பாதுகாப்புக் குழுக்களை பயன்படுத்தும் திட்டம் மீளமைப்பு இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டிய வாகனம் சிவில் பாதுகாப்புக் குழுக்களாகும். இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவினையும் மையப்ப்டுத்தி அமைக்கப்பட்டிருக்கும் சிவில் பாதுகப்பு குழுக்கள், பிரஜா பொலிஸ் சேவை அல்லது மக்களை நோக்கிய பொலிஸ் சேவைக்கு அடித்தாளமிடும் மிக முக்கிய கட்டமைப்பாகும்.
தற்போது பல இடங்களில் இந்த சிவில் பாதுகப்பு குழுக்கள் செயழிழந்துள்ள நிலையில் அதனை மீளமைக்கும் பாரிய பொருப்பு என்னிடம் இருக்கிறது. இதனை மேற்கொள்ள நான் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுடன் இனைந்து திட்டம் வகுக்கவுள்ளேன். 5 விடயங்களை
உள்ளடக்கி
நடமாடும் பொலிஸ் சேவை பொலிஸ் பொது மக்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடமாடும் பொலிஸ் சேவைகளை நான் ஆரம்பிக்கவுள்ளேன். தற்போதும் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் பிராந்தியங்களிலும் ஒரு மாதத்துக்கு ஒரு பொலிஸ் நிலையத்தினை இந்த நடமாடும் சேவை பணியில் ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்ப்ட்டுள்ளது. ஆன்மீகம், கலாசாரம், கல்வி, சுகதாரம்,
விளையாட்டு
மற்றும் சிரமதானம் ஆகிய ஐந்து அம்சங்களை மையப்ப்டுத்தி இந்த நடமாடும் சேவை இடம்பெறும். இதில் சிவில் பாதுகாப்புக் குழுவினரும் பொலிஸரும் பொது மக்களும் இணைந்து செயற்படுவர்.
பொலிஸ் திணைக்களம் இலங்கை பொலிஸ் என அறிமுகம் மிக முக்கியமான ஒரு விடயத்தை நான் சொல்ல வேண்டும். இலங்கை பொலிஸ் திணைக்களம் என தற்போது அழைக்கப்படும் எமது நிறுவனம் இனிமேல் இலங்கி பொலிஸ் என்றே அழைக்கப்படும். அவ்வாறே அழைக்குமாறு நான் உங்களையும் கோருகிறேன். திணைக்களங்களில் உள்ள
பிரிவினைகள்
எமக்கு வேண்டாம். நான் அனைவரும் ஒரே இலக்குடன் பயணிப்பவர்க்ள். அதனால் எமது நிறுவனம் இலங்கை பொலிஸ் மட்டுமே.
பொலிஸாரின் ஒழுக்கம் தொடர்பில் கண்டிப்பான நடவடிக்கை
பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்ப்டுகின்றன. பெரும்பாலும் ஊடகங்களால் இவை முன் வைக்கப்படுகின்றன. சாதாரண விமர்சனங்களையும் , குற்றச் சாட்டுக்களையும் ஆதாரத்துடன் முன் வையுங்கள்.
துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் நாம் முதலில் ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்களில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். அதனால் பொலிஸாரின் ஒழுக்கம் தொடர்பில் நான் கண்டிப்பான நடவடிக்கைக்ளை முன்னெடுப்பேன். அது குறித்து யாருக்கும் மன்னிப்பில்லை.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை உள்ளடக்கிய உயர் சபை
பொலிஸ் மா அதிபராக நான் கடமையேற்றுள்ள நிலையில் சிறந்த பொலிஸ் சேவையையும் மக்கள் கோருகின்ற சேவையையும் வழங்க பல திட்டங்கள் தயார் செய்யப்ப்ட்டு வருகின்றன. இவையனைத்தும்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களைக் கொண்ட உயர் சபையினால் ஆராயப்பட்டே அமுல் செய்யப்படும். திட்டங்கள் அ
னைத்தும்
இந்த உயர் சபையினால் ஆரயப்ப்ட்டே செயற்படுத்தப்படும். எனவே எமது திட்டங்கள் மிகவும் ஆரோக்கியமானதக இருக்கும் என நம்பலாம். என்றார்
கேள்வி பொலிஸ் சேவையில் அரசியல் தலையீடுகளை எப்படி உணர்கிறீர்?
பதில் கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் பொலிஸாரின் கடமைகளில் தலையீடு செய்ததாக நான் அறிந்தேன். இனி மேல் அது சாத்தியமில்லை. அரசியல் விளையாட்டுக்கள் பொலிஸ் சேவையில் கலக்க இனி இடமேயில்லை.
பதில் கடந்த காலங்களில் பழி வாங்கப்பட்டீரா?
பதில் கடந்த அரசின் காலத்தில் நான் பல்வேறு வடிவங்களில் பழி வாங்கப்பட்டதாக உணர்கிரேன். என்னை பல இடங்களுக்கு மாற்றினர்.
கைது செய்ய
முயற்சித்தனர். எதுவும் சாத்தியப்படவில்லை. ஒரு முறை என்னை கைது செய்யவும் முயற்சித்தனர். எல்லாவற்றையும் தாண்டியே நான் இன்று பொலிஸ் ம அதிபராக தெரிவு செய்யப்ப்ட்டுள்ளேன். பொலிஸ் மா அதிபர் தேர்வு எனக்கு 10 ஆவது சவாலாக இருந்தது.
கேள்வி பொலிஸ் மாஅதிபர் பதவி உங்களுக்கு கனவா?
இல்லை. சிறுவயது முதல் இலக்கே இன்றி நான் இருந்தேன். பல்கலைகக்ழக வாழ்வின் பின்னரேயே எனது வாழ்வு மாறியது. எனது மாமா ஒருவர் கொண்டு வந்த கெஷட் அறிவிப்பை பார்த்துவிட்டே நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன்.
கேள்வி பொலிஸ் மா அதிபராக முகப் புத்தகத்தில் பிரச்சாரம் செய்தமை உண்மையா?
பதில் ஆம். நான் 8 வருடங்களக முகப் புத்தகத்தில் இருக்கின்றேன். நான் முன்னெடுத்த நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும். அதனால் எனக்கு முகப் புத்தகத்திலேயே அதிகளவான மக்கள் உள்ளனர். அவர்கள் உள்ளிட்ட பலரும் நான் பொலிஸ் மா அதிபராக வேண்டும் என எதிர்ப்பார்த்தனர்.
பதில் பொலிஸ் மா அதிபராக தெரிவானது சட்ட
விரோதமானது
என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூருகிறாரே?
பதில் அது அவரது கருத்து. அதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை.
கேள்வி சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டம், நீங்கள் பொலிஸ் மா அதிபராக இருக்கும் இப்போது
எப்படி உள்ளது?
பதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான விசாரணைகள் வெலிக்கடை பொலிஸரினால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை நடவடிக்கைகள்
இடம்பெறுகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>